வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Friday, May 18, 2012

இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன
என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும்  அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.

முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக
நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.
இன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும்  செய்கிறது.

௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.
 நம்மால் இவற்றை கூற முடியாதா? வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா?

௩  . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.
நல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை  ஏற்ப்படுத்தவில்லையா?

உலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது  எதிர்த்தார்களா?  ஒழித்தார்களா? . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள்  தானே?

உலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது  இறைத்தூதராவது   எதிர்த்தார்களா?
மனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை,  இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்? மனிதர்களே.
.
சமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும்   இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.

பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.

நான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்பட்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.

இறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்
முதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை? ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு?. இதுவரை அவன் என்ன
சாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு?

இன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்,  நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.  
இறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.
(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :)  )

இவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று
கூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க  தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ? )  அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.

ஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன்.
(ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு  ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .

அற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும்.  அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).

இது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

புறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும்.  சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )

பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.  உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து
உயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான
ஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.  இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.

ஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும்,  இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும்   புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.


குறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான்,  இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை
இல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன? அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).
ஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு    பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.  

தனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும்.   ஆனால் இவனே உண்மையான  இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம்,  என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை
விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  எல்லா
உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும்   வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.

என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக  நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

 மதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்
ஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும்  மட்டும் வளர்ப்போம்.

என்பதிவை படித்த, படிக்கும், ஆதரவு அளித்த, அளிக்கும் சொந்தங்கள்  அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் :)


18 comments:

 1. நண்பரே, இறைத்தூதர்கள் பற்றி அருமையாய் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
  இறைத்தூதர்கள் என்கின்ற போலிகளின் வேடம் கலைக்கும் உங்களின் பணி தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா thequickfox :),
   ஒரு நகைச்சுவை படித்தேன்
   ஒரு ஆவி இன்னொரு ஆவியிடம் கேட்கிறது நீ எப்படி இறந்தாய் என்று.
   அதற்க்கு அந்த ஆவி சொன்னது
   சாக விஷம் சாப்பிட்டேன் சாகவில்லை, விஷத்துல கலப்படம்.
   மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு மருந்து கொடுத்தார்கள் செத்துவிட்டேன். மருந்தில் கலப்படம் என்று கூறியது,.
   இப்படித்தான் மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டிய மதமும் ஆன்மீகமும் இறைவன் இறைதூதன் என்ற பெயரில் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றது.
   அந்த நஞ்சை முறிக்கும் மருந்தாக ஒருவருக்காவது இது பயன்படட்டும் என்பதே என் நோக்கம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

   Delete
 2. வணக்கம் சகோ,

  இறைவன் என்று எதை நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உண்மை.நான் கடவுள்,இயறகையே கடவுள் என்றால் உண்டு.இயற்கைக்கு மேம்பட்ட மனிதன் போல கோபம்,பொறாமை,ப(லி)ழி வாங்குதல்.... பல குணம் கொண்ட ஒரு உயிரினம் என்றால் இல்லை என்பது நம் கருத்து.

  இறைத்தூதர், அவதாரம் என்பது ஏமாற்று வேலை என்று அனைவருக்கும் தெரியும் என்றாலும் அரசியல் ரீதியாக் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு உத்தி என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியான, உண்மையான கருத்துக்கள் சகோ :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 3. கடலில் இறங்கியாச்சு....கொஞ்சம் தூரம் நீந்தி இருக்கின்றீர்கள்...தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக உங்களின் ஆதரவோடு :)

   Delete
 4. hi how r u why did not u put posting what happened to u take care ur health dear puratchimani.

  ReplyDelete
  Replies
  1. Hi sundari,
   I am fine.Hope you are also doing well. Due to some work i took gap. Thank you very much for your concern. Sorry for the delay in reply.
   Have a great time :)

   Delete
 5. நல்ல பதிவு - இறுதி தூதர் வந்தாச்சா?

  தீர்ர்க்கம் நிறைவேறல் இவை பற்றி அலசும் இடம்.

  வாருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. இறுதி மனிதன் தான் இறுதி இறைதூதன் :)
   //தீர்ர்க்கம் நிறைவேறல் இவை பற்றி அலசும் இடம்.//
   இதன் அர்த்தம் புரியவில்லையே
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

   Delete
 6. //நம்மாலும் இறைவனாகவும், இறைதூதர்களாகவும் மாறமுடியும்//

  ’இறைவனின் எண்குணத்தை அடைந்தவர்கள் இறைவன் ஆவர்’ என்ற தத்துவத்தின்படி இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன். பிரதிபலிக்கும் கண்ணாடி சூரியனாகிவிட முடியுமா?

