வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 15 பிப்ரவரி, 2012

முகமது நபி தூதரா? யோகியா? -பகுதி 2

முகமது நபிக்கு 25  வயதில் திருமணம் நடந்தது. அவர்  தன்னை  விட  பதினைந்து  வயது  மூத்த  பெண்ணை  மணந்து  கொண்டார்.  இந்தப்பெண்  வசதியான  குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இப்பெண்ணை மணக்க வசதி ஒன்று தான் காரணமோ அல்லது விதவைக்கு மறுவாழ்வு தர வேண்டும் என்ற நல்லெண்ணமா என்று தெரியவில்லை.

திருமணத்திற்கு பிறகு தான் இவர் தியானம்  அல்லது தவத்தில்  ஈடுபடுகின்றார். 
இறை தரிசனமும் பெறுகிறார். குரானின் வரிகள் ரமலான் மாதத்தில் தான் அவருக்கு முதல் முதலில் கிடைக்கின்றது. அதை ஜிப்ரேல் அல்லது கப்ரியல் தான் தனக்கு சொல்வதாகவும் கூறுகிறார்.

ஒரே நாளில் குரான் வழங்கப்படவில்லை. அந்த ரமலான் மாதம் ஆரம்பித்து அவர் உயிரோடு இருந்தவரை (23 ஆண்டுகள்  )ஜிப்ரேல் கூறியவைகளாக நபிகள் கூறியவைகள் தான் குரான். 

 உண்மையை சொல்ல வேண்டும் எனில் ஜிப்ரேல் அவருக்கு தோன்றிய சில காலங்களில் முகமது நபி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் வரலாறு கிடைக்கின்றது.

இறை தரிசனம் அல்லது குண்டலி விழித்தெழுதல் சாதாரண விடயம் கிடையாது. அது மனிதனுக்கு முதலில் தரும் துன்பங்களும் பிறகு தரும் இன்பங்களும் மிக மிக அதிகம்.

முதலில் வரும் துன்பத்தால் சிலருக்கு பித்து பிடித்து பைத்தியம் ஆன கதையும் உண்டு. சிலருக்கு நோய்களும் ஏற்ப்படுவதுண்டு. சிலர் தூக்கம் கெட்டு திரிவதும் உண்டு.

முகமதுவுக்கு  அருகில் சொல்லிக்கொள்ளும் படி குரு யாரும் இல்லாததால் துன்பத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார் என நினைக்கின்றேன்.(ஆதலால் தான் குரு  இல்லாமல் சில தியானங்களை செய்யக்கூடாது என்பர்).

 இவர் கவலையாக இருந்த காலங்களில் அவரது மனைவி ஊக்கம் தந்து தொடர்ந்து தியானம் செய்ய வைத்திருக்கின்றார். தற்க்கொலைக்கு முயன்ற காலங்களில் ஜிப்ரேல் தடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

அந்த ரமலான் மாத நிகழ்விற்கு பிறகு அவர் தியானம் செய்தாரா என தெரியவில்லை ஆனால் தொழுகை செய்ய ஆரம்பித்து விட்டார். இவரது மனைவி  மற்றும் சுற்றத்தார்கள் என தனியாக சென்று தொழுகை செய்கின்றனர். இவர்கள் வேறு மதத்திற்கு செல்வதால் அங்கே பிரச்சனை ஆரம்பாகின்றது. பிறகு சண்டை, இசுலாமை எதிர்த்தவர்கள் இசுலாமில் சேருதல், வேறு நாட்டிற்க்கு பயணித்தல், போர்  என்று வாழ்க்கை பயணிக்கின்றது. இசுலாமும் வளருகிறது. 

