வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 6 ஜூன், 2011

தன காரகன் குருவா சுக்கிரனா?

ஜோதிடத்தில் குருவை தன காரகன் என்று சொல்கிறார்கள். தனம் என்றால் செல்வம் அப்படி என்றால் காசு பணம் தானே. இதற்க்கு காரகன் குரு என்பது சரியா. எனக்கு தெரிந்த வரையிலும் கேள்விப்பட்ட வரையிலும் சுக்கிர திசை அல்லது புத்தியில் தான் அதிகமாக பணம் வருகிறது. மேலும் சுக்கிர பலம் உள்ளவர்களுக்கும் அதிகமாக பணம் வரும். அப்படி இருக்க குருவுக்கு ஏன் தன காரகன் என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.

மேலும் காலபுருஷ தத்துவப்படி இரண்டாம்  வீடான ரிஷபத்திற்கு  சுக்கிர பகவான் தான்  அதிபதி. இங்கே சந்திரன் உச்சம் அடைகிறார். நான் கேள்விப்பட்ட அல்லது படித்த வரையில் ஒருவனின் ஜாதகத்தில்  சுக்கிர பகவானும் சந்திரபகவானும் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும். குரு பகவானும் முக்கியமே ஏன் எனில் இவர் தங்கத்திற்கு காரகன் என்கிறார்கள். ஒருவேளை தங்கத்துக்கு மட்டும் தான் குரு பகவான்  காரகனோ?. பணத்திற்கு சுக்கிர பகவன் தான் காரகனோ?. இவருக்குரிய தெய்வம் இருக்கும் திருப்பதிக்கு  தானே செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.

என் கேள்வி சரியா...உங்களுக்கு பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

16 கருத்துகள்:

  1. புரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.

    ///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///

    இப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.

    மாத்தி யோசிங்கப்பூ.

    பதிலளிநீக்கு
  2. //மாத்தி யோசிங்கப்பூ. //

    கால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி

    5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு

    2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்

    எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)

    பதிலளிநீக்கு
  3. //

    MANI said...

    புரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.

    ///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///

    இப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.

    மாத்தி யோசிங்கப்பூ.//

    மணி அபப சுக்கிரன பண காரகன் என்று சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  4. ///மாத்தி யோசிங்கப்பூ. //

    கால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி

    5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு

    2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்

    எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)//
    நீங்க நல்லாவே ஆராய்ச்சி பண்றிங்க ராஜா... அப்புறம் //5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்)// அல்ல குரு அதனால் தான் அவர் புத்திர காரகன் என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. ///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு

    2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்

    எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////

    ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.

    புரட்சிமணி.
    சுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.

    சுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.

    பதிலளிநீக்கு
  6. //ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//

    என்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)

    காரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி..

    சூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.?
    சூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....
    ஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ? ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))
    அதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..

    புத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது
    புத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...

    புத்ரனை ஆராயும் பொருட்டு...
    5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...

    நல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...
    குறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..

    எப்புடி நம்ம ஆராய்ச்சி :)

    பதிலளிநீக்கு
  7. //MANI said...

    ///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு

    2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்

    எப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////

    ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.

    புரட்சிமணி.
    சுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.

    சுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.
    //
    நீங்க சொல்றது சரிதான் மணி. சுக்கிரன் கெடுவதும் ஒருவிதத்தில் நல்லது தான் போல...ஆன்மீகத்திற்கு

    பதிலளிநீக்கு
  8. //

    தனி காட்டு ராஜா said...

    //ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//

    என்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)

    காரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி..

    சூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.?
    சூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....
    ஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ? ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))
    அதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..

    புத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது
    புத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...

    புத்ரனை ஆராயும் பொருட்டு...
    5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...

    நல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...
    குறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..

    எப்புடி நம்ம ஆராய்ச்சி :)//

    ஆத்மா காரகன் பற்றிய தங்களுடைய கருத்து அருமை ராஜா.

    //புத்ரனை ஆராயும் பொருட்டு...
    5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...//

    ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது?
    ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா?

    பதிலளிநீக்கு
  9. //ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா? //
    குரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..
    சுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. :)

    பதிலளிநீக்கு
  10. //ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது?//

    த.கா.ராஜா. புரட்சிமணி கேட்டிருக்கார் பார்த்தீங்களா.
    இதைதான் நீங்களாவே சொல்வீங்கன்னு பார்த்தேன். அதான் சும்மா தலையை சுத்துதுன்னு சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  11. ஜோதிடத்தில் இருப்பது 9 கிரகங்கள், 12 வீடுகள் தான் அவற்றில் மனத வாழ்க்கைக்கு உபயோகமாகும் அத்தனை விஷயங்களையும் காரகத்துவத்தின் மூலம் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் பல சூட்சுமங்களையும் அடக்கியுள்ளனர்.

    த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால் ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால் ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க மணி அண்ணா :)

    பதிலளிநீக்கு
  13. //தனி காட்டு ராஜா said...

    //ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா? //
    குரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..
    சுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. ://
    ராஜா, நான் படித்த வரை சுக்கிரன் தான் ஸ்பெர்ம் எனும் சுக்கிலத்துக்கு காரகன்...சுக்கிலம்... சுக்கிரன் :)

    பதிலளிநீக்கு
  14. //சுக்கிலம்... சுக்கிரன் :) //

    நல்லா ரைமிங்கா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  15. //ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?
    //

    தோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..
    இது நினைவூட்டல் மட்டுமே.

    நன்றி

    பதிலளிநீக்கு
  16. //

    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    //ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா ?
    //

    தோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..
    இது நினைவூட்டல் மட்டுமே.

    நன்றி//
    பயன்படுத்தலாம்...விரிவான பதில் நாளை வந்தாலும் வரலாம் என்று நினைக்கின்றேன் :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...