வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

மது ஒழிப்பு பற்றி பேசும் சகோதரர்கள் இதையும் சிந்திப்பார்களா ?


தங்களுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்துவந்த சகோதரர்கள்  இப்பொழுது மது ஒழிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.  ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையோ இது?  

ஒரு நண்பர் ஒரு பதிவில் அழகாக பின்னூட்டமிட்டிருந்தார் திருவள்ளுவர் தெளிவுரை கொடுத்து  மது வேண்டாம் என்பவர்கள் வள்ளுவர் கூறிய புலால் உண்ணாமையை ஏன் கடைபிடிப்பதில்லை  என்று.
அவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்திப்பார்களா? 

வள்ளுவர் பொய் கூட பேசக்கூடாது என்று சொன்னார். அதை கேட்கிறார்களா?

மதம் வரும் பொழுது அங்கே மனிதம் அழிகிறது. பல மனிதர்களை கொன்றுதான் மதத்தையே பரப்புகிறார்கள் என்பது வேறு விடயம்.

இசுலாமிய மன்னர்களில் ரொம்ப நல்லவர்னு சொல்லக்கூடிய அக்பர் கூட பத்தாயிரம் இந்தியர்களை கொன்றதாக வரலாறு கூறுகிறது. அப்ப மத்தவங்க எத்தனை கோடி இந்தியர்களை கொன்று குவித்திருப்பார்கள் என்பதை நான் கூறத்தேவை இல்லை.  அந்த கொடூராத்தை மீண்டும் படிக்க, எழுத நான் அவ்வளவு கொடூரமானவன்  அல்ல. 

இசுலாம் மட்டும் அல்ல இசுலாமிற்கும் கிருத்துவர்களுக்கும் நடந்த சண்டைகள், பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றம், கோத்ரா எரிப்பு, குஜராத் படுகொலை  (இப்படி  சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உண்டு)என மதமே மனிதத்தையும் மனிதர்களையும்  அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மதங்களினால் சில நன்மைகள் உண்டு என்றாலும் அதனால் ஏற்ப்படும் இழப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இப்படிப்பட்ட மதங்கள் தேவையா என்று சிந்தனை எழுவதை தவிர்க்க இயலவில்லை.


இசுலாமில் மதுவிற்கு தடை என்கிறார்கள். ஏன் எதற்கு அவ்வாறு கூறப்பட்டது  என்று ஆராய்ந்தால் தான் அதற்க்கான உண்மையான காரணம் தெரியவரும்.

வள்ளுவர் மதுவின் தீமையை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி கூறி இருக்கிறார்.
முகமது நபி அவர்கள் மது அருந்தினால் பாவம் வந்து சேரும் என்று பூச்சாண்டி  காட்டுகிறார்.
உயிர்களை கொல்வதால், தின்பதால்  பாவம் வராதா? 
பூச்சாண்டி எப்பொழுது காட்டப்படும் தெரியுமா மக்கள் அறியாமையில் இருக்கும்பொழுது, சில விடயங்கள் சொன்னால் புரியாது எனும்பொழுது.

திருடினா சாமி கண்ண குத்திடும், நீ சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன் என்று அறியாத குழந்தைகளிடம் கூறுவார்கள். அதுபோல் தான் அன்று அறியாமையில் இருந்த அரபியர்களுக்கு அல்லா  கூற  முகமது நபியால் அருளப்பட்டது தான் குரான் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் . அதனால் தான் அதில் நிறைய பூச்சாண்டி விடையங்கள் இருக்கும். 

கவனிக்க: வள்ளுவர் அனைத்து தீமைகளையும் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி இது செய்தால் இது விளையும் என்று கூறுவார். ஏன் அப்படி கூறினார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் சிறப்பான சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்கள் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பூச்சாண்டி  காட்ட முடியாது என்பதால் தானே?.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அறியாமையில் இருந்த அரேபியர்களிடம் காட்டிய பூச்சாண்டியை  இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம்ப வேண்டும் என்பதை அவர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பான சிந்திக்கும்  திறனை கொண்டிருந்த தமிழர்களின் சந்ததிகள்  சிந்திக்க வேண்டாமா?  

இசுலாமில் ஏன் மது மறுக்கப்படுகிறது?

