இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.
பிராமணர்கள் தான் ஜாதியை உருவாக்கினார்கள் என்று எண்ணியிருந்தேன் . ஆனால் இல்லை அல்லா தான் உருவாக்கினார் என்று குரான் கூறுகிறது.
"மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13
(திராவிடவாதிகளே, பெரியார்வாதிகளே இதன் மூலம் ஜாதியை உருவாக்கியது பிராமணர்கள் இல்லை என்று உங்களுக்கு தெரிகிறதா. வேண்டும் என்றால் இன்று முதல் இறைவன் தந்த பிரிவினையை அவர்கள் பெரிதாக்கி விட்டார்கள் என்று சொல்லுங்கள்)
(திராவிடவாதிகளே, பெரியார்வாதிகளே இதன் மூலம் ஜாதியை உருவாக்கியது பிராமணர்கள் இல்லை என்று உங்களுக்கு தெரிகிறதா. வேண்டும் என்றால் இன்று முதல் இறைவன் தந்த பிரிவினையை அவர்கள் பெரிதாக்கி விட்டார்கள் என்று சொல்லுங்கள்)
இதை சொல்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.
அது இருக்கட்டும்... ஏன் அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவன் "அறிந்து கொள்வதற்காக" தனித்தனியாக பிரிக்க வேண்டும்?.
பெரும்பாலான மக்கள் "அரிந்து கொல்கிறார்களே" தவிர "அறிந்து கொள்வதாக" தெரியவில்லையே. இது ஏன் கடவுளுக்கு, இறைவனுக்கு தெரியாமல் போனது?
மதத்தின் பெயரால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இது இறைவனுக்கு ஏன் தெரியவில்லை?
பெரும்பாலான மக்கள் "அரிந்து கொல்கிறார்களே" தவிர "அறிந்து கொள்வதாக" தெரியவில்லையே. இது ஏன் கடவுளுக்கு, இறைவனுக்கு தெரியாமல் போனது?
மதத்தின் பெயரால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இது இறைவனுக்கு ஏன் தெரியவில்லை?
ஒன்றாகவே இருந்திருந்தால் தமிழகத்தில்,இந்தியாவில் தீண்டாமை என்ற பெயரால் மக்கள் துயரம் அடைந்து இருக்க மாட்டார்களே... இன்னும் இது ஆங்காங்கே தொடரத்தானே செய்கிறது.
ஜாதியால் தீண்டாமை, நிறத்தால் தீண்டாமை, மதத்தால் தீண்டாமை, பணத்தால் தீண்டாமை என்று இது நீண்டு கொண்டே போகிறதே.
தனித்தனியாக பிரித்த அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவன் குறைந்த பட்சம் மனிதனை தான் அனைவரும் சமம் என்று சிந்திக்க வைக்காமல் போனதன் மர்மம், மாயம், என்ன?
ஒருவேளை இதுதான் இறைவன் மனிதனுக்கு கொடுத்த சுதந்திரமோ.. இதை வைத்து அவனுக்கு சொர்க்கம் நகரம என்று தீர்மானிக்க இப்படி செய்கிறாரா?
யாரயும் படைக்காமாலே இருந்திருக்கலாமே அவர்...ஒருவேளை இதைத்தான் திருவிளையாடல் என்கிறார்களோ?
கொச்சையா சொல்லனும்னா
அல்லா அல்லது கடவுள் அல்லது இறைவனது போதைக்கு நாம ஊறுகாயா?
மக்களே சிந்தியுங்கள்.......எனக்கும் கொஞ்சம் முடிந்தால் விளக்குங்கள்.
குறிப்பு: இப்பதிவின் நோக்கம் பிராமணர்களின் செயல்களை நியாப்படுத்துவதோ, இசுலாமிய சகோதரர்களை புண்படுத்துவதோ அல்லது கடவுளை கேலி செய்வதோ அல்ல சிந்திக்க அல்லது உண்மையை தெரிந்து கொள்ள மட்டுமே.
