வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வடிவேலுவுக்கும் ஆபிரகாமிய மதங்களுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?


கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் உண்மை முயற்சி. மதப்பற்றுள்ளவர்கள் தயவு  செய்து இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சொன்னா நம்ப மாட்டிங்க இந்த ஆபிரகாமிய மதங்கள் (அதான் யூதம், கிருத்துவம், இசுலாம்) கொஞ்சம் வடிவேலு மாதிரி நடந்துகிறாங்க. 

வடிவேலு ஒரு படத்துல 'இங்க பாரு நான் ஜெயிலுக்கு போறன்..ஜெயிலுக்கு போறன்....நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்" அப்படின்பாறு.. இந்த மதங்களும் அப்படிதான்.

எங்க மதம் தான் உண்மையான மதம்.....எங்க மதம் தான் உண்மையான மதம்...என்று இந்த இரண்டு மதங்களும் (கிருத்துவம்,இசுலாம்)  சொல்லிக்கொள்ளுகின்றன. 
சொல்லிக்கொண்டு உலகம் பூரா ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

முதலில் யூதர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்று கூறிக்கொண்டனர். "இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றனர்.  (அதற்கு முன் அங்கும் இயற்கை வழிபாடு தான்) 

பிறகு ஏசு வருகிறார். அவர் இறப்புக்கு பிறகு, அவர்கள் ஆதரவாளர்கள் கிருத்துவம் தான் உண்மையான மார்க்கம், ""இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றனர்.
இப்பொழுது இவர்கள் இருவரும் போட்டி போட்டு கோண்டு ஆள் சேர்க்கின்றனர். 

அடுத்து  முகமது வருகிறார்...அவரும் இசுலாம் தான் உண்மையான மார்க்கம், ""இது ஒன்றே" இறைவனை அடைய வழி என்றார்.அதோடு நில்லாமல் யூதர்களும், கிருத்துவர்களும் அவர்கள் வழியை பின்பற்ற சொல்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் இசுலாமை பின்பற்றினால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும் இல்லையென்றால் உங்களுக்கு நரகம், அங்க நெருப்புல போட்டு பொசுக்கப்படுவீர்கள் என்று சொல்லி ஆள்  சேர்த்தார். 

யூதர்கள் முதலில் கிருத்துவர்களாலும், பின்பு இசுலாமியர்களாலும், பிறகு ஹிட்லராலும் தொல்லை தரப்பட்டு இப்பொழுது அவர்கள் மதத்தை பிரச்சாரம் செய்வதாக தெரியவில்லை.

இப்பொழுது கிருத்துவர்களும், இசுலாமியர்களும் உலகம் முழுக்க உள்ள மக்களை தங்கள் மதத்தில் சேர்க்க பல்வேறு யுத்திகளை கையாள்கின்றன. 
ஓஷோ என்ன சொன்னாரு...இவங்க பசித்த வயிறையும், அடிமை படுத்த தக்க மனத்தையும் குறி வைக்கிறார்கள் என்று.  (நன்றி நண்பர் மனோகர்) 

ஏன் இந்த ஆபிரகாமிய மதங்கள் மட்டும் இது ஒன்றே இறைவனை அடைய வழி என்று அடம்பிடிக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. (தெரிந்தால்  சொல்லுங்கள்)

இதற்கு முன்பு தோன்றிய சமண மதமும், புத்த மதமும் இப்படி சொல்வதாக தெரியவில்லை.
சைவமும் வைணவமும் ஒரு காலத்தில் அடித்து கொண்டாலும் இப்பொழுது சமாதானம் ஆகிவிட்டது. இவர்கள் யாரும் இது ஒன்றே இறைவனை அடையும்  வழி என்று சொல்லி ஆள் சேர்ப்பதாக இப்பொழுது  தெரியவில்லை. 

கிருஷ்ணன் என்ன வணங்கு என்று சொன்னாலும் நீ நாத்திகவாதியா கூட இருந்துட்டு போனு   சொல்லிட்டாரு. 

நம்ம ஆபிரகாமிய மதங்கள் எப்போது அடம்பிடிப்பதை விடுவார்களோ  தெரியல.....

