வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அஜ்மால் கசாப் தூக்கு தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும்?



பல குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பொழுது மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் கொடுக்கும் பொழுது  ஏன் அஜ்மல் கசாப் தூக்கு  தண்டனையை  ரத்து  செய்யக்கூடாது? நாமெல்லாம் மனிதர்கள் தானே? காட்டு மிராண்டிகள் இல்லையே? 

உணர்ச்சிவசப்படாதீங்க   தோழர்களே, மேற்கூறியது நான் கூறியது அல்ல. இந்த தொனியில் ஒரு மனிதாபமுல்லவர்  பதிவிட்டுள்ளார். 

தூக்கு தண்டனை குற்றத்தை பொறுத்து அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தவன்தான் நான். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுந்த பொழுது.
மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். சரியான முடிவிற்கு என்னால் வரவில்லை.
அவர்கள் குற்றம் புரிந்திருக்கவில்லை குற்றத்திற்கு தன்னை அறியாமல் உடந்தையாக இருந்தார்கள் என்று சிலர் வாதிடும்பொழுதுதான்  இந்த உண்மையை நீதிமன்றத்தில்  உறுதிசெய்து அவர்களது தூக்கு தண்டனையை யாராவது தடுக்க வேண்டும் என்று  மனதளவில் ஒரு முடிவிற்கு வந்தேன். 

மீண்டும் சொல்கிறேன் அவர்கள் தங்களை அறியாமல் கொலைக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. 

அஜ்மல் கசாப் விடயம் முற்றிலும் வேறானது.  அவன் தான் செய்வது என்ன என்பதை தெரிந்தே பல இந்தியர்களை கொன்று குவித்தான். அவன் கொலை செய்தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அதை அவனும் ஒப்புக்கொண்டான். அவன் இந்தியாவின் மீது போர் புரிந்ததாகத்தான் தீர்ப்பு கூறுகிறது. மேலும் இது அவர்களைப்பொறுத்த வரை புனிதப்போர். 

அவர்கள் வரும்பொழுதே தெரியும் அவர்கள் இங்கே இறப்பார்கள் என்று. அவர்கள் தற்கொலைப் படைகள்தான். இந்தப் புனித்தப்போரில் இறந்தால் சுவனத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றே அவர்கள் வந்திருப்பார்கள். அவன் புனிதப்போருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறி ஆசி கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எனவே அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது எனபது அவனது உல்லாச வாழ்க்கைக்கு இந்தியா தடையாக இருக்கும் என்பதாகவே  நான் கருதுகிறேன். 

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் உண்மையில் அப்படி இல்லை.

ஜாதி ரீதியாக, மத ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்தியருக்கு ஒரு சட்டம் வெளி நாட்டினருக்கு  ஒரு சட்டம் என்றே நமது சட்டம் உள்ளது.
பேரறிவாளன் உட்பட அந்த மூன்று பேர் இந்தியர்கள் தானே அப்படி இருக்க இவர்களை  அஜ்மல் கசாபினுடன்  ஒப்பிடுதல் முற்றிலும் தவறானது. ( சரி இதே தவறை ஒரு இந்தியன் செய்திருந்தால்? குற்றைத்தினை பொறுத்து அவனுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். அது தூக்கா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். )

மேலும் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டதுபோல் குற்றத்திற்கு தன்னையறியாமல்  உடந்தையாய் இருந்ததற்கும் களத்தில் இறங்கி குற்றம் புரிந்த வெளி நாட்டவனுக்கும்  வித்தியாசம்  உண்டு.

தீர்ப்பு என்ன கூறுகிறது. கசாப் போர் குற்றம் புரிந்ததாக. மனிதாபிமானம் பற்றி பேசுபவர்களிடம் நான் கேட்கிறேன் கசாபிர்க்கு  தூக்கு என்பது காட்டு மிராண்டித்தனம் என்றால் நமது நாட்டின் எல்லையைக்கடந்து நம்மை தாக்க வரும் எதிரிகளை கொல்லாமல் விட்டுவிடலாமா? அல்லது நமது வீரர்களை பலி கொடுத்தாவது அவர்களை பிடித்து ஆயுள் தண்டை வழங்க வேண்டுமா? கொலை செய்ய வரும் எதிரிகளிடம் மனிதாபிமானம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா?

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கொலை என்பது வேறு போர் என்பது வேறு. 
இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட போர்.  கொலைக்கும் போருக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரும் கசாபிர்க்கு  வக்காலத்து வாங்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.உங்கள் மனிதாபிமானத்தை நான் மெச்சுகிறேன்.அதே நேரத்தில் நீங்கள் இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள் தெரிந்துகொள்வோம்.


ஜாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றை கடந்து மனிதம் (முடிந்தால் உயிர்கள்)  என்ற ஒரு புள்ளியில் நாம் அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது (மனித நேயம் விரும்பும் அனைவரது) ஆசை. அனைத்து நாட்டையும் ஒன்றாக இணைக்கும் பொழுது போர் என்பதே இருக்காது. (குறைந்த பட்சம் விரோதம் இல்லாமல் இருக்கும் பொழுது)அப்பொழுது போர் பொருட்டு எந்த உயிர்களும் கொல்லப்படாது. அதுவரை  போர் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டின் கடமை.

மனிதேயம் ஓங்கி ஒலிக்கட்டும்.....மனித நேயம் காப்பதற்கு மட்டும்.... போரை ஊக்குவிப்பதற்கு அல்ல.

எல்லா உயிர்களுக்கும் மனம் இறங்குவதுபோல் எனது(பலரது) மனம் க்சாபிர்க்காகவும் மனம் இறங்குகிறது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன், ஒரு உயிர், அவனுக்கும் குடும்பம் உண்டு.அவன் இறப்பும் பலருக்கு துன்பம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.  புனிதப்போரால் பல கோடி இந்தியர்கள் கொன்று  குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுப்பது யார் கடமை. சிந்தித்து செயல் படுத்த வேண்டியவர்கள் சிந்திப்பார்களா...புனிதப்போரை தடை செய்வார்களா? 

என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் திருவிழாவில் இப்படி ஒரு பேச்சு -வாசிப்பு சரியா?


நேற்று நடந்து முடிந்த பதிவர் திருவிழா மாபெரும் வெற்றி திருவிழாவாக மாறியுள்ளது.இருப்பினும்  ஒருவரின் வாசிப்புதான் சரியா தவறா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. 

இது கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் பெண்பால் பதிவர்கள், மென்மையான ஆண்பால் பதிவர்கள்  தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடலாம்.

ஒருவர் கவிதை வாசிக்கின்றேன்  என்று இப்படி ஒரு கேவலமான கவிதையை வாசித்து  அதுவும் பல பெண்கள் கூடி இருந்த  இடத்தில் இதை வாசித்தது சரியா எனபதை நீங்களே சொல்லுங்கள்.

இதோ அவரின் கவிதை 

இயற்கையும் பெண்ணும் ஒன்றுதான்
இருவர்க்கும் எல்லாமே அழகு !

மேகம் மூடிய மலை  இயற்கைக்கழகு  
ஆடை மூடி மேனி பெண்ணுக்கழகு! 

இயற்கையையும்  பெண்ணையும் சுரண்டக்கூடாது 
அவ்வாறு செயின் அழிவு மாக்களுக்கும் மக்களுக்குமே!

இயற்கை  சீற்றம் கொண்டால் பேரழிவு 
பெண் சினம் கொண்டால் கலாச்சார சீரழிவு!

இயற்கையையும் பெண்ணையும்  பேணி காத்திடுவோம் 
இன்பமான வாழ்வை அடைந்திடுவோம்!

---------------------
இதைவிட ஆன்மீக கவிதைனு பின்னாடி சொல்றாரு பாருங்க....

பெட்டிக்காகவும்
புட்டிக்காகவும்
குட்டிக்காகவும்
 உழைக்கும் மனிதா
நீ
உன் தலையை 
அமுதச்  சட்டியாக்க உழைப்பது எப்போது?
----------
மண்ணோடு விளையாடுவதும்
பெண்ணோடு விளையாடுவதும்
விண்ணோடு விளையாடுவதும் 
விளையாட்டல்ல
உன்னோடு விளையாடுவதே  விளையாட்டு.

