வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஏழாம் அறிவிற்கும் ஆன்மாவின் ஏழு திரைக்கும் என்ன சம்பந்தம்?


ஏழாம் அறிவு சமீபத்தில் வந்த திரைப்படம். இப்படம்  தமிழகத்தில் தமிழ் பதிவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி நான் சொல்ல வேண்டாம். அதை அனைவரும் அறிவர். போதி தர்மனை அறிமுகம் செய்து இத்திரைப்படம் பெருமை சேர்த்துக்கொண்டது.

இத்திரைப்படம் வந்த பொழுது ஏழாம் அறிவு என்றால் என்ன என்ற சந்தேகம். சிலருக்கு வந்தது. அதோ அதற்க்கான விடை இப்பொழுது. 

உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ளது.
இந்த ஆறறிவை பற்றி நமது தாத்தா  தொல்காப்பியர் அழகாக சொல்லிவிட்டார்.
ஓரறிவு என்பது தொடு உணர்வையும் 
இரண்டாவது அறிவு என்பது சுவை உணர்வையும் 
மூன்றாவது அறிவு என்பது  முகர்ந்து அறியும் அறிவையும் 
நான்காவது அறிவு என்பது பார்த்து  அதன் மூலம் அறியும் அறிவையும்
ஐந்தாம் அறிவு என்பது கேட்டு அதன் மூலம் அறியும் அறிவையும் 
ஆறாம் அறிவு என்பது பகுத்து பார்த்து அதன்  மூலம் அறியும் அறிவைக் குறிக்கின்றது.

அப்பொழுது ஏழாம் அறிவு என்பது? 
அது ஏழுத்திரைகளை கடந்து சென்றால் கிடைக்கும் அறிவு.

தன்னை யார் என்று,இயற்கையை யார் என்று, இறைவனை யார் என்று  அறிதலே ஏழாம் அறிவு.

ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக  வள்ளலார்  கூறுகிறார்.
அதாவது ஏழு திரைகள் ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளது. இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக்கானலாம்  அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம்.

முதலில்  கறுப்புத்திரை - இதை நீங்கள் தூங்கும் பொழுது காணும் திரை என்று சொல்லாம் அல்லது தியானத்தின்  தொடக்கத்தில் காணும் திரை இதுதான். இது மாய சக்தியால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகம் மாயையால் ஆனது மாயை உங்களை ஆட்கொண்டிருக்கும் வரை இந்த திரை மட்டுமே உங்களுக்கு தெரியும்.

இதையும் தாண்டி நீலத்திரை கிரியா சக்தியையும், பச்சைத்திரை  பராச்கதியையும், சிவப்புத்திரை இச்சா சக்தியையும், பொன்மைத்திரை ஞான சக்தியையும், வெண்மைத்திரை ஆதி சக்தியையும், கலப்புத்திரை சித் சக்தியையும் குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்.


இந்த ஏழு திரைகளையும் நம்முள் காண முடியும். இந்த ஏழு திரைகளையும் தாண்டினால் இறைவனை காணலாம்.

ஒருவரின் தியானத்தை பொருத்தும், ஒருவர்  பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை(அல்லது தியானத்தை) பொருத்தும் ஒருவர் இத்திரைகளை வெகு சுலபாமாகவோ அல்லது பல காலங்கள் கடந்தோ கடக்க நேரிடும். 

இத்திரைகளை கடந்து ஆன்மா அல்லது இறைவனை (ரெண்டும் ஒன்றா? :) ) கண்ட பிறகு கிடைக்கும் அறிவே  ஏழாம் அறிவாகும்.


நமது சித்தர் தாத்தாக்கள் இந்த ஒளி பொருந்திய பாதையில் தான் பயணம் செய்தார்கள் என தெரிய வருகிறது.தன்னை இறைவன் என்று கூறுபவர்களும், இறைத்தூதன் என்று கூறுபவர்களும் இவ்வழியிலே சென்றதாக தெரிகிறது. (இதற்கு மாற்ற வழியும் உண்டு என்றே நினைக்கின்றேன் :) )

வருகின்ற தைப்பூசத்தன்று  வள்ளார் அவர்கள் தம்முள் கண்ட ஏழு திரைகளையும் இறைவனையும் நீங்களும் காணலாம் வடலூரில். இவற்றை, இறைவனை ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே காண வேண்டும் என்பதே இதன் நோக்கம், வள்ளலாரின்  நோக்கம்.

முதன் முதலில் முருகப்பெருமான் அவருக்கு சிறு வயதில்  கண்ணாடியில் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு தைப்பூசம்  நன்னாளில் ஒளியாக, அருட்பெருஞ் ஜோதியாக இறைவன் காட்சியளிக்கிறான். பிறகு இறைவனோடே அவர் ஜோதியாகிறார் அல்லது ஒளியாகிறார் அல்லது இறைவனாகிறார்.


தைப்பூசம்  நன்னாளில் தான் சக்தி முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்கும்  வேல் ஆயுதத்தை தந்தாக சொல்லப்படுகிறது. பதஞ்சலிக்கு நம்ம தாத்தா சிவன் இந்த நன்னாளில் தான் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.  தைபூசம்  பௌர்ணமி அன்று வரும். சூரியன் மகர ராசியிலும் சந்திரன் கடக ராசியிலும் இருப்பர். (அட சூரியன் சனி பகவான் வீட்டிலும் சந்திரன் சனி பகவான் நட்சத்திரத்திலும் இருப்பாங்களே? சனி பகவானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?) 