இறைவா இப்பதிவு உன்னை புண்படுத்தி இருந்தாலும் என்னை மன்னிக்கவும். :(
பிற்சேர்க்கை(10/02/2011): இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில்
இறைவா இப்பதிவு உன்னை புண்படுத்தி இருந்தாலும் என்னை மன்னிக்கவும். :(
பிற்சேர்க்கை(10/02/2011): இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில்
குரான் இறைவேதம் எனும் பட்சத்தில் பிராமணர்களை ஜாதியை உருவாக்கியதாக கூறுவது தவறு என்று பகுத்தறிவாளர்களும், இசுலாமியர்களும் உணரவேண்டும். அதற்க்கு பரிகாரம் தேடவேண்டும்.
அல்லது
இந்த வசனங்கள் கீதையிலிருந்து சென்றிருக்கும் பட்சத்தில் குரான் பிற மதங்களின் நூல்களை ஒட்டி எழுதப்பட்டது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
பகுத்தறிவாளர்களே, இசுலாமியர்களே உங்களின் பதில் என்ன??
:)
பதிலளிநீக்குhttp://govikannan.blogspot.com/2009/11/blog-post_06.html
ஐயா, இது நல்ல பதிவு நன்றி :)
நீக்குஅல்லா எல்லாம் சொல்வாரு. அல்லது அல்லா சொன்னதாக எல்லாம் நம்மாட்களே சொல்வாங்க. அல்லா நபிகள் மூலமா ரொம்ப தெளிவாத்தானே சொல்லி இருக்கார். ஒருவரையொருவர் அறிந்து கொள்ள...
பதிலளிநீக்குநமக்குதான் போதை, நாம எப்படி ஊறுகாயா இருக்க முடியும், இறைவனுக்கு எல்லாம் போதை இல்லை என்பது மிகத் தெளிவு.
உங்களை நீங்க புண்படுத்திக்காமல் இருந்தா அதுவே பெரிய விஷயம். இதுல போய் இறைவனை புண்படுத்தி இருந்தால் என்பதெல்லாம் உங்க சித்துவேலை. ;)
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும் என முன்னரே இதை எல்லாம் கேலி பண்ண வேண்டாம் என அல்லா சொல்லி இருக்கிறதா சொன்னீங்களே அதையும் எழுதி இருந்தால் பிரச்சினை இருந்து இருக்காது.
நீங்க ஏத்திவிட்டு இருக்கும் இந்த போதையில் எத்தனை பேர் ஊறுகாய்களோ :)
ஐயா தங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமை...
நீக்குகொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைக்கின்றது....
இருக்கின்ற உண்மையை சொல்ல வேண்டும் என்பதே ஆவலே தவிர மறைக்க வேண்டும் என்பது அல்ல. (காப்பி பேஸ்ட் பண்ண முடியல :) ).
வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் குரான் சொல்லவில்லை. "இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்ககூடும் ஆதலால் கேலி செய்யாதீர்கள்" என்று தான் சொல்கிறது. அப்ப தாழ்ந்தவர்களாக இருந்தால் கேலி செய்யலாமா என்ற கேள்வி கூடவே எழும்புகிறது. இருப்பினும் கேலி செய்யக்கூடாது என்னும் நல்ல கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)
//வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும் என முன்னரே இதை எல்லாம் கேலி பண்ண வேண்டாம் என அல்லா சொல்லி இருக்கிறதா சொன்னீங்களே அதையும் எழுதி இருந்தால் பிரச்சினை இருந்து இருக்காது.
பதிலளிநீக்குநீங்க ஏத்திவிட்டு இருக்கும் இந்த போதையில் எத்தனை பேர் ஊறுகாய்களோ :)//
:-) நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். மனிதன் செய்த தவறுக்கு இறைவனை குற்றம் பிடிக்கும் பேதமையை என்னவென்பது?
