வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

என்னது? உலக நாடுகளே அணு உலைகளை மூடப்போகிறதா?கூடங்களும்  மக்களுக்கும், அணு  உலைகளுக்கு  எதிராக  போராடி  வருபவர்களுக்கும்  இது  ஒரு  நற்செய்தி . ஏற்க்கனவே  சிலருக்கு  தெரிந்திருக்கலாம்  இருந்தாலும் இதை பகிர நான் விருப்பபடுகிறேன்.

ஏற்க்கனவே  ஜெர்மனி  2022 வாக்கில் அனைத்து  அணு  உலைகளையும்   மூடப்போவதாக  அறிவித்துவிட்டது.

அதனை  தொடர்ந்து  ஜப்பானும்  தனது  அணு  உலைகளை  முழுவதுமாக  மூட  முடிவு  செய்துள்ளது.
 அடுத்த  40 ஆண்டுகளில்  படிப்படியாக  அணு  உலைகள்  முழுவதையும்  மூட  ஜப்பான்  முடிவு  செய்துள்ளது.

சுவிட்சர்லாந்த்  2035 வாக்கில்  அனைத்து  அணு  உலைகளையும்  மூட  முடிவு  செய்துள்ளது . 

பெல்ஜியம் 2025   வாக்கில் அனைத்து     அணு    உலைகளையும்   மூட  முடிவு    செய்துள்ளது . 
மேலும் பல ஐரோப்பா நாடுகள் புதிதாக அணு உலைகளை திறப்பதில்லை என்று முடிவில் உள்ளன. 

இந்த  நாடுகள்  தங்கள் மக்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் தரும் முக்கியத்துவமாகத்தான் இதை பார்க்க வேண்டும். 

சீனா இனி புதிதாக அணு உலைகளுக்கு  தரும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 27 அணு உலைகள் கொண்ட சீனா 100 அணு உலைகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. 

இப்பொழுது  அணு  உலைகளை  திறப்பதில்  மும்மூரமாக  இருப்பது  அமெரிக்கா, சீனா  மற்றும்  இந்தியா. இவர்களுக்கு  பொருளாதரா  வளர்ச்சி  தான்  முக்கியமாக  படுகிறதே  தவிர  மக்களின்  நலம்  அல்ல  என்றே தோன்றுகிறது.

இத்தனை  நாடுகள்  அணுஉலைகளை  மூட  முன்  வந்திருக்கின்றது இது நல்ல முடிவா அல்லது அச்சத்தினால் எடுத்த முடிவா?  என்ற கேள்வி எழலாம். 

வருமுன் காப்பவன் தான் அறிவாளி...இந்த விதத்தில் இவர்கள் அறிவாளிகளே.

அதே நேரத்தில் சில நாடுகள் தொடந்து அணு உலைகளைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முடிவில் தான் உள்ளது.

அதற்கு காரணமும் உண்டு. அவர்கள் இதுவரை எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்திக்காததால் அவர்கள் தொடர்ந்து அதை உபயோகிக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் தன்னுடைய 75 சதவித மின் தேவைக்கு அணு உலைகளையே பயன்படுத்துகிறது. இவர்கள் உடனடியாக அணு உலைகளை மூடும் முடிவுக்கு  வராததற்கு இதுவும் ஓர் காரணம். 

கண்ணை  மூடிக்கொண்டிருக்கும்  மற்ற  நாடுகளும் அணு உலைகளை மூடும் முடிவிற்கு  சீக்கிரம்  வர கடவுள்  வழி  செய்வானாக. 

சரி கூடன்குளம் அணுஉலைகளின் கதி என்ன?
என்னுடைய கருத்து அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இருப்பினும் மனதில் தோன்றுவதை சொல்ல தோன்றுகிறது.

இதுவரை இரண்டுமுறை அணுஉலைகளால் ஆபத்து  உண்டாகியுள்ளது.

முதல் முறை 1986 ரஷ்யாவில் செர்னோபில் என்ற இடத்தில். இது மனித தவறால் அல்லது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்தது எனலாம். இது பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. 

இரண்டாவது முறை புகுஷிமாவில் 2011 ஆம் ஆண்டு. இது இயற்க்கை சீற்றத்தால் உருவானது. 

நாம் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் சில விபத்துகளை எவ்வளவு முயன்றாலும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் விபத்து அல்லது தீங்கு நேர்ந்து  விடுமோ என்று சும்மா இருந்தால். நாம் கற்க்காலத்திற்க்கு தான் செல்ல வேண்டும்.

நில நடுக்கம் வந்தால் எத்தனை உயிர்கள் போகும் என்று சொல்ல முடியாது. அதனால் அனைவரும் வீடே வேண்டாம் என்ற முடிவுக்கு வருவதில்லை. நில நடுக்கத்தாலும் நிலைத்து நிற்க கூடிய வீடுகளை கட்டி கொள்வதே புத்திசாலிதனம்.(இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும்)

அதேபோல் கூடங்குளம் அணுஉலைகள் திறப்பதற்கு தயாராக உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள்  சரியாக இருக்கும் பட்சத்தில் அதை திறக்க மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். 
மேலும் மிகவும் கடுமையான சோதனைகளுக்கு அதை உட்படுத்த முடிந்தால் அதையும் செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, வருடம் ஒரு முறை என பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
நில்லுங்கள்......இது வெறும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஆம் கூடங்குளம் அணு உலைகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் மட்டுமே அனுமதி தரப்படவேண்டும். (இதுதான் அணு மின் உலைகளுக்கு சராசரி வயதாக சொல்லப்படுகிறது.)

