வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Sunday, July 21, 2013

சிங்களர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்னே ஒற்றுமை?சிறுபான்மையினர் பார்ப்பான்  கல்வி  கற்று நல்ல  நிலையில் இருந்ததால் பொறாமை  கொண்டான் திராவிடன்.
தமிழன் கல்வி கற்று நல்ல நிலையில் இருந்ததால் பொறாமை கொண்டான் சிங்களன்.


திராவிடர்களின் வளர்ச்சிக்காக, பார்ப்பனர்களின் வளர்ச்சியை தடுக்க தனி மதிப்பெண் விதித்தான் திராவிடன்.
சிங்களனின் வளர்ச்சிக்காக,தமிழர்களின் வளர்ச்சியை தடுக்க தனி மதிப்பெண் விதித்தான் சிங்களன்.

அரசாங்க வேலை வாய்ப்புகளில் திராவிடனுக்கு முன்னுரிமை.பார்ப்பான் பின்னுக்கு தள்ளப்பட்டான்.
அரசாங்க வேலை வாய்ப்புகளில் சிங்களனுக்கு முன்னுரிமை.தமிழன் பின்னுக்கு தள்ளப்பட்டான்.திராவிடன் சம்ஸ்கிருத நூல்களை எதிர்த்தான்.
சிங்களன் தமிழ் நூல்களை எரித்தான்.


திராவிடன் சமஸ்கிருதத்தை அழித்தான்.
சிங்களன் தமிழை அழிக்கின்றான்.


 நாட்டிலிருந்து திராவிடர்களால் விரட்டப்பட்டான் பார்ப்பான்.
 நாட்டிலிருந்து சிங்களர்களால் விரட்டப்பட்டான் தமிழன்.

திராவிடன் பார்ப்பன இனத்தை ஒடுக்கினான்.
சிங்களன் தமிழ் இனத்தை ஒழித்தான்,ஒடுக்குகிறான்.


சிங்களர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்னே ஒற்றுமை?


பி.கு.சிங்களன்-திராவிடன் சரியான ஒப்பீடு ஆகாது. பார்ப்பான் திராவிடனை ஒடுக்கி இருந்தால் அதுவும் குற்றமே.

 சிங்களர்கள் தங்கள் செயலை சரி என்றே சொல்வார்கள். திராவிடனும் தங்கள் செயலை சரி என்றே சொல்வான். இதில் நான் என்ன சொல்ல?

23 comments:

 1. தமிழர்கள் பார்ப்பனரை ஒதுக்கினானா? தமிழகத்தின் முதல்வர் பதவி முதல் பள்ளி முதல்வர் பதவி வரை பார்ப்பனர் வகிக்கின்றனர். சிங்களத்தின் முதல்வனாய் தமிழன் வர முடியுமா? இவ் ஒப்புமையே தவறு. சிங்களவர் மொழியால் மட்டுமே ஆரியர், இனத்தால் திராவிடரே. பார்ப்பனர் மொழியால் மட்டுமே திராவிடர், இனத்தால் ஆரியர். அதைத் தவிர ஒப்புமைப் படுத்த வேறு ஒன்றுமில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிரஞ்சன் தம்பி,

   //தமிழர்கள் பார்ப்பனரை ஒதுக்கினானா?//

   இப்பதிவு திராவிடர்களை பற்றியது....தமிழர்கள் பற்றி அல்ல.

   // தமிழகத்தின் முதல்வர் பதவி முதல் பள்ளி முதல்வர் பதவி வரை பார்ப்பனர் வகிக்கின்றனர். //

   இதை ஏற்க்கிறேன்.

   //சிங்களத்தின் முதல்வனாய் தமிழன் வர முடியுமா?//

   நானறியேன்.

   தமிழகத்தில் கூட தமிழன் முதலமைச்சராக முடியவில்லையே.   //சிங்களவர் மொழியால் மட்டுமே ஆரியர், இனத்தால் திராவிடரே. பார்ப்பனர் மொழியால் மட்டுமே திராவிடர், இனத்தால் ஆரியர். //


   இது என்ன புதுக்கதை?


   //அதைத் தவிர ஒப்புமைப் படுத்த வேறு ஒன்றுமில்லை.//

   ஒப்புமை படுத்தியதில் என்னென்ன பிழை என்றால் திருத்திக்கொள்ள நன்றாக இருக்கும்.