முதலில் குடித்து விட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்றுதான் நபிகள் கூறுவார்கள். பிறகுதான் இவனுங்க திருந்தான் மாட்டானுங்க போல என்று மதுவிற்கு தடை விதிப்பார்.(அல்லா கூறியதாக ).   

சொர்க்கத்தில் 'wine'  வழங்கப்படும்  என்றுதான் இசுலாம் சொல்கிறது. அதில் ஆல்கஹால் அளவு பற்றி எல்லாம்  சொல்லவில்லை. ஏன் சொர்க்கத்தில்  மட்டும் 'wine'   வழங்கப்படும் என்று நபிகள் கூறினார் என்பதை அவரின் வரலாற்றோடு சிந்தித்து பார்த்தால் தான்  உண்மை புரியும். 

௦௦௦௦ஹலால் பீர் குடிக்கலாமாம்... யார் அந்த ஆல்கஹால் அளவை நிர்ணயித்தது அல்லாவா...? (இந்த கேள்வியும் ஒரு நண்பர் கேட்டதுதான்)

மதுவினால் தீமையே அதிகம் அதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மனிதத்தை ஒழிக்கும் மதத்தை /மார்க்கத்தை (இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்)  பிரச்சாரம் செய்துகொண்டு மது ஒழிப்பு பற்றி பேசுவதுதான் வேதனை தருகிறது.


நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த கூற்றுப்படி பார்த்தால் மதமும்/மார்க்கமும் ஹராமாகும். இதை கடைபிடிப்பார்களா? 
(மதுவை விட மதமே அதிக போதை என்று ஒரு நண்பர் அருமையான பதிவை தந்திருந்தார்.)

இப்பதிவில் தவறான, கடுமையான கருத்துக்கள்  இருந்தால் தாராளமாக் தெரியப்படுத்தவும் அது நீக்கப்படும்.(வெளியே செல்வதால் உடனடியாக சாத்தியம் இல்லை)  இது ஒரு விழிப்புணர்வு பதிவேயன்றி வெறுப்புணர்வு பதிவல்ல. 

இசுலாமிய சகோதரர்களுக்கு சற்றே கடந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் :). (மதமே வேண்டாம்னு சொல்லல , பரப்ப வேண்டாம்னு தான் சொல்றேன். (ஐ நா சொல்லுது ஆட்டுக்குட்டி சொல்லுதுன்னு சொல்லக்கூடாது) மதத்தை தாண்டி மனிதத்தை தழுவ வேண்டும் என்று தான் சொல்கிறேன் :) . மதம் மனிதத்திற்கு தடையாக இருக்கும்பொழுது அது தேவையா எனபதையும் சிந்தித்து அது மனிதத்தை பாதிக்காத அளவிற்கு  சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மனித இனம் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் துணைபோக வேண்டுமா எனபதை சிந்தியுங்கள்.

தெரியதவர்களுக்காக:
என்னடா இப்படி ஒரு பதிவு என்று சிலர் நினைக்கலாம். சமீபத்தில் ஒரு இசுலாமிய ஐயா  இட்ட பதிவு, நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பை கெடுக்க சதி என்பது சிலரின் குற்றச்சாட்டு. இல்லை அது நல்ல நோக்கத்திற்காக என்பது பல இசுலாமிய சகோதரர்களின் வாதம். அதைத்தொடர்ந்து பல பதிவுகள் வந்தது அதுபோல் இதுவும் ஒரு பதிவு அவ்வளவே. 

மிக முக்கியம் 
வரும் ஞாயிறு அன்று  சென்னையில் பதிவர் திருவிழா நடக்கின்றது. அனைவரும் பங்கேற்கலாம். வர விருப்பமுள்ளவர்கள் பின்வரும் விழா குழுவினரை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
      சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

 பெண் பதிவர்களின் தொடர்புக்கு

      சசிகலா(தென்றல்)-99410 61575

 மின்னஞ்சல்

kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com


இது  நாடு, மதம், ஜாதி, இனம்  கடந்த திருவிழா அனைவரும் பங்கேற்ற்று பயனடையுங்கள்.

