வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 9 ஏப்ரல், 2011

"Link" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

இணையத்தில் ஒரு தளத்திலிருந்து ஒரு தளம் அல்லது ஒரு பக்கம் செல்ல "Link" கொடுக்கப்படுகின்றது. அதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுட்டி என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. இதுவே தமிழ்ப் பெயர் தானே பின்பு ஏன் இணையான தமிழ்ச் சொல் என்று நீங்கள் கேட்கலாம்.

சுட்டிக்கு அர்த்தம் அதாவது காரணப்பெயர் என்ன என்று எனக்கு புரியவில்லை. (தெரிந்தால் சொல்லுங்கள்) ஆதலால் இதற்கு இணையான தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று நினைத்த போது "வழிகாட்டி" என்பதே சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியாது. மற்றொரு தளத்திற்கு அல்லது பக்கத்திற்கு செல்லும் வழியைக் காட்டுவாதால் இது வழிகாட்டி.

உங்களின் கருத்து என்ன சுட்டி என்ற வார்த்தையை விட "வழிகாட்டி" என்பது நன்றாக, பொருள் நிறைந்ததாக உள்ளதா?

2 கருத்துகள்:

  1. //உங்களின் கருத்து என்ன சுட்டி என்ற வார்த்தையை விட "வழிகாட்டி" என்பது நன்றாக, பொருள் நிறைந்ததாக உள்ளதா?//

    இல்லை என்றே சொல்லுவேன்.
    ஒரு பொருள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுவதால் அது சுட்டி என்பதில் தவறில்லை. இணைப்பு, தொடுப்பு என்றும் சொல்கிறார்களே சிலர், அதுவும் சரிதான்.
    ஆங்கிலத்தை மட்டும் மனதில் வைத்து வழிகாட்டி என்ற பதத்தை மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றிப் பாருங்கள், கைடு என்றுதான் மனம் சொல்லும். சுட்டி என்ற பதத்தை அவ்வாறு மாற்றிப் பாருங்கள். முதலில், சுட்டி என்று நினைத்தாலே இணைய இணைப்பு நினைவுக்கு வந்து லிங்க் / URL என்று ஏதாவது நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  2. //ஒரு பொருள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுவதால் அது சுட்டி என்பதில் தவறில்லை.//
    மிக்க நன்றி கிருமி அவர்களே. உங்கள் விடை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...