சகோ,
நீக்குநானும் புரிந்து கொள்ள தான் நிறைய படிக்கிறேன் இருந்தாலும் சில உண்மைகளை குறைகளை பார்க்கும் பொழுது எடுத்து கூற தோன்றுகிறது. இன்னும் எடுத்து கூறலாம் . தவறு இருப்பின் சுட்டி காட்டவும். திருத்திக்கொள்கிறேன். கத்துக்கொள்கிறேன். இறைவனை குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல...என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறன் . அது உண்மையை சொல்ல வேண்டும்... யாரையும் புண்படுத்த கூடாது என்றும் விருப்பப்படுகிறேன்.இதன் மூலம் நானும் பிறரது கருத்துக்களை தெரிந்துகொள்ள ஒரு வழி அவ்வளவே :)
என்னை பேதையாக்குவதும் மேதையாக்குவதும் இறைவன் சித்தம். :) ஆனால் முயற்சியை கை விட மாட்டேன் :)
கழிப்பறைகளையே புனிதமாக போதிமரமாக கழிப்பறை காட்சிகளே தியானமாக கழிப்பறைகளிலேயே தன் அறிவை வளர்த்து வரும் கழிப்பறை ஞானி தாங்கொனா மகிழ்ச்சியை கழிப்பறைகளில் கழிந்தே கொண்டாடியிருக்குமே !!! கொண்டாட்டும். கொண்டாட்டும்.
பதிலளிநீக்குஉண்மைக்கே போலி முகமா?
நீக்குஎன்ன கொடும சார் இது :(................... :)
ஜாதியை உருவாக்கியதும் அல்லாவின் திருவிளையாடல் தான். தமிழ்நாட்டு முஸ்லிம் சவூதி அரேபி பெண்ணை திருமணம் செய்ய முடியாதபடி அவர்களுக்கிடையே ஏற்ற தாழ்வை ஏற்படுத்தியவனும் சக்தி வாய்ந்த அல்லா தான்.
பதிலளிநீக்குஏற்றத்தாழ்வுக்கு எல்லையே இல்லை என்று நினைக்கின்றேன்....
நீக்குதங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே
பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்குநட்புடன்
மூன்றாம் கோணம்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
நீக்குஇஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்பது பற்றியும் ,
பதிலளிநீக்கு"மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13
என்ற திருக்குரான் வசன விளக்கத்தையும்
இந்த லின்க்கை க்ளிக் செய் >>> சமத்துவம் வந்தது எப்படி? <<< து விடியோவை கேளுங்கள்.
பூரண தெளிவு பெறலாம்..
ஐயா நன்றி, வீடியோ பார்க்கும் வசதி சரிவர இல்லாததால் பிறகு பார்த்து தெளிவடைகிறேன்.
நீக்குதங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
தங்களது எழுத்துக்கள் வித்தியாசமாகவும் சிந்திக்கதாகவும் உள்ளது.
பதிலளிநீக்குஆனால் சில விசயங்களை எழுதும் போது.. சரியாக சிந்தித்தால் நன்றாக இருக்கும்.
தாங்கள் குறிப்பிட்ட வசனத்தை நன்றாகப் படித்தால்..
மனிதர்கள் பல நிறங்களில் பல உருவங்களில் இருந்தாலும் ஒரே மூதாதையர் என்ற கருத்து புரியும்.
இந்த கருத்து பிரிவினையா அல்லது ஒற்றுமையா?
தாங்கள் கேட்பது போல் மனிதர்கள் அனைவர்களும் ஒரே மாதிரி ஒரே அந்தஸ்தில் இருந்தால் அதாவது சோசலிசமாக இருந்தால் உலகம் இயங்காது.
எனக்கு வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சோறு கிடைக்கும் வசதிகள் கிடைக்கும் என்றால் நான் ஏன் வேலைக்குப் போக வேண்டும். நிம்மதியாக தூங்கலாமே!
உரிமையாளன் இல்லையெனில் யார் வேலையை முறையாகச் செய்வார்கள்.
ஒவ்வொரு மனிதரிடமும் வித்தியாசமாக அதாவது கல்வி, அழகு, பொருள், பேச்சு, திறமை போன்ற இருப்பதால் தான் ஒவ்வொருத்தரும் இன்னெருவரைச் சார்ந்து வாழ்கிறோம்.
இஸ்லாம் என்றுமே தொழிலை வைத்தோ அல்லது பணத்தை வைத்தோ மதிப்பது இல்லை.
மேலும் விளக்கம் தேவைப்பட்டால் அல்லது பதில் எழுதினால் நான் விளக்கம் ஆதாரத்துடன் தருகிறேன்.
