வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Saturday, March 10, 2012

யார் நேர்மையானவன்? பகுத்தறிவாதியா? கம்யுனிஸ்ட்டா?


இது முழுக்க முழுக்க மதத்தை கருத்தில் கொண்டு எழுதப்படும் பதிவு.
மதங்களை விமர்சிக்கும் பொழுது யார் நேர்மையாளராக உள்ளார் என்பதே என் தேடல்.

பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை தவிர பிற மதங்களை விமர்சிப்பதாக தெரியவில்லை.


அந்த காலத்தில் பிராமணிய ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் அவ்வழியை தேர்ந்தெடுத்தார்கள். அது சரியானதே.

ஆனால் இன்றும் பெரியார் தளங்கள் அதே இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கின்றன. ஏன் இவர்களுக்கு மற்ற மதங்களில் உள்ள குறைகள் தெரியவில்லை. அதை படிப்பதில்லையா? இல்லை அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்கிறார்களா? அல்லது பிற மதங்கள் பகுத்தறிவானது என்று ஏற்றுக்கொள்கிறார்களா?


மதத்தை உண்மையாக எதிர்ப்பவனாக  இருந்தால் அவன் அனைத்து மதங்களையும் எதிர்க்க வேண்டும் ஆனால் ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் உணரவேண்டும்.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பவர்கள் சுயநலவாதிகளாக இருப்பர்களோ என எண்ணுகிறேன். அவர்கள் சுயநலவாதிகள் அல்ல என்பதை பிற மத புத்தகங்களையும், வழக்கங்களையும் விமர்சித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.

கம்யுனிஸ்ட்டுகள் இந்து மதத்தை மட்டுமலாமல் ஓரளவிற்கு பிற மதங்களையும் விமர்சிக்கின்றனர்.குறிப்பாக வினவு தளம்.


 ஆதலால் இந்த தேடலின் முடிவில் தன்னை பகுத்தறிவாளன் என்று கூறுபவனை விட கம்யுனிஸ்ட் என்று கூறுபவன் ஓரளவிற்கு மத விமர்சனத்தில் நேர்மையாக இருப்பதாக தெரிகிறது.


மீண்டும் சொல்கிறேன் இது மதத்தை மட்டுமே அளவுகோலாக கொண்டு எழுதப்பட்ட பதிவு. மற்றபடி எனக்கு சில பகுத்தறிவாளர்கள் சிந்தனையும் பிடிக்கும், சில கம்யுனிஸ்ட் சிந்தனைகளில் மாற்று கருத்தும் உண்டு.

பகுத்தறிவாளர்கள் பிற மதங்களை விமர்சிக்காததன் காரணத்தை கூறினால் (அல்லது விமர்சித்து இருந்தால் அந்த சுட்டிகள்  தந்தால் ) அதை நானும் பிறரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

11 comments:

 1. //ஆதலால் இந்த தேடலின் முடிவில் தன்னை பகுத்தறிவாளன் என்று கூறுபவனை விட கம்யுனிஸ்ட் என்று கூறுபவன் ஓரளவிற்கு மத விமர்சனத்தில் நேர்மையாக இருப்பதாக தெரிகிறது.//
  unmaiyaaka thaan pala nerangkalil thonrukirathu...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா மதுரை சரவணன் ,
   என்னுடைய கருத்தை வழிமொழிந்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 2. //யார் நேர்மையானவன்? பகுத்தறிவாதியா? கம்யுனிஸ்ட்டா? //

  கேள்வியும் நானே ப‌திலும் நானே என்று த‌ம்ப‌ட்ட‌ம‌டித்துக்கொண்டு ...... ? ! .

  // இது முழுக்க முழுக்க மதத்தை கருத்தில் கொண்டு எழுதப்படும் பதிவு.மதங்களை விமர்சிக்கும் பொழுது யார் நேர்மையாளராக உள்ளார் என்பதே என் தேடல். //

  மதங்க‌ளை விம‌ர்சிக்க‌ புறப்ப‌டும் முன் தான் இருக்கும் ம‌த‌த்தை ப‌ற்றி ஆதியோட‌ந்த‌மாக‌ தெளிந்தாய் விட்டதா ?

  புர‌ச்சிமணியின் ம‌த‌ம் என்ன‌?
  எத்த‌னை க‌ட‌வுள்க‌ள்?
  வேத‌ங்க‌ள் எவை?
  அவைக‌ள் எங்கு கிடைக்கும்?

