வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 24 மே, 2011

தி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்கும் ஒரே காரணம் தான்...அது என்ன?



தேர்தல் முடிவைப் பற்றி பல ஊடகங்களும் பல காரணங்களைக் கூறுகின்றன. 
மின் வெட்டு, குடும்ப அரசியல், பல துறைகளில் குடும்ப ஆதிக்கம்,விலை வாசி உயர்வு, மக்கள் இலவசங்களை விரும்ப வில்லை, ஈழத்தமிழருக்கு செய்த துரோகம், ஜாதி அரசியலை மக்கள் விரும்ப வில்லை, என்று பலரும் பல காரணங்களை கூறுகின்றனர். 

சிலர் அன்ன ஹசாரேயின்  உண்ணா   விரதமும் ஒரு காரணம் என்றனர். இதெல்லாம் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது. அவர்கள் சொன்ன காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் அந்த காரணிகளின் தாக்கம்  குறைவே. 

எல்லா காரணங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தேர்தல் முடிவுக்கு காரணமாய் இருந்தாலும் தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.

ஒருவேளை அ.தி.மு.க வும்  தே. மு. தி.க வும் தனித்து நின்றிருந்தால் கண்டிப்பாக தி.மு.க தான் வென்றிருக்கும். மேலே சொன்ன அனைத்து காரணத்தினால் எழுந்த அதிருப்தி ஓட்டுக்கள் இரண்டாக பிரிந்து அது தி.மு.க வுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கும். ஒவ்வொரு    தொகுதியிலும்    தி. மு.க கூட்டணி பெற்ற   ஓட்டுக்கள் மற்றும் வெற்றி வித்தியாச ஓட்டுக்கள் இதைத் தெள்ள தெளிவாக காட்டுகின்றன. 

ஆக தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.
 

2 கருத்துகள்:

  1. திமுகாவின் தோல்விக்கு இது மட்டும் காரணம் இல்லை நண்பா..
    காரணங்கள் சொல்ல இந்த பக்கமே போதாது

    பதிலளிநீக்கு
  2. //துஷ்யந்தனின் பக்கங்கள் said...

    திமுகாவின் தோல்விக்கு இது மட்டும் காரணம் இல்லை நண்பா..
    காரணங்கள் சொல்ல இந்த பக்கமே போதாது
    //

    உண்மை தான் நண்பா...இருப்பினும் இந்த ஒரு கூட்டணி அமைந்திருக்காவிடில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும்...தங்கள் கருத்து?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...