தயவு செய்து எழுதும் போது ஆதாரம் இல்லாமல் எழுத வேண்டாம்.
முயீனுத்தீன்
சகோ முயீனுத்தீன் ,
பதிலளிநீக்குநான் ஆதாரத்தை கூறி தானே எழுதியுள்ளேன். :)
என் புரிதல் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.
//மனிதர்கள் பல நிறங்களில் பல உருவங்களில் இருந்தாலும் ஒரே மூதாதையர் என்ற கருத்து புரியும்.
இந்த கருத்து பிரிவினையா அல்லது ஒற்றுமையா?//
இது நல்ல விளக்கம்...ஆனால் இது அந்த வசனத்திற்கான விளக்கமல்ல சகோ.
முதாதையர்கள் ஒன்று என்பது சரி. ஆனால் ஏன் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிக்கவேண்டும் சகோ. (நிறத்தை பற்றி சொல்லவில்லை).
ஜாதியாக பிரிக்காமல் இருந்திருந்தால் தீண்டாமை என்று ஒன்று வந்திருக்குமா சகோ. சொல்லுங்கள். நான் குரானை குற்றம் சொல்லவில்லை. இது மனிதன் செய்தால் அது அவனின் குற்றம் . இதை இறைவன் செய்தால் அதை அவனிடம் தான் கேட்கவேண்டும்.
ஆங்கிலத்தில் "nations and tribes" என்று வருகிறது. தேசங்களாகவும், பல்வேறு(பழங்) குடிகளாகவும் என்று இதை மொழி பெயர்த்திருக்கலாம்.
அப்படி தேசம் என்று வரும்பொழுது தேசம் மனிதனால் தானே உருவாக்கப்பட்டது இறைவனால் இல்லையே என்று கேள்வி எழும் என்பதனால் தமிழில் இவ்வாறு மொழி பெயர்த்திருப்பார்கள் என நினைக்கின்றேன். எப்படி பார்த்தாலும் இந்த வசனத்தில் பிழை உள்ளது. ஒருவேளை அராபிய மொழியில் இது வேறாகவும் இருக்கலாம்.
இது மொழிபெயர்ப்பின் தவறா இல்லை யார் தவறு என்பதை தங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
//தாங்கள் கேட்பது போல் மனிதர்கள் அனைவர்களும் ஒரே மாதிரி ஒரே அந்தஸ்தில் இருந்தால் அதாவது சோசலிசமாக இருந்தால் உலகம் இயங்காது.//
நீங்கள் கூறிய கருத்துக்கள் ஜாதியை ஆதரிப்பது போல் உள்ளது சகோ
தலித்து படிச்சா எவன்டா பொணத்த தூக்குரதுன்னு கேட்கிற கேள்வியை நீங்கள் கொஞ்சம் நாகரிகமாக கேட்கிறீர்கள்.
ஆனால் இதன் பொருள் ஒன்றுதான் சகோ. கொஞ்சம் சிந்தியுங்கள்.
அல்லாவுக்கு உங்களை அடிமை என்றனர்...நீங்களும் மக்களை அடிமைகளாக வைக்கத்தான் விருப்படுவதாக தெரிகிறது. மனிதனுக்கு மனிதன் அடிமை கிடையாது.
சகோ நான் கூறுவதை சற்று சிந்தித்து பாருங்கள். மக்கள் அனைவரும் சமநிலை பெற்றால் தான் நாட்டில் அமைதி நிலவும், மக்கள் அனைவரும் மகிழ்வர் என்பது என் கருத்து.
ஐந்து விரலும் ஒரேமாதிரி இருந்தால் நாம் வேலை செய்ய முடியாமல் போகலாம்.
ஆனால் மக்களில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றாலும் சமுதாயம் இயங்கும்.
சென்ற நூற்றாண்டிற்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் பொருந்தாலாம்.ஆனால் இந்த/எதிர் காலத்திற்கு அது தேவை இல்லை.
சமத்துவம் பிறக்க முயல்வோம் வாருங்கள் சகோ.
