வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 13 மே, 2016

இவர்களுக்கா ஓட்டு போட போறீங்க? சிந்திப்பீர்களா?

நீங்கள் யாருக்கு ஒட்டு போட போகிறீர்கள் என்பதில் தான் தமிழ் நாட்டின் தலையெழுத்து உள்ளது. 

நாம் தமிழர்:
புதிய கட்சி. ஆனால் அதே பழைய பிரித்தாளும் எண்ணம். வாய்ப்பு கொடுக்க எண்ணினால் கடலூரில் மட்டும் நாம் தமிழருக்கு ஓட்டளிக்கலாம். 

பாஜக:

வாஜ்பாய் பாஜக வேறு மோடி பாஜக வேறு. பிரித்தாளும் எண்ணம் கொண்ட இந்த கட்சி வளர கூடாது. 

பாமக:
இருக்கின்ற கட்சிகளிலே வளர்ச்சியை பற்றி அதிகம் பேசும் கட்சி. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதீத அங்கீகாரம் கொடுத்த கட்சி. சாதிமுலாம் பூசப்பட்ட கட்சி.   கட்சியில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இது நிரந்தர மாற்றமாக இருப்பின் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டிய கட்சி. இப்பொழுது பென்னாகரத்தில் அன்புமணிக்கு  வாக்களிக்கலாம்.

தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா :

கூட்டணி அமையாததால் இவர்களாகவே அமைத்துக்கொண்ட கூட்டணி. 
கூட்டணியின்  நடசத்திர வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

திமுக-காங் :

இது ஒரு கொலைகார கொள்ளைக்கார கூட்டணி. இதற்க்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள். தந்தைக்கும் தனயனுக்கும் மட்டும் வேண்டும் என்றால் ஓட்டு போடுங்கள். 

நல்ல வேட்பாளர்கள்:
எல்லா கட்சியிலும் நல்லவர்கள் சிலர் இருப்பார்கள். சுயேட்சையாக கூட சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்க தவறவே கூடாது. இவர்களே நாளைய நல்லரசியலை முன்னெடுப்பார்கள்.

நோட்டா: 
தயவு செய்து இதற்க்கு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்.

அதிமுக:

ஊழல் குற்றச்சாட்டு உள்ள கட்சி என்றாலும் திமுக அளவிற்கு இல்லை. எதிர்பாராத வெள்ளத்தின் போது செயல்பாடு விமர்சனத்திற்குள்ளானாலும் மீட்டெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டது.
திமுக கொண்டுவந்த மின்வெட்டை அறவே நீக்கியது அதிமுக. இது ஒன்றுக்கே அதிமுகவிற்கு வாக்களிக்கலாம். அதிமுக மீது குறைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும் திமுகவை விட பரவாயில்லை என்பதே என் கருத்து.

அதிமுக, திமுக வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் பிறருக்கு வாக்களித்தால் அது திமுகவிற்கே சாதகமாக அமையும். மற்றவர்களுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் திமுகவிற்கு போடுவதற்கு சமமாகும்.

மாற்றம் நிச்சயம் வேண்டும் ஆனால் இத்தேர்தல் அதற்க்கான தருணம் அல்ல. அதிமுகவிற்கு வாக்களித்து திமுகவிற்கு மூடு விழா நடத்துவோம். சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.

33 கருத்துகள்:

 1. அ.தி.மு.க.விற்கு முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்துங்கள். இந்த கட்சியைவிட வேறு எல்லா கட்சிகளும் better. கடந்த 5 வருடத்தில் முடங்கிப் போன ஒரு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேறு யார் வந்தாலும் பரவாயில்லை. நான் ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்??

  1. ஐந்து வருட காலத்தில் ஒரு ரேசன் கார்டு கூட வழங்க வக்கில்லாத இந்த அரசிற்கு நான் ஏன். வாக்களிக்க வேண்டும்??

  2. சுயமாக ஒரு அறிக்கை கூட வெளியிட தைரியமில்லாத அமைச்சர்களைக் கொண்ட இந்த அரசுக்கு. நான் ஏன் வாக்களிக்க வேண்டும்??

  3. தமிழக சட்டமன்றத்தை அதிமுக பொதுக்குழு கூட்டமாக்கிய இந்த அரசுக்கு நான் ஏன். வாக்களிக்க வேண்டும்??

  4. மக்களைச் சந்திக்காத, பத்திரிக்கைகளை புறந்தள்ளும் இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?

  5. ஐந்து வருட ஆட்சியில். தமிழகத்தின். கடனை நான்கு லட்சம் கோடியாக்கி. ஒவ்வொரு தமிழனின். தலையிலும் 40 ஆயிரம் ரூபாய் கடனை ஏற்றியுள்ள இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க. வேண்டும்??