மக்கள்  மத்தியில் இவர் சில அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒருமுறை நபி நிலவை இரண்டாக பிரித்து காட்டியதாகவும், தொடர்ந்து சில  நாட்கள் மழை பொழிய வைத்ததாகவும், கம்பை பாம்பாகவும் வெள்ளை கயிறாகவும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.(கம்பை மாற்றியது மோசேஸ் நபி என்று கூறுகிறார்கள். தவறை  சுட்டிகாட்டிய சகோதரர்களுக்கு என் நன்றிகள் )

இந்த அற்புதங்கள் மூலம் அவருக்கு இறைசக்தி கிடைத்துள்ளது உறுதியாகிறது. இவர் ஒரு யோகி என்பதும் உறுதியாகிறது. 

இவ்வாறு யோக, ஆன்மீக வழியில்  சென்ற முகமது நபி தொடர்ந்து அந்த வழியில் பயனிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுதவதை தவிர்க்க முடியவில்லை.

அதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக  கூறப்படும் சில நிகழ்வுகளும், சில குரான் வசனங்களும்   தான் காரணமாகின்றன.

அல்லா விரும்பினால் தொடரும்........

26 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ
  //இறை தரிசனமும் பெறுகிறார்.//

  இறை தரிசனம் இல்லை இறை வெளிப்பாடு[அரபியில் வஹி] என்றே இஸ்லாமியர்கள் நம்பி ஏற்பதால் அப்படியே குறிப்பிட வேண்டுகிறேன்.

  மற்ற‌படி திரு முகம்மது தற்கொலைக்கு முயன்றார் என்பதனை இப்போதைய மத குருக்கள் ஏற்காமல் வேறு விள்க்கம் சொல்கிறார்கள்.

  திரு முகம்மது குண்டலினி சக்தியால் இறைவெளிபாடு பெற்றார் என்பதும் இஸ்லாமின் படி ஏற்க மாட்டார்கள் எனவே நினைக்கிறேன்.

  மதம் குறித்து விவாதிப்பது தவறில்லை இருப்பினும் கருத்துகளை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து வெளியிடுவது பல சிக்கல்களை தவிர்க்கும்.இன்னும் நம் சகோக்கள் பல் விள்க்கங்கள் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சகோ,
   //இறை தரிசனம் இல்லை இறை வெளிப்பாடு[அரபியில் வஹி] என்றே இஸ்லாமியர்கள் நம்பி ஏற்பதால் அப்படியே குறிப்பிட வேண்டுகிறேன்.//

   இரண்டும் ஒன்றுதான். இருப்பினும் அவர்கள் விருப்பப்படியே குறிப்பிடலாம்.

   // மற்ற‌படி திரு முகம்மது தற்கொலைக்கு முயன்றார் என்பதனை இப்போதைய மத குருக்கள் ஏற்காமல் வேறு விள்க்கம் சொல்கிறார்கள்.//
   இதை விக்கிபிடியாவில் படித்தேன். மேலும் பலர் அவ்வாறுதான் எழுதிஇருக்கிறார்கள்.

   //திரு முகம்மது குண்டலினி சக்தியால் இறைவெளிபாடு பெற்றார் என்பதும் இஸ்லாமின் படி ஏற்க மாட்டார்கள் எனவே நினைக்கிறேன்.//
   தவத்தில் குண்டன்லினியால் மட்டுமே இறைவெளிப்பாடு கிடைக்கும். முயற்சி செய்தால் நீங்களும் அனைத்து இசுலாமியர்களும்,மக்களும் இதை காணலாம்.

   //மதம் குறித்து விவாதிப்பது தவறில்லை இருப்பினும் கருத்துகளை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து வெளியிடுவது பல சிக்கல்களை தவிர்க்கும்//

   ஏற்க்கனவே இருக்கும் உணமைகளைத்தான் கூறுகிறேன். குண்டலினி என்னோட சேர்க்கை என்றாலும் அது தவறாக இருக்க வாய்ப்பே இல்லை.
   .//இன்னும் நம் சகோக்கள் பல் விள்க்கங்கள் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்!//
   பார்ப்போம்

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 2. நண்பரே ,
  யாரோ மப்புல நாந்தான் கடவுளின் தூதர்ன்னு சொல்லியிருப்பாங்க. அத ஏன் நம்புறீங்க?