  எத்தனை வேத‌ங்க‌ள் ப‌டித்திருக்கிறீர்க‌ள்?
  என்னென்ன‌ வேத‌ங்க‌ள் வீட்டில் உள்ள‌ன?

  நாடு முழுதும் தனது வணக்க ஸ்தலங்களில், வீடுகளில் ம‌ட்டும‌ல்லாது யாவ‌ருக்கும் எளிதில் கிட்டும் வ‌கைக‌ளில் துலுக்க‌னும் கிறித்த‌வ‌னும் த‌ன் ம‌த‌ நூல்க‌ளை வைத்திருக்கும் பொழுது ........ !!!!


  புழுத்து நாறிக்கொண்டிருக்கும் த‌ன் சுற்ற‌த்து கூள‌ங்க‌ளை .......  // பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை தவிர பிற மதங்களை விமர்சிப்பதாக தெரியவில்லை.//

  நாங்க‌ளும் நார் நாராக கிழிந்து தொங்கும் இந்த மதத்தின் பெயர்தாங்கிகளாக...


  // அந்த காலத்தில் பிராமணிய ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் அவ்வழியை தேர்ந்தெடுத்தார்கள். அது சரியானதே. //

  இப்பொழுது பூரணமாக‌ கைக‌ழுவியாச்சா?

  // ஆனால் இன்றும் பெரியார் தளங்கள் அதே இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கின்றன. ஏன் இவர்களுக்கு மற்ற மதங்களில் உள்ள குறைகள் தெரியவில்லை. அதை படிப்பதில்லையா? இல்லை அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்கிறார்களா? அல்லது பிற மதங்கள் பகுத்தறிவானது என்று ஏற்றுக்கொள்கிறார்களா?

  புர‌ச்சிமணியின் ம‌த‌ம் என்ன‌?
  எத்த‌னை க‌ட‌வுள்க‌ள்?
  வேத‌ங்க‌ள் எவை?
  அவைக‌ள் எங்கு கிடைக்கும்?

  எத்தனை வேத‌ங்க‌ள் ப‌டித்திருக்கிறீர்க‌ள்?
  என்னென்ன‌ வேத‌ங்க‌ள் வீட்டில் உள்ள‌ன?

  நாடு முழுதும் தனது வணக்க ஸ்தலங்களில், வீடுகளில் ம‌ட்டும‌ல்லாது யாவ‌ருக்கும் எளிதில் கிட்டும் வ‌கைக‌ளில் துலுக்க‌னும் கிறித்த‌வ‌னும் த‌ன் ம‌த‌ நூல்க‌ளை வைத்திருக்கும் பொழுது ........ !!!!


  புழுத்து நாறிக்கொண்டிருக்கும் த‌ன் சுற்ற‌த்து கூள‌ங்க‌ளை .......  // மதத்தை உண்மையாக எதிர்ப்பவனாக இருந்தால் அவன் அனைத்து மதங்களையும் எதிர்க்க வேண்டும் ஆனால் ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் உணரவேண்டும்.


  இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பவர்கள் சுயநலவாதிகளாக இருப்பர்களோ என எண்ணுகிறேன். அவர்கள் சுயநலவாதிகள் அல்ல என்பதை பிற மத புத்தகங்களையும், வழக்கங்களையும் விமர்சித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். //

  "ஐயோ திருடன் ஓடுறான், திருடன் ஓடுறான்னு கூவிக் கிட்டே கும்பலுக்கு முன்னாடி ஓடுற திருடன் " போல‌வா ?

  // பகுத்தறிவாளர்கள் பிற மதங்களை விமர்சிக்காததன் காரணத்தை கூறினால் (அல்லது விமர்சித்து இருந்தால் அந்த சுட்டிகள் தந்தால் ) அதை நானும் பிறரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். //


  கேள்வியும் நானே பதிலும் நானே என்பவர்களுக்கு சுட்டிகள் ஒரு பொருட்டா?


  மீண்டும் ...
  முதலில் ஊர் முழுக்க முகம் சுளித்து மூக்கை பொத்தவைக்கும் தன் குண்டியை சுத்தம் செய்துவிட்டு மற்றவர்களின் குண்டிகளில் புரட்சிகரமாக மூக்கை நுழைக்கலாமே ?


  .