நான் நன்றாக படித்தே எழுத விரும்புகிறேன்.என் கருத்தில் பிழை இருப்பின் தொடர்ந்து தெரிவியுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
உங்கள் மீது அமைதியும் சாந்தமும் உண்டாகட்டும்.
// "மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13 //
பதிலளிநீக்குஎன்னது? ஜாதிய உருவாக்கியது அல்லாவா?
என தலைப்பிட்டு, அதற்கான குர் ஆன் வசனத்தில் பாதியை குறிப்பிட்டுள்ளீர்கள், மீதி எங்கே நண்பரே! முழு வசனத்தையும் படித்தால் அல்லவா விபரம் புரியும்?
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக் குர் ஆன் 49:13)
இந்த வசனத்தின் கடைசி வரி என்ன சொல்கிறது என புரிகின்றதா? இறைவனிடம், குலம், கோத்திரத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கிடையாது, மாறாக இறைவனுக்கு அஞ்சி, இறைக் கட்டளையை பயபக்தியுடன் ஏற்று நடப்பவர்களே, அதிக கண்ணியத்திற்குறியவர்கள் என மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றது
இந்த மனித சமுதாயத்தின் மூதாதயர் ஒருவர் தான் என குறிப்பிடுகிறது, எல்லோரும் ஒரே தாய் தந்தைக்கு, பிறந்தவர்கள் எனில் பிறகு எங்கிருந்து ஏற்றத் தாழ்வை கற்பிக்க இயலும்? மேலே உள்ள வசனத்திற்கு இனக்கமாக அடுத்து ஒரு வசனம்.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக் குர் ஆன் 4:1)
இந்த குர் ஆன் வசனங்களுக்கு விளக்கமாக வரும் நபிகள் நாயகத்தின் அமுத மொழியையும் வாசித்து சற்று யோசித்து பாருங்கள், உண்மை விளங்கும்.
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்
பகுதி :2
பதிலளிநீக்குநபிகள் நாயகம் அவர்கள், சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்களுடன் தனது இறுதி ஹஜ் கடமையை நிறைவேற்றிய போது சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள், இதை நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை என கூறுவார்கள். குலப் பெருமையையும், நிற வெறியையும், தகர்த்தெரியும் வண்ணம், எவ்வளவு அற்புதமான போதனை.
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
குர் ஆனும், நபி மொழியும் இவ்வளவு தெளிவாக இருக்க, அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் முடிச்சு போடுவது போல, இந்த (49:13) வசனத்தை விளக்குகிறேன் என பதிவெழுதி,சனாதன மதத்தின் ஜாதியையும், தீண்டாமையையும், அல்லாஹ்வின் பெயரால், இஸ்லாத்திற்குள் இழுத்து வந்திருக்கின்றீர்களே!!! இது நியாயமா????
//மக்களே சிந்தியுங்கள்.......எனக்கும் கொஞ்சம் முடிந்தால் விளக்குங்கள். //
தங்களின் இந்த வேண்டுகோளுக்கினங்க, எனது கருத்துக்களை நீண்ட பின்னூட்டமாக இட்டுள்ளேன், மாற்றுக் கருத்து இருப்பின் தெரியபடுத்துங்கள் சகோதரரே.
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்
@சகோ அ.ஹாஜாமைதீன்,
நீக்குதங்களது பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை. அவர் ஏற்ற தாழ்வு பாராட்ட கூடாது என்று சொன்னதை ஏற்றுகொள்கிறேன்.
//மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக் குர் ஆன் 49:13)//
இந்த கிளைகளும் கோத்திரங்களும் ஜாதி அமைப்பை கூறுவது போன்றே உள்ளது. ஆதலால் அந்த முடிச்சு போட்டேன் சகோ.
