வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Tuesday, April 12, 2011

யாருக்கு ஒட்டு போட வேண்டும்?

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள். இங்கே நான் பரப்புரை செய்யவில்லை. யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்ற எண்ணங்களை மட்டுமே முன் வைக்கின்றேன்.

தற்பொழுது தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. யாரால் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

தற்பொழுது வரலாறு காணாத விலைவாசி உயர்வு. யாரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

யாரின் ஆட்சி உங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அவர்களுக்கு வாகளியுங்கள்.

யார் வந்தால் உங்களுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

யார் வந்தால் தரமான கல்வியும், வேலை வாய்ப்பும், தொழில் முனைவோருக்கு ஊக்கமும் கிடைக்குமோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.


தயவு செய்து 49O வை உபயோகப்படுத்தாதீர். (ஒட்டுபோடாமல் இருப்பதும் அதை செய்வதும் ஒன்றுதான்)

"ஓட்டுப்போட வேண்டும் என்பது முக்கியம்.
அதைவிட முக்கியம் யாருக்கு போடுகிறோம் என்பது."

ஆதலால் சிந்தித்து, சுய நலம், பொது நலம் இரண்டையும் கருத்தில் கொண்டு பொதுநலத்திற்கு சற்று அதிக முக்கியத்துவம் தந்து வாக்களியுங்கள்.

மறந்தும் இருந்து விடாதீர், இருந்தும் மறந்து விடாதீர், காலை எட்டு மணி ஆகிவிட்டதா? இப்போதே கிளம்புங்கள்.சிந்திந்து வாக்களிப்பர்.
வாழ்க ஜனநாயகம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...