வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Thursday, March 31, 2011

(இ)லக்னம் என்றால் என்ன?


ஆன்மாவுக்கும் அது பூமியில் எடுக்கும் புது பிறவிக்கும் இணைப்பு ஏற்படுகின்ற முதல் தருணமே லக்னம். இதை நான் சொல்லவில்லை...கீழே பாருங்க
Lagna (Sanskrit '', 'ascendant'.) Lagna is the first moment of contact between the soul and its new life on earth in Jyotisha.The Essentials of Vedic Astrology'', by Komilla Sutton, The Wessex Astrologer Ltd, England, 1999, p.96.

(மொழி பெயர்ப்பில் தவறு இருப்பின் தயவு செய்து திருத்துங்கள்.)

இந்த இணைப்பை ஏற்படுத்துபவன் குரு. ஆதலால் தான் அவனை லக்ன காரகன் என்கின்றனர் என்று நினைக்கின்றேன். (அதுமட்டுமல்ல  அவரே புத்திர காரகன் எனப்படுகின்றார். காரணம் அவரால் தான் உயிர்கள் உருவாகின்றது. ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் எனில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை இவர் வலிமையுடன் இல்லாவிடில் அணிதாவது அதிபதி அல்லது ஒன்பதாவது அதிபதிஆவது வலிமையுடன் இருக்க வேண்டும்)

இப்பொழுது லக்னத்தில் குரு இருந்தால் "காரகோ பாவ நாஸ்தி" (இப்படி ஏதோ சொல்வாங்களே) விதிப்படி அவன் இந்த இணைப்பை கடைசி இணைப்பாக்க
வேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து?


லக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.

(லக்னம் அன்றைய தினத்தின் சூரிய உதயத்தையும் ஒருவர் பிறந்த நேரத்தையும்  வைத்து கணக்கிடப்படுகிறது. லக்னம் ஒருவரின் உயிரை, தலையை குறிக்கும்.எந்த வீடு லஞாமாக உள்ளதோ அந்த வீட்டின் அதிபர் வலிமையுடன் இருத்தல் மிக மிக அவசியம்.)

Wednesday, March 30, 2011

லக்னத்தில் குரு இருப்பது ஏன் நல்லது?

குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்று பலரும் சொல்கிறார்கள் அதற்கு பல காரணங்களும் உண்டு.

குரு லக்னத்திலிருந்து 5,7,9 ம் இடங்களை பார்க்கிறான். குரு பார்வை கோடி நன்மை என்பார்களே அது லக்னத்தில் இருக்கும் பொழுது இன்னும் பொருந்தும். இந்த மூன்று வீடுகளும் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானவைகள். இவை பலம் பெறுவதால் இந்த உலக வாழ்கையை சிறப்பாக வாழ குரு வழி வகை செய்கிறான். இப்படி இருக்கும் குரு தனியாக இருப்பது இன்னும் சிறப்பு.

என்னைப்பொருத்த வரை குரு லக்னத்தில் இருப்பதால் மற்றும் ஒரு சிறப்பு உண்டு, அதுவே மிக முக்கியமானதும் கூட, அது என்ன?

லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவி இல்லாமல் செய்வான் என எனக்கு தோன்றுகிறது.

காரகன் அதற்குரிய வீட்டில் இருப்பின் அந்த வீட்டின் பலன் பாதிக்கும் என்பது விதி.
குழந்தை காரகன் குரு ஐந்தில் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதம், பிரச்னை ஏற்படும் என்று சிலர் சொல்வதுண்டு. அதேபோல் தந்தை காரகன் சூரியன் ஒன்பதில் இருந்தால் தந்தையுடன் உறவு சுமூகமின்மை, மற்றும் சில கெடு பலன்கள் உண்டாகும் . சிலருக்கு அந்த வீட்டுக்குரிய நபர்கள் இல்லாமல் போவதும் உண்டு.

இந்த விதியை நாம் குருவுக்கு எடுத்துக்கொண்டால் லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவியை தர மாட்டான், தரக்கூடாது.

ஏன் எனில் குருவே லக்ன காரகன். லக்ன காரகனான குரு லக்னத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அடுத்தது லக்னமே இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது அடுத்த பிறவியே இல்லாமல் செய்யவேண்டும்.
(இது உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....)
எனவே குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்பதற்கு இதுவே மறைமுகமான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்து?


