நேற்று நடந்து முடிந்த பதிவர் திருவிழா மாபெரும் வெற்றி திருவிழாவாக மாறியுள்ளது.இருப்பினும் ஒருவரின் வாசிப்புதான் சரியா தவறா என்று எனக்கு சரியாக தெரியவில்லை.
இது கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் பெண்பால் பதிவர்கள், மென்மையான ஆண்பால் பதிவர்கள் தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடலாம்.
ஒருவர் கவிதை வாசிக்கின்றேன் என்று இப்படி ஒரு கேவலமான கவிதையை வாசித்து அதுவும் பல பெண்கள் கூடி இருந்த இடத்தில் இதை வாசித்தது சரியா எனபதை நீங்களே சொல்லுங்கள்.
இதோ அவரின் கவிதை
இயற்கையும் பெண்ணும் ஒன்றுதான்
இருவர்க்கும் எல்லாமே அழகு !
மேகம் மூடிய மலை
இயற்கைக்கழகு
ஆடை மூடி மேனி பெண்ணுக்கழகு!
இயற்கையையும் பெண்ணையும் சுரண்டக்கூடாது
அவ்வாறு செயின் அழிவு மாக்களுக்கும் மக்களுக்குமே!
இயற்கை சீற்றம் கொண்டால் பேரழிவு
பெண் சினம் கொண்டால் கலாச்சார சீரழிவு!
இயற்கையையும் பெண்ணையும் பேணி காத்திடுவோம்
இன்பமான வாழ்வை அடைந்திடுவோம்!
---------------------
இதைவிட ஆன்மீக கவிதைனு பின்னாடி சொல்றாரு பாருங்க....
பெட்டிக்காகவும்
புட்டிக்காகவும்
குட்டிக்காகவும்
உழைக்கும் மனிதா
நீ
உன் தலையை
அமுதச் சட்டியாக்க உழைப்பது எப்போது?
----------
மண்ணோடு விளையாடுவதும்
பெண்ணோடு விளையாடுவதும்
விண்ணோடு விளையாடுவதும்
விளையாட்டல்ல
உன்னோடு விளையாடுவதே விளையாட்டு.
(மண்ணிலே,பெண்ணிலே, விண்ணிலே, உன்னிலே என்பதே சரி என நினைக்கின்றேன்)
(மண்ணிலே,பெண்ணிலே, விண்ணிலே, உன்னிலே என்பதே சரி என நினைக்கின்றேன்)
------------------
பெண்ணோடு விளையாடினால்
சக்தி விரையமாகும்
உன்னோடு விளையாடினால்
சக்தி அமுதமாகும்
எனவே தியானம் செய்வீர்
பேரின்ப வாழ்வை அடைந்திடுவீர். (இப்படி இருக்கணும் ஆனா படிச்சது 'திறம்பட வாழ்வீர்')
--------------
இது நல்ல கவிதையா? கெட்ட கவிதையா? அல்லது கவிதையே இல்லையா?
ஒரு பொது இடத்தில் பல பெண்கள் இருந்த இடத்தில் இதை வாசித்தது சரியா தவறா எனபதை நீங்களே சொல்லுங்கள்.
அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது
"பெண்ணும், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. பலரும் பெண்ணில் திளைப்பதொடு விட்டுவிடுகிறார்கள். அவர்கள் தியானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்து வதற்காகவே இவ்வாறு வாசித்தேன். இது சித்தர்கள் கவிதையின் தாக்கத்தால் எழுந்தது. அவர்களில் சிலர் பெண்கள் மேல் அதாவது சிற்றன்பத்தில் வெறுப்பு வருமாறு எழுதி இருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் சிற்றின்பத்தை வெறுப்பது அல்ல மேலாக அதில் சிக்கிகொள்ளாமல் பேரின்பத்தை நோக்கி மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். அதுபோல் தான் என்னுடைய இந்த முதல் கவிதை வாசிப்பும். இந்த கவிதை தவறானது, இது வாசிக்கப்பட்ட இடம் தவறானது என்று எண்ணினால் அதற்காக என் மன வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். மாறாக இது சரி என்றால் எல்லாப் புகழும் சித்தர்களுக்கே " என்று கூறிவிட்டார்.
இப்பொழுது சொல்லுங்கள் இவர் செய்தது சரியா? தவறா? இதை முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.
--------------------------
சரி யார் அவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?
அது வேறு யாரும் அல்ல
நான் தான்
:) :) ஹா ஹா ஹி ஹி
பதிவர் திருவிழாவில் பல பேரை இத வாசிச்சு கொன்னாச்சு வராதவங்களும் அந்த துன்பத்த அனுபவிக்கனும் இல்ல அதுக்குத்தான் இந்த பதிவு :)
மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் ....இக்கவிதை தவறாக இருப்பின் மன்னிக்கவும் :)
----------------
சரி பதிவர் திருவிழா எப்படி இருந்தது?
அருமையோ அருமை.
மூத்த பதிவர்கள் உரை
பதிவர்கள் சுய அறிமுகம் (குறிப்புரை கேபிள் சங்கர், பட்டிக்காட்டான் ஜெய், அட்ராசக்க சிபி செந்தில்குமார், பிருந்தானமும் நொந்தகுமாரனும் ஜாக்கிசேகர்)
சாப்பாடு
மூத்த பதிவர்களை இளைய பதிவர்களை கொண்டு மரியாதை செய்தல்
தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீடு விழா
கவியரங்கம்
சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் உரை
கவிஞர் சுரேகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது என
விழா சீரும் சிறப்புமாக இருந்தது.
