வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Friday, March 9, 2012

மதங்கள் உருவாக உண்மையான காரணம் என்ன தெரியுமா?


உலகில் முதன் முறையாக  உங்களுக்கு ஒரு சின்ன அல்லது பெரிய   உண்மையை சொல்லப்போகிறேன்.  இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உரிமை. இப்பதிவின் நோக்கம் யாரயும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. நான் உண்மையாக நினைப்பதை பகிர்ந்து கொள்வது மட்டுமே.

என்னைப்பொருத்த வரை மதங்கள் உருவாக ஒரு மிக முக்கிய  காரணம் ஆர்வக்கோளாறு :).
ஆமாங்க ஆர்வக்கோளாறு தான் காரணம்.

மதங்களை  உருவாக்கியவர்கள் அனைவரும் இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள். ஆனால்  இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள் அனைவரும் மதங்களை உருவாக்கவில்லை. ஏன்?

மதங்களை உருவாக்கியவர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த ஓற்றுமை என்னவெனில் இவர்கள் பெரும்பாலும் தங்களது சுய முயற்சியினால் இறை தரிசனம் பெறுகிறார்கள். கண்டவுடன், ஏதோ உலகத்திலேயே இவர்தான் ஏதோ சாதித்து விட்டதாகவும், இறைவன் இவருக்கு மட்டுமே காட்சி தந்ததாவும் நினைத்து கொண்டு கருத்து சொல்ல கிளம்பிவிடுகின்றனர்.

ஒன்று இருந்திதிருந்தால் அவர்களுக்கு இந்த ஆர்வக்கோளாறு வந்திருக்காது. அந்த ஒன்று தான் "குரு".  

இன்று உள்ள மதத்தை  நிறுவிய பலருக்கும் சொல்லிக்கொள்ளும்படி குரு யாரும் இல்லை. குரு யாரும் இல்லாததால் இவர்கள் கண்டதை,உணர்ந்ததை  பெரிதாக நினைத்துவிட்டனர்(அது உண்மையில் பெரிது என்பது வேறு :) ). குரு இருந்திருந்தால் மண்டையில் ஒரு தட்டு தட்டி இதெல்லாம் ஒரு பெரிய விடயமே இல்லை என்று கூறி இருப்பார். :)

ஆதலால் தான் பெரும்பாலும் குரு முகமாக தியானத்தை கற்கும் யாரும் மதத்தை உருவாக்குவதில்லை. குருவில்லாமல் தியானத்தை கற்று இறை தரிசனம் பெறுபவர்களே பெரும்பாலும் மதத்தை உருவாக்குகின்றனர். 


ஆக, குருவில்லாமல் இறை தரிசனம் கிடைக்கும்  பொழுது, சில உண்மைகள் விளங்கும் பொழுது, ஆர்வம் மிகுதியாகி, ஆர்வ கோளாறால் மதங்கள் உருவாகிறது என்பதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.. 

18 comments:

 1. உங்கள் பார்வையில் மதம் என்றால் என்ன?

  ReplyDelete
 2. வாங்க ராபின்,
  இப்படி மட்டுமே வணங்க வேண்டும், இப்படி மட்டுமே வாழ வேண்டும் என்ற சட்ட திட்டங்களை மக்கள் மீது திணிப்பதைத்தான் நான் மதமாக கருதுகிறேன்
  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  ReplyDelete
 3. இன்னும் விஷயங்கள் உண்டு. இணையத்திலேயே தேடித் படிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா..க நன்றி ராபின்

   Delete
 4. அஹா....ஒஹ்ஹோஒ....கடவுளே இல்லை...மதங்கள் மட்டும் எப்படி...புரட்சி ..புரட்சி....நாம் டைப் அடிக்கும் கீபோர்ட் எப்படி தானாகவே உருவாகியதோ அதே போலதான் இந்த உலகமும் உருவாகியது...இந்த கருத்து ஓகே தானே சகோ

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ NKS.ஹாஜா மைதீன்,
   ஹா ஹா :) :) கடவுளை யார் இல்லை என்றது...நீங்களும் நானும் இருக்கும்பொழுது கடவுள் இல்லாமல் எங்குபோவான். நீங்களும் நானே கடவுளின் சாட்சிகள். :)
   ஆனால் இப்படித்தான் அவனை வணங்க வேண்டும் என்பது மடமையன்றோ :) சிந்தியுங்கள் சகோ