சொல்ல முடியாது எதிர் காலத்துல ஒருத்தர் வந்து.. இறைவன் பல இறைத்தூதர்கள அனுப்பினாரு ..  மக்கள் திருந்தல அதனால கடைசியா இப்ப என்ன அனுப்பி இருக்காரு, அதனால நான் சொல்வத மட்டும் கேளுங்க.. அப்படின்னு சொன்னாலும் சொல்வாரு. நீங்க  என்ன சொல்றீங்க?
(அச்சச்சோ..யாருக்கோ  ஐடியா கொடுத்திட்டேனோ :) )


16 கருத்துகள்:

 1. யோகா, தியானம் என்று மேற்கத்திய நாடுகளில் ஆள் சேர்க்கும் சாமியார்கள், இஸ்க்கான் அமைப்பு இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Robin,
   //யோகா, தியானம் என்று மேற்கத்திய நாடுகளில் ஆள் சேர்க்கும் சாமியார்கள்//
   யோகா தியானம் உடம்புக்கு நல்லது.இது மனித குலத்திற்கு சொந்தமானது. இதை ஒரு மதத்திற்கு சொந்தம் கொண்டாட கூடாது.
   மின்சாரத்தை எடிசன் கண்டுபிடித்ததால் மின்சாரம் கிருத்துவ மதத்தை சார்ந்தது என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ இதுவும் அவ்வளவு அபத்தமே

   அதே நேரத்தில் சாமியார்கள் ஆள் சேர்த்து தங்களுடைய சொத்தை தான் சேர்க்கிறார்களே தவிர அவர்களை மதம் மாற்றுவதாக தெரியவில்லை சகோ.
   தெரிந்தால் சுட்டி இருந்தால் தாருங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

   , //இஸ்க்கான் அமைப்பு இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?//
   இது பற்றியும் எனக்கு தெரியாது சகோ...தெரிந்தால் சுட்டி இருந்தால் தாருங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்...மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. http://btg.krishna.com/checkmate-iskcons-victory-russia

  http://www.religionfacts.com/a-z-religion-index/hare-krishna-iskcon.htm

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராபின்,
   ரஷியாவில் இவர்கள் வைணவத்தை பரப்புகிறார்கள் என்று அறிந்தேன். அதே நேரத்தில் இந்தியாவில் ஆபிரகாமிய மதங்களுக்கு இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு அங்கே முதலில் மறுக்கப்பட்டதும் , பல பக்தர்களை அரசாங்கம் சிறையில் அடைத்ததும் தெரிகிறது. சமீபத்தில் கூட கீதைக்கு அங்கே தடை விதிக்க ஒரு கிருத்துவ சர்ச் முயற்சி மேற்கொண்டதாக இப்பொழுது படித்தேன்.
   மதமாற்றம் தேவையா .ராபின்? மதமாற்றம் என்று ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன குறைந்து விட போகிறது?

   நீக்கு
 3. இஷ்கான் ஆபிரஹாமிய மாடல் இந்து மத காப்பி

  பதிலளிநீக்கு
 4. சகோ கவிதை வீதி சௌந்தர் தளத்திலிருந்து
  மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..!


  அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருத்தி, சுவாமி விவேகானந்தரைப் பார்த்து இறைவன் எல்லை கடந்தவர், மனம், வாக்கு, செயல்களுக்கு அப்பாற்பட்டவர் என்றகிறீர். ஆனால் உங்கள் நாட்டில் உருவமற்ற பரம்பொருளுக்கு உருவம் வைத்து வழிப்படுகின்றீர்களே எதற்காக..? என்று விளக்கம் கேட்டாள்.


  உடனே சுவாமிஜி அவள் வீட்டில் உள்ள ஒரு போட்டோவை சுட்டிக்காட்டி “அது யார்”? என்று கேட்டார்.


  என் தந்தையார் என்று பதில் சொன்னால் அந்தப் பெண்.

  வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும், ஓவியமாக இருக்கின்ற இது உன் தந்தையா? என்று கேட்டார் சுவாமிஜி.

  இது என் தந்தையல்ல. ஆனால் என் தந்தையை நினைவூட்டுகின்ற அடையாளம் என்றால் அப்பெண்.

  இதேபோல்தான் எங்கள் நாட்டிலுள்ள விக்ரகங்களுக்ளும் இறைவனை நினைவூட்டுகின்ற அடையாளமாகத் திகழ்கின்றன... என்று விளக்கமளித்தார்.
  இந்த உலகில் வாழும் மக்கள் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பவும், அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், தன்னுடைய சமூக பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உறுவானதுதான் சமயங்கள்.


  பண்டைய காலங்களில் எதற்கெல்லாம் பயந்தார்களோ, எதன்மீதெல்லாம் நம்பிக்கை வைத்தார்களோ அவையெல்லாம் இந்த பூமியில் தெய்வமாக மலர்ந்தது. சாதாரண செங்கல் முதற்கொண்டு வானுயர்ந்த சிகரங்கள் வரை இங்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.


  அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கடவுள்களின் உருவங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், வழிபாடு முறைகளும் தோன்றியது. இன்றைய காலகட்டத்திற்கும் சிறிதளவும் மாற்றம் அடையால் இந்த உலகில் சமயங்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


  இந்த உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் தன்னுடைய தனித்தன்மையை காட்ட பலவகையில் வித்தியாசப்படும். அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

  இந்த உலகில் பிரதான சமயங்களாக உள்ளவைகள் மூன்று மட்டுமே அவை, கிறிஸ்துவம், இஸ்லாமியம், இந்து மதம், இந்த உலகம் முழுவதும் பரவிக்கிடப்பவர்கள் இவர்களே. இந்த மூன்று மதங்கள் சொல்கின்ற தத்துவமும், வாழ்க்கை முறையும் ஒன்று தான் அது சில இடங்களில் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடலாம்.

  அந்த மாறுபாட்டை மற்ற மதத்தவர் மதித்து நடந்துவிட்டால் இந்த உலகில் சண்டைசச்சரவுகள் இல்லாமல் இருக்கும். ஆனால் சில தீயசக்திகள் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என மற்றவரை விமர்சித்து அதில் எழும் சண்டைகளில் குளிர்காய்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

  வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே சாதாரண வாழ்நாளைக்கொண்ட நாம் யுகம் வாழ்பவர்கள்போல் மற்ற மதத்தவரை இழிவுபடுத்தியும், அவர்களை சாடியும் இந்த உலகின் சகமனிதர்கள்மீது அக்கறைகொள்ளாமல் வாழ்வது வீணே.

  மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.

  எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை அவ்வளவுதான்.
  http://kavithaiveedhi.blogspot.in/2012/01/blog-post_24.html
  //


  நானும் மதங்களை விமர்சனம் செய்வதை விட்டுவிடலாம் என எண்ணுகிறேன்...மதமாற்ற மதபிரச்சாரம்,கேலி செய்வது நின்றால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. நண்பர் புரட்சிமணி, நல்ல பதிவு உங்களது.
  கவிதை வீதி சௌந்தர் தளத்திலிருந்து மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..! என்று நல்ல தலைப்பில் அவர் பதிவு போடாலும் மதவாதத்தை தூண்டி மனிதாபிமானமற்றவர்களாக இஸ்லாமியர்களே நடந்தது வெளிப்படையான சம்பவம். இஸ்லாமிய நாடுகளிலில் மருந்துக்கும் கிடையா பிற மதத்வர்களுக்கான சுதந்திரம் இங்கே இஸ்லாமியகளுக்கிருப்பதால் இஸ்லாமே அதிசிறந்த மதம் யாவரும் ஏற்று கொள்ளுங்க என்று பிரசாரம் தூள்பறக்க செய்து காபிர்களின் மனதை நோகடித்தார்கள் ஆனால் கவிதை வீதி சௌந்தர் என்ன சொல்கிறாரென்றால்
  மரு.சுந்தர பாண்டியன்-..
  யார் மீது அண்ணா இத்துனை கோபம்?
  கவிதை வீதி சௌந்தர் -..
  கோவம் ஒண்றுமில்லை நண்பரே...இந்த மதவெறியை தூண்டிவிடும் செயல் பதிவுலகம் வரை நீண்டுவிட்டதே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.
  சில பதிவர்கள் சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்கள மனம் சங்கடப்படும்படி பதிவிட்டார்கள் அதைதான் நான் மறைமுகமாக சாடியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை சகோ.
   தங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 6. வணக்கம் சகோ
  நல்ல் பதிவு வாழ்த்துக்கள் !!!!!!!!
  ஆன்மீகம் என்பது மத்மற்ற இயற்கைக்கு உட்பட்ட அல்லது மேம்பட்ட சக்தியை சுயநலமற்ற தேடலாக் இருக்கும் பட்சத்தில் அதற்கு யாரும் எதிராக் இருக்கமாட்டார்.ஆனால் கூட்டம் சேர்த்து ஆட்சியை கைப்பற்றி மத ரீதியான் சட்டங்களை அமல்படுத்தும் நினைப்பை கூட அனுமதியோம்!.

  மத மாற்றம் என்பது அவ்சியமில்லாதது,மத ரீதியான் ஆட்சி,சட்டங்கள் போன்றவை உலகின் சில நாடுகளில் இப்போதும் தொடர்வது மனித சமுதாயமே வருந்தத் தக்க விடயம்.