பெயர் மட்டுமே, முகம் மட்டுமே தெரிந்த மற்றும் பெயர் முகம் தெரியாத பலரை பார்த்து பேச நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. இருக்கின்றது.
இரவு பகல் பாரமால் உழைத்த விழா குழுவினருக்கும் (புலவர் செ.இராமனுஜம், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், வீடு திரும்பல் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவா, தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில், அஞ்சா சிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன்,டீக்கடை சிராஜுதீன் மற்றும் எனக்கு பெயர் தெரியாத பலருக்கும்(பலரின் பெயர் எழுத வில்லையே என்று யாரும் தவறாக எண்ணவேண்டாம் எனக்கு ஞாபகம் இருந்த அளவிற்கு மட்டும் எழுதி இருக்கிறேன்) பதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்து திருவிழாவை வெற்றியடைச்செய்த பதிவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் :) தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர்ப்பதிவுப்போடலைன்னு நீங்களே தனக்குத்தானே திட்டத்தில் இறங்கிட்டிங்களா?
பதிலளிநீக்குபட்டிணத்தார் அல்லது அருணகிரி என நினைக்கிறேன் ...எத்தனைப்பேர் நட்டக்குழி என்றெல்லாம் இருக்கும் , ஆனால் அவரு மாநாடு போட்டு வாசிக்கலைனு நினைக்கிறேன் :-))
வாங்க வவ்வால் :)
நீக்கு//ஹி...ஹி உங்களுக்கு யாரும் எதிர்ப்பதிவுப்போடலைன்னு நீங்களே தனக்குத்தானே திட்டத்தில் இறங்கிட்டிங்களா?//
இது புது டெக்னிக்கோ :) ஹா ஹா எப்பூடி
//பட்டிணத்தார் அல்லது அருணகிரி என நினைக்கிறேன் ...எத்தனைப்பேர் நட்டக்குழி என்றெல்லாம் இருக்கும் , ஆனால் அவரு மாநாடு போட்டு வாசிக்கலைனு நினைக்கிறேன் :-)) //
நாங்கெல்லாம் கலியுக சித்தர்கள் இல்லையா (சும்மா :) ) அதான் மாநாடு போட்டு பதிவு போட்டு சொல்றோம் :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ம்மம்ம... இன்னுமை எத்தனை இருக்கு இதுபோல..!
பதிலளிநீக்குவாங்க தங்கம் பழனி :),
நீக்குஅவ்வளுதான் பயப்படாதிங்க :) என்கிட்டே சரக்கு அவ்வளவுதான் :). மத்தவங்க கிட்டே இருந்த நிறைய எதிர்ப்பார்க்கலாம்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி :)
ஹா ஹா ... உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சார் ...
பதிலளிநீக்குகவிதை அருமை தான் சார் ...
வாங்க அரசன் :)
நீக்குஉங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
(உங்கள பார்த்தா ஏதோ சினிமா ஹீரோ மாதிரி இருக்கு )
தங்கள் வருகைக்கும் ஊட்டத்திற்கும் மிக்க நன்றி :)
என்னங்க! அவனவன் விஸ்கி கொடுக்கிறான், நீங்க பியர் கொடுத்து விட்டு வெறிக்குதா?? எனக் கேட்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇந்த வகையாக எழுத்தில் குட்டி ரேவதி, லீலா மணிமேகலை; நம்ம சாரு இவங்களை வாசிக்கவில்லையா??
நீங்க ரொம்ப ஆச்சாரமாக எழுதியுள்ளீர்கள்!!!!
இதுக்கு போய் இப்படி பயங்காட்டுகிறீர்கள்!!!!
ஆண்டாள் சொல்கிறார் " குத்துவிளக் கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல், மெத்தென்ற பஞ்சயனத்தில் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நட்பின்னை கொங்கை மேல், வைத்துக் கிடந்த மலர்மார்பா! கண்திறவாய்!
வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) :)
நீக்குஒன்னும் இல்லைங்க ஒருத்தரு கவிதை பரவாயில்லை ஆனால் இத்தனை பெண்கள் முன்னாடி சொல்லி இருக்கனும்மா அப்படின்னு சொன்னாரு அதான் :)
அந்த பெண்களை பத்தி ஒரு குட்டி கவிதை
"அவர்கள் ஆண்மையை விட வன்மையானவர்கள்
நான் பெண்மையைவிட மென்மையானவன் !" :)
தங்கள் வருகைக்கும் தெம்பான வார்த்தைக்கும் மிக்க நன்றி :)
கலக்கல் கவிதை
பதிலளிநீக்குவாங்க ராஜபாட்டை :),
நீக்குஏன் பதிவர் சந்திப்பிற்கு வரவில்லை... வந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)
மிக அற்புதமான கவிதை நண்பரே..
பதிலளிநீக்குமிக அருமை..
சமயம் கிடைத்தால் அடியேனின் வலைப்பக்கத்திற்கு வந்து செல்லவும்.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html
வாங்க Doha Talkies :),
நீக்குதங்கள் பாராட்டுக்கு நன்றி .
நேரம் கிடைக்கும்பொழுது நிச்சயமாக வருகிறேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)