வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Friday, March 30, 2012

ஆபிரகாம் இந்துவா, சிவபக்தரா?


யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்களால் முக்கிய நபியாக கருதப்படும் ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று ஆபிரகாம் என்று அவரை அழைத்தாலும் அவர் பெயர் அப்ரம் என்றே பல மொழிகளில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்ரம் என்பது பிரம்மனின் பெயரை  குறிப்பதாக கூறுகிறார்கள். 

இவரின் மனைவியின் பெயர் சாரா, சராயு என்று கூறுகிறார்கள். இது பிரம்மனின் மனைவி பெயரான சரஸ்வதியை குறிப்பதாக கூறுகிறார்கள்.  சராயு என்று அயோத்தியில் ஒரு நதி இருந்துள்ளது. ஆபிரகாமின் மனைவியின் பெயர் இந்த நதியின் பெயரை ஒட்டி கூட அமைந்திருந்திருக்கலாம் என்பது எண் கணிப்பு. 

ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.

அபிரகாமும் சாராவும் உர் என்ற ஊரில் வாழ்கிறார்கள். இந்த ஊரிலும் பண்டைய இந்து மதம் இருந்ததாக தெரிகிறது.  பிறகு இவர்கள்  கனான் (Kana‘ān) என்ற பகுதியில் குடியேறுகிறார்கள். இந்த கனான் என்பது கண்ணனின்  பெயரை குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள். (மேலும் உங்கள் பார்வைக்கு ....காந்தகார் என்று  ஆப்கானிஸ்தானில்   ஒரு இடம் உண்டு...இது காந்தாரியின் பெயரை குறிக்கின்றது , லாகூர் என்று பாகிஸ்தானில் ஒரு இடம் உண்டு இது ராமனின் மகன் லவனை குறிக்கின்றது. லவவூர் என்பது லாகூராக திரிந்துள்ளதாக தெரிகிறது) 

ஆபிராகமிற்கு குழ்ந்தை இல்லாததால் வேலைக்காரியை இவருக்கு இவர் மனைவி மணம் முடிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிடுகின்றனர்..  இது தமிழில் ஈசனின் பெயரோடு ஒத்து வருகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் உயர்ந்த சிவன் என்று பொருள் கூறுகிறார்கள்.

பிறகு சில காலங்கள் கழித்து இவரது மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தைக்கு இவர் ஈசாக் - ஈசாக்கு என்று பெயரிடுகிறார். இதுவும் ஈசனின் பெயரை  அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளகாதாக தெரிகிறது.  இதற்கு சிவனின் நண்பன் என்று பொருள் தருவதாக கூறுகிறார்கள்.
தங்களுடைய குழந்தைகளுக்கு  ஈசனின் பெயரை இடுவதன் மூலம் இவர் ஒரு சிவ பக்தர் என்று கூறலாம் அல்லவா?

இவர்களின் பெயரில் சிவன், ஈசன் இருக்கும் பொழுது அவர்களின் மதத்தில் இல்லாமல் போகுமா?

ஆபிரகாமிய மதங்கள் எனப்படும் யூதம், கிருத்துவம், இசுலாம் ஆகியவற்றின் மூலம் இந்து மதமாகத்தான் தெரிகிறது.  ஈஸ்வரன், ஈசன், சிவன் என்ற சொற்களின் திரிபுகளை  இந்த மத நூல்களில் நம்மால்  காண முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பண்டைய இந்து மதமானது இருந்துள்ளதாக தெரிகிறது.

நேரம் கிடைக்கும் பொழுது விரிவாகவோ சுருக்கமாகவோ பார்ப்போம்.:)

வரலாறு காணாத மின்வெட்டினால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலவில்லை.

குறிப்பு: இப்பதிவின் நோக்கம் இந்து, யூத, கிருத்துவ, இசுலாமிய மதத்தை களங்கப்படுத்துவது அல்ல.
இவ்வாறு ஆய்வுகள் நடகின்றது, இப்படி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதே என் நோக்கம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். 

மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே. மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும்  மூலம் ஒன்றுதான். நமக்குள் மதத்தின் பெயரால் பூசல் கொள்வது சரியானது அல்ல. நம் அனைவரின் மூலம் ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அன்போடு பழகுதலே இறைவனுக்கு செய்யும் மிக சிறந்த வழிபாடாகும்.