(மண்ணிலே,பெண்ணிலே, விண்ணிலே, உன்னிலே என்பதே சரி என நினைக்கின்றேன்)
------------------
பெண்ணோடு விளையாடினால் 
    சக்தி விரையமாகும் 
உன்னோடு விளையாடினால்
   சக்தி அமுதமாகும் 
எனவே தியானம் செய்வீர் 
பேரின்ப வாழ்வை அடைந்திடுவீர்.  (இப்படி  இருக்கணும் ஆனா படிச்சது 'திறம்பட வாழ்வீர்')
--------------
இது நல்ல கவிதையா? கெட்ட கவிதையா? அல்லது கவிதையே இல்லையா?
ஒரு பொது இடத்தில் பல பெண்கள் இருந்த இடத்தில் இதை வாசித்தது சரியா தவறா எனபதை நீங்களே சொல்லுங்கள். 

அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது 
"பெண்ணும், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு  மிக முக்கியமானது. பலரும் பெண்ணில் திளைப்பதொடு விட்டுவிடுகிறார்கள். அவர்கள் தியானம் செய்ய  வேண்டும் என்று அறிவுறுத்து வதற்காகவே இவ்வாறு வாசித்தேன். இது சித்தர்கள் கவிதையின் தாக்கத்தால் எழுந்தது. அவர்களில் சிலர் பெண்கள் மேல் அதாவது சிற்றன்பத்தில்  வெறுப்பு வருமாறு எழுதி இருக்கிறார்கள்.  அவர்களின் நோக்கம் சிற்றின்பத்தை வெறுப்பது அல்ல மேலாக அதில் சிக்கிகொள்ளாமல் பேரின்பத்தை நோக்கி மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். அதுபோல் தான் என்னுடைய இந்த முதல் கவிதை வாசிப்பும். இந்த கவிதை தவறானது, இது வாசிக்கப்பட்ட இடம் தவறானது என்று எண்ணினால் அதற்காக என் மன வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். மாறாக இது சரி என்றால் எல்லாப்  புகழும் சித்தர்களுக்கே " என்று கூறிவிட்டார்.

இப்பொழுது சொல்லுங்கள் இவர் செய்தது சரியா? தவறா? இதை முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள். 
--------------------------

சரி யார் அவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?
அது வேறு யாரும் அல்ல 

நான் தான்
 :) :) ஹா ஹா ஹி ஹி 

பதிவர் திருவிழாவில் பல பேரை இத வாசிச்சு கொன்னாச்சு வராதவங்களும் அந்த துன்பத்த அனுபவிக்கனும் இல்ல அதுக்குத்தான் இந்த பதிவு :)

மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் ....இக்கவிதை தவறாக இருப்பின் மன்னிக்கவும் :)
----------------
சரி  பதிவர் திருவிழா எப்படி இருந்தது?
அருமையோ அருமை.
மூத்த பதிவர்கள் உரை 
பதிவர்கள் சுய அறிமுகம்  (குறிப்புரை கேபிள் சங்கர், பட்டிக்காட்டான் ஜெய், அட்ராசக்க சிபி செந்தில்குமார், பிருந்தானமும் நொந்தகுமாரனும் ஜாக்கிசேகர்)
சாப்பாடு 
மூத்த பதிவர்களை இளைய பதிவர்களை கொண்டு மரியாதை செய்தல் 
தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீடு  விழா
கவியரங்கம்
சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் உரை
கவிஞர் சுரேகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது என
விழா சீரும் சிறப்புமாக இருந்தது.

பெயர் மட்டுமே, முகம் மட்டுமே  தெரிந்த மற்றும் பெயர் முகம் தெரியாத  பலரை பார்த்து பேச நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. இருக்கின்றது. 

 இரவு பகல் பாரமால் உழைத்த விழா குழுவினருக்கும் (புலவர் செ.இராமனுஜம், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், வீடு திரும்பல் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவா, தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,  அஞ்சா சிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன்,டீக்கடை சிராஜுதீன் மற்றும் எனக்கு பெயர் தெரியாத பலருக்கும்(பலரின்  பெயர்  எழுத  வில்லையே  என்று  யாரும்  தவறாக  எண்ணவேண்டாம்  எனக்கு  ஞாபகம்  இருந்த  அளவிற்கு   மட்டும்  எழுதி இருக்கிறேன் பதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்து திருவிழாவை வெற்றியடைச்செய்த பதிவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் :)  தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி 



வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

மது ஒழிப்பு பற்றி பேசும் சகோதரர்கள் இதையும் சிந்திப்பார்களா ?