   Delete
 5. நண்பரே நீங்கள் சொன்னது முற்றிலும் தவறு குருவை பற்றி மூளுமையாக தெரிந்து கொண்டு பின்பு கருத்து கூறுங்கள்.ஒருவன் பிறக்கும் போதே இவன் இப்படிதான் இருப்பான் என்று ஜாதகம் கூறுகிறது .அது எப்படி அங்கு கடவுள் இல்லையா .முதலில் குரு இல்லாமல் எழுதினால் இப்படிதான் விசியம் இல்லாமல் இருக்கும் . கடவுள் அனைவருக்கும் காட்சி குடுப்பதில்லை . ஏன் காட்சி குடுத்த இறைவனே குருவாக இருந்தால் முதலில் சிந்தித்து எழுத கற்று கொள்ளுங்கள் . கண்டதையும் எழுதாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அந்நியன், :)
   // நண்பரே நீங்கள் சொன்னது முற்றிலும் தவறு குருவை பற்றி மூளுமையாக தெரிந்து கொண்டு பின்பு கருத்து கூறுங்கள்.//
   உண்மையில் எனக்கும் சொல்லிக்கொள்ளும்படி குரு இல்லை. அதலால் தான் நானும் ஆர்வக்கோளாறால் எழுதுகிறேன்.:)
   வாய்ப்பு கிடைக்கும் பொழுது குருவை பற்றி தெரிந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை பகரிந்து கொள்ளுங்களேன்.

   //.ஒருவன் பிறக்கும் போதே இவன் இப்படிதான் இருப்பான் என்று ஜாதகம் கூறுகிறது .//

   இதில் ஓரளவிற்கு உண்மை இருந்தாலும் அந்த உண்மை அனைத்தையும் தெள்ளத்தெளிவாக சொல்லும் அளவிற்கு இங்கே ஜோதிடர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

   //அது எப்படி அங்கு கடவுள் இல்லையா//
   கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லையே...நீங்கள் இருக்கிறீர்களே...நான் இருக்கிறேனே :)

   //முதலில் குரு இல்லாமல் எழுதினால் இப்படிதான் விசியம் இல்லாமல் இருக்கும் . //
   உங்களுக்கு இதில் விஷயம் இல்லை என்று தோன்றாலாம் சிலருக்கு விடயம் இருப்பதாக தோன்றலாம். இருப்பினும் உங்கள் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

   //கடவுள் அனைவருக்கும் காட்சி குடுப்பதில்லை . ஏன் காட்சி குடுத்த இறைவனே குருவாக இருந்தால்//

   ஆகா உண்மையை சொல்லி விட்டீர்களே...காட்சி கொடுக்கும் இறைவனே குரு என்பதில் எந்த ஐயமும் இல்லை.இவனே உண்மையான குரு.
   ஆனால் அந்த குரு சொல்லும் உண்மையை யாரும் முழுமையாக கேட்பதில்லை.கேட்கும் பக்குவம்,தைரியம் இருப்பதில்லை.

   //முதலில் சிந்தித்து எழுத கற்று கொள்ளுங்கள் . கண்டதையும் எழுதாதீர்கள்//
   முடிந்த வரை முயற்சி செய்கிறேன்....கண்டதை எழுதுவதுதானே சரி....காணாததை எழுதுவது தானே தவறு? :)
   தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 6. Replies
  1. ஐயா வாங்க,
   பிராமணர்கள் தவறு செய்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதுபற்றிய விழிப்புணர்வு பலருக்கும் ஏற்ப்பட்டுள்ளது எனபதே உண்மை.
   ஆனால் அதே தவறை இன்று பிற மதத்தினரும் செய்கிறார்கள் அதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
   இங்கேதான் உங்களது பகுத்தறிவில் எனக்கு சந்தேகம் வருகின்றது.
   எந்த மதத்தில் தவறு இருந்தாலும் தட்டி கேட்பவனே உணமையான பகுத்தறிவாதி மற்றவன் சுயநலவாதி.நீங்கள் பகுத்தறிவாதியா? சுயநலவாதியா?