  நான் தான் இறைத்தூதர். அதுக்கு ஆதாரம் இந்த புத்தகம்
  ஆனா இந்த புத்தகத்தை நாந்தான் எழுதினேன்.

  ஓஷோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே,
   //நண்பரே ,
   யாரோ மப்புல நாந்தான் கடவுளின் தூதர்ன்னு சொல்லியிருப்பாங்க. அத ஏன் நம்புறீங்க?//
   :)

   அவுங்க நம்பரதொட மத்தவங்களையும் நம்ப சொல்றாங்க....எனக்கு தெரிந்த உண்மையை சொல்லலாம்னு நினைக்கிறேன்...பார்ப்போம்...

   //நான் தான் இறைத்தூதர். அதுக்கு ஆதாரம் இந்த புத்தகம்
   ஆனா இந்த புத்தகத்தை நாந்தான் எழுதினேன்.

   ஓஷோ//

   அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவரும் இறை தரிசனம் பெற்றவர்தான்.
   இந்த தூது கதைகள் வர யூதர்கள் தான் காரணம்னு நினைக்கிறேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாருங்கள் நண்பரே,
   //நண்பரே ,
   யாரோ மப்புல நாந்தான் கடவுளின் தூதர்ன்னு சொல்லியிருப்பாங்க. அத ஏன் நம்புறீங்க?//
   :)

   அவுங்க நம்பரதொட மத்தவங்களையும் நம்ப சொல்றாங்க....எனக்கு தெரிந்த உண்மையை சொல்லலாம்னு நினைக்கிறேன்...பார்ப்போம்...

   //நான் தான் இறைத்தூதர். அதுக்கு ஆதாரம் இந்த புத்தகம்
   ஆனா இந்த புத்தகத்தை நாந்தான் எழுதினேன்.

   ஓஷோ//

   அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவரும் இறை தரிசனம் பெற்றவர்தான்.
   இந்த தூது கதைகள் வர யூதர்கள் தான் காரணம்னு நினைக்கிறேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 3. முகமது நபி தன் காலத்தில் வழங்கி வந்த பல கிருஸ்துவ யூத கதைகளையும் அரேபியாவின் அல்லாவையும் ஒன்றாக இணைத்து ஒரு புதிய மதத்தை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார். வெறும் பாலைவன மதமாக இருந்திருக்க வேண்டிய இம் மதம் இப்போது உலகின் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்து விட்டது என்பதே ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். குரான் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் அரேபிய மொழி பெயர்ப்பு போல இருப்பது ஏசுவை மீண்டும் வருவார் என அறிவிப்பது போன்ற கருத்துக்கள் இதை ஒரு காப்பி செய்யப்பட்ட புத்தகமாகவே கருத இடம் அளிக்கிறது. பைபிளில் சில மாற்றங்களை தன் விருப்பப்படி செய்து முகமது குரானை கொண்டு வந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தளம் இஸ்லாமிய வளர்ச்சி பிடிக்காதவர்களால் நடத்தப்படுகிறது என்பனை விபரம் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எப்படி உன் அறிவுக்கு எட்டியதை கிரிக்கினாலும் அதற்கு நீயே கமென்ட் எழுதினாலும் லாபம் என்னவோ இஸ்லாத்துக்குத்தான். சூரியனை பார்த்து எதோ குரைத்தமாதிரி...

   நீக்கு
  2. @காரிகன்
   நீங்கள் சொல்வது சரி என்றே தெரிகிறது. ஆனால் ஏசு மீண்டும் வருவார் என்று அதில் சொல்லப்பட்டதாக தெரியவில்லை.