என்னுடைய ஆதங்கம் என்னவெனில் அந்த பிரிவுகளே இல்லையென்றால் மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனை வந்திருக்காது என்பதுதான்.என்னுடைய ஆதங்கம் தவறா சகோ?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
சகோ புரட்சிமணி அவர்களுக்கு,
பதிலளிநீக்கு// இந்த கிளைகளும் கோத்திரங்களும் ஜாதி அமைப்பை கூறுவது போன்றே உள்ளது. ஆதலால் அந்த முடிச்சு போட்டேன் சகோ.//
உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.( குர் ஆன் 49:13)
மேலே உள்ள இந்த வரிகளை படித்த பிறகுமா உங்களுக்கு முடிச்சு போட மனது வந்தது சகோ? கிளைகளாகவும், கோத்திரங்களாகவும், என பொதுவாக சொல்லப்பட்டுள்ளதே தவிர இந்த கிளை உயர்ந்தது, அந்த கோத்திரம் தாழ்ந்தது என குர் ஆனில் எங்கேயாவது உள்ளதா?
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
(குர் ஆன் 6:98)
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும். (குர் ஆன் 10:19)
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (குர் ஆன் 2:213)
மேலே உள்ள வசனங்களில் எங்காவது ஏற்றத் தாழ்வைப் பற்றி போதிக்கப் பட்டுள்ளதா சகோ???
// என்னுடைய ஆதங்கம் என்னவெனில் அந்த பிரிவுகளே இல்லையென்றால் மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனை வந்திருக்காது என்பது தான்.என்னுடைய ஆதங்கம் தவறா சகோ?//
தங்களது ஆதங்கம் புரிகின்றது சகோ, அந்த பிரிவு என்பது மனிதர்களுக்குள், பிரிவினை, பிரச்சினை ஏற்படுத்த அல்ல, மாறாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே, ஆனால் மனிதன் தான் தனக்குள் இந்த பேதத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்
வாருங்கள் சகோ அ.ஹாஜாமைதீன்,
நீக்கு// கிளைகளாகவும், கோத்திரங்களாகவும், என பொதுவாக சொல்லப்பட்டுள்ளதே தவிர இந்த கிளை உயர்ந்தது, அந்த கோத்திரம் தாழ்ந்தது என குர் ஆனில் எங்கேயாவது உள்ளதா? //
நம்பிக்கைகொண்டோரே, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை கேலி செய்ய வேண்டாம். 'இவர்களை விட ஆவர்கள் சிறந்தோராக இருக்க கூடும்''. எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்யா வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்க கூடும்.
உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்தி காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூடுவது) கேட்டது. திருந்தி கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.(49.13).
குரான், இங்கே கேலி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் அதே நேரத்தில் மற்றொரு சமுதாயம் உயர்ந்தது என்று கூறுகிறதா இல்லையா? ஆக இங்கு கேலி செய்யக்கூடாது என்பதற்கு காரணம் அவர்கள் உயர்ந்தோராக இருக்ககூடும் என்பதுதான். நான்...குரான் சொல்வது சரிதானே சகோ?
//தங்களது ஆதங்கம் புரிகின்றது சகோ,//
தங்களுடைய புரிதலுக்கு நன்றி சகோ.
// அந்த பிரிவு என்பது மனிதர்களுக்குள், பிரிவினை, பிரச்சினை ஏற்படுத்த அல்ல, மாறாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே, ஆனால் மனிதன் தான் தனக்குள் இந்த பேதத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.//
இறைவன் மனிதர்களுக்கு இந்த தவறு செய்ய வாய்ப்பளிக்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் என்
கருத்து.பல்வேறு இறைத்தூதர்களை அனுப்புவதற்கு பதிலாக, அவர் நினைத்தால் ஒரே நேரத்தில் மனிதர்கள் மனதில் இருந்து இந்த பேதங்களை நீக்கலாம். அந்த சக்தி இல்லாதவரா இறைவன்? நீங்களே சொல்லுங்கள் சகோ.
தங்கள் வருகைக்கும் பல்வேறு வசங்களை மேற்கோள் காட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ.
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்,
இராச.புரட்சிமணி
மன்னிக்கவும் மேலே உள்ள வசனம் 49:11
நீக்கு// நம்பிக்கைகொண்டோரே, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை கேலி செய்ய வேண்டாம். 'இவர்களை விட ஆவர்கள் சிறந்தோராக இருக்க கூடும்''. எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்யா வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்க கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்தி காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூடுவது) கேட்டது. திருந்தி கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.(49.13).
