வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Monday, January 30, 2012

முகமது நபி தூதரா? யோகியா?இன்று காலை உறங்கிக்கொண்டிருக்கும்  பொழுது திடீரென்று  ஒரு சிந்தனை, ஒரு விழிப்பு.
குர்ஆனில் முனீர் என்ற சொல்லை பார்த்ததாக ஞாபகம்.  அந்த சொல்லை படிக்கும் பொழுதே பல சிந்தனைகள் எழுந்தது. இந்த முனீர் என்ற சொல் நமது முனிவர் என்ற சொல்லோடு ஒத்துப்போவதாகவே நான் உணந்தேன். 

இன்று காலை இந்த முனீர் என்ற சொல்லை நாம் தமிழ் வளர்த்ததாக கூறும் அகத்தியரோடு நான்  தூங்கும் பொழுது ஒப்புமை படுத்தி  பார்க்கிறேன்  என்னையறியாமல். (இத்துடன் விழிக்கிறேன் பிறகு சிந்தனைகள்)

அகத்தியரை தமிழர்கள் குள்ள முனி என்றும் குறு முனி என்றும் தான் கூறுவர்.

மேலும் தவம் செய்வோரை, தியானம் செய்வோரை முனி,முனிவர், சித்தன், யோகி என்று கூறுவதும் வழக்கம்..

அப்பொழுது முனீர் என்ற அரபு சொல்லும் முனிவர்களைத்தான் குறிக்கின்றதா என்றால். இல்லை.
அரபில் இந்த முனீருக்கு ஒளி என்று என்று விளக்கம் தருகிறார்கள்.

முனீருக்கும்  ஒளிக்கும் என்ன சம்பந்தம்?
ஹா ஹா ஹா 

"முனிவன் வேறு ஒளி வேறு அல்ல
ஒளியை கண்டவனே  முனியாவன்
பின்பு முனியே ஒளியாவான்"

முகமது நபி சிறு வயதிலே பெற்றோரை இழக்கின்றார். அனாதையாகின்றார்(அனாதியை அறிய? :) )

இருப்பத்தைந்து வயதில் திருமணம் நடக்கின்றது. 
ஒரு கட்டத்தில் வாழ்கையில் வெறுப்பு ஏற்ப்படுகின்றது.
 ஒரு கட்டத்தில் தியானம், தவத்தில் ஈடுபடுகின்றார்.  தன்னுடைய நாற்பதாவது வயதில் இறைவன் வெளிப்படுகிறார் அல்லது முதல் இறை தரிசனம் கிடைக்கின்றது.

 தியானத்தின் அல்லது தவத்தின்  மூலம் கிடைத்த இறை தரிசனத்தாலும் பிறகு கேப்ரியல் என்ற ஏஞ்சலின் உதவியாலும்(கடவுளின்  வார்த்தைகளை இந்த ஏஞ்சல் தான் நபிக்கு கூறுகின்றது பிறகு  அதுவே குரானகிறது என்பது வரலாறு. இது நடப்பதில் ரமலான் மதத்தில் அதனால் தான் ரம்ஜான்), தன்னுடைய  சிந்தனைகளாலும்  வளர்ந்த/வந்த  அறிவைத்தான் அவர் இறைவன் தந்த வேதமாக சொல்கிறார்.

ஏன் அவர் தன்னை யோகி, முனி  என்று கூறாமல் இறைத்தூதர் என்று கூறுகிறார் என்று நீங்கள் கேட்கலாம்.

கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இது சற்று கொச்சையான பழ மொழி இருப்பினும் அது உண்மையை தெளிவு படுத்தும் என்பதால் கூறுகிறேன்.யாரையும் இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.

 "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்று சொல்வார்கள் இதன் உண்மையான பொருள் எனக்கு தெரியாவிடினும் இதை நான் பின்வருவனவற்றிற்கு பயன்படுத்துகிறேன்.

இந்தியாவில் தன்னை உணர்ந்த சிலர் தன்னை இறைவன் என்று கூறிக்கொண்டனர்.
சிவனாவதே சித்தர்களின் நோக்கம். அதாவது இறைவனாவது. 
இது தமிழ் சித்தர்களின் இந்திய யோகிகளின் நம்பிக்கை. இதுவே உண்மையும் என்று நினைக்கின்றேன்.

பின்பு இந்தியாவில் யோகம் கற்றுக்கொண்ட இயேசு தன்னை இறைவனின் பிள்ளை என்று கூறினார்.
இதுவும் உண்மையே .