   நீக்கு
  3. @mary
   சகோதரி,
   உங்களின் கோபம் எனக்கு புரிகிறது. நீங்கள் பகுத்தறிவுடன் சிந்தித்தால், படித்தால் உங்களுக்கு பல உண்மைகள் தெரியவரும். குறைகளை கூறினால் திருத்திக்கொள்கிறேன்.
   நன்றி

   நீக்கு
  4. காரிகன்Feb 15, 2012 05:45 PM
   //வெறும் பாலைவன மதமாக இருந்திருக்க வேண்டிய இம் மதம் இப்போது உலகின் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்து விட்டது என்பதே ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்.//

   அப்ப கிருஸ்துவ மதம் என்ன நியூயார்க்கில் தோன்றியதா?

   //குரான் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் அரேபிய மொழி பெயர்ப்பு போல இருப்பது ஏசுவை மீண்டும் வருவார் என அறிவிப்பது போன்ற கருத்துக்கள் இதை ஒரு காப்பி செய்யப்பட்ட புத்தகமாகவே கருத இடம் அளிக்கிறது.//

   நண்பரே, ஒரு புத்தகத்தை நகல் எனக் குறிப்பிட்டால், அதன் நிலை எப்படி இருக்கனும்? எவ்வித மாற்றமும் இன்றி மூலத்தை ஒத்ததாக இருக்கும், ஆனால் பைபிளின் மையக் கருத்து என்ன? இயேசு இறை மகன், உலக மக்களின் பாவத்திற்காக தன்னையே பலி கொடுத்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்கிறது, ஆனால் இஸ்லாமோ, இயேசுவும் ஒரு தீர்க்கதரிசியே அவர் இறக்கவில்லை, உலக இறுதி நாளின் போது அவர் வருவார் என்கிறது, அதே போல் தாவீது, சாலமன், லோத், போன்ற மற்ற தீர்க்கதரிசிகளை பாவம் செய்தவர்களாக பைபிள் குறிப்பிடுகிறது, குர் ஆனோ எல்லா நபிமார்களும் நல்லவர்கள் என்கிறது.

   பைபிளில் வரும் தீர்க்கதரிசிகளின் பெயர்களும், சம்பவங்களும், குர் ஆனிலும் இடம்பெற்றுள்ளதை
   வைத்து பலரும் இதை ஒரு காப்பி என்றே கருதுகிறார்கள், ஆனால் உண்மை நிலை என்ன என்பதையோ, இரண்டு வேதத்திற்கிடையில் உள்ள வித்தியாசத்தையோ பெரும்பாலும் யாரும் படித்துணர்வதில்லை.

   என்றும் அன்புடன்,
   அ.ஹாஜாமைதீன்

   நீக்கு
  5. காரிகன்Feb 15, 2012 05:45 PM
   //பைபிளில் சில மாற்றங்களை தன் விருப்பப்படி செய்து முகமது குரானை கொண்டு வந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.//

   ஆதாரமற்ற வாதம் என்பதை, பைபிள், மற்றும் குர் ஆனை வாசித்து பார்த்தால் உண்மை விளங்கும், பைபிளில் மாற்றம் செய்வதாக இருந்தால் அதை ஒட்டியே செய்திருக்கனும், பைபிளின் படி இயேசு கடவுளின் குமாரன், தன் விருப்பப்படி முஹம்மது நபி மாற்றியிருந்தால்.... தன்னை கடவுளின் குமாரன் என கூறியிருக்கனும், அல்லது தெய்வாம்சம் பொருந்தியவன் என்றாவது சொல்லியிருக்கனும், அவரோ தன்னை இறைவனின் அடிமை என்றே கூறினார்.

   தான் எழுதும் புத்தகத்தில் தன்னைத்தான் புகழ்ந்து எழுதியிருக்கனும், ஆனால், இயேசு என்கிற
   ஈஸா நபியைத்தான் குர் ஆனில் பல இடங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது, மாறாக நபிகள் நாயகத்தை கண்டித்த வசனங்கள் தான் உள்ளது.

   கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஒய்வு எடுத்தார்.

   பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்.

   எல்லாம் வல்ல, முக்காலமும் அறிந்த கடவுளை, ஏதோ நம்ம தரத்திற்கு இறக்கி, தொடர்ந்து வேலை செய்ததால் ஓய்வு எடுத்தார் எனவும், ஒரு காரியத்தை செய்து தவறாகி விட்டதே என மனம் வருந்தினார் என்ற பைபிள் வசனத்திற்கும்

   ஆறு நாட்களில் எல்லாவற்றையும் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
   என குர் ஆன் கூறுவதற்கும், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.

   நண்பரே,
   // கருத இடம் அளிக்கிறது.//
   // என்று சொல்பவர்களும் உண்டு. //
   என குருட்டாம் போக்கில் எழுதுவதை தவிர்ப்பது நலம்.

   என்றும் அன்புடன்,
   அ.ஹாஜாமைதீன்

   நீக்கு
 4. முஸ்லிம்களை பொறுத்தவரையில் ஒரு பொதுவான அபிப்ராயம் என்னெவென்றால் அவர்கள் எந்தவிதமான விமர்சங்களையும் விரும்பமாட்டார்கள் என்பதே.இங்கே நான் எழுதிய சில வரலாற்று உண்மைகளுக்கே பதில் சொல்ல முடியாமல் சட சடவென்று எதையாவது எழுதி தங்களின் கோபத்தை தீர்த்துக்கொள்வது அவர்களின் பிற்போக்குத்தனமான என்னவோட்டத்தையே காட்டுகின்றது. இங்கே நான் எழுதி உள்ளது என்னுடைய அபிப்ராம் அல்ல அது பல காலங்களாக உலகத்தில் சொல்லப்பட்டு வரும் கருத்தையே நான் எழுத்தில் உள்ளேன்.முஸ்லிம் நண்பர்கள் ஆரோக்கிய மனப்பான்மையுடன் எதிர் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இஸ்லாம் பற்றியோ அல்லது முகமதுவை பற்றியோ எதையுமே எழுதக்கூடாது என்கிற போராட்ட மனப்பான்மை கொண்டவர்கள் விவாதத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. இந்து மற்றும் கிருஸ்துவ மதங்கள் இன்றுவரை எத்தனையோ எதிர்ப்புகளையும் விமர்சனகளையும் தாண்டிதான் இத்தனை தூரம் வந்திருக்கின்றன. இந்த இரண்டு மதங்களுக்கும் விமர்சங்களை எதிர் கொள்ளும் திறன் உள்ளதை உலகம் அறியும். குரானை பற்றி மற்ற மதத்தவர்கள் பேசினாலே தப்பு அவனை அடி உதை பேசாதே என்று வார்த்தை போருக்கு தயாராகும் முஸ்லிம் நண்பர்களே விமர்சங்கள் வளர்ச்சிக்கு உதவுபவை என்பதை புரிந்து கொண்டு கருத்துக்களை எழுதுங்கள்.கோபத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்து நண்பரே,
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 5. இறை தரிசனம் அல்லது குண்டலி விழித்தெழுதல் சாதாரண விடயம் கிடையாது. அது மனிதனுக்கு முதலில் தரும் துன்பங்களும் பிறகு தரும் இன்பங்களும் மிக மிக அதிகம்.//பெரும்பாலும் பைத்தியம்தான் பிடிக்கும்.இந்த லௌகீக வாழ்வில் மக்களுக்கு மத்தியில் வாழ தகுதியில்லாத தன்மை ஏற்படும். அதனால்தான் மலையைத் தேடி, தனியான இடத்தைத் தேடி போய்விடுவதுண்டு சமூகத்துக்கு பாதிப்பில்லாமல் இருப்பதற்காக. அதில்லாமல் புத்தி தன் கட்டுப்பாட்டை இழந்து மனமும் இல்லாமல் போவதால் 'சித்தன் போக்கு சிவன் போக்குதான்'.இந்த மாதிரியான பழமொழிகள் எல்லாம் பிற ஜனங்களை இதற்காக தயார்படுத்தத்தான். நல்ல பதிவு...ஆனாலும் இந்த உலகுக்கு அவர்களால் நிறைய பயன் இருப்பதாக சொல்கிறார்கள். என்ன என்று தான் தெரியவில்லை...நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது முற்றிலும் சரி நண்பரே.
   // ஆனாலும் இந்த உலகுக்கு அவர்களால் நிறைய பயன் இருப்பதாக சொல்கிறார்கள். என்ன என்று தான் தெரியவில்லை. //
   தமிழ் நாட்டு சித்தர்கள் பல மருத்துவ அதிசயங்களை கண்டறிந்துள்ளனர். சில சித்தர்கள் சிலருக்கு நன்மை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. நமக்கு தெரியாமல் என்னென்ன செய்கிறார்களோ தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் இயற்கை நியதிக்கு எதிராக செயல்படமாட்டார்கள்