  ReplyDelete
 3. ஐயா வாங்க,
  உங்கள் பெயரை கூட சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் நீங்கள் என்னிடம் எத்தனை கேள்வி கேட்க்கிறீர்கள்? :) அருமை
  நான் மதத்தை மதிப்பவன் அல்ல மனிதத்தை மதிப்பவன்
  மதத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மனிதனுக்கு தராவதன் என்னைப்பொருத்த வரை மனிதனே அல்ல.
  தங்கள் கருத்திற்கு நன்றி

  ReplyDelete
 4. நண்பர் புரச்சிமணி, உங்கள் கருத்து முழு உண்மை.
  தமிழக பகுத்தறிவாளர்கள் தான் இப்படி. இந்து மதத்தை மட்டுமே தாக்குபவர்கள் ஒருபோதுமே உண்மையான பகுத்தறிவாளர்களில்லை. மக்களை கற்காலத்திற்க்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் சுதந்திரமற்ற மதம் தமிழகத்தில் இருக்க இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் பகுத்தறிவாளர்களில்லை.
  //கம்யுனிஸ்ட்டுகள் இந்து மதத்தை மட்டுமலாமல் ஓரளவிற்கு பிற மதங்களையும் விமர்சிக்கின்றனர்.குறிப்பாக வினவு தளம்.//
  ஆமென்

  ReplyDelete
  Replies
  1. வாங்க thequickfox,
   //மக்களை கற்காலத்திற்க்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் சுதந்திரமற்ற மதம் தமிழகத்தில் இருக்க இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் பகுத்தறிவாளர்களில்லை. //

   சரியாக சொன்னீர்கள்....

   இந்து மதத்தை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை பிற மதங்களில் உள்ள குறைகளையும், ஆபாசங்களையும் விமர்சித்து மக்களுக்கு
   அவர்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. நண்பர் புரச்சிமணி
  சிந்திக்க உண்மைகள் என்கின்ற பெயரில் இருண்ட உலகத்திற்கான அழைப்பு விடுக்கும் சிந்தனை மறுப்பு நாசகார கருத்துகளை நீக்கிவிடும்படி அன்புடன் பொதுநலம் கருதி வேண்டிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொது நலன் கருதி அந்த பின்னூட்டத்தை நீக்கிட்டேன்.

   நன்றி

   Delete
 6. கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் நேர்மை பகுத்தறிவாதிகளிடம் இல்லை என்பதை விட - கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் தைரியம், நீங்க சொல்கிற பகுத்தறிவாளர்களிடம் (பெரியார் உட்பட) இல்லை என்பதே உண்மை. கோழைகளிடம் என்ன நேர்மை இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஜன்,
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 7. ஆத்தீகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறேன் பிரபஞ்சம் தானாகத் தோன்றியது என்பதை எம்மால் நம்ப முடிவதில்லை ...ஆனால் கடவுளுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அவரின் கால் தூசுக்கு கூட இணையாகாது ஆனால் பிரபஞ்சம் தானாக தோன்றியது என்றால் நம்ப மறுக்கும் நாம் கடவுள் தானாக தோன்றியவர் என்றால் உடனே மறு கேள்வி கேட்காது நம்பி விடுகிறோமே ஏன்? எல்லாவற்றையும் தோற்றுவிக்க ஒருவர் வேண்டும் அவர் கடவுளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் இந்த ஒரே ஒரு விடயத்தை வைத்துத்தான் ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளார்கள் ....ஆனால் இந்த லாஜிக் கடவுளிடம் மட்டும் நாம் பயன் படுத்துவதில்லை எனக்கு எந்த கேள்விக்கு விடை தரவும் ..நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல இரண்டும் நிரந்தர இருக்கைகள் நான் அவற்றில் அமர விரும்புவதில்லை எனக்கு பெற்றோர் சொன்னதற்காக ..எனது பாடப்புத்தகம் எனக்கு படிப்பித்தத்ற்காக கடவுளை என்னால் உணர முடிய வில்லை வேறு விதமாக சொன்னால் அவளவு பெரிய கடவுளை ஒரு சில மனிதர்களும் புத்தக்ம் மட்டும் விளக்கிவிட முடியாது ...அப்படி விளக்கி கடவுள் நம்பிக்கை வந்தால் அவர் கடவுளே அல்ல ஏனென்றால் கடவுளை அவளவு தூரம் உயர்த்தி வைத்துள்ளோம் அதாவது எமக்கு எட்டிய உயரம் வரை ...விளக்கம் தரவும்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...