  //ஆனால் இவனே உண்மையான இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம், என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது//

  மதங்களைத் ‘தோற்றி’ வைத்தவர்களுக்கே இந்த உண்மை விளங்கவில்லையே; பாமர பக்தன் என் செய்வான்; பாவம், பலி ஆடுகள்.

  //இறைவனுக்காக சண்டையிடுவதை விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை//

  இறை மறுப்பாளனுக்கும், இறை நம்பிக்கையாளனுக்கும் இடையே பெரும் மோதல் நடந்ததாய் நாம் அறியவில்லை. ஆனால் இரு நம்பிக்கையாளர்களுக்கு இடையேதான் இரத்த ஆறுகள்; காலங்காலமாய். காரணம் இவர்களிடம் இருப்பது வெறும் ‘நம்பிக்கை’ தானே. ‘கண்ணாரக் கண்டவர்கள்’ களவும் ஒழிவார்கள்; கவலையும் ஒழிவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. //’இறைவனின் எண்குணத்தை அடைந்தவர்கள் இறைவன் ஆவர்’ என்ற தத்துவத்தின்படி இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன். பிரதிபலிக்கும் கண்ணாடி சூரியனாகிவிட முடியுமா?//

   வாங்க ஜாபர் அலி :)
   கண்ணாடியும் சூரியனும் ஒன்றே :) அதன் மூலம் ஒன்றே :)
   உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை உண்மை
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 7. தீர்க்கதரிசிகள் சொன்னதான இறுதி தூதர் வருவது அவசியமா?

  வந்தால் என்ன என்ன ஆக வேண்டும்?

  இங்கே
  http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க தேவப்பிரிய சாலமன் :),
   அருமையான கேள்விகள். இன்னும் பைபிளை சரியாக படிக்கவில்லை. இனி மத புத்தங்களை படிக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன் :)
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

   Delete
 8. இறைதூதர்கள் என்று யாரும் இங்கு பிறக்கவுமில்லை. யாரும் எவரிடமிருந்தும் அனுப்பபடவில்லை என்பதே உண்மை. நபிகள் நாயகம் வறுமையில் வாடினார் என்று கூறுகிறார்கள்.
  வசனத்தை கொடுத்த
  அல்லா, வயிற்று பசிக்கு கொஞ்சம் உணவு கொடுத்திருக்கலாம். அப்படி ஒருவேளை கொடுத்திருந்தால், யூதர்களின் உணவு குடோன்களை கொள்ளையடிக்க வேண்டிய
  அவசியம் நபிகம் நாயகத்திற்கு வந்திருக்காது. அதை
  கொள்ளையடிக்க எத்தனை கொலைகள். அம்மாடியோவ்!! உலகம் தாங்காது!!! சொர்க்கம் என்று யாராவது பீலா விட்டால், அவன் பில்லாவா, ரங்காவா என்று கூட பார்க்காமல் நம்பி ஏற்றுக்கொள்வார்கள். குரான் என்பது இஞ்சிலின் அரபி தொகுப்பு. இங்கிருப்பது அங்கிருக்கும். அங்கிருக்கும் பல இங்கு விடுப்பட்டிருக்கும். புதுமை ஒன்றும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தில்லு துரை:),
   நீங்கள் நிறைய அறிந்துள்ளீர்கள்.
   எல்லாவற்றையும் நம்புவுது தவறுதான்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 9. பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன.ஆம் மதங்கள் தான் இன்றளவும் சொல்லிக்கொண்டு வருகின்றன.மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே..இறைவன் வரமாட்டான் இறை தூதனும் வரமாட்டான். இறைவன் என்று ஒருவன் இருந்தால் தானே அவனுக்கு தூதன் என்று ஒருவன் இருப்பான் என்பது என் கருத்து.
  சரி பதிவர் சந்திப்பு நீங்கள் வருவது உறுதியா..
  தொடர்புக்கு
  kavimadhumathi@gmail.com

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிஞர் மதுமதி :),
   மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீங்கள்(நாம்) தான் இறைவன் என்றும் சிலர் கூறுகிறார்கள் :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...