30 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலை  கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வுலை மட்டுமல்ல இந்திய்வாவில் உள்ள அனைத்து உலைகளும் படிப்படியாக மூடப்பட வேண்டும்.

விபத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும் என்னுடைய கவலை அணுக்கழிவுகள் தான்.  அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கும் பல கோடி ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும். மேலும் எந்த இடத்தில் இவைகளை பாதுகாக்கிறார்களோ  அந்த இடத்தை மறந்து விட வேண்டியதுதான். அதை திரும்ப உபயோகிக்க முடியாது. 

கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை பாதுகாப்பதற்க்கான செலவு, அதில் பெறப்படும் மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணு உலையை  அப்படியே கைவிடுதல் அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவதுதான்  நல்லது. 

பணத்தை விட மக்களின் உயிரே முக்கியமானது ஆதலினால் அணு உலைகளை மூடும் முடிவிற்கு அரசு வந்தால் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நல்லது. 

 ஆபத்து ஏற்ப்படாத வண்ணம் அணு  மின்சாரம் உற்பத்தி செய்ய நல்ல தொழில் நுட்பத்தையும்,அணுக்கழிவுகளை முற்றிலும் சுத்தம் செய்யும் தொழில் நுட்பத்தையும் விரைவில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும்  பட்சத்தில் மீண்டும் நாம் அணுஉலைகளை திறக்கலாம். 
 
நல்லதொரு முடிவை கூடங்குளம் மக்களும் அரசும் எட்டுவார்கள் என நம்புவோம்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வடிவேலுவுக்கும் ஆபிரகாமிய மதங்களுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?


கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் உண்மை முயற்சி. மதப்பற்றுள்ளவர்கள் தயவு  செய்து இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சொன்னா நம்ப மாட்டிங்க இந்த ஆபிரகாமிய மதங்கள் (அதான் யூதம், கிருத்துவம், இசுலாம்) கொஞ்சம் வடிவேலு மாதிரி நடந்துகிறாங்க. 

வடிவேலு ஒரு படத்துல 'இங்க பாரு நான் ஜெயிலுக்கு போறன்..ஜெயிலுக்கு போறன்....நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்" அப்படின்பாறு.. இந்த மதங்களும் அப்படிதான்.

எங்க மதம் தான் உண்மையான மதம்.....எங்க மதம் தான் உண்மையான மதம்...என்று இந்த இரண்டு மதங்களும் (கிருத்துவம்,இசுலாம்)  சொல்லிக்கொள்ளுகின்றன. 
சொல்லிக்கொண்டு உலகம் பூரா ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

முதலில் யூதர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்று கூறிக்கொண்டனர். "இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றனர்.  (அதற்கு முன் அங்கும் இயற்கை வழிபாடு தான்) 

பிறகு ஏசு வருகிறார். அவர் இறப்புக்கு பிறகு, அவர்கள் ஆதரவாளர்கள் கிருத்துவம் தான் உண்மையான மார்க்கம், ""இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றனர்.
இப்பொழுது இவர்கள் இருவரும் போட்டி போட்டு கோண்டு ஆள் சேர்க்கின்றனர். 

அடுத்து  முகமது வருகிறார்...அவரும் இசுலாம் தான் உண்மையான மார்க்கம், ""இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றார்.அதோடு நில்லாமல் யூதர்களும், கிருத்துவர்களும் அவர்கள் வழியை பின்பற்ற சொல்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் இசுலாமை பின்பற்றினால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும் இல்லையென்றால் உங்களுக்கு நரகம், அங்க நெருப்புல போட்டு பொசுக்கப்படுவீர்கள் என்று சொல்லி ஆள்  சேர்த்தார். 

யூதர்கள் முதலில் கிருத்துவர்களாலும், பின்பு இசுலாமியர்களாலும், பிறகு ஹிட்லராலும் தொல்லை தரப்பட்டு இப்பொழுது அவர்கள் மதத்தை பிரச்சாரம் செய்வதாக தெரியவில்லை.