22 கருத்துகள்:

  1. புரட்சிமணி,

    மண்டையில ஏறுவது போல ஓங்கி மணியடிச்சு இருக்கிங்க :-))


    பீட்டா என்ற அமைப்பு மிருகவதை கூடாதுன்னு சொல்வதை இவர்கள் கேட்பார்களா, அதுவும் நல்லது தானே சொன்னா ஆங் ஆது எப்படின்னு ஓடுவாங்க :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வவ்வால்,
      உங்க அளவிற்கு அடிக்க முடியலைனாலும் (உங்கள் அருமையான பின்னூட்டங்களை நிறைய படித்திருக்கின்றேன்) ஓரளவிற்கு என்னால முடிஞ்சது :)

      அல்லா பெயரை சொல்லி கொல்றதுனால தப்பு இல்லை என்ற நபி அல்லா பெயரை சொல்லி ஏன் மது அருந்தலாம் என்று சொல்லவில்லை என்பதை சிந்தித்தால் பல உண்மைகள் வெளிவரும். சிந்திப்பார்களா? :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. மதுவிலும் புகை பிடித்தல் , அவரையும் அவருக்கு அருகில் இருப்போரையும் மிகப் பாதிக்கும், அதைத் தவிர்க்கிறார்களில்லையே!!!
    மதுவுக்கு மாத்திரம் ஏன் இந்தக் கூச்சல்!!!!
    என்னிடம் எந்தப் பழக்கமும் இல்லை. இப்பழக்கமுள்ளோரை நான் இகழ்வதுமில்லை.
    புதிதாகப் பழக ஆர்வம் கொள்ளும் மிக வேண்டியோருக்கு, இதன் நய நஸ்டங்களை கூறுவேன்.
    குதிரைக்குத் நீர் காட்டலாம், குடிப்பது, விடுவது அதன் இஸ்டம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris), :)
      அல்லா சொன்னால்தான் அவர்கள் கேட்பார்கள்...என்ன செய்ய அவர்கள் மார்க்கம் அப்படி .
      உங்களின் நிலைப்பாடு சரியானதே.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க ராவணன் :),
      இந்த குசும்புதானே வேண்டாங்கறது :).....மதுன்னா கொஞ்சம் நாளடைந்த பழச்சாறு...அதாவது பாலை தயிராக்குவது மாதிரி பழச்சாற்றை மதுவாக்குவார்கள் :) (யாரும் இதை நம்பி குடிக்க ஆரம்பிக்காதிங்க )
      தங்கள் வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க Sri Srini :),
      கொஞ்சம் வேலை அதான்

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  5. இதுக்கு மேல இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்ல முடியாது !!! இந்தப் பதிவைப் படித்த பின்னரும் புரியவில்லை என்றால் ஒன்று நடிக்கின்றார்கள் அல்லது உண்மையிலேயே அவர்களின் அறிவு அவ்வளவு தான் !!!

    மதங்கள் காலவதியாகும் காலம் வந்துவிட்டது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இக்பால் செல்வன் :),
      அவர்கள் நடிக்கிறார்களா அல்லது அறிவே அவ்வளவுதானா என்றால் இரண்டு வகையானவர்களும் இருப்பார்கள் என்பதே உண்மை.
      இருப்பினும் உண்மை தெரிந்தவர்கள் கூட நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். உண்மையை சொன்னால் அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அல்லவா உள்ளது அவர்கள் மதம்/மார்க்கம். அங்கே கருத்து சுதந்திரம் ஏது?
      தங்கள் வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  6. நண்பரே, நீண்ட நாட்களுக்கு பின்பு வந்து அருமையான கருத்தை சொன்னீர்கள். ஆரோக்கியமான அறிவான வள்ளுவர் கூற்றை ஏற்போம். முகமதுவின் பூச்சாண்டிகளை நிராகரிப்போம்.