  மத மாற்றக் கூட்டங்களில் உட்பிரிவுகளுக்குள்ள சண்டை வன்முறையாகி தினமும் பலர் மடிவதைக் கூட தவிர்க்க இயலாத சூழல் நிலவுவது 1000+ ஆண்டு வரலாறு.இது மனிதர்களை மூன்றாம் உலகப்போரை நோக்கி இழுத்து செல்லாம்ல் இருந்தால் நல்லது.

  மத மாற்றம் என்பது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
  மத மாற்ற‌ம் தவிர்க்க என்னைக் கேட்டால் அனைவருமே அனைத்து மத புத்தகங்களையும் ,மதவாதிகளின் பதிவுகளையும் படிப்பதுதான்.ஆன்டிபயாட்டிக் மாதிரி சரியாக எதிர்வினை புரியும். குழம்பி தெளிவு பெற்று விடுவோம்.

  இப்போதைய சூழலில் உயர்வு தாழ்வற்ற‌ மதமற்ற மதம் (நன்றி சகோ நரேன்) ஒன்று வந்து அனைவரையும் ஒன்று படுத்தினால் நலம்.அதில் இறை மறுப்பாளர்களுக்கும் கொஞ்சம் இட்ம் கொடுத்தால் மகிழ்ச்சி .இந்தியாவில் எந்த குறையும் இப்போதும் இல்லை.
  சகோ நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போதைய சூழலில் உயர்வு தாழ்வற்ற‌ மதமற்ற மதம் (நன்றி சகோ நரேன்) ஒன்று வந்து அனைவரையும் ஒன்று படுத்தினால் நலம்.//
   சகோ appadiyaa...itho நான் ippozhuthey antha muyarchiyil irangugiren :)
   thangal varugaikkum karuththukkm மிக்க நன்றி :)

   நீக்கு
 7. //மதமாற்றம் தேவையா .ராபின்? மதமாற்றம் என்று ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன குறைந்து விட போகிறது?// மாற்றம் ஒன்றே மாறாதது.
  என்னுடைய முன்னோர் மதம் மாறியவர்கள்தான், அதனால் நாங்கள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதம் என்பது மக்களை அடிமைப்படுத்த வந்தது. எதோ ஒன்னுல அடிமையாத்தானே இருக்கீங்க ராபின்.
   முன்னாடி இந்து அடிமை. இப்ப கிறிஸ்துவ அடிமை

   நீக்கு
 8. // மத மாற்றம் என்பது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
  மத மாற்ற‌ம் தவிர்க்க என்னைக் கேட்டால் அனைவருமே அனைத்து மத புத்தகங்களையும் இமதவாதிகளின் பதிவுகளையும் படிப்பதுதான்.ஆன்டிபயாட்டிக் மாதிரி சரியாக எதிர்வினை புரியும். குழம்பி தெளிவு பெற்று விடுவோம்.//

  சகோ சார்வாகன் சொன்னது மிகவும் உண்மை.
  மத புத்தகங்களை படிப்பது என்பது சரியான ஒரு boring இருக்கும். (என்னை பொறுத்தவரை) மற்றது நேரமும் பொறுமையும் வேண்டும். கோவை கண்ணண் எழுதிய இந்துத் தீவு என்ற சுப்பர் சிறந்த பதிவையே 4 வரை தான் நான் படிச்சிருக்கேன் மிகுதி படிக்க நேரமில்லை. ஆகவே குறைந்தது மதவாதிகளின் பதிவுகளை அவசியம் படியுங்கள். அப்போ விழுப்புணர்வு பெற முடியும் மதவாதிகளின் பதிவுகளை படித்து அதன் பின் தெளிவடைந்தவர்கள் சிலரை எனக்கு தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆகவே குறைந்தது மதவாதிகளின் பதிவுகளை அவசியம் படியுங்கள். அப்போ விழுப்புணர்வு பெற முடியும் மதவாதிகளின் பதிவுகளை படித்து அதன் பின் தெளிவடைந்தவர்கள் சிலரை எனக்கு தெரியும்.//
   அதைதான் கொஞ்ச நாளா செய்து கொண்டிருக்கிறேன் சகோ...என்ன நிறைய உண்மைகள் தெரியவருகிறது அதை சொன்னால் எங்கே அவர்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கிறேன்....பார்ப்போம்.
   thangal varugaikkum karuththukkm மிக்க நன்றி சகோ :)

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...