  6. தொழில்துறையில் இரண்டாவதாக இருந்த தமிழகத்தை இன்றைக்கு 20 வது இடத்திற்கு தள்ளிய. இந்த அரசுக்கு. நான் ஏன் வாக்களிக்க வேண்டும்??

  7. யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் என்ற பெயரில் வருடம் 20 கோடி . ஐந்து வருடங்களில் 100 கோடியில் கஜ புஜை செய்த. இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்??

  8. தன்னுடைய பதவி காலத்திலேயே சொத்து குவிப்பு. வழக்கில் சிறை சென்று. முதல்வர் பதவியை களங்கப்படுத்திய. இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்??

  9. கொடநாட்டை தலைமை செயலகமாக்கி கோப்புகளை சென்னைக்கும்,கொட நாட்டிற்கும் கொண்டு சென்றவகையில் 340 கோடிகளை வீணாக்கிய இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்??

  10. முதல்வருக்கான பதவியை செய்ய, தலைமை செயலகத்திற்கு வராமல் அதை கூட. போட்டோ சாப் மூலம் வந்ததாக காட்டி பொய் விளம்பரம் தேடும் இந்த அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்???

  11. குனிந்தே அல்லது வானத்தைப் பார்த்து கும்பிட்டுப் பழக்கமான அமைச்சர்கள்??? இவர்களையெல்லாம் அமைச்சர்கள் என்று கூறுவது மிகத்தவறு. அடிமைகள் என்பதே சரி. இவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தலாமா? இதை விட நாண்டுகிட்டு சாகலாம்.

  இந்த கட்சி எவ்வளவு கோடி கொடுத்தார்கள் உங்களுக்கு? அதற்காக விசுவாசம் என்றால் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிமுகவை விட திமுக சிறந்ததா ? எப்படி என்று சொல்வீர்களா?
   மின்வெட்டை கொண்டு வந்தது திமுக அதை நீக்கியது அதிமுக.
   திமுகவின் கோட்டையான சென்னையின் நீர் பற்றாக்குறையை திமுகவால் சரி செய்ய முடியவில்லை. நீர் பற்றாக்குறையை தீர்த்தது அதிமுக.
   தி.மு.க.விற்கு முதலில் ஜால்ரா போடுவதை நிறுத்துங்கள். இந்த கட்சியைவிட அதிமுக better.
   தி.மு.க எவ்வளவு கோடி கொடுத்தார்கள் உங்களுக்கு? அதற்காக விசுவாசம் என்றால் சரி. :)

   நான் எனக்கு சரி எனப்படுவதை சொல்கிறேன். பணம் பதவிக்கு ஆசைப்பட்டல்ல. தமிழகத்தின் அமைதிக்கு ஆசைப்பட்டு.

   நீக்கு
  2. கருணாநிதியை எனக்கு என்றுமே பிடிக்காது. காமராஜ், அண்ணாதுரைக்கு பின் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் பிடித்திருந்தது. அதன்பின் பின்வாசல் வழி வந்த (ஔரங்கசீப் போல) நடிகையின் அடக்குமுறை எதேச்சாதிகார ஆட்சியை என்றுமே வரவேற்றதில்லை. கருணாநிதியின் ஊழல் ஆட்சியையும், ஜெயாவின் ஊழல் ஆட்சியைப் போலவே. கடனுக்கும், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, அதிலும் பெரும் ஊழல் செய்து தமிழக மக்களை பெரும் கடனாளியாக்கியும், ஒரு யூனிட் மின் உற்பத்தி புதிதாக செய்ய இயலாத ஜெயாவை, தமிழக மக்களில் பெரும்பாலோரை பெரும் குடிகாரர்களாக்கிய ஜெயாவை, சென்னை மாநகரத்தையே வெள்ளகாடாக ஆக்கி, 300 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகவும், லட்சக் கணக்கானோர் வீடு, உடைமைகள் இழந்து தவிக்கச்செய்த ஜெயாவை, அப்படித் தவித்த மக்களுக்கு ஒரே ஒரு முறை காரில் இருந்த படியே ஒரு தொகுதி மக்களுக்கு ஆறுதல் என்ற பெயரில் வாக்காளப் பெருமக்களே என்று அழைத்த ஜெயாவை எப்படி மறக்கமுடியும். தவறு செய்வது மனித இயல்புதான் ஆனால் திருத்திக் கொள்ளாத ஜெயாவுக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? குமாரசாமியின் அருளால் தப்பிய ஜெயாவின் கழுத்தில் கத்தி உச்ச நீதி மன்றத்தில். இங்கு யாருடைய அருள் கிடைக்கப் போகிறதோ? அல்லது அரிவாள் கிடைக்கப் போகிறதோ?