தங்களுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்துவந்த சகோதரர்கள்  இப்பொழுது மது ஒழிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.  ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையோ இது?  

ஒரு நண்பர் ஒரு பதிவில் அழகாக பின்னூட்டமிட்டிருந்தார் திருவள்ளுவர் தெளிவுரை கொடுத்து  மது வேண்டாம் என்பவர்கள் வள்ளுவர் கூறிய புலால் உண்ணாமையை ஏன் கடைபிடிப்பதில்லை  என்று.
அவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்திப்பார்களா? 

வள்ளுவர் பொய் கூட பேசக்கூடாது என்று சொன்னார். அதை கேட்கிறார்களா?

மதம் வரும் பொழுது அங்கே மனிதம் அழிகிறது. பல மனிதர்களை கொன்றுதான் மதத்தையே பரப்புகிறார்கள் என்பது வேறு விடயம்.

இசுலாமிய மன்னர்களில் ரொம்ப நல்லவர்னு சொல்லக்கூடிய அக்பர் கூட பத்தாயிரம் இந்தியர்களை கொன்றதாக வரலாறு கூறுகிறது. அப்ப மத்தவங்க எத்தனை கோடி இந்தியர்களை கொன்று குவித்திருப்பார்கள் என்பதை நான் கூறத்தேவை இல்லை.  அந்த கொடூராத்தை மீண்டும் படிக்க, எழுத நான் அவ்வளவு கொடூரமானவன்  அல்ல. 

இசுலாம் மட்டும் அல்ல இசுலாமிற்கும் கிருத்துவர்களுக்கும் நடந்த சண்டைகள், பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றம், கோத்ரா எரிப்பு, குஜராத் படுகொலை  (இப்படி  சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உண்டு)என மதமே மனிதத்தையும் மனிதர்களையும்  அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மதங்களினால் சில நன்மைகள் உண்டு என்றாலும் அதனால் ஏற்ப்படும் இழப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இப்படிப்பட்ட மதங்கள் தேவையா என்று சிந்தனை எழுவதை தவிர்க்க இயலவில்லை.


இசுலாமில் மதுவிற்கு தடை என்கிறார்கள். ஏன் எதற்கு அவ்வாறு கூறப்பட்டது  என்று ஆராய்ந்தால் தான் அதற்க்கான உண்மையான காரணம் தெரியவரும்.

வள்ளுவர் மதுவின் தீமையை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி கூறி இருக்கிறார்.
முகமது நபி அவர்கள் மது அருந்தினால் பாவம் வந்து சேரும் என்று பூச்சாண்டி  காட்டுகிறார்.
உயிர்களை கொல்வதால், தின்பதால்  பாவம் வராதா? 
பூச்சாண்டி எப்பொழுது காட்டப்படும் தெரியுமா மக்கள் அறியாமையில் இருக்கும்பொழுது, சில விடயங்கள் சொன்னால் புரியாது எனும்பொழுது.

திருடினா சாமி கண்ண குத்திடும், நீ சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன் என்று அறியாத குழந்தைகளிடம் கூறுவார்கள். அதுபோல் தான் அன்று அறியாமையில் இருந்த அரபியர்களுக்கு அல்லா  கூற  முகமது நபியால் அருளப்பட்டது தான் குரான் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் . அதனால் தான் அதில் நிறைய பூச்சாண்டி விடையங்கள் இருக்கும். 

கவனிக்க: வள்ளுவர் அனைத்து தீமைகளையும் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி இது செய்தால் இது விளையும் என்று கூறுவார். ஏன் அப்படி கூறினார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் சிறப்பான சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்கள் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பூச்சாண்டி  காட்ட முடியாது என்பதால் தானே?.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அறியாமையில் இருந்த அரேபியர்களிடம் காட்டிய பூச்சாண்டியை  இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம்ப வேண்டும் என்பதை அவர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பான சிந்திக்கும்  திறனை கொண்டிருந்த தமிழர்களின் சந்ததிகள்  சிந்திக்க வேண்டாமா?  

