ஒருவனுக்கு மரணம் இல்லா பெருவாழ்வைப் பற்றி தெரிந்த்திருந்தும் , தாய் தந்தை, மனைவி மக்கள் மேல் உள்ள பாசத்தினால் அவனால் அந்த வழியில் பயணிக்க முடியா நிலையில் மரணத்தை எய்துவான் எனின். இந்த மரணத்திற்கு எது காரணம்?. பாசம் தானே. பாசம் என்ற கயிறு தானே அவனை மரணம் இல்லா பெருவாழ்வை அடைய விடாமல் செய்தது, இப்போது புரிகிறதா பாசக்கயிறு என்றால் என்னவென்று.
அன்றாவது பலருக்கு மரணமில்லா பெருவாழ்வை பற்றி தெரிந்த்திருந்தது ஆனால் இன்றோ சிற்றின்ப ஆசையாலும் பண ஆசையாலும் அதைப்பற்றி அறிய கூட நேரம் ஒதுக்குவதில்லை.