   நன்றி

   Delete
 2. திராவிடகாரர்களுக்கு பார்பன ஜாதியை போட்டு தாக்குவது என்பது லட்டு சாப்பிடுகிற மாதிரி :)

  ReplyDelete
 3. பேசாப் பொருளை பேச துணிந்துள்ளீர்கள்.

  பிராமணர்களுக்கும் இலங்கை தமிழருக்குமுள்ள ஒற்றுமைமைகள் கவனித்தே வந்திருக்கிறேன். வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணாள் ஆங்கில கல்வி பயின்று வெள்ளையனுக்கு சாமரம் வீசி பொருளீட்ட ஆரம்பித்ததும் தமிழ் நாட்டு இடைசாதி பணக்காரர்களுக்கு பொறாமையில் மூக்கு புடைத்ததன் விளைவுதான் நீதி கட்சியும் அதன் தொடர்ச்சியும். இதே போல ஈழத்தமிழ் உயர் சாதி கூட்டம் ஆங்கிலம் படித்து பதிவிகளை பெற ஆரம்பித்ததும் சிங்களவனுக்கு பொறுக்கவில்லை.

  முன்பு கல்வி பெரிய விடயமல்ல. அப்போதும் போரிட்டு வென்றாலே பதவியும் பொருளும் கிட்டும். படித்த பிராமண கூட்டம் வந்து துதிபாடும். அதுவரை எந்த பிரச்சனையும் இவர்களுக்கு பிராமணருடன் இருந்தது இல்லை. ஆனால் போர்தொழில் & ஜமீன்தாரி முறை ஒழிந்து கல்விக்கும் காசுக்கும் சம்மந்தம் உண்டாகியதும் பிராமணரை ஒழிக்க வேண்டும் என்ற சமத்துவ சிந்தனை இந்த நடுவாந்தர சாதியர்க்கு உண்டாகிவிட்டது. அதாவது பிராமணர் தனக்கு மேலே இருப்பதினால் ஒழியனும், ஆனால் தலித்துகள் இவர்களுக்கு கீழ்தானாம். ஆனால் அதை வெளிப்படையாக காட்டாமல்,தலித்துகளை அரவணைப்பதாக சீன் போடுவார்கள்.

  ReplyDelete
 4. //சிங்களவர் மொழியால் மட்டுமே ஆரியர், இனத்தால் திராவிடரே. பார்ப்பனர் மொழியால் மட்டுமே திராவிடர், இனத்தால் ஆரியர். //


  மரபணு ஆராய்ச்சிகள் சிங்களரும் இலங்கை தமிழரும் மொழியால் மட்டுமே வேறுபட்டு உள்ள இனம் என்பதையும் இவர்கள் இலங்கையின் பழங்குடி இனத்தவரிலிருந்தும் இந்தியாவிலிருந்து குடியேறிய இனத்தவருடன் இனக்கலப்பு உண்டாகி பிறந்தவர் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் சிங்களர் ஈழத்தமிழரும் தொப்புழ் கொடி உறவுகளே அன்றி இந்திய தமிழரும் ஈழத்தமிரும் அல்ல என்பதும் தெளிவாகிவிட்டது.

  இந்தியாவில் சாதி வாரியாக நடந்த சோதனைகளில் தமிழக பிராமணரும் வட இந்திய பிராமணருக்கும் உள்ள ஒற்றமையை விட தமிழக பிராமணருக்கும் தமிழகத்தின் பிற சாதியினருக்கும் அதிக ஒற்றுமை உள்ளதாகவும் தெரிகிறது. அதாவது தமிழக பிராமணர் தமிழரே. மேலும் மேல் சாதியிலிருந்து கீழ் சாதி நோக்கி போகபோக ஐரோப்பிய மரபணுகளின் கலப்பு குறைவதாக தெரிகிறது. ஆக தலித் மக்களே பூர்வ குடியினரின் மரபணுக்களை அதிகம் தாங்கியவர்.

  மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சரித்திரத்தை மட்டும் காட்டி நம்மை ஏமாற்றியுள்ளார்கள். அதற்கு பின்பு நடந்த இனக்கலப்பு குறித்து மட்டும் பேசுவதில்லை. இப்போது யாரும் சுத்த திராவிடரே அல்லது ஆரியரோ அல்லர், எல்லோரும் கலப்பின மக்களே.