இசுலாமில் ஏன் மது மறுக்கப்படுகிறது?

முதலில் குடித்து விட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்றுதான் நபிகள் கூறுவார்கள். பிறகுதான் இவனுங்க திருந்தான் மாட்டானுங்க போல என்று மதுவிற்கு தடை விதிப்பார்.(அல்லா கூறியதாக ).   

சொர்க்கத்தில் 'wine'  வழங்கப்படும்  என்றுதான் இசுலாம் சொல்கிறது. அதில் ஆல்கஹால் அளவு பற்றி எல்லாம்  சொல்லவில்லை. ஏன் சொர்க்கத்தில்  மட்டும் 'wine'   வழங்கப்படும் என்று நபிகள் கூறினார் என்பதை அவரின் வரலாற்றோடு சிந்தித்து பார்த்தால் தான்  உண்மை புரியும். 

௦௦௦௦ஹலால் பீர் குடிக்கலாமாம்... யார் அந்த ஆல்கஹால் அளவை நிர்ணயித்தது அல்லாவா...? (இந்த கேள்வியும் ஒரு நண்பர் கேட்டதுதான்)

மதுவினால் தீமையே அதிகம் அதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மனிதத்தை ஒழிக்கும் மதத்தை /மார்க்கத்தை (இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்)  பிரச்சாரம் செய்துகொண்டு மது ஒழிப்பு பற்றி பேசுவதுதான் வேதனை தருகிறது.


நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த கூற்றுப்படி பார்த்தால் மதமும்/மார்க்கமும் ஹராமாகும். இதை கடைபிடிப்பார்களா? 
(மதுவை விட மதமே அதிக போதை என்று ஒரு நண்பர் அருமையான பதிவை தந்திருந்தார்.)

இப்பதிவில் தவறான, கடுமையான கருத்துக்கள்  இருந்தால் தாராளமாக் தெரியப்படுத்தவும் அது நீக்கப்படும்.(வெளியே செல்வதால் உடனடியாக சாத்தியம் இல்லை)  இது ஒரு விழிப்புணர்வு பதிவேயன்றி வெறுப்புணர்வு பதிவல்ல. 

இசுலாமிய சகோதரர்களுக்கு சற்றே கடந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் :). (மதமே வேண்டாம்னு சொல்லல , பரப்ப வேண்டாம்னு தான் சொல்றேன். (ஐ நா சொல்லுது ஆட்டுக்குட்டி சொல்லுதுன்னு சொல்லக்கூடாது) மதத்தை தாண்டி மனிதத்தை தழுவ வேண்டும் என்று தான் சொல்கிறேன் :) . மதம் மனிதத்திற்கு தடையாக இருக்கும்பொழுது அது தேவையா எனபதையும் சிந்தித்து அது மனிதத்தை பாதிக்காத அளவிற்கு  சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மனித இனம் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் துணைபோக வேண்டுமா எனபதை சிந்தியுங்கள்.

தெரியதவர்களுக்காக:
என்னடா இப்படி ஒரு பதிவு என்று சிலர் நினைக்கலாம். சமீபத்தில் ஒரு இசுலாமிய ஐயா  இட்ட பதிவு, நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பை கெடுக்க சதி என்பது சிலரின் குற்றச்சாட்டு. இல்லை அது நல்ல நோக்கத்திற்காக என்பது பல இசுலாமிய சகோதரர்களின் வாதம். அதைத்தொடர்ந்து பல பதிவுகள் வந்தது அதுபோல் இதுவும் ஒரு பதிவு அவ்வளவே. 

மிக முக்கியம் 
வரும் ஞாயிறு அன்று  சென்னையில் பதிவர் திருவிழா நடக்கின்றது. அனைவரும் பங்கேற்கலாம். வர விருப்பமுள்ளவர்கள் பின்வரும் விழா குழுவினரை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
      சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

 பெண் பதிவர்களின் தொடர்புக்கு

      சசிகலா(தென்றல்)-99410 61575

 மின்னஞ்சல்

kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com


இது  நாடு, மதம், ஜாதி, இனம்  கடந்த திருவிழா அனைவரும் பங்கேற்ற்று பயனடையுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...