நீக்குகுரான், இங்கே கேலி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் அதே நேரத்தில் மற்றொரு சமுதாயம் உயர்ந்தது என்று கூறுகிறதா இல்லையா? ஆக இங்கு கேலி செய்யக்கூடாது என்பதற்கு காரணம் அவர்கள் உயர்ந்தோராக இருக்ககூடும் என்பதுதான். நான்...குரான் சொல்வது சரிதானே சகோ?//
ஏன் சகோ, எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்கின்றீர்கள்? சரி தங்களது கூற்றுப்படியே அந்த " உயர்ந்த சமுதாயம்" அல்லது "அந்த உயர்ந்தவர்கள்" யார் என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கின்றேன்.
சாதாரன பாமரனும் விளங்கிக் கொள்ளும் விதத்திலே மிக எளிமையாக உள்ள இந்த வசனத்திற்கு இப்படி ஒரு விளக்கமா!? பிறரை கேலி, கிண்டல், செய்ய வேண்டாம், அடுத்தவர் மனம் நோகும்படி பட்டப்பெயர் சூட்ட வேண்டாம், என்ற அறிவுரை தானே தவிர, தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் அல்ல.
இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம்).
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.
//பிற்சேர்க்கை(10/02/2011): இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில் குரான் இறைவேதம் எனும் பட்சத்தில் பிராமணர்களை ஜாதியை உருவாக்கியதாக கூறுவது தவறு என்று பகுத்தறிவாளர்களும், இசுலாமியர்களும் உணரவேண்டும். அதற்க்கு பரிகாரம் தேடவேண்டும். //
நீக்குகண்டிப்பாக, பரிகாரம் தேடுவதற்கு முன்.......
எல்லா பிராமணர்களும் குர் ஆன் இறைவேதம் என ஏற்றுக் கொண்டு விட்டார்களா? என்பதை தெரிய படுத்துங்கள், சகோ.
//அல்லது இந்த வசனங்கள் கீதையிலிருந்து சென்றிருக்கும் பட்சத்தில் குரான் பிற மதங்களின் நூல்களை ஒட்டி எழுதப்பட்டது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பகுத்தறிவாளர்களே, இசுலாமியர்களே உங்களின் பதில் என்ன?? //
சில குர் ஆன் வசனங்களை தவறாக விளங்கிக் கொண்டு, கீதையைப் போலவே குர் ஆனும் ஏற்றத் தாழ்வுகளை போதிக்கிறது என கருதி, இப்படி ஒரு முடிச்சைப் போட்டு, வினாவை தொடுத்திருப்பது வியப்பாக உள்ளது சகோதரரே!!.
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.
பகுதி:2
பதிலளிநீக்குகடவுட் கொள்கையில் சனாதன இந்து மதத்திற்கும், இஸ்லாத்திற்கும், பல கருத்து வேறுபாடுகள் உண்டு, ஆனால் ஒரு சில விசயங்களில் ஒத்த கருத்து உள்ளதை ஒதுக்கி தள்ள இயலாது,
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்-ப்பவதி பாரத அப்ப்யுத்தான-மதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்.
(பகவத் கீதை அத்தியாயம் 4, ஸ்லோகம் 7).
பரத குமாரனே ! எவ்வெப்பொழுது தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ அவ்வப்பொழுதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்ளுகிறேன்.
பரித்ராணாய ஸாதுனாம் விநாஸாயச துஷ்க்ருதாம் தர்ம – ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே. (பகவத் கீதை அத்தியாயம் 4, ஸ்லோகம் 8).
நல்லவர்களை காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும், நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.
பகவத் கீதையின் இந்த வாக்கிற்கு, அப்படியே ஒத்து போகின்ற குர் ஆன் வசனத்தை பாருங்கள்.....
(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 6:48)
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை. (அல்-குர்ஆன் 35:24 )
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.
பகுதி:3
பதிலளிநீக்குநல்லவர்களை காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதாரம் செய்கிறேன் என்ற, கீதையின் கூற்றிற்கும்,
நன்மாராயம் கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவுமே அன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை, என்ற குர் ஆனின் வாக்கிற்கும் ஏதாவது பாரிய வேறுபாடு தெரிகிறதா??