    //யோகன் பாரிஸ்(Johan-Paris)August 24, 2012 4:56 PM
    மதுவிலும் புகை பிடித்தல் , அவரையும் அவருக்கு அருகில் இருப்போரையும் மிகப் பாதிக்கும், அதைத் தவிர்க்கிறார்களில்லையே!!!
    மதுவுக்கு மாத்திரம் ஏன் இந்தக் கூச்சல்!!!!//

    அதென்னன்னா மதுவை முகமது தடைவிதிச்சிட்டார். புகை பிடித்தலை அவர் தடைசெய்யல. அவர் வெட்ட சொன்னா வெட்டுவார்கள். பர்தா போட சொன்னா போடுவார்கள். சுயமாக சிந்திக்கவே மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க thequickfox :),
      நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பதிவிட உண்மையில் எனக்கு விருப்பம் இல்லை இருப்பினும் இதை கட்டயமாக்கிவிட்டார்கள்.
      சுய சிந்தனையை அவர்கள் மதம்/மார்க்கம் ஏற்பதில்லை இதனால் தான் ஒன்று சொல்வார்கள் இசுலாமினால் முதலில் பாதிக்கப்படுவது இசுலாமியர்கள் என்று. (“Muslims are the first victims of Islam").
      சுய சிந்தனை உடைய இசுலாமியர்களுக்கு ஆதரவு அளிப்பது மனிதகுலத்தின் கடமை.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  7. மணி சத்தம் ரொம்ப பலம்மா இருக்கு ..........ஆனால் செவிடனுக்கு கேட்ட்குமா .............?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஞ்சா சிங்கம் :),
      சில செவிடர்கள் இருந்தாலும் பலரும் காது நன்றாக கேட்பவர்கள் தான் :).
      பலரும் சொல்வது என்னவெனில் தமிழகத்தில் இருக்கும் பொழுது நன்றாக இருக்கும் இசுலாமியர்கள் சவுதிக்கு அல்லது இசுலாமிய நாடுகளுக்கு சென்றுதான் மாறிவிடுகிறார்கள் என்று. அப்படிப்பார்த்தால்
      இசுலாமிய நாடுகளுக்கு சென்றால் தான் காதை அடைத்து விடுவார்கள் போல :) . நம்மவர்களிடம்(நம்மோடு வாழும் இசுலாமியர்களுக்கு, இசுலாமியர்களால் ) பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  8. வணக்கம் சகோ
    வாங்க நலமா!!!
    நம் மூமின் சகோக்கள்க்கு அவர்கள் மதத்தை பற்றி சரியாக தெரிவதில்லை என்பதுதான் நம்து வருத்தம்.
    காஃபிர்களாகிய நாம் அவர்கள் ஹலால் செயல் மட்டும் செய்து சூப்பர் சுவனம் ஜன்னத்தை அடையவே விரும்புகிறோம்

    ஆனால் நம் முஸ்லிம் சகோக்கள் என்ன்மோ டாஸ்மார்க் விற்பதை குடிகாமல் இருந்தால் குடியை மதம் சொன்ன படி தவிர்த்து விட்டதாக் நினைப்பது அறியாமை.

    இது நம் சகோக்களை நரகத்தில் தள்ளி விடலாம் என்பதல் நாம் நம் சேவையை வழங்குகிறோம்.

    இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் அல்ல!!!

    பாருங்கள் நம் சகோக்களுக்கு உணவில்தான் எதனை சந்தேகம்,கேள்விகள்.
    ஒவ்வொரு கேள்விக்கு பதில் பார்த்தால் சாப்பிடவே முடியுமா??

    இதில் காஃபிர்களுக்கு அறிவுரை வழங்கும் காமெடி வேறு


    http://www.muslimconsumergroup.com/question_answer.php?cat=0&panna=675

    http://idosi.org/mejsr/mejsr6(1)10/8.pdfஅ

    டிஸ்கி:
    உண்மையில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கூட இப்போது எதை ஹலால் என்பது ஹரம் என்பது என் பல குழப்பம்.

    ஆகவே மூமின்களின் குழப்பம் நீங்க காஃபிர் அறிவியலே பங்காற்றுகிறது.காஃபிர்களும் மூமின்கள் உண்வை சரியாக ஹலால் என பரிசோதிக்க உதவலாம்.