இப்பொழுது கிருத்துவர்களும், இசுலாமியர்களும் உலகம் முழுக்க உள்ள மக்களை தங்கள் மதத்தில் சேர்க்க பல்வேறு யுத்திகளை கையாள்கின்றன. 
ஓஷோ என்ன சொன்னாரு...இவங்க பசித்த வயிறையும், அடிமை படுத்த தக்க மனத்தையும் குறி வைக்கிறார்கள் என்று.  (நன்றி நண்பர் மனோகர்) 

ஏன் இந்த ஆபிரகாமிய மதங்கள் மட்டும் இது ஒன்றே இறைவனை அடைய வழி என்று அடம்பிடிக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. (தெரிந்தால்  சொல்லுங்கள்)

இதற்கு முன்பு தோன்றிய சமண மதமும், புத்த மதமும் இப்படி சொல்வதாக தெரியவில்லை.
சைவமும் வைணவமும் ஒரு காலத்தில் அடித்து கொண்டாலும் இப்பொழுது சமாதானம் ஆகிவிட்டது. இவர்கள் யாரும் இது ஒன்றே இறைவனை அடையும்  வழி என்று சொல்லி ஆள் சேர்ப்பதாக இப்பொழுது  தெரியவில்லை. 

கிருஷ்ணன் என்ன வணங்கு என்று சொன்னாலும் நீ நாத்திகவாதியா கூட இருந்துட்டு போனு   சொல்லிட்டாரு. 

நம்ம ஆபிரகாமிய மதங்கள் எப்போது அடம்பிடிப்பதை விடுவார்களோ  தெரியல.....

சொல்ல முடியாது எதிர் காலத்துல ஒருத்தர் வந்து.. இறைவன் பல இறைத்தூதர்கள அனுப்பினாரு ..  மக்கள் திருந்தல அதனால கடைசியா இப்ப என்ன அனுப்பி இருக்காரு, அதனால நான் சொல்வத மட்டும் கேளுங்க.. அப்படின்னு சொன்னாலும் சொல்வாரு. நீங்க  என்ன சொல்றீங்க?
(அச்சச்சோ..யாருக்கோ  ஐடியா கொடுத்திட்டேனோ :) )


திங்கள், 20 பிப்ரவரி, 2012

சிவம்-சிவன் உண்மையிலே யார்? அவனை பார்க்க முடியுமா?


இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே சிவனை பற்றியும் ஒரு முடிவுக்கு வருதலும் மிகவும் சிரமமாகவும். சிவனை அறிந்த உலகம் மூன்று விதமாக அவரை பார்க்கின்றது.

சிவம் என்பதற்கு ஒன்றும் இல்லாதது என்று பொருள் கூறுகிறார்கள்.

சிவனை யோகிகள் ஆதி யோகி என்றும் உலகில் முதன் முதலில்  தோன்றியவர்  என்றும் பார்க்கின்றனர்.  சிவன் தான் முதன் முதலில் யோகங்களை கண்டுபிடித்தவர் என்றும், மனிதனும் இறை நிலைக்கு உயர இவரே வித்திட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. 

சிவனை தமிழ் நாட்டு சித்தர்கள் இயற்கையாகவும்,  பிரபஞ்சமாகவும்,இறைவனாகவும்   பார்க்கின்றனர். 

சிவனை பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் முழு முதல் கடவுளாக பாக்கின்றனர். இவரை அனைத்து உலகையும் உயிரையும் படைக்க காரண கர்த்தா என்றும் இவரே அனைவருக்கும்  படி அளக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

இதில் எது உண்மை என்று தெரியாது. ஆனால் ஓம், ஓம் நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள் ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க உதவுகின்றது என்றே நினைக்கின்றேன்.

ஆம் சிவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும்.
அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அவரது பெயர்கள் உதவி செய்கின்றது.

சிவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான். 
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது.(அகம் பிரம்மாஸ்மி) 
நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி)
நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய்  (தத்வமசி).

ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.
நமது சித்தர்களும் சிவ தரிசனத்தை பெற்றவர்கள் தான். 

இந்த சிவ தரிசனத்தை தான் இறை தரிசனம், ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.

சிவனை,இறைவனை, அல்லாவை, கர்த்தரை  காண எங்கும் செல்லத்தேவை இல்லை. ஏன் உனில் அவன் உங்கள் உள் தான் இருக்கிறான். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும் இறைவன் அனைவரிலும் உள்ளான் என்றே குறிப்பிடுகிறது.
 (இந்த யூத புனித நூலின் தாக்கத்தால் உருவானவை தான் பைபிள் மற்றும் குரான் என்று கூறப்படுகிறது).
கிருத்துவம் இறைவன் ஒளியாக உள்ளான் என்கிறது (God is light).
அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க முடியாது என்று குரானும் இந்த சிவ ஒளியையே குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து காட்டுவதற்கு காரணம் அங்கும் சில ஆன்மீக விடயம் உள்ளது என்பதற்காகவே. மத்த படி மதம் ஒரு கலங்கிய குட்டை தான். அதில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கல்ல. 

யார் யார் சிவம்....நீ.....நான் சிவம் என்று பாடலும்  வந்துவிட்டது. 

மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும். 

நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும். 

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான  சிவ/இறை  தரிசனத்தை காட்டும். 
உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் சிவனாகலாம்.உண்மையை உணரலாம். அதற்கு சிவ ராத்திரி உகந்தது என்று கூறப்படுகிறது. 

