வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

என்னது? உலக நாடுகளே அணு உலைகளை மூடப்போகிறதா?



கூடங்களும்  மக்களுக்கும், அணு  உலைகளுக்கு  எதிராக  போராடி  வருபவர்களுக்கும்  இது  ஒரு  நற்செய்தி . ஏற்க்கனவே  சிலருக்கு  தெரிந்திருக்கலாம்  இருந்தாலும் இதை பகிர நான் விருப்பபடுகிறேன்.

ஏற்க்கனவே  ஜெர்மனி  2022 வாக்கில் அனைத்து  அணு  உலைகளையும்   மூடப்போவதாக  அறிவித்துவிட்டது.

அதனை  தொடர்ந்து  ஜப்பானும்  தனது  அணு  உலைகளை  முழுவதுமாக  மூட  முடிவு  செய்துள்ளது.
 அடுத்த  40 ஆண்டுகளில்  படிப்படியாக  அணு  உலைகள்  முழுவதையும்  மூட  ஜப்பான்  முடிவு  செய்துள்ளது.

சுவிட்சர்லாந்த்  2035 வாக்கில்  அனைத்து  அணு  உலைகளையும்  மூட  முடிவு  செய்துள்ளது . 

பெல்ஜியம் 2025   வாக்கில் அனைத்து     அணு    உலைகளையும்   மூட  முடிவு    செய்துள்ளது . 
மேலும் பல ஐரோப்பா நாடுகள் புதிதாக அணு உலைகளை திறப்பதில்லை என்று முடிவில் உள்ளன. 

இந்த  நாடுகள்  தங்கள் மக்களுக்கும் அவர்களின் சந்ததிக்கும் தரும் முக்கியத்துவமாகத்தான் இதை பார்க்க வேண்டும். 

சீனா இனி புதிதாக அணு உலைகளுக்கு  தரும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 27 அணு உலைகள் கொண்ட சீனா 100 அணு உலைகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. 

இப்பொழுது  அணு  உலைகளை  திறப்பதில்  மும்மூரமாக  இருப்பது  அமெரிக்கா, சீனா  மற்றும்  இந்தியா. இவர்களுக்கு  பொருளாதரா  வளர்ச்சி  தான்  முக்கியமாக  படுகிறதே  தவிர  மக்களின்  நலம்  அல்ல  என்றே தோன்றுகிறது.

இத்தனை  நாடுகள்  அணுஉலைகளை  மூட  முன்  வந்திருக்கின்றது இது நல்ல முடிவா அல்லது அச்சத்தினால் எடுத்த முடிவா?  என்ற கேள்வி எழலாம். 

வருமுன் காப்பவன் தான் அறிவாளி...இந்த விதத்தில் இவர்கள் அறிவாளிகளே.

அதே நேரத்தில் சில நாடுகள் தொடந்து அணு உலைகளைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முடிவில் தான் உள்ளது.

அதற்கு காரணமும் உண்டு. அவர்கள் இதுவரை எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்திக்காததால் அவர்கள் தொடர்ந்து அதை உபயோகிக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் தன்னுடைய 75 சதவித மின் தேவைக்கு அணு உலைகளையே பயன்படுத்துகிறது. இவர்கள் உடனடியாக அணு உலைகளை மூடும் முடிவுக்கு  வராததற்கு இதுவும் ஓர் காரணம். 

கண்ணை  மூடிக்கொண்டிருக்கும்  மற்ற  நாடுகளும் அணு உலைகளை மூடும் முடிவிற்கு  சீக்கிரம்  வர கடவுள்  வழி  செய்வானாக. 

சரி கூடன்குளம் அணுஉலைகளின் கதி என்ன?
என்னுடைய கருத்து அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இருப்பினும் மனதில் தோன்றுவதை சொல்ல தோன்றுகிறது.

இதுவரை இரண்டுமுறை அணுஉலைகளால் ஆபத்து  உண்டாகியுள்ளது.

முதல் முறை 1986 ரஷ்யாவில் செர்னோபில் என்ற இடத்தில். இது மனித தவறால் அல்லது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்தது எனலாம். இது பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. 

இரண்டாவது முறை புகுஷிமாவில் 2011 ஆம் ஆண்டு. இது இயற்க்கை சீற்றத்தால் உருவானது. 

நாம் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் சில விபத்துகளை எவ்வளவு முயன்றாலும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் விபத்து அல்லது தீங்கு நேர்ந்து  விடுமோ என்று சும்மா இருந்தால். நாம் கற்க்காலத்திற்க்கு தான் செல்ல வேண்டும்.