   2 முறை சிறைவாசம் அனுபவித்த ஒரே முதலமைச்சர் என்ற பெருமையை கொண்ட ஜெயாவுக்கு ஆதரவா? NEVER.

   நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே.

   இறைவா! தமிழகத்தை இவர்களிடமிருந்து காப்பாற்று.

   நீக்கு
  3. சரி வேறு யாருக்கு ஓட்டு போடலாம் என்கிறீர்கள்?

   நீக்கு
 2. karunanidhi will be out of scence soon.. but we have to pluck out this arrogant jaya.. so it is good to vote DMK..

  பதிலளிநீக்கு
 3. அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல காரணங்கள் :
  உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு வேளை ஜெயலலிதா வுக்கு எதிராக வந்தால், மீண்டும் ஒரு 5 ஆண்டுகளுக்கு பொம்மை முதல்வர் ஆட்சி நடக்கும். தமிழ்நாடு இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பின்னோக்கி போய்விடும். குறிப்பாக தொழில்கள் அனைத்தும் முடங்கி விடும்.
  ஒரு முன்னாள் முதல்வர் திரு. ஓ.பி.எஸ் அவர்கள் ஜெ. வேட்புமனு செய்ய வந்த போது தரையை தொட்டு வணங்கியது ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ் இனத்தை கேவலமாக பார்க்க வைத்தது. அ.இ.அ.தி.மு.க.அடிமைகள் செய்யும் கேவலமான செயல்களால் தமிழ்நாட்டில் ஆண் மகன் என்ற ஒரு இனமே இல்லை என்பது போல ஆக்கி விட்டார்கள். சட்டசபை "பெஞ்ச் தட்டும் சபையாக " மாறியது.
  சென்னை மழை காலத்தில் மட்டும் அல்ல, அப்துல் கலாம் சாவுக்கு கூட போகாத ஒரு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதாவது ஒரு மாவட்டம் வந்து இருக்கிறாரா ? மக்கள் மீது ஒரு சிறு துளியும் அக்கறை இல்லாத ஒரு முதல்வருக்கு வாக்களிக்கலாமா ?
  இதுவரை எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளித்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி இருக்கிறார். இதுவரை எந்த ஒரு அமைப்போ அல்லது சங்கமோ ஏதேனும் ஒரு பிரச்சினைக்காக முதல்வரை நேரில் சந்தித்து பேசி மனு கொடுத்ததுண்டா?
  மக்களால் நான், மக்களுக்காக நான். இது உண்மையா? தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு இளிச்சவயார்களா?
  இலவசங்களே தேர்தல் அறிக்கை! என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?
  வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு மறுநாளே நான், எனது அரசு என்றானதே ..
  சட்டசபை கட்டிடம் & அண்ணா நூலகத்தை நாசப்படுத்தியது .
  பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம் உயர்த்தியது.
  ஒரு மின்உற்பத்திக் கூடம் கூட அமைக்காமல் தனியார் மின்சாரம் ஊழல்.
  தொழில் வளர்ச்சி முடங்கி நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது.
  விவசாயிகளைக் கதற விட்டது, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
  சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
  உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
  கொடநாட்டில் வாசம்.
  மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
  இலக்கு வைத்து மது விற்றது. போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
  ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
  நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
  மந்திரிகள் மண் சோறு தின்றது.
  ஆற்றுமணல், தாது மணலை கொள்ளையடித்தது
  கனிமவளத்தை களவாடியது, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது
  நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
  ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
  வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
  மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
  நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். அ.தி.மு.க / தி.மு.க ஆகியவற்றுக்கு மாற்று என்பதில் நாம் இந்த நடுநிலை வாக்காளர்களைத்தான் நம்ப வேண்டும். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களைத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாற்றி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயாவின் கேவலங்களையும், கேவலமான ஆட்சியையும், புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். இப்போதைக்கு தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின் மட்டுமே.

   நீக்கு
  2. அன்புமணிக்கு நிச்சயமாக பென்னகரத்தில் ஓட்டு போடவேண்டும் என்று கூறியுள்ளேனே....
   மற்ற இடங்களில் பாமகவிற்கு போடும் ஓட்டால் திமுகவிற்கு எதிரான ஓட்டுக்கள் சிதறடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் அவலம் ஏற்ப்படும். ஆதலால் சொல்கிறேன் பென்னாகரம், நல்லவர்கள் நிற்கும் இதர தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று. சரிதானே?

   நீக்கு
 4. இராச.புரட்சிமணி = பன்னீர் செல்வம் x 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நீங்கள் யாருக்கு ஓட்டு போட போகிறீர்கள்?