அஉம், ஓம், ஆமென்,ஆமின் 

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

புதன், 15 பிப்ரவரி, 2012

முகமது நபி தூதரா? யோகியா? -பகுதி 2

முகமது நபிக்கு 25  வயதில் திருமணம் நடந்தது. அவர்  தன்னை  விட  பதினைந்து  வயது  மூத்த  பெண்ணை  மணந்து  கொண்டார்.  இந்தப்பெண்  வசதியான  குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இப்பெண்ணை மணக்க வசதி ஒன்று தான் காரணமோ அல்லது விதவைக்கு மறுவாழ்வு தர வேண்டும் என்ற நல்லெண்ணமா என்று தெரியவில்லை.

திருமணத்திற்கு பிறகு தான் இவர் தியானம்  அல்லது தவத்தில்  ஈடுபடுகின்றார். 
இறை தரிசனமும் பெறுகிறார். குரானின் வரிகள் ரமலான் மாதத்தில் தான் அவருக்கு முதல் முதலில் கிடைக்கின்றது. அதை ஜிப்ரேல் அல்லது கப்ரியல் தான் தனக்கு சொல்வதாகவும் கூறுகிறார்.

ஒரே நாளில் குரான் வழங்கப்படவில்லை. அந்த ரமலான் மாதம் ஆரம்பித்து அவர் உயிரோடு இருந்தவரை (23 ஆண்டுகள்  )ஜிப்ரேல் கூறியவைகளாக நபிகள் கூறியவைகள் தான் குரான். 

 உண்மையை சொல்ல வேண்டும் எனில் ஜிப்ரேல் அவருக்கு தோன்றிய சில காலங்களில் முகமது நபி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் வரலாறு கிடைக்கின்றது.

இறை தரிசனம் அல்லது குண்டலி விழித்தெழுதல் சாதாரண விடயம் கிடையாது. அது மனிதனுக்கு முதலில் தரும் துன்பங்களும் பிறகு தரும் இன்பங்களும் மிக மிக அதிகம்.

முதலில் வரும் துன்பத்தால் சிலருக்கு பித்து பிடித்து பைத்தியம் ஆன கதையும் உண்டு. சிலருக்கு நோய்களும் ஏற்ப்படுவதுண்டு. சிலர் தூக்கம் கெட்டு திரிவதும் உண்டு.

முகமதுவுக்கு  அருகில் சொல்லிக்கொள்ளும் படி குரு யாரும் இல்லாததால் துன்பத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார் என நினைக்கின்றேன்.(ஆதலால் தான் குரு  இல்லாமல் சில தியானங்களை செய்யக்கூடாது என்பர்).

 இவர் கவலையாக இருந்த காலங்களில் அவரது மனைவி ஊக்கம் தந்து தொடர்ந்து தியானம் செய்ய வைத்திருக்கின்றார். தற்க்கொலைக்கு முயன்ற காலங்களில் ஜிப்ரேல் தடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்த ரமலான் மாத நிகழ்விற்கு பிறகு அவர் தியானம் செய்தாரா என தெரியவில்லை ஆனால் தொழுகை செய்ய ஆரம்பித்து விட்டார். இவரது மனைவி  மற்றும் சுற்றத்தார்கள் என தனியாக சென்று தொழுகை செய்கின்றனர். இவர்கள் வேறு மதத்திற்கு செல்வதால் அங்கே பிரச்சனை ஆரம்பாகின்றது. பிறகு சண்டை, இசுலாமை எதிர்த்தவர்கள் இசுலாமில் சேருதல், வேறு நாட்டிற்க்கு பயணித்தல், போர்  என்று வாழ்க்கை பயணிக்கின்றது. இசுலாமும் வளருகிறது. 

மக்கள்  மத்தியில் இவர் சில அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒருமுறை நபி நிலவை இரண்டாக பிரித்து காட்டியதாகவும், தொடர்ந்து சில  நாட்கள் மழை பொழிய வைத்ததாகவும், கம்பை பாம்பாகவும் வெள்ளை கயிறாகவும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.(கம்பை மாற்றியது மோசேஸ் நபி என்று கூறுகிறார்கள். தவறை  சுட்டிகாட்டிய சகோதரர்களுக்கு என் நன்றிகள் )

இந்த அற்புதங்கள் மூலம் அவருக்கு இறைசக்தி கிடைத்துள்ளது உறுதியாகிறது. இவர் ஒரு யோகி என்பதும் உறுதியாகிறது. 

இவ்வாறு யோக, ஆன்மீக வழியில்  சென்ற முகமது நபி தொடர்ந்து அந்த வழியில் பயனிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுதவதை தவிர்க்க முடியவில்லை.

அதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக  கூறப்படும் சில நிகழ்வுகளும், சில குரான் வசனங்களும்   தான் காரணமாகின்றன.

அல்லா விரும்பினால் தொடரும்........

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல் என்றால் என்ன?


உள்ளுடல் அல்லது உடலுள்ள தேவையை  பூர்த்தி செய்ய எழும் உணர்ச்சியே காதல்.
இன்னும் சுருக்கமாக  சொல்ல வேண்டும் என்றால் உள்ளத்  தேவையையும், உடல் தேவையையும் பூர்த்தி  செய்ய இயற்கையாக உண்டாகும் உணர்ச்சியே காதல்.

