வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Thursday, April 28, 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்? பகுதி-2

முந்தைய பதிவு முன்னோட்டம்...இது  கொஞ்சம் ஆழம்.
விட்டு கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் வரலாம். நான் மட்டும் தான் விட்டு கொடுக்கனுமா ஏன் அவள்/அவன் விட்டு கொடுக்க கூடாதா என்ற கேள்வி அடுத்து எழும். இரண்டு பேருமே விட்டு கொடுத்து போக வேண்டும். விட்டு கொடுப்பதிலே போட்டி வருவதுதான் நல்லது. உனக்காக நான் இத கூட செய்யா மாட்டேனா என்று ஒருவர் மாறி ஒருவர் விட்டு கொடுப்பதிலே தான் மகிழ்ச்சியே . 

இங்கே ஒருவர் மட்டும் விட்டு கொடுக்க மற்றவர் இப்படியே அவர் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைப்பது அரக்கத்தனம்.   அவர்களுக்கு எடுத்த சொல்ல வேண்டியது தான் அடுத்த வேலை. மனம் திறந்து பேசுங்கள். புரிய வைக்க முயலுங்கள். பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.("அதுல" கொஞ்சம் அகிம்சையும் முயற்சி பண்ணி பாக்கலாம்)  நீங்கள் விட்டு கொடுப்பது மற்றவர்க்கு தெரிய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும்...நமக்காக இவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ஏன் நாமும் விட்டு கொடுத்து போக கூடாது என்ற நல்லெண்ணம் வரும். 


ஜாதக ரீதியாக பார்த்தால் ஏழாம் வீடுதான் திருமணத்திற்கு ரொம்ப முக்கியம்.
ஏழாம் வீட்டில் எந்த கோள்களும் இல்லாமல் இருத்தலே நலம்.(அப்படின்னு தாங்க நினைக்கிறேன்). ஏழாம் வீட்டில் சுப கோள்கள்  இருந்தாலும் அதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி கோள்கள் இருக்கிற பட்சத்தில் அது சுப கோள்களா இருந்தா கொஞ்சம் பரவாயில்லை .  சுபர்  பார்வை மிக நல்லது.
பாவிகள் அமர்ந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம் தான்.

அதேபோல் ஏழாம் வீட்டு அதிபதியும் சுபராக இருத்தல் நலம். இது மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், அழகிய  துணையையும் தரும்.

உங்க லக்னத்துக்கு ஏழாம் வீடு பாவி வீடா இருந்தா கொஞ்சம் சிக்கல் தான்.

ஏழாம் வீட்டு அதிபதி சுபரின் நட்சத்திரத்தில் இருத்தல் நல்லது, பாவியின் நட்சத்திரத்தில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் வரும்...வரலாம்.

அதேபோல் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுபர் பார்வை நலம், பாவர் பார்வை சிக்கல் தரும். சுபர் சேர்க்கை நலம், பாவர் சேர்க்கை சிக்கல் தரும்.


ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்கள் இரண்டு தீய கோள்களுக்கு நடு வீட்டில் மாட்டினால்  சிக்கல் தான்.


அதிபதி மற்றும் சுக்கிரன் சுபர், நட்பு கோள்கள் நட்சத்திரத்தில் இருத்தல் மிக்க நன்று.
  இந்த கோள்கள் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருத்த்தல் மிக்க நன்று.
(நடக்கிற தசை புத்திய பொறுத்து, கோள்சாரத்தை பொறுத்து இந்த விதிகள் வேலை செய்யும் அல்லது செய்யாமல் போகலாம்)

எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு  திருமண   வாழ்க்கை  மகிழ்ச்சியாக    அமையும்.

8 comments:

 1. //எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.//

  ஆகா கடைசியிலே உண்மையை சொல்லிட்டீகளே ?

  நல்ல பதிவு தோழரே..

  ReplyDelete
 2. நண்பரே தங்கள் தளத்திலிருந்து இந்த வேர்ட் வெரிபிகேசனை எடுத்துவிடுங்களேன் .. அவசரத்தில் பின் ஊட்டம் இடும் இந்த உலகில் - பின் ஊட்டம் இடுபவர்களுக்கு இது பெரிய தொந்தரவாக இருக்கும்,
  நன்றி

  ReplyDelete
 3. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...
  //எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.//

  ஆகா கடைசியிலே உண்மையை சொல்லிட்டீகளே ?

  நல்ல பதிவு தோழரே..//

  ஒ அதுதான் உண்மையா? ஏதோ நினததி எழுதினேன் அதை தாங்கள் உண்மை என்று கூறுவதில் எனுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழரே.

  ReplyDelete
 4. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...
  நண்பரே தங்கள் தளத்திலிருந்து இந்த வேர்ட் வெரிபிகேசனை எடுத்துவிடுங்களேன் .. அவசரத்தில் பின் ஊட்டம் இடும் இந்த உலகில் - பின் ஊட்டம் இடுபவர்களுக்கு இது பெரிய தொந்தரவாக இருக்கும்,
  நன்றி//

  அப்படி ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது.. நீங்கள் கூறியவுடன் தான் கவனித்தேன்,ஏற்க்கனவே வினோத் கூட இது பற்றி கூறியிருக்கிறார் எனக்குத்தான் புரிய வில்லை. தங்களுடைய கருத்துக்கு நன்றி. //

  ReplyDelete
 5. hm iread good post i am waiting for ur next post

  ReplyDelete
 6. //sundari said...

  hm iread good post i am waiting for ur next post//
  Thanks Sundari...will try to answer your question on tomorrow's post

  ReplyDelete
 7. அனுபவ ஜோதிடம் போல
  புரட்ச்சிமனி சொல்ரது நடைமுரை ஜொதிடம்
  well said

  ReplyDelete
 8. //yoghi said...

  அனுபவ ஜோதிடம் போல
  புரட்ச்சிமனி சொல்ரது நடைமுரை ஜொதிடம்
  well said
  //

  "நடைமுறை ஜோதிடம்" நல்லா இருக்கே...தங்கள் கருத்துக்கு நன்றி யோகி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...