   Delete
  2. முதலில் ஊர் முழுக்க முகம் சுளித்து மூக்கை பொத்தவைக்கும் தன் குண்டியை சுத்தம் செய்துவிட்டு மற்றவர்களின் குண்டிகளில் புரட்சிகரமாக மூக்கை நுழைக்கலாமே ?

   Delete
  3. தாங்கள் அதைத்தான் செய்கிறீர்களா? அப்ப சரி....இருந்தாலும் கொஞ்சம் நாகரிகமாக நீங்கள் எழுதினால் என் தளமும் சுத்தமாக இருக்கும். நன்றி

   Delete
  4. நண்பர் சொன்னது மிகவும் தவறான கருத்து மேலே கூறிய கருத்தை ஏற்று கொள்ள முடியாது . புராணங்களையே பொய் என்று அகஸ்தியர் கூறுகிறார் .ஆனால் சித்தர்கள் யாருக்கும் கட்டு பட்டவர்கள் இல்லை .ஜாதியை பற்றி ஒருவன் பேசி விட்டால் பிறகு அவன் கடவுளை பற்றியும் புராணங்களை பற்றியும் பேச ( ) இல்லாதவன் புராணங்களும் வேதங்களும் மக்களை நேர்வழி படுத்த வியாசக முனிவரால் எழுதப்பட்டது.

   Delete
  5. @சித்தர்கள் ரகசியம்,
   அவருக்கு சித்தர்கள் ரகசியம் எல்லாம் தெரியாது. அவருக்கு பொதுநலமும் இல்லை.அவர் இந்த பின்னூட்டத்தை இங்கே இட காரணம் அவரது மதத்தை எல்லாரும் ஏற்க்கவேண்டுமாம். :) என்ன சொல்ல... விடுங்கள் ஐயா.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 7. அண்ணே, உங்க பதிவை விட மற்ற பின்னோட்டங்களை விட 'சிந்திக்க உண்மைகளு'க்கு சொன்ன இந்த பின்னோட்டமே என்னை ரொம்ப கவர்ந்தது.

  //சிந்திக்க உண்மைகள்.Mar 9, 2012 09:31 PM
  click the link and read
  .
  .
  /////// உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.‍ ரிக் வேதம் பிரிவு 62 . ஸ்லோகம் 10. ///////

  .

  ReplyDelete
  RepliesR.PuratchimaniMar 9, 2012 10:00 PM
  ஐயா வாங்க,
  பிராமணர்கள் தவறு செய்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதுபற்றிய விழிப்புணர்வு பலருக்கும் ஏற்ப்பட்டுள்ளது எனபதே உண்மை.
  ஆனால் அதே தவறை இன்று பிற மதத்தினரும் செய்கிறார்கள் அதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
  இங்கேதான் உங்களது பகுத்தறிவில் எனக்கு சந்தேகம் வருகின்றது.
  எந்த மதத்தில் தவறு இருந்தாலும் தட்டி கேட்பவனே உணமையான பகுத்தறிவாதி மற்றவன் சுயநலவாதி.நீங்கள் பகுத்தறிவாதியா? சுயநலவாதியா//

  ஐயோ திருடன் ஓடுறான், திருடன் ஓடுறான்னு கூவிக் கிட்டே கும்பலுக்கு முன்னாடி ஓடுற திருடன் ஞாபகம் தான் இவங்களையெல்லாம் பார்க்கும் போது வருது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கரிகாலன் ஐயா,
   என் பின்னூட்டம் தங்களை கவர்ந்ததை எண்ணி மகிழ்கிறேன். தங்கள் கருத்தை கூறியமைக்கு நன்றி. இப்பொழுதான் இது பற்றி ஒரு பதிவிட்டுள்ளேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. //முதலில் சிந்தித்து எழுத கற்று கொள்ளுங்கள் . கண்டதையும் எழுதாதீர்கள்//

  தம்பி டீ இன்னும் வரல :)

  ReplyDelete
  Replies
  1. //தம்பி டீ இன்னும் வரல :)//

   வாங்க கிருஷ்ணா டீ வருமா வரதா? :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...