இது முறையாக பெண் பார்க்கும் பொழுதும் நிகழும்.  இதை திருமண காதல் என்பேன்.  யாரென்றே தெரியாமலும் நிகழலாம். திருமணத்தில் முடியும் காதலே என்னைப்பொருத்த  வரை உயர்ந்தது. 

உள்ளத்தில்   தொடங்கி  உடலில்  கலந்து  மீண்டும்  உள்ளத்தில்  தொடங்கி  என்று  அது  தொடரும். அப்படி  தொடர்ந்தால் தான்  அது  காதல்.  உடலோடு தேவை முடிவடைந்து விட்டால் அது காதல் அல்ல. 

இங்கே உள்ளம், உடல் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

உள்ளத்தேவையும்  உடல் தேவையும் பூர்த்தியாகத பொழுது, ஒழுக்க உணர்வும் இல்லாத பொழுது  அது கள்ளக்காதலுக்கு வித்திடுகிறது. 

அதீத உள்ள, உடல் தேவை காதலுக்கு எதிரி. 
பிடிக்காமல் நடக்கும் திருமணமும் காதலை உண்டாக்காமல் கள்ளக்காதலுக்கு  வித்திடுகிறது. 

ஒழுக்கமுள்ள  சமுதாயத்தில்  ஒழுங்கீனமானது தான் காதல்(திருமண காதலை தவிர).இருப்பினும் உயிர் உள்ளவரை ஒருவரை ஒருவர் பிரியாது, வேறு துணை தேடாது இருக்கும்பொழுது அது புனிதமாகிறது.

ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே காதல் திருமணத்திற்கும், திருமண காதலுக்கும் புனிதம் சேர்க்கிறது. மானுடம் செழிக்க புனிதமே அவசியம். 

ஆகையால் புனிதமாக  காதல் செய்வீர். காதலை புனிதமாக்குவீர். 


வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

நியுமராலஜி சரியா தவறா?

ஒருவனது பிறந்த தேதியை வைத்து அவனுக்கு இந்த எண் வருகிறது அதனால் இந்த எண் வருவது மாதிரி பெயர் வைக்க வேண்டும் என்கிறார்கள் அல்லவா அது சரியா தவறா என்பதுதான் என்னுடைய கேள்வி. 


அதுமட்டுமல்ல ஒரு ஆங்கில  தேதியை சொல்லி அது அந்த கோளின்  ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாள் என்கிறார்கள் அல்லவா அதுவும் சரியா தவறா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

இரண்டுக்கும் பதில் என்னமோ தவறு என்று தான் எனக்கு தோன்றுகிறது. சரி என்று நினைப்பவர்கள் அவர்களின் கருத்தை  சொன்னால் நானும் மற்றவர்களும் அதை புரிந்த கொள்ள வசதியாக இருக்கும்.

சரி நான் ஏன் அதை தவறு என எண்ணுகிறேன்.
தேதிகளில் பல தேதிகள் உள்ளன அதாவது தமிழ், தெலுகு,ஆங்கிலம் என்று. ஆனால் இவர்கள் கணக்கில் கொள்வது என்னமோ ஆங்கிலத்தை மட்டும் தான். அது ஏன்?

தமிழ் மற்றும் இதர தேதிகளுக்கு அந்த சக்தி இல்லையா?
இன்று ஆங்கில தேதி மூன்று எனில் இன்றைய நாள் குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்பர். ஆனால்  அன்றைய நாளில் தமிழ்  தேதி வேறு ஒன்றாக இருக்கும்.  உதாரணத்திற்கு   ஐந்து எனில் அன்றைய நாள் எந்த கோளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.? குருவா? புதனா?  :)

ஒருவேளை இவர்கள் ஆங்கில தேதிமுறை  தான் சரி என்று ஒப்புக்கொள்கிறார்களோ? அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஜோதிடமே தவறு என்றாகிறதே. ஏன் எனில் ஜோதிடத்தில் சூரியனை வைத்தே  தமிழ் தேதிகள் அமைந்துள்ளது. இதுதானே சரியாக இருக்க வேண்டும். இல்லையேல் இசுலாமில் உள்ளது படி சந்திரனை வைத்து தேதிகள் இருக்க வேண்டும். இந்த ஆங்கில  தேதிகளில் அப்படி ஒன்றும் கடைபிடிப்பதாக தெரியவில்லை.

நியுமராலஜி வெறும் ஒலி சம்பந்தப்பட்டது எனில் நாம் எந்த தேதியின்/கோளின்/எண்ணின்  ஒலி வேண்டுமா அந்த தேதியை நம் பிறந்த  தேதியாக நினைத்து  கொண்டு அவப்போது எழுதி வந்தாலே போதுமானது.  இல்லையேல் உங்களுக்கு எந்த எண் இருந்தால் நன்றாக இருக்குமோ அந்த என்னில் நீங்கள் பிறந்ததாக நினைத்து கொண்டாலே போதும்.

அதுமட்டுமல்ல நாளை எந்த கோளின் எண் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அந்த தேதி என்று நீங்கள் நினைத்து,சொல்லிக்கொண்டு   அல்லது எழுதினாலே போதுமானது.

ஆங்கில தேதிதான் முக்கியம் எனில்  நியுமராலஜி   தவறானது.

ஒலிதான் முக்கியமானது எனில் ஓரளவிற்கு அதன் மேல் நம்பிக்கை வைக்கலாம். மேலும் ஆய்வு செய்யலாம். 
இங்கே முக்கியம் அன்றைய தேதி அல்ல ஒலியே எனபது தான்  நான் சொல்லவருவது.
ஏதாவது புரிகிறதா? :) 
இது என்னுடைய புரிதல் மட்டுமே முடிவு உங்கள் கையில். :)

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

என்னது? ஜாதிய உருவாக்கியது அல்லாவா?


இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.
பிராமணர்கள்   தான்   ஜாதியை  உருவாக்கினார்கள்    என்று   எண்ணியிருந்தேன் . ஆனால்   இல்லை  அல்லா  தான் உருவாக்கினார்  என்று குரான்  கூறுகிறது. 

"மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13 


(திராவிடவாதிகளே, பெரியார்வாதிகளே இதன் மூலம் ஜாதியை உருவாக்கியது பிராமணர்கள் இல்லை என்று உங்களுக்கு தெரிகிறதா. வேண்டும் என்றால் இன்று முதல் இறைவன் தந்த பிரிவினையை அவர்கள் பெரிதாக்கி விட்டார்கள் என்று சொல்லுங்கள்)

இதை சொல்வதற்கு முன்பு ஒருவரை  ஒருவர் கேலி செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது. 

அது இருக்கட்டும்... ஏன் அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவன் "அறிந்து கொள்வதற்காக"   தனித்தனியாக பிரிக்க வேண்டும்?.


பெரும்பாலான மக்கள் "அரிந்து கொல்கிறார்களே" தவிர "அறிந்து கொள்வதாக" தெரியவில்லையே. இது ஏன் கடவுளுக்கு, இறைவனுக்கு தெரியாமல் போனது? 


மதத்தின் பெயரால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இது இறைவனுக்கு ஏன் தெரியவில்லை?

 ஒன்றாகவே இருந்திருந்தால் தமிழகத்தில்,இந்தியாவில்  தீண்டாமை என்ற பெயரால் மக்கள் துயரம் அடைந்து இருக்க மாட்டார்களே... இன்னும் இது ஆங்காங்கே தொடரத்தானே  செய்கிறது.

ஜாதியால் தீண்டாமை, நிறத்தால் தீண்டாமை, மதத்தால் தீண்டாமை, பணத்தால் தீண்டாமை என்று இது நீண்டு கொண்டே போகிறதே.


தனித்தனியாக பிரித்த அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவன் குறைந்த பட்சம் மனிதனை தான் அனைவரும் சமம் என்று சிந்திக்க வைக்காமல் போனதன் மர்மம், மாயம், என்ன?

ஒருவேளை இதுதான் இறைவன்  மனிதனுக்கு கொடுத்த சுதந்திரமோ..  இதை வைத்து அவனுக்கு சொர்க்கம் நகரம என்று தீர்மானிக்க இப்படி செய்கிறாரா? 

யாரயும் படைக்காமாலே இருந்திருக்கலாமே அவர்...ஒருவேளை இதைத்தான் திருவிளையாடல் என்கிறார்களோ?

கொச்சையா சொல்லனும்னா
அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவனது போதைக்கு நாம ஊறுகாயா?

மக்களே சிந்தியுங்கள்.......எனக்கும் கொஞ்சம் முடிந்தால் விளக்குங்கள். 

குறிப்பு: இப்பதிவின்  நோக்கம் பிராமணர்களின் செயல்களை நியாப்படுத்துவதோ,  இசுலாமிய  சகோதரர்களை  புண்படுத்துவதோ அல்லது கடவுளை கேலி செய்வதோ  அல்ல  சிந்திக்க  அல்லது  உண்மையை தெரிந்து  கொள்ள  மட்டுமே.


இறைவா இப்பதிவு உன்னை புண்படுத்தி இருந்தாலும் என்னை மன்னிக்கவும். :(


பிற்சேர்க்கை(10/02/2011): இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில் 
குரான் இறைவேதம் எனும் பட்சத்தில் பிராமணர்களை ஜாதியை உருவாக்கியதாக கூறுவது தவறு என்று பகுத்தறிவாளர்களும், இசுலாமியர்களும் உணரவேண்டும். அதற்க்கு பரிகாரம் தேடவேண்டும். 
அல்லது
இந்த வசனங்கள் கீதையிலிருந்து சென்றிருக்கும் பட்சத்தில் குரான் பிற மதங்களின் நூல்களை ஒட்டி எழுதப்பட்டது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட  வேண்டும். 
பகுத்தறிவாளர்களே, இசுலாமியர்களே உங்களின் பதில் என்ன??