மேலும் படிக்க: http://www.hermetics.org/Abraham2.html

32 comments:

 1. ////இவ்வாறு ஆய்வுகள் நடகின்றது, இப்படி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது////

  வீட்டுக்கு ஆட்டோவும் வரலாம்...டாட்டா சுமோ வும் வரலாம்....என்னுடைய ஆய்வு இவ்வாறு சொல்லுகிறது :)  ////மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே. /////


  இதுக்கு போய் பரிணாமத்த தூக்கி பிடிக்கணுமா.....
  சூரியனில் இருந்து பூமி பிரிந்து வந்த போது...நாம் அனைவரும் வெறும் பூமியாக மட்டும் இருந்தோம்...... :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கிருஷ்ணாரே :)
   // வீட்டுக்கு ஆட்டோவும் வரலாம்...டாட்டா சுமோ வும் வரலாம்....என்னுடைய ஆய்வு இவ்வாறு சொல்லுகிறது :) //
   இறைவன் வந்த பிறகு எது வந்தால் என்ன :)
   வாய்மையே வெல்லும்

   //இதுக்கு போய் பரிணாமத்த தூக்கி பிடிக்கணுமா.....
   சூரியனில் இருந்து பூமி பிரிந்து வந்த போது...நாம் அனைவரும் வெறும் பூமியாக மட்டும் இருந்தோம்...... :)//

   என்னுடைய பரிணாம கொள்கை ஆகாயத்தில் இருந்து தொடங்குகிறது :) வானாகி,வளியாகி, ஒளியாகி, நீராகி, மண்ணாகி என்று :)

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

   Delete
 2. வணக்கம் சகோ புரட்சிமணி ,

  அருமை!.முதலில் வாழ்த்துக்கள்,வேதங்களை ஆழ்ந்து படிக்கிறீர்கள்.ஒரு சார்பற்று படிப்பவருக்கு ஒற்றுமை மட்டுமே தோன்றும் வேற்றுமை அல்ல.

  அப்ரஹாம்‍=ப்ரஹ்மா

  சாராள்=சரஸ்வதி

  இச்சுட்டி உங்களுக்கு பயன்படலாம்!!!!!!!

  http://www.hermetics.org/Abraham2.html

  பழைய ஏற்பாடு படிக்கும் போது இன்னும் பல் ஒற்றுமைகள் கண்ணில் படும்.

  அனைவரின் தோற்றம் ஒன்று என்பதால் ஏதோ ஒரு இடத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக் மாறி கதை வடிவில் உலவுகின்றன என்பது நம் கருத்து!

  ஆப்பிரிகாவில் தோன்றிய மனித இனம அங்கிருந்து கடலை[red sea] கடந்ததுதான் மொசஸின் யாத்திராகமம்[exodus] வந்த கதை.

  ஆப்பிரிக்காவில் இருந்து வெளி வந்தது மனித குல‌ம் ஆனால் யூதர்களுக்கு கானான் தேசம் கொடுக்க என திரித்து விட்டார்கள்.

  இன்னும் நிறைய‌ எழுதுங்கள் !!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ சார்வாகன்,
   // அருமை!.முதலில் வாழ்த்துக்கள்,வேதங்களை ஆழ்ந்து படிக்கிறீர்கள் //
   தங்களுடைய வாழ்த்துக்கு என்னை தகுதியாக்கி கொள்ள முயல்கிறேன் :)

   //ஒரு சார்பற்று படிப்பவருக்கு ஒற்றுமை மட்டுமே தோன்றும் வேற்றுமை அல்ல.//
   உண்மைதான் சகோ. சாகிர் நாயக்கும் இதை ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் அதில் ஒரு சுயநலம் தெரிகிறது.

   //அப்ரஹாம்‍=ப்ரஹ்மா

   சாராள்=சரஸ்வதி

   இச்சுட்டி உங்களுக்கு பயன்படலாம்!!!!!!!

   http://www.hermetics.org/Abraham2.htm //

   என்னை விட இது பற்றி நீங்கள் எழுதலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு என்னிடம் இல்லை என்றே நினைக்கின்றேன். இச்சுட்டியை நானும் படித்தேன் அதிலிருந்து சில விடயங்களை தந்துள்ளேன். யாரேனும் கேட்கும் பொழுது இதை பகிரலாம் என எண்ணினேன். நீங்களே தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி :)

   //பழைய ஏற்பாடு படிக்கும் போது இன்னும் பல் ஒற்றுமைகள் கண்ணில் படும்.

   அனைவரின் தோற்றம் ஒன்று என்பதால் ஏதோ ஒரு இடத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக் மாறி கதை வடிவில் உலவுகின்றன என்பது நம் கருத்து!

   ஆப்பிரிகாவில் தோன்றிய மனித இனம அங்கிருந்து கடலை[red sea] கடந்ததுதான் மொசஸின் யாத்திராகமம்[exodus] வந்த கதை.

   ஆப்பிரிக்காவில் இருந்து வெளி வந்தது மனித குல‌ம் ஆனால் யூதர்களுக்கு கானான் தேசம் கொடுக்க என திரித்து விட்டார்கள்.//
   நிறைய படிக்க முயல்கிறேன்

   //இன்னும் நிறைய‌ எழுதுங்கள் !!!!!!!!!!!!!!!//

   பிறகு நிறைய எழுத முயல்கிறேன்......முடிந்தால் நீங்களும் இதைப்பற்றி எழுதுங்கள்.என்னைவிட உங்களுக்கு நிறைய விடயம் என நானறிவேன் :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 3. ///Your comment will be visible after approval.

  ///

  இப்படி பயந்தா எப்படி ???

  ReplyDelete
 4. //யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்களால் முக்கிய நபியாக கருதப்படும் ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.//
  ஆபிரஹாமின் தந்தை பாகநிசத்தை பின்பற்றியவர். பாகநிசத்தின் இந்திய வடிவம்தான் இந்து மதம். ஆபிரஹாம் கடவுளால் அழைக்கப்பட்டு பின் மனம் மாறினார்.
  http://www.bibletools.org/index.cfm/fuseaction/Topical.show/RTD/cgg/ID/6935/Abrahams-Calling.htm

  http://www.bible.ca/ef/topical-by-faith-abraham-obeyed.htm

  இந்து மதத்தின் பல கூறுகள் மத்திய ஆசியா, பெர்சியா, கிரேக்கம் போன்ற இடங்களிருந்து இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் கொண்டு வந்ததுதான். எனவே ஒற்றுமை இருப்பதில் வியப்பில்லை. வேதகால இந்துக்களைப் போல பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரேலியர்களும் விலங்குகளைப் பலியிட்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராபின் அவர்களே,
   நேரம் இல்லாததால் உங்கள் சுட்டிகளை சரிவர படிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது படிக்கின்றேன்.
   ஆரிய வருகை நடைபெறவில்லை என்றும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அப்படியே ஆரியவருகை நடைபெற்றிருந்தாலும் அதற்க்கு முன்பே இங்கே எந்த மதமும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய வருகைக்கு முன்பு இந்தியாவில் சிவ வழிபாடு இருந்ததாக தெரிவிக்கின்றது.
   இருப்பினும் மதங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை மறுப்பதற்கில்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி :)

   Delete
 5. அவரின் தந்தை விக்கிரகங்கள் செய்தவர் என்று குரான் கூறுகிறது

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ammuthalib அவர்களே ,

   அப்படியா? புதிய செய்தியை தந்தமைக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி :)

   Delete
 6. "thiru valluvar" evar islamiya markatai sherntavar enru en aaraichi mudivu solkirathu!
  Reek,yajur,sama and atharvana vethankal oru eraivanal arulapattu pin vantavargal athanai matri amaitanar!

  ReplyDelete
  Replies
  1. vaanga s.jaffer.khan,
   ungal aaivin padi thirumaal thaan aega iraivan endrum solveergalaa? :)
   thangal varugaikkum karuththukkum mikka nandri :)

   Delete
 7. இது என்ன புது குண்டு.

  பதிவின் கடைசி பத்திதான் பிடித்திருந்தது. அதுதான் உண்மையும் கூட.

  நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நரேன் அவர்களே ,
   இன்னும் நிறைய குண்டு இருக்கின்றது. மெய்பொருள் காண்பதறிவு என்பதின்படி நாம் தான் அதை அறியவேண்டும்.
   உங்களுக்கு பிடித்த கடைசி பத்தியை அனைவரும் ஏற்று அன்புடன் வாழவேண்டும் என்பதே அனைவரது ஆசையும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. நண்பர் புரட்சிமணி,
  சிறந்த ஒரு பதிவை தந்ததிற்க்கு நன்றி.
  //மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும் மூலம் ஒன்றுதான். நமக்குள் மதத்தின் பெயரால் பூசல் கொள்வது சரியானது அல்ல.//
  உண்மை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பார் thequickfox அவர்களே,
   அவர்கள் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதிவுகளை எழுதுகிறேன். சிந்திப்பார்கள் என நம்புவோம்.
   அவர்களுக்கும் மனம் உண்டு. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 9. neengal eppadi pesinaalum madhaveripidiththa manidhar maarappovadhu illai nandri
  surendran

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேந்தர் அவர்களே,
   மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது...நல்லதையே நினைப்போம். அவர்களும் மனிதர்கள் தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 10. அவசியம் கேட்க வேண்டியது.


  இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
  .
  .

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிந்திக்க உண்மைகள் ஐயா,
   உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. எனக்கு வீடியோ பார்க்கும் வசதி குறைவு ஆதலால் கட்டுரை சுட்டிகளை தாருங்கள்.
   மேலும் பதிவிற்கு சம்பந்தமான சுட்டிகளை மட்டும் தாருங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 11. //ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

  அவர் பெயர் அப்ரம் என்றே பல மொழிகளில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்ரம் என்பது பிரம்மனின் பெயரை குறிப்பதாக கூறுகிறார்கள்.

  இவரின் மனைவியின் பெயர் சாரா, சராயு என்று கூறுகிறார்கள். இது பிரம்மனின் மனைவி பெயரான சரஸ்வதியை குறிப்பதாக கூறுகிறார்கள். நதியின் பெயரை ஒட்டி கூட அமைந்திருந்திருக்கலாம் என்பது எண் கணிப்பு.

  கனான் (Kana‘ān) என்ற பகுதியில் குடியேறுகிறார்கள். இந்த கனான் என்பது கண்ணனின் பெயரை குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

  இஸ்மாயில் என்று பெயரிடுகின்றனர்.. இது தமிழில் ஈசனின் பெயரோடு ஒத்து வருகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் உயர்ந்த சிவன் என்று பொருள் கூறுகிறார்கள்.

  அக்குழந்தைக்கு இவர் ஈசாக் - ஈசாக்கு என்று பெயரிடுகிறார். இதுவும் ஈசனின் பெயரை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளகாதாக தெரிகிறது. இதற்கு சிவனின் நண்பன் என்று பொருள் தருவதாக கூறுகிறார்கள்.

  ஆபிரகாமிய மதங்கள் எனப்படும் யூதம், கிருத்துவம், இசுலாம் ஆகியவற்றின் மூலம் இந்து மதமாகத்தான் தெரிகிறது. ஈஸ்வரன், ஈசன், சிவன் என்ற சொற்களின் திரிபுகளை இந்த மத நூல்களில் நம்மால் காண முடிகிறது.//

  என்றும் அன்புடன்,
  அ.ஹாஜாமைதீன்.

  ReplyDelete
 12. சகோ இராச.புரட்சிமணியவர்களே,
  இந்த பதிவில் தாங்கள் சுட்டிக் காட்டிய ஆதாரங்களை சற்று உற்று பாருங்கள்.......

  தெரிய வருகிறது.! இருந்துள்ளதாக தெரிகிறது.!! கூறுகிறார்கள்.!!! என்று கூறுகிறார்கள்.!!!! குறிப்பதாக கூறுகிறார்கள்.!!!!! எண் கணிப்பு.!!!!!! குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள்.!!!!!!!
  இப்படி குருட்டாம் போக்கில் எழுதுவதுதான் பதிவா?

  // வாங்க சிந்திக்க உண்மைகள் ஐயா,
  உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. எனக்கு வீடியோ பார்க்கும் வசதி குறைவு ஆதலால் கட்டுரை சுட்டிகளை தாருங்கள். மேலும் பதிவிற்கு சம்பந்தமான சுட்டிகளை மட்டும் தாருங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

  சாதாரன பின்னூட்டத்திற்கே, பதிவிற்கு சம்பந்தமான சுட்டிகளை தரச் சொன்ன நீங்கள், தங்களது இந்த பதிவிற்கு எத்தனை ஆதார சுட்டிகளை சமர்பித்தீர்கள்???