    எல்லாம் பிசினெஸ்.பார்பிகானுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்.

    http://ezany-image.blogspot.com/2011_05_01_archive.html

    http://www.hdcglobal.com/upload-web/cms-editor-files/b08c8a04-c946-4ebe-99b9-2492bd32fcfc/file/11)%20En%20Dzulkifli%20Mat%20Hashim%20-%20WHR2010_Unraveling%20the%20Issue%20of%20Alcohol_Final.pdf

    Malaysia National Islamic Fatwa Committee
    (JAKIM)
    Cordials which contain any flavouring substances with a certain amount of alcohol added as a stabiliser for the purpose as a drink, is allowed on the condition that :

     The alcohol is not derived from ‘khamr (intoxicating alcoholic beverage = liquor) production

     The quantity of alcohol in the flavour is small (insignificant) such that it will not intoxicate


    நன்றி

    பதிலளிநீக்கு
  9. வாங்க சகோ சார்வாகன் :),
    நலம் நலமறிய ஆவல்,
    நீங்களும் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும். ஓய்வு கிடைக்கும் பொழுது சொல்லுங்கள் தமிழகத்தில் நாம் சந்திப்போம்.
    உங்களுக்காக பெரிய பின்னூட்டமே எழுதினேன் மின்சாரம் போனதால் அதுவும் போனது :)

    சில நாட்களாக எனக்கு இசுலாமிய சகோதரர்களை நினைத்தாலே பாவமாக உள்ளது :(. ஒவ்வொரு நிமிடமும் எங்கே நரகத்திற்கு போய்விடுவோமோ என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்கிறார்கள்.
    அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன்.

    நானும் இசுலாமியர்களுக்கு என்னால் முடிந்த நன்மையை செய்ய நினைக்கின்றேன். அதனால் தான் இசுலாமை சீர்திருத்த வேண்டும் என்கிறேன். ஆனால் இசுலாமிய பிரச்சரர்களோ நன்றாக இருக்கும் இசுலாமியர்களை கெடுக்க பார்க்கிறார்கள். அவர்களும் அறியாமையில் இருக்கின்றார்கள். என்ன செய்ய நாம் தான் நமது சகோதரர்களுக்கு உதவ வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் மனது புண்படாமலும் செய்யவேண்டியது அவசியமாகிறது.
    அதேநேரத்தில் அங்கே புண் அவர்களுக்கு தெரியாமலே இருக்கின்றது ,புண்ணுக்கு டிஞ்சர் இட்டால் கொஞ்சம் எரியததான் செய்யும் அவ்வாறுதான் நாம் செய்வது. இருப்பினும் சகோதரர்கள் நாம்தான் புண்ணையே ஏற்ப்படுத்துவதாக எண்ணுகிறார்கள்.
    இறைவன் அவர்களுக்கு நல வழிகாட்டட்டும்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

    பதிலளிநீக்கு
  10. முகம்மது நபிகள் மது உண்பவர். (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி ஹதீஸ். எண் 5597). ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
    அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) முகம்மது நபி அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூ உஸைதின் துணைவியாரே, அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், 'நான் இறைத்தூதர் அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை மரப்பாத்திரத்தில் ஊறவைத்தேன். நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்' என்று கூறினார். குடிப்பவர்களில் இருவகை உண்டு. உணவு உண்பதற்க்கு முன் குடிப்பவர்கள். (அதிகம் பேர்). மற்றவர்கள் உணவு உண்டபின் குடிப்பவர்கள். முகம்மது நபி அவர்கள் இரண்டாம் வகையை சார்ந்தவர் என்பதை ஹதீஸ் மூலம் அறியலாம். பேரீச்சம் பழங்களை ஊற வைத்த மது, அதிக போதை வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் அரபு நாடுகளில் கள்ளத்தனமாக இதைத்தான் குடிக்கிறார்கள். நபி காலத்தில் மது தடையில்லை. எல்லாரும் குடித்தார்கள். காரணம் நபி தினமும் குடிப்பவர். உமர் அலி நிர்பந்ததில் தான் மது தடைசெய்யப்பட்டது.
    தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும் இருக்கின்றன. (78:34). (ஆதாரம்:குரான்) நபிகள் சொன்ன கப்சா சொர்க்கம் இதுதான். இந்த ஆசைக்கு தான் இஸ்லாமியர்கள் இஸ்லாமில் உள்ளார்கள். அதனால் இஸ்லாமியர்கள் மதுவுக்கு எதிராக, மத போர்வை போர்த்தி போராடுவது தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கு தில்லு துறை :) ,
      சரியான சாட்டையடி
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...