   நீக்கு
  2. நிச்சயமாக அ.தி.மு.க வுக்கு இல்லை.

   நீக்கு
  3. @Ramarao நான் alien ஐ கேட்டேன். நீங்கள் தான் சொல்லிவிட்டீர்களே. இருப்பினும் அதிமுகவை விட திமுக எப்படி சிறந்தது என்பதை நீங்கள் இன்னும் கூறவில்லை. அடிப்படை தேவைகளை கூட செய்ய தெரியாத திமுகவிற்கு ஏன் ஓட்டளிக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

   நீக்கு
  4. என்னுடைய ஒட்டு திமுக அதிமுக வை தவிர மீதி உள்ள மூன்று பேரில் ஒருவருக்கு.

   நீக்கு
 5. @ராஜேஷ், திருச்சி,Selvadurai,Ramarao

  ஜெயா ஆட்சியில் பல குறைகள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் கூறிய சில குறைகளில் எனக்கு மாற்று கருத்து உண்டு. ஆயிரம் குறைகள் ஜெ ஆட்சியில் இருந்தாலும் அதைவிட அதிக குறைகள் திமுக ஆட்சியில் இருந்தது என்பதுதான் உண்மை.இன்று இருப்பதை விட திமுக ஆட்சியில் மக்கள் அதிக இன்னலுக்குள்ளாவார்கள் என்பதே உண்மை.

  நீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை போன்றவற்றை திமுகவால் ஏன் சரி செய்ய இயலவில்லை. மக்களை இன்னலுக்குள்ளாகினார்கள் என்பது உண்மைதானே? அடிப்படை தேவையான நீர், மின்சாரம் போன்றவற்றை கூட ஒழுங்காக வழங்க முடியாத திமுகவிற்கு எப்படி நீங்கள் ஆதரவளிக்கலாம்? கூறுவீர்களா?

  பதிலளிநீக்கு
 6. 1. நீர் பற்றாக்குறை சென்னையில் வேண்டுமென்றால் இல்லாமல் இருக்கலாம். இன்னும் பல கிராமங்களில், பல தென் மாவட்ட நகரங்களில் / ஊர்களில் இன்றும் இருக்கிறது. சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வர காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அதன் பலனுக்கு தம்பட்டம் அடிப்பவர் ஜெயா. சென்னைக்கு வீராணம் நீர் கொண்டுவர வித்திட்டவரே கருணாநிதி தான். அதனால் தான் இப்போதைக்கு சென்னைக்கு நீர் பற்றாக்குறை இல்லை என சொல்லலாம். ஆனால் இதர மாவட்டங்களுக்கு என்ன செய்தார் ஜெயா. ஸ்டாலின் தான் ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் இவையெல்லாம் கொண்டுவந்தார். ஆனால் நடுவில் ஆட்சி மாற்றத்தால் அவற்றை முழுமையாக முடிக்க முடியவில்லை. அவற்றையாவது ஜெயா ஒழுங்காக முடித்தாரா? தி.மு.க கொண்டு வந்த திட்டங்கள் என்பதற்காகவே அவற்றை முடக்கி முடிக்காமல் இருக்கிறாரே.
  2. மின்சார பற்றாக்குறை இப்போது இல்லையென்பது நிஜம். ஆனாலும் வாடா மாவட்ட்ங்களை தவிர வேறு மாவட்டங்களில் மின் பற்றாக்குறை இருப்பது நிஜம். அந்த மின்சாரத்தை ஜெயா என்ன உற்பத்தி செய்தாரா? அல்லது மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றினாரா? இல்லையே. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் கிடைக்கிறது பிறகு தனியாரிடமிருந்து மின்சாரம் (மத்திய அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு வாங்கி (அதிலும் ஏகப்பட்ட ஊழல்) ஒப்பெற்றுகிறார்.
  (உதாரணமாக ஒரு வீட்டுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை வீட்டுத் தலைவர் போர்த்தி செய்கிறார் என்று எடுத்துக் கொள்ளுவோம். ஆனால் அவர் வீட்டிலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டுமல்லவா. இலவசங்களை மட்டுமே கொடுத்து வீட்டிலுள்ளவர்களை சோம்பேறியாகி ஆக்கிவிடுகிறாரே. அடிப்படை தேவைகளை எப்படி பூர்த்தி செய்கிறார்? சம்பாதித்தா? இல்லையே. கடனை வாங்கி பூர்த்தி செய்கிறார். பிறகு அந்த கடன் சுமை அவரது சந்ததியருக்குத் தானே. இதுபோலத்தான் ஜெயா செய்து கொண்டிருக்கிறார்.
  3. அம்மா உணவகம் ஒரு நல்ல திட்டம்தான். ஆனால் அம்மா நீர், அம்மா உப்பு, இவையெல்லாம் யார் கேட்டார்? குடிநீரை விற்கும் அரசாங்கம் உலகிலேயே தமிழ்நாடாகத்தான் இருக்கும். பால் விலை ஏற்றம், மின்சாரக் கட்டண ஏற்றம், பேருந்துக் கட்டண ஏற்றம் இப்படி எல்லாம் ஏற்றிவிட்டு எதற்கும் உதவாத காயலான் கடைகளுக்கு போகும் தரமற்ற இலவசங்களால் (மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்) என்ன பயன்? (அவற்றின் கொள்முதலிலும் ஏகப்பட்ட ஊழல்).

