வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Sunday, December 16, 2012

மதம் மனிதனுக்கா யானைக்கா? கும்கி


யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.

காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு  பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?

 ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா?  என்பதை திரையில் பார்க்கவும்.

படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
 நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை. 

பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கம் நன்று.  நாயகனை யானையில்  அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.

இயல்பான,அருமையான  படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

மனிதனுக்கு எந்த மதம்  பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும்  தீமையையே தருகிறது.

பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத்  தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.

8 comments:

 1. வணக்கம் சகோ,
  படம் பற்றி பொதுவாக நல்ல விமர்சனமே இணையம்,பத்திரிக்கைகளில் படித்தேன். படம் பார்க்காததால் ,மதம் பற்றி என்ன சொல்கிறது என புரியவில்லை. நாயகன் வேறு மதம் பிடித்து மாறுகிறான் போல் உங்கள் பதிவில் இருந்து புரிகிறது.

  நமக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் மதம் & சார் ஆய்வுகள்,என்பது ஒரு ஈடுபாடுள்ள விடயம்
  மதம் என்பது அன்மீக தேடல் எனில் எம்மதமாயின் என்ன?ஆகவே ஒருமதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறுவது தேவையற்றது.மதம் மாறுதல் என சொல்வதே நமக்கு புரிவது இல்லை.ஏன் அந்த‌ மொழியில்,அந்த புத்தகம்,அப்படி உடல் அசைவில் கும்பிட்டால் ஏற்பேன் என கடவுள் சொல்லலாமா??
  மத மாற்றத்தின் காரணி சமூக சூழல் என்பதால் ,ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் சூழலை மாஅற்ற வேண்டுமே தவிர ,விட்டு ஓடுதல் மேலும் சிகைலையே வளர்க்கும்.
  தெரியாத தேவதையை விட பழகிய பிசாசே பரவாயில்லை!! ஹி ஹி சும்மா ஒரு எ.கா சகோ!!

  யானைக்கு மதம்பிடித்தால் காட்டை அழிக்கும்,மனிததனுக்கு மதம் பிடித்தால் உலகை அழிப்பான்!!

  படம் அவசியம் பார்க்கனும் போல் தெரியுதே!!

  விஸ்வரூபம் கூட கும்கியும் பார்க்க்னும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சார்வாகன்,
   //நாயகன் வேறு மதம் பிடித்து மாறுகிறான் போல் உங்கள் பதிவில் இருந்து புரிகிறது.//
   உங்களுக்கு தவறான புரிதலை ஏற்ப்படுத்தியமைக்காக என்னை மன்னிக்கவும்.
   மதம் என்பதை பதிவில் நான் பிடிவாதம் என்ற பொருளில் கையாண்டுள்ளேன். கதையை சொல்லக்கூடாது என்பதற்காக நாசூக்காக கூறியுள்ளேன். மேலும் நாம் மதம் பற்றி அதிகம் பேசுவதால் அந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். நாயகனுக்கு இப்படத்தில் பிடிக்கும் மதம் காதல் மதம்.
   மற்றபடி இந்த படத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இந்த படத்தில் மலைசாதியினரின் பிடிவாதத்தை கொஞ்சம் தொட்டு காட்டியுள்ளார் இயக்குனர். பார்ப்பனரின் பிடிவாதத்தை விமர்சிப்பது போல பிறர் மலைசாதியினர்(தலித்துகள்?) மற்றும் மீனவர்கள் பிடிவாதத்தை விமர்சிப்பதில்லை. இது பற்றி ஒரு பதிவு வரலாம்.
   //நமக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் மதம் & சார் ஆய்வுகள்,என்பது ஒரு ஈடுபாடுள்ள விடயம் //
   எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு (வேறு பொருளில்) மத நம்பிக்கை இல்லை.
   //மதம் என்பது அன்மீக தேடல் எனில் எம்மதமாயின் என்ன?//
   மிகச்சரி. ஆனால் இன்று சில மதங்கள் வியாபாரமாக அல்லவா உள்ளது?

   //யானைக்கு மதம்பிடித்தால் காட்டை அழிக்கும்,மனிதனுக்கு மதம் பிடித்தால் உலகை அழிப்பான்!!//
   மிகச்சரியான கூற்று. இதனால் தான் நாம் சாதி,மதம், நாடு என்ற அமைப்புகளில் மாற்றத்தை ஏற்ப்படுத்த விரும்புகிறோம்.
   உங்களின் பிற கருத்துக்கள் ஏற்ப்புடையதே
   பொழுதுபோக்க இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 2. வாங்க சகோ மணி,
  நலமா,
  நாம் கற்றலில் ஆர்வம் காட்டுகிறோம். ஏன் நீங்கள் சொல்லும் அகத்தேடல் பற்றி ஒரு தொடர் எழுதக் கூடாது. எழுதினால் நிறைய கேள்வி கேட்பேன் சொல்லிப்பிட்டேன்!!

  ஆமா!!!

  சீரியசாகவே கேட்கிறேன், யோகம், கட்டுப்பாடான உணவு இவைகளின் மூலம் ஆசையை[ மண்+பொன்+பெண்] ஒழிக்க முடியுமா!! நம்ம புத்தர் தாத்தா சொன்னதை கேட்டுப் பாக்கலாமே!!

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார்வாகன்,உங்கள் சித்தம் என் பாக்கியம் :)
   அகத்தேடல் பற்றி நான் எழுதுவது இறைவனின் ஆசை என்றால் அது நடக்கும்.
   உங்கள் கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன.

   //சீரியசாகவே கேட்கிறேன், யோகம், கட்டுப்பாடான உணவு இவைகளின் மூலம் ஆசையை[ மண்+பொன்+பெண்] ஒழிக்க முடியுமா!!//
   நிச்சயமாக முடியும் சகோ.
   நேரம் வரும்பொழுது இது பற்றி விரிவாக அலசுவோம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete

 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி. இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும். :)

   Delete
 4. நீங்க சொல்வதை பார்த்தா படம் நல்லா இருக்கும் போல இருக்கே. எங்க ஊருக்கு எப்ப வருமோ தெரியல்லியே?

  ReplyDelete
  Replies
  1. எந்த ஊரா இருந்தாலும் ஒரு மாதத்துல வரும் கவலையை விடுங்க :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...