இதற்குப்பின் வருகிற முகமது நபி தன்னை இறைத்தூதன் என்று கூறுகின்றார். இதுவும் உண்மையே.

தன்னை இறைவனாக உணர்ந்தவன், பிறகு இறைவனின் பிள்ளையாக உணர்கிறான், பிறகு இறைத் தூதனாக உணர்கிறான் ஏன்? 

இன்றும் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் தன்னை இறைவன் என்றே உணர்கிறார்கள் அல்லது அப்படி கூறுகிறார்கள்.

ஏசுவும், நபியும் தங்களை இறைவன் என்று கூறாமைக்கு காரணம் மற்ற பகுதிகளில் இவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள்  என்று உணர்ந்திருக்கலாம். இந்தியாவில் சித்த யோக கலாச்சாரம் அனைவருக்கும் தெரியும்  என்பதால் இங்கே ஒருவனை இறைவன் எனும் பொழுது நம்புவார்கள்.
ஆனால் இதைப்பற்றி அவ்வளாக தெரியாதவர்கள் மத்தியில் தன்னை இறைவன் என்று சொல்வதை ஏற்க்க மாட்டார்கள் என்று அவர்கள்  யோசித்திருக்கலாம்.

தான் இறைத்தூதன் என்று முகமது  நபி சொன்னதையும் மக்கள் நிராகரிக்கவே  செய்தார்கள்.  இருப்பினும் சற்றேனும்  ஆன்ம  விழிப்படைந்தவன்  கூறுவதை யார் தான் ஏற்காமல் போவர்?.
அப்படித்தான் முதலில் அவரது மனைவியும், பிறகு மகனும்,பிறகு சுற்றத்தாரும்  அவரை இறைத்தூதராக நம்ப ஆரம்பிகின்றார்கள்.

அடுத்த பதிவும் முகமது நபியை பற்றித்தான். பின்வரும் இரண்டு பொருளை பற்றி எழுதலாம்  என்று எண்ணம். இறைவன் விரும்பினால் பாப்போம் 

நபியின் குரு யார்?
நபி வன்முறையாளரா? 

(குறிப்பு:நபியின் வரலாற்றை  விக்கிபீடியாவில் இருந்து படித்தேன்.  இந்த பதிவின் நோக்கம் நபியையும்  அல்லது இசுலாமையும்   குறை சொல்வதோ பெருமை படுத்துவதோ அல்ல. (அவன் இவன் என்று கூறுவதையும் குறைக்க வேண்டும்.முன்பு கோள்களை அப்படித்தான் கூறினேன் பிறகு திருத்திக்கொண்டேன்). எனக்குள்ள சிந்தனைகளை  பகிர்ந்துகொள்கிறேன்.  அவ்வளவே.
எழுதவேண்டும் என்ற அதீத உந்துதல் உள்ளிருந்து வந்து கொண்டே இருக்கின்றது. யாவும் நன்மைக்கே? :) ....எல்லாம் இறைவன் செயல் )

10 comments:

 1. அருமையான தகவல் நண்பரே..நானும் இப்பொழுது தான் குரான் படிக்க ஆரம்பித்து உள்ளேன்...எனக்கும் இது ஒரு நல்ல தகவல்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே,
   குரான் படிப்பதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளதீர்கள் முடிந்தால் மற்ற மத நூல்களையும் படித்து பாருங்கள்.
   இதைவிட முக்கியம் அனுபவம்.. அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 2. மைக்கேல் ஹார்ட் : மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார்

  உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம்.

  சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!

  1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன.

  மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன.

  இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.

  புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்!

  பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

  ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள்.

  வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.

  வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள்,

  இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை.

  மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.


  “டாக்டர் அம்பேத்கார்" : பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.

  திவான் சந்த் : முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது. - திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)
  **********

  வில்லியம்மூர் :சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.


  தாமஸ் கார்லைல். : நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.-


  கிப்பன்.அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. –
  *********
  டால்ஸ்டாய் நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது,

  பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி,

  அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.


  வாஷிங்டன் இர்விங் இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
  -

  SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/blog-post_09.html

  ReplyDelete
 3. ஜவஹர்லால் நேரு. முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். –

  நெப்போலியன் திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. –

  “கவிக்குயில்” சரோஜினி நாயுடு

  எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

  எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.

  அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

  எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

  எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.

  ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?

  பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது.

  அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

  உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான்.

  ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

  மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

  இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?

  பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? -கவியரசி சரோஜினி நாயுடு

  என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி:

  லா மார்ட்டின்: இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.

  இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.
  –ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
  ******

  SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/blog-post_09.html

  ReplyDelete
 4. பெர்னாட்ஷா. :அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது.

  எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும்.

  முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன்.

  முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

  அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும்.

  இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.

  அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும். - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
  ******

  பாஸ்வொர்த் ஸ்மித் : போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது.

  தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.-–Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

  அன்னிபெசண்ட் அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர் மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது. –, The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.

  மகாத்மா காந்தி; கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…

  இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. - ,’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

  வாஷிங்டன் இர்விங்: இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,

  தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை,

  கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம்.

  ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.

  ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார். - –, Life of Muhammad, நியூயார்க், 1920.
  ********
  தாமஸ் கார்லைல்: ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.–. Heroes and Hero Worship and the Heroic in History, 1840.

  ஜவஹர்லால் நேரு: முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.


  SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/blog-post_09.html

  ReplyDelete
 5. எஸ். எச். லீடர்: துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.

  டாக்டர் ஜான்சன் -நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.

  SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/blog-post_09.html

  ReplyDelete
 6. பா.ராகவன்: ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.

  மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.

  காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

  முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

  இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

  ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்

  -----------------------

  கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  >>>> சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் <<<<


  .

  ReplyDelete
 7. உலகில் உள்ள எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் கடந்தகால நூற்றாண்டுகளில் மனிதகுல வரலாற்றில் ஞானமடைதல் என்று சொல்லப்படுதல் யாருக்காவது நடந்திருக்கத்தான் செய்யும். இது இந்தியாவுக்கு மட்டும் சொந்தம் என்று கிடையாது.இங்கே அதற்கான அங்கீகாரம் (அதை அடைவதற்கான முயற்சியல்லாத முயற்சி) வெளிப்படையாக உண்டு. இதை உலகின் வெவ்வேறு பகுதியின் கலாச்சார மொழியில்,மற்றும் அந்த பகுதிக்கே உரிய கதைகளில் பார்க்கலாம். அதை அதன் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும்.

  இந்தியாவில் 'பரமாத்மா-ஜீவாத்மா' என்கிறார்கள். இயேசு அதை 'நான்-என்தந்தை' என்று குறிப்பிடுகிறார்.ஒரு கட்டத்தில் நானும் என் தந்தையும் ஒன்று என்கிறார்.

  இதற்கான முயற்சி பல அமைப்புகளின் மூலம் நடக்கிறது .அந்த அமைப்புகள் அல்லது நிறுவனங்களே 'மதங்கள்'. இந்து மதம் என்பதே ஒரு பெட்டியில் போட்டு லேபிள் ஒட்டப்பட்ட பல்வேறு அமைப்புகளே! தொகுப்பு மதம் என்று அழைக்கலாம். ஒவ்வொருவரும் அவரவர் மனத்துக்கு ஏற்ப எந்த அமைப்பு ஒத்துப் போகிறதோ அதை பின்பற்றி 'உண்மையை' அடைவது என்பது நியாயமாக இருக்கவேண்டும்.

  உண்மையை அடைந்தபிறகு அந்த நபர் ஒரு இறைத்தூதரே! புத்தனும் அப்படியே! ஆனால் அதற்குப் பிறகு அவர் மக்களிடம் தொடர்பு கொள்ளும்போது நிறுவனம் (வேறுவழியில்லை) மூலம்தான் தொடர்பு கொள்வார் என்கிறது புத்தமதம்.

  இன்னொன்று 'நம்பிக்கை' வழி என்று உள்ளது. அதில் யோகிகள்,முனிவர்கள்,ஏதோ ஒன்று -எல்லாருமே 'சாதாரண மனிதனைவிட' சில அற்புதங்களை அவர் மீது ஏற்றி வரலாற்றில் பதியவைப்பது,larger than life-பெயரிட்டு அழைப்பது என்பது நடைமுறை. அதுவே பக்தி என்பதும். அதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து மிகவும் அருமை. வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 8. முனிவர்களுடன் முகமதுவா....??கேட்கவே கஷ்டமாக உள்ளது..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...