  //ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.//

  குறைந்த பட்சம் மேலே உள்ள இந்த வரிகளுக்கு மட்டுமாவது ஆதாரத்தை தெரிவிக்கலாமே!

  என்றும் அன்புடன்,
  அ.ஹாஜாமைதீன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்,
   உண்மையில் உங்களின் பின்னூட்டம் என்னை செதுக்குகின்றது. :)

   //தெரிய வருகிறது.! இருந்துள்ளதாக தெரிகிறது.!! கூறுகிறார்கள்.!!! என்று கூறுகிறார்கள்.!!!! குறிப்பதாக கூறுகிறார்கள்.!!!!! எண் கணிப்பு.!!!!!! குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள்.!!!!!!!
   இப்படி குருட்டாம் போக்கில் எழுதுவதுதான் பதிவா?//

   மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று எழுதுவது குருட்டாம்போக்கல்ல சகோ. ஆதாரத்தை தராதது தவறு ஒப்புக்கொள்கிறேன்.

   பெரும்பாலும் நான் சொந்தகருத்துக்களையும் பல இடங்களில் படித்ததையும் வைத்து எழுதுவதால் அது பற்றி பதிவில் குறிப்பிடுவதில்லை. இனி ஒவ்வொரு பதிவிற்கும் ஆதாரத்துடன் எழுதியாதா அல்லது சொந்தமாக எழுதியதா என்பதை தெரிவித்து விடுகின்றேன். அத்துடன் ஆதாரத்தையும் மறக்காமல் சமர்ப்பிக்கின்றேன். இப்பதிவிற்கான ஆதாரம்:http://www.hermetics.org/Abraham2.html

   ////ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.//

   குறைந்த பட்சம் மேலே உள்ள இந்த வரிகளுக்கு மட்டுமாவது ஆதாரத்தை தெரிவிக்கலாமே!//

   ஹரிஹரன் -இதில் ஹரி என்பது விஷ்ணு வையும் ஹரன் என்பது சிவனையும் குறிக்கும்.
   அந்த ஹரன் தான் ஆபிரகாமின் சகோதரரின் பெயர்.சிலவற்றுக்கு ஆதாரம் தேவை இல்லை என்று நானே நினைத்துக்கொள்வேன். குறிப்பாக திருக்குறளை எழுதியவர் திருக்குறள் என்று கூறும்பொழுது ஆதாரம் தருவதில்லை அதுபோல் தான் நான் இங்கு ஹரனுக்கும் தரவில்லை.
   http://hinduism.about.com/od/godsgoddesses/a/Lord-Ayyappa.htm
   தொடர்ந்து தவறாக நினைப்பதை அன்போடு சுட்டி காட்டுங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
   என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்

   Delete
  2. சகோ அ. ஹாஜாமைதீன்,ஒருவேளை உங்களுக்கு ஆபிரகாமின் சகோதரர் யார் என்று தெரிய ஆதாரம் வேண்டும் என்றால்
   Terah, the tenth in descent from Noah, fathered Abram, Nahor and Haran, and Haran fathered Lot. Haran died in his native Ur of the Chaldees, and Abram married Sarai, who was barren. Terah, with Abram, Sarai and Lot, then departed for Canaan, but settled in a place named Haran, where Terah died at the age of 205. (Genesis 11:27-11:32

   Delete
 13. //////மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே.///////
  இறைநம்பிக்கை அதிகமிருப்பதால் பரிணாமத்தில் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை.உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஆதம் ஏவாள் சந்ததிகளே.
  "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்க்காக படைத்தான்.அவன் அவளுடன் இணைந்தபோது அவள் லேசான சுமையை சுமந்தாள்.அதனுடன் அவள் நடமாடினாள்.அவள் வயிறு கன‌த்தபோது அங்கத்தில் குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்".(அல் குர்ஆன் 7:189)
  /////மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும் மூலம் ஒன்றுதான்.////
  100% correct.எல்லா சமயங்களும் ஓரிறைவனைத்தான் வலியுறுத்துகின்றது வழிபட்டும் வந்திருக்கின்றது."கடவுள் மனிதர்களை படைத்தான்,மனிதர்களோ (தங்களின் சுயநலனுக்காக)பல கடவுள்களை உருவாக்கிவிட்டார்கள்"