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனத்தான்,அருமையான கருத்துக்கள். பலர் அவசியம் அறிய வேண்டிய உண்மைகள்.

   Delete
  2. @நந்தவனத்தான்
   தங்களுடைய மேலதிக தகவலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   @வேகநரி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 5. //சிறுபான்மையினர் பார்ப்பான் கல்வி கற்று நல்ல நிலையில் இருந்ததால் பொறாமை கொண்டான் திராவிடன்.// சுதந்திரம் கிடைக்கும் வரை, கல்வி யாருடைய தனிச்சொத்தாக இருந்தது என்ற உண்மையினை நீங்கள் மறந்திருக்கலாம்; நாங்கள் மறக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. @ஜாபர் அலி
   சுதந்திரத்திற்கு முன்பு திராவிடர்கள் யாரும் படிக்கவில்லையா?
   எல்லாவற்றிற்கும் பார்ப்பனர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயலுங்கள். மேலே நந்தவனத்தான் கூறிய கருத்தையும் படித்து பாருங்கள். அல்லது சில நாட்கள் பொறுங்கள் இந்த மாயை பற்றி எழுதலாம் என இருக்கின்றேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 6. yen intha veen vivaathangal ippozhuthu...evvalavo nalla vishayangal nattil irukkinrana..intha topic ippo yen enru puriyala...

  ReplyDelete
 7. @கலியபெருமாள் புதுச்சேரி

  ஏதோ எழுதவேண்டும் என்று மனதில் தோன்றியது. நல்லவற்றை எழுதுவதைவிட தவறாக தெரிவதை விமர்சிக்க வேண்டும் என்றே மனது விரும்புகிறது.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 8. தூங்குறவங்களைத்தான் எழுப்ப முடியும். சரித்திரம் மட்டுமல்ல, அவர்களின் சாத்திரமும், அந்த உண்மையை ஒப்புக்கொள்ளும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் சாத்திரம். சாத்திரத்தில் உள்ள கெட்டவைகளின் படி சாத்திர வெறியர்கள்,முட்டாள்கள்,மூடர்கள் தான் நடப்பர்..ஒட்டு மொத்த சமுதாயமும் அல்ல.

   -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
   நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மதப் புத்தகம்
   மதப் புத்தகத்தில் உள்ள கெட்டவைகளின் படி மத வெறியர்கள்,முட்டாள்கள்,மூடர்கள் தான் நடப்பர்..ஒட்டு மொத்த சமுதாயமும் அல்ல.

   புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

   Delete
 9. சிலர் மட்டும் கல்வி கற்கலாம்; மற்றவர்கள் கற்கக் கூடாது என்ற நடைமுறை சரித்திரத்திலும் சாத்திரத்திலும் இருந்ததா? இல்லையா? இருந்திருந்தால் அது நீதியா? அநீதி என்றால், திராவிடன் காட்ட வேண்டியது என்ன.... பொறாமையா இல்லை கோபமா?

  ReplyDelete
  Replies
  1. சிலர் மட்டும் அரசாளலாம் ; மற்றவர்கள் அரசாளக் கூடாது என்ற நடைமுறை சரித்திரத்திலும் சாத்திரத்திலும் இருந்ததா? இல்லையா? இருந்திருந்தால் அது நீதியா? அநீதி என்றால், பார்ப்பான் காட்ட வேண்டியது என்ன.... பொறாமையா இல்லை கோபமா?

   Delete
 10. பாய் இன்னமும் விடலை போலிருக்கிறதே.