நில நடுக்கம் வந்தால் எத்தனை உயிர்கள் போகும் என்று சொல்ல முடியாது. அதனால் அனைவரும் வீடே வேண்டாம் என்ற முடிவுக்கு வருவதில்லை. நில நடுக்கத்தாலும் நிலைத்து நிற்க கூடிய வீடுகளை கட்டி கொள்வதே புத்திசாலிதனம்.(இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும்)

அதேபோல் கூடங்குளம் அணுஉலைகள் திறப்பதற்கு தயாராக உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள்  சரியாக இருக்கும் பட்சத்தில் அதை திறக்க மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். 
மேலும் மிகவும் கடுமையான சோதனைகளுக்கு அதை உட்படுத்த முடிந்தால் அதையும் செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, வருடம் ஒரு முறை என பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
நில்லுங்கள்......இது வெறும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஆம் கூடங்குளம் அணு உலைகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் மட்டுமே அனுமதி தரப்படவேண்டும். (இதுதான் அணு மின் உலைகளுக்கு சராசரி வயதாக சொல்லப்படுகிறது.)

30 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலை  கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வுலை மட்டுமல்ல இந்திய்வாவில் உள்ள அனைத்து உலைகளும் படிப்படியாக மூடப்பட வேண்டும்.

விபத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும் என்னுடைய கவலை அணுக்கழிவுகள் தான்.  அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கும் பல கோடி ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும். மேலும் எந்த இடத்தில் இவைகளை பாதுகாக்கிறார்களோ  அந்த இடத்தை மறந்து விட வேண்டியதுதான். அதை திரும்ப உபயோகிக்க முடியாது. 

கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை பாதுகாப்பதற்க்கான செலவு, அதில் பெறப்படும் மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணு உலையை  அப்படியே கைவிடுதல் அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவதுதான்  நல்லது. 

பணத்தை விட மக்களின் உயிரே முக்கியமானது ஆதலினால் அணு உலைகளை மூடும் முடிவிற்கு அரசு வந்தால் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நல்லது. 

 ஆபத்து ஏற்ப்படாத வண்ணம் அணு  மின்சாரம் உற்பத்தி செய்ய நல்ல தொழில் நுட்பத்தையும்,அணுக்கழிவுகளை முற்றிலும் சுத்தம் செய்யும் தொழில் நுட்பத்தையும் விரைவில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும்  பட்சத்தில் மீண்டும் நாம் அணுஉலைகளை திறக்கலாம். 
 
நல்லதொரு முடிவை கூடங்குளம் மக்களும் அரசும் எட்டுவார்கள் என நம்புவோம்.

6 கருத்துகள்:

  1. புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

    http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_09.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திரு.இருதயம்,
      ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்த், பெல்ஜியம் போன்ற நாடுகள் அணு உலைகளை மூட முடிவேடுத்துள்ளதை
      ஒப்புக்கொள்கிறீர்களா? அதை பற்றி தங்கள் கருத்து என்ன?
      அதை ஏன் தங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.
      ஒரு பதிவை எழுதும்பொழுது இரண்டு நிலைகளையும் ஆராய்வது தானே சரி?

      தங்கள் வருகைக்கும் சுட்டி தந்தமைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. அணு உலைகளை மூடும் நாடுகள், பிறகு எந்த வழியினில் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவலையும் கொடுத்திருக்க வேண்டும். - சிமுலேஷன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, தாங்கள் கூறுவது உண்மைதான்,
      அணுஉலைகளுக்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.. அனல், காற்று, நீர் என்று...
      GERMANY
      //The government said the renewable energy sector already employs about 370,000 people.
      “The country is throwing its weight behind clean renewable energy to power its manufacturing base //
      http://www.ecoenergy.ynotdo.com/germany-plans-to-abandon-nuclear-energy-by-2022/

      // By 2020 it is planned that renewables should contribute 20% of electricity supplies, compared with 11% at present (4% hydro, 6% wind, 1% solar). Due to the feed-in tariffs of the Renewable Energy Sources Act (EEG – Erneuerbare Energien Gesetz) passed in 2000, wind power has become the most important renewable source of electricity production in Germany. From 12,000 MWe in 2002, at the end of 2010, 27,214 MWe of wind capacity was installed, 32% of EU total. //
      http://world-nuclear.org/info/inf43.html

      நேரமின்மையால் அனைத்தையும் ஆய்வு செய்து எழுத முடியவில்லை.
      நேரம் வரும்பொழுது இதுபற்றியும் எழுத முயல்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. //அதேபோல் கூடங்குளம் அணுஉலைகள் திறப்பதற்கு தயாராக உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை திறக்க மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்//

    //அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை//

    வெளியே வருவதற்கு வழி தெரியாமல் உள்ளே போவது புத்திசாலித்தனமாகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளியே வருவதற்கு வழி தெரியாமல் உள்ளே போவது புத்திசாலித்தனமாகாது.//
      நீங்கள் சொல்வது சரிதான் திரு.விஜய்.

      ஆதலால் தான்
      //கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை பாதுகாப்பதற்க்கான செலவு, அதில் பெறப்படும் மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணு உலையை அப்படியே கைவிடுதல் அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவதுதான் நல்லது. //

      என்று குறிப்பிட்டுள்ளேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...