வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 2 மே, 2011

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?


விவேகானந்தர் காவி உடை அணியாமல் இருந்திருந்தால் அவரை இந்து மத துறவி என்று யாரும் கூற இயலாது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொளும்படியாக உள்ளது. மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர் அவர்.



"ஒரு  விதைவையின்   கண்ணீரைத்  துடைக்க  முடியாத , ஓர்  அனாதையின்  வயிற்றில்  ஒரு  கவளம்  சோற்றை  இட  முடியாத  கடவுளடித்திலோ,சமயத்திலோ  எனக்குக்  கொஞ்சம்  கூட  நம்பிக்கை  கிடையாது"  என்று  அவர்  கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம்.ஆனால்  உண்மையில்  அவர் ஒரு ஆன்மீகவாதியே.

அவரின் ஜாதகம்:  தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், இரண்டில் சுக்கிரன் மற்றும் புதன், ஐந்தில் செவ்வாய் ஆட்சி,  ஆறில் கேது, பத்தில் சந்திரன் மற்றும் சனி, பதினொன்றில் குரு.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்ப்பட, தியானத்தில் மூழ்க காரணம்  பதினொன்றில் இருக்கும் குருபகவான் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கும் தியான அதிபதியை பார்ப்பதுதான். அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதியான குரு ஐந்தாம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். .  (இதுவே என் கருத்து).

இவர் ஏன் இளமையில் இறந்தார் ?
இவர் இறக்கவில்லை. இவரே விரும்பித்தான் உடலை விட்டார். அதாவது மகா சமாதி அடைந்தார். 

இவரே நெருங்கியவர்களிடம் நான் நாற்பது வயது வரை வாழ மாட்டேன் என்று கூறியுள்ளதாக சில குறிப்புகள் உள்ளது. (இது அவரின்  தீர்க்க தரிசனத்தை காட்டுகின்றது) அதுபடியே அவர் நாற்ப்பது வயது பூர்த்தியாவதற்கு முன் பூத உடலை நீத்தார். அதாவது மகா சமாதி அடைந்தார் .

ஏன் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க கூடாது என்ற கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார். 

12 கருத்துகள்:

  1. //ஒரு விதைவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத , ஓர் அனாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளடித்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது" என்று அவர் கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம். //

    இந்த கேட்டகிரில நிறைய சம்பவங்கள் அவ்ர் லைஃப்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. தோழரே நீங்கள் சொல்லவந்ததை சொல்லவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது ..

    சுருக்கமாகச் சொன்னால் தான் படிப்பார்கள் என்பதற்காக சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டுவிடாதீர்கள்.. இது எமது கருத்து..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //சித்தூர்.எஸ்.முருகேசன் said...

    //ஒரு விதைவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத , ஓர் அனாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளடித்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது" என்று அவர் கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம். //

    இந்த கேட்டகிரில நிறைய சம்பவங்கள் அவ்ர் லைஃப்ல இருக்கு.//



    வாங்க பாஸ், இதபத்தி நீங்க ஏன் ஒரு பதிவு போட கூடாது? பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    தோழரே நீங்கள் சொல்லவந்ததை சொல்லவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது ..

    சுருக்கமாகச் சொன்னால் தான் படிப்பார்கள் என்பதற்காக சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டுவிடாதீர்கள்.. இது எமது கருத்து..

    நன்றி.
    //
    தோழரே சில நேரங்களில் நேரமின்மையாலும், அவசரத்தினாலும், கவனக்குறைவினாலும் அப்படி ஆவதுண்டு. இந்த பதிவில் நான் எதை விட்டுவிட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று சொன்னால் அதையும் இணைத்து விடுவேன். உங்களின் கருத்துக்கு நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு
  5. //sundari said...

    Thanks u sir//
    Madam you are the reason behind this post. So I have to say thanks to you. Kindly Accept my thanks.btw did i answer your query?

    பதிலளிநீக்கு
  6. பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார்.

    பதிலளிநீக்கு
  7. //இராஜராஜேஸ்வரி said...

    பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார்.
    //

    இதை ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  8. பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார்.. கரனம்

    பதிலளிநீக்கு
  9. அவர் இறைவனின் அம்சமாக , அவருடைய குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பார்த்தார் .அவர் விவேகானந்தர் சன்யாசியாக மாறுவதற்கு முன்பே அவர் விரைவில் இறப்பார் என கூறினார்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக கூறி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...