திங்கள், 20 பிப்ரவரி, 2012

சிவம்-சிவன் உண்மையிலே யார்? அவனை பார்க்க முடியுமா?


இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே சிவனை பற்றியும் ஒரு முடிவுக்கு வருதலும் மிகவும் சிரமமாகவும். சிவனை அறிந்த உலகம் மூன்று விதமாக அவரை பார்க்கின்றது.

சிவம் என்பதற்கு ஒன்றும் இல்லாதது என்று பொருள் கூறுகிறார்கள்.

சிவனை யோகிகள் ஆதி யோகி என்றும் உலகில் முதன் முதலில்  தோன்றியவர்  என்றும் பார்க்கின்றனர்.  சிவன் தான் முதன் முதலில் யோகங்களை கண்டுபிடித்தவர் என்றும், மனிதனும் இறை நிலைக்கு உயர இவரே வித்திட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. 

சிவனை தமிழ் நாட்டு சித்தர்கள் இயற்கையாகவும்,  பிரபஞ்சமாகவும்,இறைவனாகவும்   பார்க்கின்றனர். 

சிவனை பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் முழு முதல் கடவுளாக பாக்கின்றனர். இவரை அனைத்து உலகையும் உயிரையும் படைக்க காரண கர்த்தா என்றும் இவரே அனைவருக்கும்  படி அளக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

இதில் எது உண்மை என்று தெரியாது. ஆனால் ஓம், ஓம் நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள் ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க உதவுகின்றது என்றே நினைக்கின்றேன்.

ஆம் சிவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அவரது பெயர்கள் உதவி செய்கின்றது.

சிவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான். 
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி) 
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.
நமது சித்தர்களும் சிவ தரிசனத்தை பெற்றவர்கள் தான். 

இந்த சிவ தரிசனத்தை தான் இறை தரிசனம், ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

சிவனை,இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏன் உனில் அவன் உங்கள் உள் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
 (இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருத்துவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் இந்த சிவ ஒளியையே குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கல்ல. 

யார் யார் சிவம்....நீ.....நான் சிவம் என்று பாடலும்  வந்துவிட்டது. 

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும். 

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும். 

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  சிவ/இறை  தரிசனத்தை காட்டும். 
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் சிவனாகலாம்.உண்மையை உணரலாம். அதற்கு சிவ ராத்திரி உகந்தது என்று கூறப்படுகிறது. 

அஉம், ஓம், ஆமென்,ஆமின் 

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஒரு கட்டிடத்தை ஆரம்ப நிலையை வைத்து பார்வையாளார்கள் அக்கட்டிடத்தை பெயர் சூட்ட முடியாது அது முழுமையாக முடித்த பிறகே அதற்கு இந்த கட்டிடம் என்று சொல்லமுடியும் அதுபோல தான் இஸ்லாம் ஆரம்பநிலையிருந்து நேற்று குரான் வந்தவரை. அதனால் தான் பிற மதங்களின் புத்தகங்கள் அவ்மதத்தின் பெயரை அப்புத்தங்களில் இல்லை முழுமை பெற்ற பிறகே குரானில் இஸ்லாம் என்று பெயரிட்டிருந்தது . பொது விஷயம் இறைவன் ஒன்று, எல்லாம் வேதங்களும் ஒரே இறைவனால் இறக்கபட்டது

    பதிலளிநீக்கு