ஒருவனது பிறந்த தேதியை வைத்து அவனுக்கு இந்த எண் வருகிறது அதனால் இந்த எண் வருவது மாதிரி பெயர் வைக்க வேண்டும் என்கிறார்கள் அல்லவா அது சரியா தவறா என்பதுதான் என்னுடைய கேள்வி.
அதுமட்டுமல்ல ஒரு ஆங்கில தேதியை சொல்லி அது அந்த கோளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாள் என்கிறார்கள் அல்லவா அதுவும் சரியா தவறா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.
இரண்டுக்கும் பதில் என்னமோ தவறு என்று தான் எனக்கு தோன்றுகிறது. சரி என்று நினைப்பவர்கள் அவர்களின் கருத்தை சொன்னால் நானும் மற்றவர்களும் அதை புரிந்த கொள்ள வசதியாக இருக்கும்.
சரி நான் ஏன் அதை தவறு என எண்ணுகிறேன்.
தேதிகளில் பல தேதிகள் உள்ளன அதாவது தமிழ், தெலுகு,ஆங்கிலம் என்று. ஆனால் இவர்கள் கணக்கில் கொள்வது என்னமோ ஆங்கிலத்தை மட்டும் தான். அது ஏன்?
தமிழ் மற்றும் இதர தேதிகளுக்கு அந்த சக்தி இல்லையா?
இன்று ஆங்கில தேதி மூன்று எனில் இன்றைய நாள் குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்பர். ஆனால் அன்றைய நாளில் தமிழ் தேதி வேறு ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு ஐந்து எனில் அன்றைய நாள் எந்த கோளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.? குருவா? புதனா? :)
ஒருவேளை இவர்கள் ஆங்கில தேதிமுறை தான் சரி என்று ஒப்புக்கொள்கிறார்களோ? அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஜோதிடமே தவறு என்றாகிறதே. ஏன் எனில் ஜோதிடத்தில் சூரியனை வைத்தே தமிழ் தேதிகள் அமைந்துள்ளது. இதுதானே சரியாக இருக்க வேண்டும். இல்லையேல் இசுலாமில் உள்ளது படி சந்திரனை வைத்து தேதிகள் இருக்க வேண்டும். இந்த ஆங்கில தேதிகளில் அப்படி ஒன்றும் கடைபிடிப்பதாக தெரியவில்லை.
நியுமராலஜி வெறும் ஒலி சம்பந்தப்பட்டது எனில் நாம் எந்த தேதியின்/கோளின்/எண்ணின் ஒலி வேண்டுமா அந்த தேதியை நம் பிறந்த தேதியாக நினைத்து கொண்டு அவப்போது எழுதி வந்தாலே போதுமானது. இல்லையேல் உங்களுக்கு எந்த எண் இருந்தால் நன்றாக இருக்குமோ அந்த என்னில் நீங்கள் பிறந்ததாக நினைத்து கொண்டாலே போதும்.

அதுமட்டுமல்ல நாளை எந்த கோளின் எண் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அந்த தேதி என்று நீங்கள் நினைத்து,சொல்லிக்கொண்டு அல்லது எழுதினாலே போதுமானது.
ஆங்கில தேதிதான் முக்கியம் எனில் நியுமராலஜி தவறானது.
ஒலிதான் முக்கியமானது எனில் ஓரளவிற்கு அதன் மேல் நம்பிக்கை வைக்கலாம். மேலும் ஆய்வு செய்யலாம்.
இங்கே முக்கியம் அன்றைய தேதி அல்ல ஒலியே எனபது தான் நான் சொல்லவருவது.
ஏதாவது புரிகிறதா? :)
இது என்னுடைய புரிதல் மட்டுமே முடிவு உங்கள் கையில். :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக