வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Saturday, July 26, 2014

வேலையில்லா பட்டதாரியா? பொறுக்கியா?


திரையுலகில் பொறுக்கித்தனம் இன்று நாயகத்தனமாக(heroism) பார்க்கப்படுகிறது. திரையுலகம் நடைமுறையின் பிரதிபலிப்பா  அல்லது  நடைமுறை திரையுலகை பிரதிபலிக்கிறதா என்று சிந்தித்தால்  இரண்டுமே நடக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். 

இருப்பினும் ஆங்காங்கே நடக்கும் சில தீயசெயல்களை நாயகத்தனமாக காட்டும்பொழுது அது பெரும்பாலான மக்களின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்பபடுத்துகிறது . திரைப்படங்கள் வெறும் பொழுது போக்காகவோ, நேர்மறை எண்ணங்களை விதைப்பதாகவோ இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்று  சிலபல திரைப்படங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாகவே உள்ளது. பொறிக்கத்தனம் செய்பவன் நாயகனாகவும் அவனின் பொறிக்கத்தனங்கள் நாயகத்தனமாகவும் மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது, கற்ப்பிக்கப்படுகிறது. இது நமது சமுதாயத்திற்கு நல்லதல்ல. 


திரைப்படங்கள் பல காலாமக மக்கள் மனதில் விடத்தை விதைத்து வருகிறது. நல்ல படங்கலே வரவில்லை என்று நான் கூறவில்லை.சிலபல படங்கள் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பல படங்கள் தீயசெயல்களை நற்செயல்போல மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும்  பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும் பெண்ணிற்கு திருமணம் செய்யும் பொழுது அதை தடுத்து நிறுத்துகிறான். நல்ல விடயம். பிறகு அவனே அந்த பெண்ணை காதலிக்கிறான். பள்ளிக்கு செல்லும் பெண்ணுக்கு  கல்யாணம் பண்ணகூடாது ஆனா காதல் என்ற பெயரில் அங்கங்கே அழைத்து சென்று கசமுசா செய்யலாம் என்று கூறுகிறார்களோ?

ஒரு படத்தில் நாயகன் பேருந்தில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கிறான்.
ஒரு படத்தில் நாயகர்கள் கடைத்தெருக்களில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கின்றனர்.

 பல படங்களில் இளைங்கர்கள் புகைபிடிப்பதாகவும், மது அருந்துவதாகவும், பெண்கள் பின்னே சுற்றுவதாகவும் காண்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு சில இளைங்கர்கள் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் இவற்றை  நாயகத்தனமாக காட்டும்பொழுது பல இளைங்கர்களும் இவ்வாறன செயல்கள் சரி என்று எண்ணி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்...ஈடுபடுகின்றனர் என்பதுதான் உண்மை.

பல துறைகளில் பல ஒழுக்ககேடுகள்  உள்ளன. அவ்வாறுதான் திரைத்துறையிலும் சில ஒழுக்ககேடுகள் இருக்கின்றது..இருக்கலாம்...இதை நம்மால் என்ன செய்ய இயலும்? இருப்பினும் சமுதாய அக்கறையோடு இருக்க வேண்டும் என்று குரல் எழுப்ப முடியும். அதைத்தான் இங்கே  செய்கிறேன். 

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிர்பார்ப்புடன் சென்றேன். இளைங்கர்களுக்கு நல்ல கருத்தை முன்மொழிவார்கள் என்று எண்ணினேன். பெருத்த ஏமாற்றாம்.

இப்படத்தில் வேலையில்லா பட்டதாரி நாயகன் என்ன செய்கிறான்..... 
வீட்டிலே புகை பிடிக்கிறான் 
வீட்டிலே மொட்டை மாடியில் மது அருந்துகிறான் 
அடுத்த வீட்டு பெண்ணின் படுக்கைஅறைய பார்க்கிறான் 
தனது தம்பியை தெரியாமல் தாக்குவதுபோல வேண்டும் என்றே தாக்குகிறான்..வேண்டும் என்றே மதுவை கலந்து கொடுக்கிறான்  
இப்படத்தை பார்க்கும்  இளைங்கர்களுக்கு இவர்கள் இதைத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்களா?
அல்லது இப்படித்தான் இன்றைய வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனரா?

வேலையில்லா பட்டதாரிக்கு அவன் தாய் இறந்ததால் தான் வேலை கிடைக்கிறது....அவன் திறமையால் அல்ல.

இப்படத்தில் நாயகனின் இரண்டு பண்புகளை நான் வரவேற்கிறேன்.
ஒன்று....சட்டத்துக்கு புறம்பாக மேல்தளங்களை வடிவமைக்கும்படி வேலை தருபவர் கேட்டாலும்  வேலை  கிடைக்காவிட்டாளும்  சட்டத்துக்கு புறம்பாக நடக்க கூடாது என்று இருக்கும் பண்பு

 இரண்டு...தன் தாயின் உறுப்பை தானம் பெற்ற பெண்ணை தாய் போன்றே எண்ணும் பண்பு
இன்னும் ஒன்று இரண்டு நல்ல பண்புகளை கூட சொல்லலாம். ஆனால் படத்தில் நாயகனின் பல தீய பண்புகளே ஆங்காங்கே தெரிகிறது.

எங்க அம்மா புகை பிடிக்க கூடாது என்று சொல்லி கண்ணீர் விடும் நாயகன்....திருந்தாம  தொடர்ந்து புகைபிடிக்கிறார்.

நாயகனுக்கு வேலை கிடைத்த பிறகு வேலையில்லா  பட்டதாரி என்று பாட்டு வேற ...வேலை கிடைத்த பிறகு எப்படிடா அவன் வேலையில்லா பட்டதாரி?

படத்தின் இறுதியில் இது வேலையில்லா பட்டதாரிகளுக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள். வேலையில்லா பட்டதாரிகளே  எங்களை மன்னியுங்கள் என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஏன் இனில் வேலையில்லா பட்டதாரிகளை இதற்க்கு மேல் அசிங்கப்படுத்த முடியாது.

இப்படத்திற்கு எந்த ஒரு தலைப்பு வைத்திருந்தாலும் பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று என்று விட்டிருக்கலாம்.  வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்ததால்தான் இந்த விமர்சனம்.

திரைத்துறையினர்  கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக  காட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

8 comments:

 1. சரியாக சொன்னீர்கள். இதையும் பாருங்கள். http://asokarajanandaraj.blogspot.in/2014/07/blog-post_18.html

  ReplyDelete
 2. நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே
  சினிமாவின் தாக்கத்தால் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர்
  நல்லவற்றை படம் போதிக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 3. முதல்ல தமிழ் ஒழுங்கா எழுதுங்க சார். "பொறிக்கி.. பொறிக்கி" னு என்னத்த பொரிக்க போறீங்களோ..
  அது "பொறுக்கி".

  ReplyDelete
  Replies
  1. பொறி என்றால் trao. Rat trap. எலிப்பொறி. வேலையில்லாப் பட்டதாரி ஒரு பொறியில் சிக்கிக்கொண்டாரா என்று கேட்கிறார் வலைபதிவாளர் போலும்.

   தமிழ் அவர் பொறியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.

   Delete
  2. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பர்களே.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...