  பழங்காலத்தில் என்னமோ ஐயமாருங்க மட்டும் எம்பிபிஸும் பிஈ கம்யூட்டர் சயின்சும் படித்துவிட்டு மத்தவனுங்களை படிக்க விடாத மாதிரி எழுதுறீர். வேதங்களை மாத்திரம் தான் அவங்க மட்டும் படித்தாக குற்றச்சாட்டு. அக்காலத்தில் படிப்பு என்பதே மொழிக்கல்வி மட்டும்தான். வைத்திரயராவோ அல்லது அக்கால இன்ஜினியரான கொத்தனார் ஆகவோ ஒருத்தர்க்கும் தடையில்லை.
  மொழி கல்வியை எடுத்தால் பல சம்ஸ்கிருத மற்றும் தமிழ் புலவர்கள் பிராமணர் அல்ல. இவங்க படிக்காம எப்படி எழுதுனாங்க? இராமாயணம் எழுதிய வால்மீகியும் கம்பனும் என்ன ஐயருங்களா? வேதங்களை மட்டும் ஐயருங்க மட்டும் படித்தார்கள் என வைத்துக்கொண்டாலும், அந்த பிராமணர்கள் அரசர்களை அண்டிதானே வாழ்ந்தார்கள்? யாதவரிலிருந்து பல சாதிகள் அரசர்களனார்களே, அவர்கள் வேதங்களை அனைவருக்கும் கத்துக்கொடுங்கள் என ஐயருக்கு உத்தரவு போட்டால் பிராமணர்கள் கற்றுக்கொடுக்காமலா இருப்பார்கள்?

  பிராமணர்களை கண்டு அரசர் அஞ்சினார்கள் என்பீர்கள். அதெல்லாம் சும்மா! இந்துக்களின் மாடல் அரசர் என இந்துதுவா அமைப்புகள் போற்றும் சிவாஜி தோற்கடித்த பகுதிகளில் வாழ்ந்த 10,000 பிராமணர்களை கொன்றே போட்டிருக்கிறார் தெரியுமா? அதுப்புறம் ஒரு பிரம்மகத்தி தோச நிவர்த்தி செய்வார்கள் அவ்வளவுதான். வேதம் படித்தால் துட்டு தேறாது என்பதினால் பிற சாதிக்கு படிக்கும் ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை! இதை பயன்படுத்தி பிராமணர்கள் அதை தம் சொத்தாக மாற்றிக்கொண்டார்கள்.தப்பு இரண்டு பக்கமும்தான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நந்தவனத்தான்,
   பெரிய பெரிய பகுத்தறிவு புலிகள் பார்ப்பான் தான் எலாவற்றிற்கும் காரணம் என்று கூறிவிட்டனர்.
   அதை மறுத்து பேசும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் நேரம் ஆகும். ஜாபர் அலி விரைவில் புரிந்து கொள்வார் என நம்புவோம்.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
  2. //பெரிய பெரிய பகுத்தறிவு புலிகள் பார்ப்பான் தான் எலாவற்றிற்கும் காரணம் என்று கூறிவிட்டனர்.//
   அந்தளவுக்கு பகுத்தறிவின் வங்குரோத்துதனம் தமிழகத்தில். அதனாலே தான் பார்ப்பான் கல்வியை தடுத்தான் என்றெல்லாம் போகிற போக்கில் சுலபமா எடுத்துவிடதக்கதாக இருக்கு.

   Delete
 11. அழகான கவிதை நடையில் உள்ள காவியம் ! ! ! ?

  என்னதான் ஒப்பீடு அழகாக இருந்தாலும்...

  முத்தாய்ப்பாக...

  ஈழத் தமிழர்களைப் போல்....

  பார்ப்பனர்கள் அனைவரும் திறந்தவெளி சிறைக்கூடமான முள்வேலி கம்பிகளுக்கிடையில், கால் வயிற்றுக் கஞ்சிக்காக பராரியாக, பரதேசிகளாக அலைந்து திரிகிறார்கள் என்ற " உண்மையை "
  இந்த உலகுக்கு உரத்து சொல்ல மறந்துவிட்டீர்களே.......
  திரு. இராச.புரட்சிமணி.

  என்றும் அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  ReplyDelete
 12. // பி.கு.சிங்களன்-திராவிடன் சரியான ஒப்பீடு ஆகாது. பார்ப்பான் திராவிடனை ஒடுக்கி இருந்தால் அதுவும் குற்றமே. //

  இந்தப் பதிவில் எனக்கு பிடித்ததே இந்த பி.கு தான்.