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஏழாம் அறிவிற்கும் ஆன்மாவின் ஏழு திரைக்கும் என்ன சம்பந்தம்?


ஏழாம் அறிவு சமீபத்தில் வந்த திரைப்படம். இப்படம்  தமிழகத்தில் தமிழ் பதிவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி நான் சொல்ல வேண்டாம். அதை அனைவரும் அறிவர். போதி தர்மனை அறிமுகம் செய்து இத்திரைப்படம் பெருமை சேர்த்துக்கொண்டது.

இத்திரைப்படம் வந்த பொழுது ஏழாம் அறிவு என்றால் என்ன என்ற சந்தேகம். சிலருக்கு வந்தது. அதோ அதற்க்கான விடை இப்பொழுது. 

உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ளது.
இந்த ஆறறிவை பற்றி நமது தாத்தா  தொல்காப்பியர் அழகாக சொல்லிவிட்டார்.
ஓரறிவு என்பது தொடு உணர்வையும் 
இரண்டாவது அறிவு என்பது சுவை உணர்வையும் 
மூன்றாவது அறிவு என்பது  முகர்ந்து அறியும் அறிவையும் 
நான்காவது அறிவு என்பது பார்த்து  அதன் மூலம் அறியும் அறிவையும்
ஐந்தாம் அறிவு என்பது கேட்டு அதன் மூலம் அறியும் அறிவையும் 
ஆறாம் அறிவு என்பது பகுத்து பார்த்து அதன்  மூலம் அறியும் அறிவைக் குறிக்கின்றது.

அப்பொழுது ஏழாம் அறிவு என்பது? 
அது ஏழுத்திரைகளை கடந்து சென்றால் கிடைக்கும் அறிவு.

தன்னை யார் என்று,இயற்கையை யார் என்று, இறைவனை யார் என்று  அறிதலே ஏழாம் அறிவு.

ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக  வள்ளலார்  கூறுகிறார்.
அதாவது ஏழு திரைகள் ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளது. இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக்கானலாம்  அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம்.

முதலில்  கறுப்புத்திரை - இதை நீங்கள் தூங்கும் பொழுது காணும் திரை என்று சொல்லாம் அல்லது தியானத்தின்  தொடக்கத்தில் காணும் திரை இதுதான். இது மாய சக்தியால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகம் மாயையால் ஆனது மாயை உங்களை ஆட்கொண்டிருக்கும் வரை இந்த திரை மட்டுமே உங்களுக்கு தெரியும்.

இதையும் தாண்டி நீலத்திரை கிரியா சக்தியையும், பச்சைத்திரை  பராச்கதியையும், சிவப்புத்திரை இச்சா சக்தியையும், பொன்மைத்திரை ஞான சக்தியையும், வெண்மைத்திரை ஆதி சக்தியையும், கலப்புத்திரை சித் சக்தியையும் குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்.


இந்த ஏழு திரைகளையும் நம்முள் காண முடியும். இந்த ஏழு திரைகளையும் தாண்டினால் இறைவனை காணலாம்.

ஒருவரின் தியானத்தை பொருத்தும், ஒருவர்  பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை(அல்லது தியானத்தை) பொருத்தும் ஒருவர் இத்திரைகளை வெகு சுலபாமாகவோ அல்லது பல காலங்கள் கடந்தோ கடக்க நேரிடும். 

இத்திரைகளை கடந்து ஆன்மா அல்லது இறைவனை (ரெண்டும் ஒன்றா? :) ) கண்ட பிறகு கிடைக்கும் அறிவே  ஏழாம் அறிவாகும்.


நமது சித்தர் தாத்தாக்கள் இந்த ஒளி பொருந்திய பாதையில் தான் பயணம் செய்தார்கள் என தெரிய வருகிறது.தன்னை இறைவன் என்று கூறுபவர்களும், இறைத்தூதன் என்று கூறுபவர்களும் இவ்வழியிலே சென்றதாக தெரிகிறது. (இதற்கு மாற்ற வழியும் உண்டு என்றே நினைக்கின்றேன் :) )

வருகின்ற தைப்பூசத்தன்று  வள்ளார் அவர்கள் தம்முள் கண்ட ஏழு திரைகளையும் இறைவனையும் நீங்களும் காணலாம் வடலூரில். இவற்றை, இறைவனை ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே காண வேண்டும் என்பதே இதன் நோக்கம், வள்ளலாரின்  நோக்கம்.

முதன் முதலில் முருகப்பெருமான் அவருக்கு சிறு வயதில்  கண்ணாடியில் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு தைப்பூசம்  நன்னாளில் ஒளியாக, அருட்பெருஞ் ஜோதியாக இறைவன் காட்சியளிக்கிறான். பிறகு இறைவனோடே அவர் ஜோதியாகிறார் அல்லது ஒளியாகிறார் அல்லது இறைவனாகிறார்.