  அவ்விருவருக்கும் அங்கத்தில் குறைகளற்றவனை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்கு பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர்.அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.(அல் குர்ஆன் 7:190)
  ///////காந்தகார் என்று பாக்கிஸ்தானில் ஒரு இடம் உண்டு...இது காந்தாரியின் பெயரை குறிக்கின்றது /////////காந்தகார் (அ) கந்தகார் இது பாகிஸ்தானில் இல்லை ஆஃப்கானிஸ்தானில் உள்ளதென நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் அவர்களே, :)
   எனக்கும் இறைநம்பிக்கை உண்டு :)
   காந்தகார் தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி....இனி சிறு தவறும் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்
   தங்கள் வருகைக்கும் குரான் வசனங்களை கூறியமைக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 14. இப்ராஹிமுக்கும் இந்து மதத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை பார்கின்ற நீங்கள் அவர் வாழ்ந்த பொழுது அவர் சமூகதிருக்கு என்ன சொன்னார் என்பதை பைபிளும் குரானும் என்ன சொல்கிறது அன்பதை நீங்கள் படிக்க வில்லையா இல்லை வசதியாக மறந்து விட்டீர்களா?
  சிலையை வணங்காதீர்கள் என்று தான் மக்களிடம் சொல்லி இருக்கிறார், அவரின் தந்தை சிலை செய்பவர் மற்றும் அதை வணங்குபவர் ஒரு முறை இப்ராஹீம் சிலை அனைத்தையும் உடைத்து விட்டார் அதற்காக அந்த சமூகம் அவரை எப்படி தண்டித்து என்பனவற்றை எல்லாம் முழுமையாக படித்து விட்டு பின்பு பதிவு எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ mubarak kuwait :),

   சகோ சிலை வழிபாட்டை பற்றி சொல்கிறீர்களா?. ஏக இறைவனை வணங்கவேண்டும் என்று கூறியதும், சிலை வழிபாட்டை ஏற்றுக்கொண்டதும் இந்து மதம் மட்டுமே. ஏக இறைவன் விரும்பினால் ஏன் சிலை வழிபாடு தேவை, தேவையில்லை என்பது பற்றி பதிவிடுகிறேன். அபிரகம் தண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு இதுவரை தெரியாது.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 15. தங்கள் நோக்கம் புரியவில்லை,  பைபிளின்படி ஆபிராம் என்றவன் தன் ஊரிலிருந்து வெளியேறி இஸ்ரேல் வருவதாகக் கதை.  இதை ஆராய்ந்த தியசாபிகல் சொசைட்டி நிறுவனர் ப்ளவட்ஸ்கி தன் The Secret Doctrine. நூலில், பக்கத்கில் உள்ள பல நாடுகளில்

  உள்ள புராணக்கதைகளை எல்லம் ஆராய்ந்து சொன்னது

  ஆபிராம் என்ற போது இறைவனோடு தொடருப் கொண்டவன். பிரம்மத்தோடு உள்ளவன். கடவுளிடமிருந்து விலகியபின் அவர் ஆபிரஹாம்- பிரம்மத்திலிருந்து விலகியவர்.

  தேவப்ரியா சாலமன்

  ReplyDelete
 16. வாங்க தேவப்ரியா சாலமன் :),

  //தங்கள் நோக்கம் புரியவில்லை,//
  உண்மை என்று நான் நினைப்பதை பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். :)

  //ஆபிராம் என்ற போது இறைவனோடு தொடருப் கொண்டவன். பிரம்மத்தோடு உள்ளவன். கடவுளிடமிருந்து விலகியபின் அவர் ஆபிரஹாம்- பிரம்மத்திலிருந்து விலகியவர்.//
  இந்திய மார்க்கத்தை துறந்ததால் இப்படி பெயர் வந்ததோ :)

  தொடர்ந்து ஆய்வோம்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 17. unmaiyil thamilil kurippidum pothu abiraham sakotharar peyar "aaron".pls kavanaththil kollungal.

  ReplyDelete
 18. http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...