  4. தி.மு.க கொண்டுவந்த திட்டங்கள் என்பதாலேயே

  a. மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைத்தவர் தானே ஜெயா.
  b. எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை முடக்கினாரே
  c. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலைமை நீதி மன்றம் வரை சென்றிருப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
  d. புதிய தலைமையகத்தை மாற்றியவர்தானே ஜெயா
  e. சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து தோல்வி கண்டவர் தானே ஜெயா.
  இன்னும் இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.
  2011 ல் ஆட்சிக்கு வந்தவுடன் சென்னைக்கு மோனோரயில் (தி.மு.க.வின் மெட்ரோ ரயிலுக்கு போட்டியாக) கொண்டுவருவேன் என்றாரே. 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிள்ளையார் சுழியே போடவில்லையே.
  ஆட்சியில் தனக்கு அடுத்ததாக கட்சியில் ஒருவரை உருவாக்கவில்லையே. (OPS பற்றி சொல்லவே வேண்டாம். அவர் முதலமைச்சராக இருந்த காலம் தமிழகத்து ஒரு இருண்ட காலம் என்பதை நாடே அறியும்). ஹெலிகாப்டருக்கும், காரின் டயருக்கும் கும்பிடு போடும் அமைச்சர்கள். இவர்களை திருத்த ஜெயா என்ன செய்தார்?

  வெறும் அடிப்படை தேவைகளை (தமிழக மக்களை பெரும் கடன்காரர்களாக்கி விட்டு) பூர்த்தி செய்துவிட்டேன் என்பதில் பெருமையில்லை.

  எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் படத்தில் பாடும் பாடலை கேளுங்கள்:

  உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
  உண்டாவதெங்கே சொல் என் தோழா
  உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
  உண்டாகும் என்றே சொல் என் தோழா

  கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
  கண்டவர் உண்டோ சொல் என் தோழா
  கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
  காண்பதில் தான் இன்பம் என் தோழா

  இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
  இன்பம் உண்டாவதில்லை என் தோழா
  அரிய கைத் தொழில் செய்து
  அனைவரும் பகிர்ந்துண்டு
  அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

  நாட்டில் தொழில் வளம் பெருகி தன்னிறைவு பெறுவதில் தான் பெருமை. இதில் ஜெயாவும் அவரைச் சார்ந்தவர்களும் தன்னிறைவு பெற்றுவிட்டார்கள். தி.மு.க ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 2 வது இடத்தில் இருந்த தமிழகம் ஜெயா ஆட்சியில் 20 வது இடத்துக்கு போய்விட்டதே.

  கடைசியில் ஒன்று. அவ்வையார் சொன்னது ஆத்திசூடியில் "ஊக்கமது கைவிடேல்" என்று. ஆனால் ஜெயா அதை கீழே சொல்லியிருக்கும்படி மாற்றிவிட்டாரே.
  "ஊக்க மது கைவிடேல்". மது இல்லையென்றால் ஜெயாவின் கை ஓடிந்தமாதிரிதான்.
  இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
  இப்படிப்பட்டவருக்கா ஒட்டு? வெட்கக்கேடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Ramarao

   //சென்னைக்கு வீராணம் நீர் கொண்டுவர வித்திட்டவரே கருணாநிதி தான். அதனால் தான் இப்போதைக்கு சென்னைக்கு நீர் பற்றாக்குறை இல்லை என சொல்லலாம். //

   இது தவறு. வீராணம் திட்டத்தை கொண்டு வந்தவர் அண்ணா. அதில் ஊழல் செய்தவர் கருணாநிதி மேலும் அது கிடப்பில் போடப்பட்டது. புதிய வீராணம் திட்டம் தீட்டி அதை செயல் படுத்தியது ஜெ.