தைப்பூசம்  நன்னாளில் தான் சக்தி முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்கும்  வேல் ஆயுதத்தை தந்தாக சொல்லப்படுகிறது. பதஞ்சலிக்கு நம்ம தாத்தா சிவன் இந்த நன்னாளில் தான் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.  தைபூசம்  பௌர்ணமி அன்று வரும். சூரியன் மகர ராசியிலும் சந்திரன் கடக ராசியிலும் இருப்பர். (அட சூரியன் சனி பகவான் வீட்டிலும் சந்திரன் சனி பகவான் நட்சத்திரத்திலும் இருப்பாங்களே? சனி பகவானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?) 

ராகுவும் கேதுவும் மகர கடக ராசியில் இருக்க ஆன்மீகம்  தானா வரும். மாறி  மாறி இருந்தாலும் வரும். வள்ளலாருக்கும் இந்த அமைப்பு இருந்தது.  

குண்டலினி எந்த சக்கரத்தில் உள்ளதோ அதை பொறுத்து இந்த  திரை நிறமும் மாறும்  என்று நான் நினைக்கின்றேன். ஏழு உலகம் உள்ளதாக எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. இந்த ஏழு உலகம் என்பது நம்முள் உள்ள ஏழு சக்கரங்களா அல்லது நமதருகில் உள்ள ஏழு கோள்களா அல்லது ஏழு பிரபஞ்சமா என்று தெரியவில்லை. 

ஒன்று நிச்சயம் இதை தாண்டி எட்டாவது ஒன்று உண்டு. அப்ப அந்த எட்டாவது அறிவு? :)

புதன், 1 பிப்ரவரி, 2012

வேதம், இறைவேதம் எப்படி கிடைக்கின்றது?


எல்லா சமூகத்திலும் இது இறைவன் சொன்னது என்று சில விடயங்கள் சொல்லப்படுகிறது. இது எவ்வாறு கிடைக்கின்றது? இது இறைவனால் தரப்படுவதா? என்ற சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. இது எனக்கும் உண்டு.
ஒவ்வெரு கேள்விக்கு பதிலும் உங்களுக்குள் உள்ளது. அவ்வாறு சிந்திக்கும் பொழுது எனக்கு கிடைத்த பதிலே இப்பதிவு. 

காலம் காலமாக இந்தியாவில் சிவ தரிசனம், இறை தரிசனம் கிடைக்கின்றது என்று சொல்வர். இது உண்மையா என்று ஆன்மீக பாதையில்  சென்று பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வாறு ஆன்மீக பாதையில்  செல்பவர்கள் உணரும் உண்மைகளே வேதங்களும், இறைவேதங்களும். 

அதே நேரத்தில் இறை தரிசனம் பெற்ற ஒருவர் சொல்வதெல்லாம் வேதமாகுமா என்றால் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. 

இயற்கையை, இறைவனை பற்றிய உண்மையை ஒருவர் எப்படி புரிந்து கொள்கிறார், எப்படி சிந்திக்கிறார், எப்படி வாழ்கிறார் என்பதை பொறுத்து  வேதங்களின் தன்மையும் மாறுபடுகிறது.

ஒருவரின் அக, புற சூழல்கலை பொறுத்து வேதங்களும், இறைவேதங்களும் வேறுபடுகின்றது என்று சொல்லலாம். 


ஒருவரின் சுய  விருப்பு  வெறுப்புகளும்  சில  நேரங்களில் அவர்களின் கருத்தில் வரலாம்.

 இதைவிட ஒருவர் ஆன்மீகத்தில் எவ்வளவு முனேற்றம் அடைந்துள்ளார்  என்பதும் அவரது சிந்தனைகளை, புரிதலை பாதிக்கும் 

ஆதலால் தான் வாள்ளுவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார். ஒருவர்  சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்ந்து அறிய வேண்டும் என்கிறார்.

இவ்வுலகில் உள்ள வேதங்கள்,இறைவேதங்கள் அனைத்தும் ஆன்மீக பாதையில் சென்றவர்கள் விட்டு சென்றதாக இருக்க கூடும். அதே நேரத்தில் அவை யாவும் இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல், மற்றும் அவர்கள் சொன்னது அவ்வாறு என்று சொல்லவேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. 

இதற்க்கு உதாரணமாக சமண முனிவர்களையும், புத்த முனிவர்களையும் சொல்லலாம். ஏன் இனில் இவர்கள் யாரும் இதை இறைவன் சொன்னது என்று சொன்னதாக எனுக்கு ஞாபகம் இல்லை. இருப்பினும் அவர்களும் இறைவனை பற்றிய உண்மைகளை அறிந்தவர்களாகத்தான் தெரிகிறது. 

ஒருவேளை இது இறைவனின் அருளால் கிடைப்பதால் இதை வேதம், இறைவேதம் என்கின்றனர் என எண்ணுகிறேன். 

உண்மையை சொல்ல வேண்டுமானால் இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறை தரிசனம் பெற முடியும். வேதத்தை, இறை வேதத்தை, உண்மையை அவர் அவர்களும் பெற முடியும். இதுவே  இறைவனின் விருப்பமாகவும் இருக்க முடியும். Related Posts Plugin for WordPress, Blogger...