  உண்மைக்கு புறம்பாக மிகைப்படுத்தி எழுதியதை, தங்களது "பின் குறிப்பின்" மூலம் தவறான ஒப்பீடு என ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

  என்றும் அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  ReplyDelete
 13. //சுதந்திரம் கிடைக்கும் வரை, கல்வி யாருடைய தனிச்சொத்தாக இருந்தது என்ற உண்மையினை நீங்கள் மறந்திருக்கலாம்; நாங்கள் மறக்கவில்லை.//


  சகோ. நந்தவனத்தான்,

  சகோ.ஜாபர் அலி சொல்வதில் என்ன தவறு, அவர் உண்மையைத் தானே கூறுகிறார். பிராமணர்கள் எவருக்குமே சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்படவில்லை. ஆனால் பெரும்பான்மை தமிழர்களுக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது என்பது உண்மை தானே. சில உயர்சாதி தமிழர்களுக்கு மட்டும் தான் கல்வி கிடைத்தது. மேல் மட்டத்தில் இருந்த சில தமிழர்களுக்கு கிடைத்த கல்வியும் வாய்ப்புகளும் சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்திருந்தால், இன்றைக்கு இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.

  தமிழரசர்கள் எல்லோரும் சைவ/வைணவ மதங்களில் ஊறித் திளைத்திருந்ததால் அவர்கள் பிராமணர்களின் சொல்லைக் கேட்டார்கள். வைதீகத்தின் பெயரால் தமிழர்களின் பூர்வீக வழிபாடுடுகள் அழிந்தன. பார்ப்பனர்கள் அதனால் பயனடைந்தனர் என்பது உண்மை. எனக்கு திராவிடக் கொள்கைகளில் நம்பிக்கையுமில்லை, அதனால் இக்காலப் பிராமணர்களைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது. ஆனால் இந்துமதத்தின் பெயரால் தமிழ் மண்ணில் தமிழர்களை விட வேதமோதும் பார்ப்பனர்கள், எமது அரசர்களின் முட்டாள் தனத்தாலும், கடவுள் நம்பிக்கையாலும், அவர்கள் மனுசாத்திரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க முனையாததாலும் அதிக சலுகைகளை அனுபவித்தனர்,

  தமிழர்கள் தாழ்த்தப்பட்டனர், தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தக் கொடுமையை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன் கூட ஒரு பார்ப்பான் தான், ஆனால் தன்னை பார்ப்பானாக அல்லது தமிழனாக அடையாளப்படுத்தி மகிழ்ந்த தமிழன் பாரதியார் கூட *“சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்”*, என சாதியடிப்படையில் சூத்திரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அதை சதி என்கிறார். அந்தச் சதியை தான் சகோ. ஜாபர் அலி குறிப்பிடுகிறார்.

  ReplyDelete
 14. //வேதம் படித்தால் துட்டு தேறாது என்பதினால் பிற சாதிக்கு படிக்கும் ஆர்வம் இல்லை என்பதுதான் உண்மை! இதை பயன்படுத்தி பிராமணர்கள் அதை தம் சொத்தாக மாற்றிக்கொண்டார்கள்.தப்பு இரண்டு பக்கமும்தான்!//

  இன்று கூட பார்ப்பனர்கள் வேதத்தை மற்றவர்கள் படிக்க மறுப்பது மட்டுமல்ல. அப்படி படித்து முறையாக பயிற்சி பெற்றவர்களைக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார்கள். வேதம் படிக்க மற்றவர்களுக்கு அனுமதி மறுத்தததற்குக் காரணம், அர்ச்சகர் தொழிலை தமது கைகளுக்குள் வைத்திருக்கத் தான். அரசர்கள் காலத்தில் அதனால் நிறைய துட்டு தேறியது. உதாரணமாக ராஜ ராஜ சோழன், தனது ஆட்சியின் முடிவில், ராஜேந்திர சோழன் மகனாகக் கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக செய்த யாகத்தில், பெரியதொரு மாட்டின் சிலையைப் பொன்னால் செய்து, அதாவது அவனது அரசி, ராஜேந்திர சோழனின் தாய் மாட்டுக்குள் போய் வெளியே வருமளவு பெரியது, அந்த யாகத்தின் முடிவில் அந்த பொன்மாட்டைப் பார்ப்பனர்களுக்கு பிரித்துக் கொடுத்தானாம். அதெல்லாம் யாருடைய பணம் தமிழர்களுடையது தானே. இப்படி எவ்வளவோ உதாரணங்கள் பார்ப்பனர்கள் எவ்வளவு, அளவுக்கதிகமான சலுகைகளை அனுபவித்தார்கள் எனக் காட்ட தமிழர்களின் வரலாற்றில் உண்டு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...