   //மின்சார பற்றாக்குறை இப்போது இல்லையென்பது நிஜம். ஆனாலும் வாடா மாவட்ட்ங்களை தவிர வேறு மாவட்டங்களில் மின் பற்றாக்குறை இருப்பது நிஜம்.//

   மின்வெட்டு எங்கும் இல்லை என்பதே எனக்கு தெரிந்த தகவல். இருந்தால் நம்பும்படியான தரவுகள் தரவும்.
   //அந்த மின்சாரத்தை ஜெயா என்ன உற்பத்தி செய்தாரா? அல்லது மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றினாரா?//

   மக்களின் இன்னலை போக்காமல் இருப்பதை விட எப்படியாவது போக்குவது மேல்.

   //வெறும் அடிப்படை தேவைகளை (தமிழக மக்களை பெரும் கடன்காரர்களாக்கி விட்டு) பூர்த்தி செய்துவிட்டேன் என்பதில் பெருமையில்லை//


   நீரும் மின்சாரமும் வெறும் அடிப்படை தேவை இல்லை.அதற்கும் மேலே. மிக மிக அவசியம். நீர் இன்றி உயிர் வாழவே இயலாது. மின்சாரம் இன்றியும் இன்று வாழ்வது மிகவும் சிரமம். நீரும் மின்சாரமும் இன்றி உங்கள் குடும்பம் எத்தனை நாள் எப்படி வாழும் சிந்திப்பீர்களா?

   மீண்டும் சொல்கிறேன் அத்தியாவசிய தேவையான நீர் மின்சாரத்தை அளிக்க வக்கில்லாதா திமுக தேவையே இல்லை. சிந்தித்து வாக்களியுங்கள்.

   நீக்கு
  2. சென்னையில் உட்கார்ந்து கொண்டு, நீரும் மின்சாரமும் பற்றாக்குறை இல்லை என்கிறீர்கள். சென்னை மட்டும் தான் தமிழ்நாடு என்றால் நீங்கள் சொல்வது சரி. தென் மாவட்ட ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று பாருங்கள். நிலைமை தெரியும். இப்போதும் எவ்வளவு கிராமங்களில், மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் தெரியுமா?

   உங்கள் கொள்கைப்படி எப்படியாவது மின்சாரத்தை (உற்பத்தி செய்யாமல்)அதிக விலைக்கு வாங்கி (அதிலும் பெரிய ஊழல் செய்து) கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறீர்கள்.
   கடந்த 2/3 ஆண்டுகளில் மின்சாரம் கிடைக்காததால் கோவையில் எவ்வளவு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரியுமா?

   வீட்டில் பசி பட்டினி என்றிருக்கையில் வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது சரியா இல்லை வெளியே கடனையே வாங்கி அதிலும் கொள்ளையடித்து குடும்பத்தை காப்பாற்றுவது சரியா. உங்களுக்கு இரண்டாம் ரகம் OK என்றால் எங்களுக்கு முதல் ரகம் தான் OK.

   எப்படியும் நீங்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பதாக தீர்மானித்துவிட்டீர்கள். அது உங்கள் விதி. அதற்காக சப்பைக்கட்டு கட்டாதீர்கள். அ.தி.மு.க.வினரால் பணப்பட்டுவாடா ரொம்ப ஜோராக் நடந்து கொண்டிருக்கிறது. என் வீட்டு வேலைக்காரி கேட்கிறாள். எப்போது எங்கு கிடைக்கும் என்று? இரவில் பவர்கட் வரும் அப்போது கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறேன்.

   நீக்கு
 7. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 2010-11 ம் ஆண்டு வரை நிலுவையில் இருந்த தமிழக அரசின் மொத்த கடன்தொகை 1,01,710 கோடி ருபாய். இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 2015-16 ம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்த கடன்தொகை 1,95,290 கோடி ருபாய். ஆக இந்த குறிப்பிட்ட ஐந்து ஆண்டு கால இடைவெளியில் மட்டும் அரசின் கடன் கிட்டத்தட்ட 100 சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது, அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் அனைவரும் வாங்கிய மொத்த கடன் தொகையை ஜெயா அரசு இந்த ஐந்து ஆண்டுகளிலேயே வாங்கி குவித்திருக்கிறது. தமிழக அரசின் கடன் அளவு இந்த ஆட்சி காலத்தில் இரட்டிப்படைத்து இருக்கிறது.

  இவ்வளவு அதிகமாக பெற்ற கடன் தொகையை கொண்டு ஏதேனும் மக்கள் நல / வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்யப்படிருக்கிறதா? இல்லவே இல்லை. இந்த கடனின் பெரும்பகுதி TANTRANSCO, TANGEDCO என்ற மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களின் மூலம் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு (மின் உற்பத்திக்கு அல்ல, மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு) பயன்படுத்த பட்டிருக்கிறது.

