வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Tuesday, January 17, 2012

தமிழர் திருநாள்- முசுலிம்களும், கிருத்தவர்களும் தமிழர்கள் இல்லையா?


தமிழர் திருநாள், உழவர் திருநாள்  எனும் பொங்கல் பண்டிகை உண்மையிலேயே அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றதா  என்று எனக்கு தெரியவில்லை. குறிப்பாக முசுலிம்களும், கிருத்தவர்களும் எனக்கு தெரிந்து கொண்டாடுவதில்லை (தெரியப்படுத்தினால் மகிழ்வேன்). 

ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? மதம் எவ்வாறு தமிழர்களிடையே ஒரு பிளவை உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அவர்களது சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழர் திருநாளை இந்துக்களே பெருமளவில் கொண்டாடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகின்றது.

தமிழன் செய்யும் அனைத்தையும் அது பார்ப்பானின் திணிப்பு என்று கூறும் திராவிடவாதிகள் ஏன் இந்துக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனும் பொங்கல் பண்டிகையை தானும் கொண்டாடுகின்றனர். இதையும் இந்து பண்டிகை என்று சொல்லி ஒதுக்க வேண்டியது தானே?
(உடனே இது உழைப்பவர்கள் திருநாள்னு என் கிட்ட சொல்லகூடாது....சூரியனுக்கு  ஏன் பொங்கல் படைக்கிறீர்கள்  என்று நான் கேட்பேன்). ஆக இதை தன்னை திராவிடவாதிகள் என்று கூறுபவர்களின்  சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

பொங்கல் பண்டிகையை நான் இந்துக்களின் பண்டிகையாக பார்க்கவில்லை. தமிழர் திருநாளை நான் இயற்கையின் பண்டிகையாக,உழவர்களின் பண்டிகையாக, தமிழர்களின் பண்டிகையாகவே பார்க்கின்றேன்.  மத பேதத்தை விடுத்து உழவர் திருநாளை, தமிழர் திருநாளை, இயற்க்கைக்கு நன்றி செலுத்தும்   இத்திருநாளை அனைவரும் கொண்டாடவேண்டும் எனபதே என் ஆசை. 

காணும் பொங்கலான இன்று நான் பலரை "காண"  வெளியே கிளம்புவதால் இதை படிப்பவர்கள் அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன். 

4 comments:

 1. வணக்கம்!
  தமிழ் நாட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், அந்தோணியார் பொங்கல், செபஸ்தியார் பொங்கல், வனத்த சின்னப்பர் பொங்கல் என்று ஒரு நாளில் பொங்கல் வைக்கிறார்கள். கிராமங்களில் இன்னும் இந்த வழக்கம் உள்ளது. நகர்ப் புறங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. இதை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ. கிராமத்து கிருத்துவர்கள் பொங்கல் வைப்பதை கேட்டு மகிழ்கிறேன்.

   Delete
 2. இயற்கையே கடவுள் என்று மதவாதிக்கு நாத்திகனுக்கு தெரியாது

  ReplyDelete
  Replies
  1. ஆகா அருமை. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...