Tuesday, March 29, 2011

டீ -க்கு தேனீர், காபிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

காபிக்கு தற்போது கொட்டை வடி நீர் என்பதே இணையான சொல்லாக கருதப்படுகிறது. ஆனால் "கொட்டை வடி நீர்"-ல் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு "கொவனீர்" என்று காபியை தமிழ் படுத்தலாம்.
தேயிலையிலிருந்து நீர் தயாரிப்பதால் தேனீர்,
கொட்டையை வடிகட்டி நீர் எடுப்பதால் கொவனீர்.
எப்பூடி?

Monday, March 28, 2011

ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?

வாழ்கையில் எப்படி எல்லாமே எல்லாருக்கும் கிடைக்காதோ அதேபோல் ஆன்மீக பயணத்திலும் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்காது.

இருந்ததாலும் சிலது எல்லோர்க்கும் கிடைக்கும் அது செய்யும் யோகா அல்லது சாதனையை பொருத்தது.

சிலருக்கு ஒரு ஆள பார்த்தவுடனே அவனின் என்ன ஓட்டங்களை அறிய முடியும்,

சிலருக்கு நினைத்த உடன் மழை பொழிய வைக்க முடியும்

சிலருக்கு நினைத்தவுடன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் போக முடியும்

சிலருக்கு கூடு விட்டு கூடு பாய முடியும் அதாவது தனது உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு செல்ல முடியும்

சிலருக்கு பிரபஞ்சத்த சுற்றி வர முடியும்

இது அவர் அவர் செய்யும் சாதனையை பொறுத்தே அமையும்.

பத்து பேர் சாதனை அ வை செய்யும் பொழுது அதில் பலருக்கு ஒரே விதமான அனுபவம் மற்றும் சக்திகள் கிடைக்க வாய்புகள் அதிகம்.

பத்து பேர் சாதனை அல்லது யோகா ஆ வை செய்யும் பொழுது அ சாதனை செய்தவர்கள் பெறாத அனுபவங்களை இவர்கள் பெறலாம். அதே நேரத்தில் இவர்கள் பத்தில் பேரில் பெரும்பாலானோருக்கு ஒரே வித அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இதை இப்படி சொல்லலாம்

திருச்சியிலிருந்தும் சென்னைக்கு வரலாம் திருப்பதியிலிருந்தும் சென்னைக்கு வரலாம்,

அதே போல் அந்த இடங்களில் இருந்து நடந்தும் வரலாம், பறந்தும் வரலாம், மகிழுந்திலும் வரலாம் (காரு),

பேருந்திலும் வரலாம்.

அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்று தான் ஆனால் அவர்கள் வந்த வழி, முறை, வேகம் வேறு இதைப்பொருத்து அவர்களின் பயண அனுபவமும் வேறுபடும்.

இதைப்போல ஆன்மிக பயணத்திலும் அவர்கள் பின் பற்றும் யோகா முறையை பொறுத்து, ஆன்ம பக்குவத்தை பொறுத்து, வினைப்பயனை பொறுத்து அனுபவம் மற்றும் பயண வேகம் வேறுபடும். போய் சேரும் இடம் ஒன்றா என்றால்.........இல்லை வேறாகவும் இருக்கலாம்.


Sunday, March 27, 2011

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்பு? வேறுபாடு?


சிற்றின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம் (அதான் கண்ணு, காது, வாய், மூக்கு, மெய்) பேரின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

சிற்றின்பத்திலும் காணலாம்,தொடலாம்(தொடு உணர்ச்சி), முகரலாம், கேட்கலாம், உண்ணலாம் பேரின்பத்திலும் இவை நடைபெறும்.

என்ன வேறுபாடு?

சிற்றின்பத்தில் ஒவ்வொரு தடவையும் கடைசியில் சுக்கிலம் வெளிப்படும்.... பேரின்பத்தில் ஒரே ஒரு தடவை முதலில் வெளிப்படும்.

சிற்றின்பம் சில மணித்துளிகள் அல்லது நேரங்கள் .....பேரின்பத்தில் பல மணி நேரங்களும், நாட்களும், மாதங்களும், ஏன் வருடங்களும் சாத்தியமாகலாம்.

சிற்றின்பத்தில் இருவர் ஒருவராக முயற்சி பேரின்பத்தில் ....ஒருவன் ஒன்னும் இல்லாமல் போக முயற்சி.(அதான்பா இறையாதல் )

சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் வெளியில சங்கு வான வேடிக்கை....பேரின்ப பயணத்தில் உள்ளுக்குள்ள சங்கு வான வேடிக்கை.
சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு...பேரின்பம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்.

அமிர்தம் கிடைத்தால் பிறகு என்ன? மரணம் இல்லா பெருவாழ்வுதான்.


Related Posts Plugin for WordPress, Blogger...