  தகவல் சுட்டி:
  http://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article8428988.ece  இப்போது கூறுங்கள், ஏன் நிர்வாக திறனற்ற இந்த அரசுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின் தேவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. அப்படி இருந்தும் மின்வெட்டு இல்லை. இது திமுகவை விட சிறந்த நிர்வாகம் உங்களால் மறுக்க முடியுமா? இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பது வேறு விடயம். திமுகவை விட அதிமுக பரவாயில்லை எனபதே என் வாதம்.

   நீக்கு
 8. //அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் அனைவரும் வாங்கிய மொத்த கடன் தொகையை ஜெயா அரசு இந்த ஐந்து ஆண்டுகளிலேயே வாங்கி குவித்திருக்கிறது. தமிழக அரசின் கடன் அளவு இந்த ஆட்சி காலத்தில் இரட்டிப்படைத்து இருக்கிறது.//

  ஆக, இதுவரை தமிழகத்தை ஆண்டவர்களிலேயே மிக மோசமான ஆட்சியை இவர் நடத்தியிருக்கிறார். தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது படுகுழியில் வீழ்ந்து இருக்கிறது. புதிய தொழில் முதலீடுகள் இல்லை, எனவே புதிய வேலை வாய்ப்புகள் இல்லை, மக்களிடம் பண புழக்கம் இல்லை.

  மேலும், உழைக்கும் தமிழக இளைஞர் வர்க்கம் மதுவின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது. விளைவு, வேலைக்கு போதிய அளவு பணியாளர்கள் கிடைக்காததால் அவ்வாய்ப்பு வெளிமாநில மக்களை சென்றடைகிறது (ஒன்று வெளிமாநில பணியாளர்களை கொண்டு தமிழ்நாட்டில் பணிகள் மேற்கொள்ளுவது, அல்லது பணிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது.)

  இவர் மீண்டும் வந்தால் (படிப்படியாகவேனும்) மதுவிலக்கு கொண்டுவருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. (ஆனால் அவர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறாரே என்பவர்களுக்கு, ஜெயாவின் முந்தைய 2011 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு முக்கியமான திட்டமாக சொல்லப்பட்ட மோனோ ரயில் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை, அது இந்த 2016 தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்று இருக்கிறது, போலவே மதுவிலக்கு அவரது 2021 தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் என்பது என் கணிப்பு.)

  இவரா மீண்டும் வரவேண்டும்?

  பதிலளிநீக்கு
 9. மேலும், சகோ.புரட்சிமணி சென்னையை சேர்ந்தவராக இருந்ததால் தெரிந்து இருக்க கூடும். சென்னையின் உட்கட்டமைப்பு, சாலை போக்குவரத்து வசதி எந்தவிதத்திலாவது மேம்பட்டிருக்கிறதா?

  1. சென்னையின் அனைத்து மேம்பாலங்களையும் கட்டியது யார்?
  2. அடையாறு - சிறுசேரி IT EXPRESSWAY அமைத்தது யார்?
  3.தாம்பரம் - மாதவரம் புறவழி சாலை அமைத்தது யார்?
  4.பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் சாலை அமைத்தது யார்?
  5.தில்லை கங்கா நகர் - வேளச்சேரி inner circle சாலை அமைத்தது யார்?
  6.சோளிங்கநல்லூர் - ECR (கிழக்கு கடற்கரை சாலை) இணைப்பு சாலை அமைத்தது யார்?
  7.வேளச்சேரி - கிழக்கு தாம்பரம் நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது யாரால்?
  8. மெட்ரோ ரயில் கொண்டுவந்தது யார்?
  9. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அமைத்தது யார்?

  மேலும், துறைமுகம் - மதுரவயல் பறக்கும் சாலை திட்டத்தை முடக்கி வைத்திருப்பது ஒன்றிலேயே தெரியவில்லையா இந்த அம்மையார் உள்கட்டமைப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்று?

  ஐந்து முறை முதலமைச்சராக இருந்ததாக கூறும் அம்மையார் சென்னைக்கு செய்தது என்ன? (எனக்கு தெரிந்து செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தது தான் அவர் செய்த சா(வே)தனை.)

  இவரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திமுக செய்தவற்றை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் இன்று சென்னை சென்னையாக இருக்க தண்ணீர் பஞ்சத்தை போக்கியது, மின்வெட்டை நீக்கியது அதிமுக என்பதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?