ராகுவும் கேதுவும் மகர கடக ராசியில் இருக்க ஆன்மீகம்  தானா வரும். மாறி  மாறி இருந்தாலும் வரும். வள்ளலாருக்கும் இந்த அமைப்பு இருந்தது.  

குண்டலினி எந்த சக்கரத்தில் உள்ளதோ அதை பொறுத்து இந்த  திரை நிறமும் மாறும்  என்று நான் நினைக்கின்றேன். ஏழு உலகம் உள்ளதாக எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. இந்த ஏழு உலகம் என்பது நம்முள் உள்ள ஏழு சக்கரங்களா அல்லது நமதருகில் உள்ள ஏழு கோள்களா அல்லது ஏழு பிரபஞ்சமா என்று தெரியவில்லை. 

ஒன்று நிச்சயம் இதை தாண்டி எட்டாவது ஒன்று உண்டு. அப்ப அந்த எட்டாவது அறிவு? :)

6 கருத்துகள்:

 1. ////இதையும் தாண்டி நீலத்திரை கிரியா சக்தியையும், பச்சைத்திரை பராச்கதியையும், சிவப்புத்திரை இச்சா சக்தியையும், பொன்மைத்திரை ஞான சக்தியையும், வெண்மைத்திரை ஆதி சக்தியையும், கலப்புத்திரை சித் சக்தியையும் குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்./////


  அப்போ இதுல்ல வெள்ளி திரை ,சின்ன திரை எல்லாம் தெரியாதா ??

  /////முதன் முதலில் முருகப்பெருமான் அவருக்கு சிறு வயதில் கண்ணாடியில் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.////

  எப்படி காட்சி தந்தாராம்....கண்ணாடி குள்ள புகுந்து காட்சி தந்தாரா.....புதுசா ஒரு தினுசா இல்ல இருக்கு :)


  ////ராகுவும் கேதுவும் மகர கடக ராசியில் இருக்க ஆன்மீகம் தானா வரும். மாறி மாறி இருந்தாலும் வரும். ///

  எனக்கு டீ குடிச்சா தான் வரும்....இல்லைனா வரும் ஆனா வராது :)


  ////குண்டலினி எந்த சக்கரத்தில் உள்ளதோ அதை பொறுத்து இந்த திரை நிறமும் மாறும் என்று நான் நினைக்கின்றேன்.////

  குண்டலினி சக்கரம் சக்கரம் நு சொல்லுரீங்களே...அதுல்ல பட்டன் இருக்குமா....இல்லை வழுக்கையாய் இருக்குமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எப்படி காட்சி தந்தாராம்....கண்ணாடி குள்ள புகுந்து காட்சி தந்தாரா.....புதுசா ஒரு தினுசா இல்ல இருக்கு :) //
   அது அவருடைய கற்பனையாக இருக்கும் என நினைக்கின்றேன். அல்லது மற்றவர்கள் கட்டி விட்ட கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.
   ஆனால் அவருக்கு இறை(ஒளி) காட்சி கிடைத்ததை கற்பனை என்றோ கட்டுக்கதை என்றோ சொல்வதற்கில்லை.
   தங்கள் வருகைக்கும் என்னை சிரிக்க வைத்தமைக்கும் நன்றி :)

   நீக்கு
 2. ஏழு திரைகள் பற்றிய விளக்கம் அருமை... நான் தேடியது... பகிர்ந்தமைக்கு மிக்க நன்று... நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கேட்டதால் தான் இதை பகிர்ந்தேன் என்பதே உண்மை,சத்தியம் நண்பரே. எனவே உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
   மிக்க நன்றி நண்பரே. வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள். உடனே பதில் கொடுக்காவிட்டாலும் என்றாவது கொடுப்பேன் :) இறைவன் விரும்பினால் நன்றி.

   நீக்கு
 3. நண்பரே.. என்னால் முன்புபோல் வலையுலகம் அதிகம் வரஇயலவில்லை(அலுவலகப் பணி), இன்று என் ப்ளாகை திறந்த உடன் தங்களின் பதிவுதான் முதலில் என் பார்வையில் பட்டது. தலைப்பை படித்தமாத்திறத்திலேயே புரிந்தது இது எனக்கான தேடலின் பதிலின்(முன்பு தங்களிடம் கேட்டது) பதிவென்று...

  ~*~சத்தியம் நண்பரே.~*~
  இந்த பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம்... நண்பரே...

  எனக்காக தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி... நண்பரே...
  மறந்துவிடமாட்டேன் என்றென்றும் தங்களின் உதவியை...
  மிக்க நன்றி...

  உங்கள் தோழன்,
  ராஜா MVS

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்யும் தொழிலே தெய்வம் நண்பரே எனவே அதற்கே முக்கியத்துவம் கொடுங்கள்.
   நான் உங்களுக்கு உதவி செய்ததாக என்னவில்லை . என் கடமையை காலம் கடந்து சென்றதாகவே உணர்கிறேன்.
   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே....

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...