வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Wednesday, March 19, 2014

என்னது? தீண்டாமைக்கு காரணம் திராவிடர்களா?

நமது திராவிடவாதிகள் தீண்டாமைக்கு காரணம் ஆரியர்கள் எனப்படும் பார்பனர்கள் தான் என எங்கும் முழக்கமிடுவதை  நாம் அறிவோம்  ஆனால் தீண்டாமைக்கு காரணம் திராவிடர்கள்தான் என்று ஸ்டான்லி ரைஸ் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

அவர் என்ன கூறினார்   எனில் பறையர்கள்தான் இந்த நிலப்பகுதியின் பூர்வகுடிகள். வந்தேறிகளாக வந்த திராவிடர்கள் இவர்களை வென்று சிறுமைபடுத்திவிட்டார்கள் அல்லது அடிமையக்கி  விட்டார்கள் .இதற்க்கு பிறகு ஆரியர்கள் வருகிறார்கள். அவர்கள் திராவிடர்களை வென்று சிறுமைபடுத்தி விட்டார்கள். இருப்பினும் அசுத்தத்தை சுத்தம் செய்யும் வேலைகளை அனைவரும் பூர்வகுடிகளான பறையர்கள் மேல்   திணித்து விட்டார்கள். தீண்டாமை எனபது  அடிமைபப்டுத்தப்பட்ட இனம்  மற்றும் அசுத்தம் சம்பந்தப்பட்ட தொழில்களால்தான் வந்தது என்றார் ஸ்டான்லி ரைஸ்.

ஆனால்  அம்பேத்கர் இது தவறான கருத்து என்று கூறிவிட்டார். அம்பேத்கரை  பொருத்தவரை ஆரியர் திராவிடர் என்ற இன பாகுபாடையும் அவர் ஏற்கவில்லை.அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் என்பதே அவரின் வாதம்.

இதை நான் இங்கு பதிய காரணம் இப்படியும் ஒரு வாதம் இருந்தது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே.இதை வைத்து புதிய வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பது  எனது நோக்கம் அல்ல. அனைவரும் உண்மை எப்படியும் இருக்கலாம் என்றுணர்ந்து வெறுப்பை விட வேண்டும் எனபதே எனது நோக்கம். நடந்தது ஏதோ நடந்தது. அதை ஏற்றுக்கொண்டு இனி எப்படி ஒற்றுமையாக,அமைதியாக,மகிழ்ச்சியாக வாழ்வது என்பதில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும்.

என்னைபொருத்தவரை மேலே கூறியது முழுமையான உண்மையும்  அல்ல அதே நேரத்தில் அது முற்றிலும் தவறான கருத்தும் அல்ல.

ஸ்டான்லி ரைஸ் மற்றும்  அம்பேத்கர்  இருவர் கூறுவதிலும்
கொஞ்சம்  உண்மையும் உள்ளது  கொஞ்சம் தவறும் உள்ளது.

என்னுடைய கருத்தை மற்று ஒரு நாளில் பதிவு செய்கிறேன்.
அல்லது எப்பவும் போல அப்படியே விட்டாலும் விட்டுடலாம் :)

இது தொடர்பான சுட்டி 

6 comments:

 1. நண்பரே,

  நீங்கள் யாராக இருப்பினும் மனம் விட்டுப் பேசுபவராக இருந்தால் இது உங்களுக்கான இடம் இல்லை.

  இடஒதுக்கிடு கேட்டுப் போராடுபவர்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் எல்லோரும் மலம் அள்ளுபவர்கள் மற்றும் முடி திருத்துபவர்கள். அதை உருவாக்கியவர்கள் சங்கரமடத்திலுள்ள பார்ப்பனர்கள் என்ற இவர்கள் வாதத்தை ஏற்றுக் கொள்ளாதால்தான் நான் வேதனையுடன் விலகி நிற்கிறேன்.

  எப்படியும் எழுத்தில் பண்பு காக்கவும்.

  ந்ன்றி,

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் கோபாலன்,
   உங்களின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தாங்கள் என்மீது கொண்ட அக்கறைக்கு மிக்க நன்றி.உணமையை தவிர இங்கு நான் வேறு ஒன்றும் பேச வில்லை. முடிந்தவரை மற்றவர்களுக்கு புரிய வைக்க முயல்கிறேன்...நானும் புரிந்து கொள்ள முயல்கிறேன். என்னுடைய எழுத்துக்களின் விளைவுகளை நான் அறிவேன்..இருப்பினும் உண்மையாக நினைப்பவற்றை கூறாமல் இருக்க முடியவில்லை.

   //எப்படியும் எழுத்தில் பண்பு காக்கவும்.// சென்ற பதிவின் தலைப்பை ஒரு வேகத்தில் வைத்தாலும் அதற்க்கு சிறிது வருந்தவே தோன்றியது. நிச்சயம் பண்பை கடைபிடிக்கின்றேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. ஸ்டான்லி ரைஸ் என்பவர் கருத்தை அறிய தந்ததிற்கு நன்றி.
  //இதை நான் இங்கு பதிய காரணம் இப்படியும் ஒரு வாதம் இருந்தது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே.இதை வைத்து புதிய வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அனைவரும் உண்மை எப்படியும் இருக்கலாம் என்றுணர்ந்து வெறுப்பை விட வேண்டும் எனபதே எனது நோக்கம்.//
  இது நல்ல நோக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேகநரி

   Delete
 3. ஆரிய திராவிடக் கொள்கையைப் புனைந்த பாதிரிகள்படி திராவிடரும் அன்னியரே- கால்ட்வெல் வரை.

  ஆனால் கிறித்துவராய் இருந்துகொண்டு, சரியாக +2 வின் போது ஹிந்து ஆனேன், நான் எஸ்.சீ, கல்வி-பதவி உயர்வு அனுபவிக்க எஸ்.சீ, நான் யாரை கும்பிடுகிறேன் எனக் கேட்க உரிமை இல்லை- எனக் கூறும் உமாசங்கர்
  http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_712.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...