   இருவருக்குமே தமிழக வளர்ச்சியில் பங்குண்டு. வேதனையிலும் பங்குண்டு. சென்னை வெள்ளத்திற்கு காரணம் வரலாறு காணாத மழை. அதிமுக அரசு அல்ல. இரண்டாவது காரணம் சென்னையின் நீர் நிலைகளை இரண்டு அரசுகளுமே கவனிக்காமல் கட்டிடங்களாக மாற்றிவிட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆறுகளை தூர் வாரியிருந்தால் பெருமளவு வெள்ளம் தவிர்க்கப்பட்டிருக்கும். திமுக மற்றும் அதிமுக இரண்டும் சென்னை வெள்ளத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

   ரௌடிகள் அராஜகம், திமுக கட்சியினர் அட்டகாசம், திமுக குடும்பத்தினர் ஆக்டோபஸ் போல அனைத்து துறைகளிலும் அக்கிரமம் செய்யாமலிருக்க திமுகவை தூக்கி எரிவதே சரி. எத்தனை ஊழல்? எத்தனை குடும்பங்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன? திரைத்துறையினரை மிரட்டியது. கல்லூரிகளை மிரட்டி வாங்கியது, ஈழத்தமிழர்களை கொன்றது என இந்த இவர்களின் பட்டியல் நீள்கிறது.
   எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது திமுகவை விட அதிமுக சிறந்தது. சிந்தித்து பாருங்கள்

   நீக்கு
 10. அதிமுக சால்ரா blog. அதிமுக ஆட்சி முடிந்து பல ஆண்டுகள் ஆனது என்றாலும் இந்த blogய் மன்னித்து இருப்பேன்

  பதிலளிநீக்கு
 11. //ஜெயா ஆட்சியில் பல குறைகள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் கூறிய சில குறைகளில் எனக்கு மாற்று கருத்து உண்டு. ஆயிரம் குறைகள் ஜெ ஆட்சியில் இருந்தாலும் அதைவிட அதிக குறைகள் திமுக ஆட்சியில் இருந்தது என்பதுதான் உண்மை.இன்று இருப்பதை விட திமுக ஆட்சியில் மக்கள் அதிக இன்னலுக்குள்ளாவார்கள் என்பதே உண்மை. //


  Mr. Puratchimani,

  You have a soft corner for ADMK. No matter whatever evil JJ does, you will find some reason to defend it, because you have liked.

  //ஆயிரம் குறைகள் ஜெ ஆட்சியில் இருந்தாலும்//

  This clearly shows that you are a utter slave, irresponsible, lack of wisdom. Are you not ashamed to support ADMK in spite of knowing thousand mistakes? If only DMK is contesting against ADMK, I could have agreed with you. But, when there are some other guys like Anbumani, Vijayakath & Seeman available, Why should we not select one of them as CM?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Bro,
   It is true that i have soft corner for ADMK compared to DMK because i feel ADMK rule is better than DMK rule in Tamil Nadu. I said we can vote for Anbumani, Vijayakath, Seeman, Thiruma and ofcourse even independent and good candidates wherever possible. Apart from ADMK i could not support any other party in all areas of TN because i know the ground reality. Just for the sake of support i wont support. I support which is possible. It is possible to stop DMK to come to power by voting for ADMK. But it is impossible to stop either ADMK or DMK from forming govt by supporting any other party.I am telling you the ground reality. In 2021 you can see my different stand. But as of today it is going to be either ADMK or DMK whether you believe it or not, or like it or not, agree it or not.

   நீக்கு
  2. //i have soft corner for ADMK compared to DMK//

   Smart Answer.

   Ok. Assume that JJ, Kalaignar, Anbumani, Vijayakath & Seeman are contesting with each other in one constituency. To whom will you vote?

   A tough question for you. In fact, I would like to ask this question to everyone in Tamilnadu. The answer to this question shall clearly tell the true face of their mentality. BTW, I am very slightly in favour of Anbumani (as CM) because of view over free CBSE education in all Government schools.

   நீக்கு
  3. Smart, tough but super question. For the sake of argument I assume this voting is for choosing CM.
   I will also vote for Anbumani. For your info- he did not say that he will provide "free CBSE education in all Government schools" but he said education quality at par with the CBSE. I welcome his idea of free education and medical facility to all.

   நீக்கு
 12. "ஆயிரம் குறைகள் ஜெ ஆட்சியில் இருந்தாலும்" என்று சொன்னது, இங்கு எல்லோரும் இந்த ஆட்சியைப் பற்றி காரி துப்பியதால், வேறு வழியில்லாமல் உங்கள் வாயிலிருந்து வந்தது.
  இதே வார்த்தையை ஒரு அரசியலை பற்றி ரொம்ப தெரியாத ஒரு கிராமத்துக்காரரிடம் இப்படி சொல்ல மாட்டீர்கள். Because, people like are you defending slaves. Please understand that "Justifying a fault doubles it".

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதிமுக மீது குறைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும் திமுகவை விட பரவாயில்லை என்பதே என் கருத்து.// have mentioned in my post before others pinpointing admk mistakes.
   We have only two options today. Need to choose which best among the worst. I feel ADMK is best. Pls think and Vote.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...