எனக்கு ஒரே ஒரு வித்தியாசம் தான் தெரிகிறது, அதாவது கிருஷ்ணர் அவதாரம் எடுக்கிறேன் என்கிறார், அல்லாஹ்வோ தனது தூதர்களை அனுப்புகிறேன் என்கிறான், இதைத் தவிர பெரிய வேறுபாட்டை நான் கானவில்லை, எனது புரிதழில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் சகோதரரே.
என்றும் அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.
@அ. ஹாஜாமைதீன்
நீக்குவாங்க சகோ,
// ஏன் சகோ, எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்கின்றீர்கள்? சரி தங்களது கூற்றுப்படியே அந்த " உயர்ந்த சமுதாயம்" அல்லது "அந்த உயர்ந்தவர்கள்" யார் என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கின்றேன்.//
மற்றவர்கள் உயர்ந்தோராக இருக்கலாம் என்று நான் கூறவில்லை சகோ. ஆதலால் அது எனக்கு தெரியாது.
//சாதாரன பாமரனும் விளங்கிக் கொள்ளும் விதத்திலே மிக எளிமையாக உள்ள இந்த வசனத்திற்கு இப்படி ஒரு விளக்கமா!? பிறரை கேலி, கிண்டல், செய்ய வேண்டாம், அடுத்தவர் மனம் நோகும்படி பட்டப்பெயர் சூட்ட வேண்டாம், என்ற அறிவுரை தானே தவிர, தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் அல்ல.//
கேலி செய்யா வேண்டாம் என்ற கொள்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அது ஏன் செய்யக்கூடாது என்பதற்கான காரணம் கேள்வி எழுப்புகிறது. கண்டிப்பாக நம் இருவரில் ஒருவருக்கு நல்ல புரிதல் ஏற்ப்படும் என நம்புகிறேன்.
//கண்டிப்பாக, பரிகாரம் தேடுவதற்கு முன்.......
எல்லா பிராமணர்களும் குர் ஆன் இறைவேதம் என ஏற்றுக் கொண்டு விட்டார்களா? என்பதை தெரிய படுத்துங்கள், சகோ. //
ஜாகிர் நாயக் மற்றும் பலர் அந்த முயற்சியில் தான் உள்ளனர்...அதை மற்றவர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டனர் என்பதை யாமறியேன் சகோ.
//சில குர் ஆன் வசனங்களை தவறாக விளங்கிக் கொண்டு, கீதையைப் போலவே குர் ஆனும் ஏற்றத் தாழ்வுகளை போதிக்கிறது என கருதி, இப்படி ஒரு முடிச்சைப் போட்டு, வினாவை தொடுத்திருப்பது வியப்பாக உள்ளது சகோதரரே!!.//
//கடவுட் கொள்கையில் சனாதன இந்து மதத்திற்கும், இஸ்லாத்திற்கும், பல கருத்து வேறுபாடுகள் உண்டு, ஆனால் ஒரு சில விசயங்களில் ஒத்த கருத்து உள்ளதை ஒதுக்கி தள்ள இயலாது, //
சகோ, இந்தியாவில் இருந்த மதத்திற்கும், கருத்துக்கும், வழக்கத்திற்கும் இசுலாமுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது.
அதை பற்றி ஏற்க்கனவே கொஞ்சம் எழுதியுள்ளேன்.நேரம் கிடைக்கும்பொழுது நிறைய எழுதுகிறேன். உங்களின் கருத்தை சொல்லுங்கள். உங்கள் கருத்தில் தவறு ஏதும் இல்லை. நீங்கள் நியாயமான உங்கள் புரிதலை தெரிவிக்கின்றீர்கள் நான் என்னுடைய புரிதலை தெரிவிக்கின்றேன். அதன் உண்மை இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
மேலும் எனக்கு இறைவனின் அவதாரத்திலும், இறை தூதர்களை அனுப்புவதிலும் இதுவரை நம்பிக்கை இல்லை. நாளை வரலாம் வராமலும் போகலாம். அல்லது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை நாளை இல்லாமலும் போகலாம். மாற்றம் ஒன்றுதானே மாற்றம் இல்லாதது சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