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 6. //இறை தரிசனம் இல்லை இறை வெளிப்பாடு[அரபியில் வஹி] என்றே இஸ்லாமியர்கள் நம்பி ஏற்பதால் அப்படியே குறிப்பிட வேண்டுகிறேன்.//

  இரண்டும் ஒன்றுதான். இருப்பினும் அவர்கள் விருப்பப்படியே குறிப்பிடலாம்.

  அவர்களுக்கு அரபு மொழி மட்டும் தான் பிடிக்குமாக்கும்!
  காரிகன் சொன்னது உண்மை. இஸ்லாமை பற்றி ஏதாவது சொல்ல தொடங்கினால் இஸ்லாமிய வளர்ச்சியை பொறுக்காதவர்களின் சதி என்று சொல்லி கொண்டு வருவார்கள். இஸ்லாம் வளர்ச்சியடைந்து வருகிறதே பின்பு ஏனிந்த பதட்டம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 7. சகோதரரே! உங்கள் சிந்தனையைப் பாராட்டுகிறேன். ஆனால் இஸ்லாம் மார்க்கம் பூர்த்தியானது. யாராலும் மாற்றப்படாதது. அதற்கு ஆதாரம் குர்ஆன். ஆயிரத்து நானூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் எந்த மாற்றமுமின்றி உள்ளது.

  எழுத்துக்கள் மற்றுமல்ல.. கருத்துக்களும் எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால் சில அறிவயில் கருத்துக்களை அன்று மக்கள் புரியவில்லை. இன்றைய விஞ்ஞானம் .. புரிய வைக்கின்றது. ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

  ஆதே போல நபிகளின் சொல் செயல்களைப் பதிந்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. அவற்றையும் தாங்கள் படிக்கலாம். அதன் பின் நீங்கள் உங்கள் எண்ணங்களை எழுதினால் நலம்.

  உதாரணம்.. நபிகளார் சிறு வயது முதலே மக்கத்து மக்களால் அல்அமீன் {நம்பி்க்கையானவர் - நேர்மையானவர்) என்று பெயர் பெற்றவராவார்கள்.

  அவர்கள் பணத்தாசை பிடித்தவர்களல்லர். அவர்கள் கதீஜா ரலி அவர்களிடம் வேலை செய்தார்கள் (வியாபாரம்). ஒரு பெரிய பணக்காரப் பெண்மணி இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால்..

  தற்கொலை பற்றிக் குறிப்பிடுவது.. ஆதாரமற்றது. கீழே உள்ள சரித்தித்தைப் பார்க்கலாம்.

  ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது துணைவியார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,
  தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள்.
  பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா அறியாமைக் காலத்திலேயே கிருத்தவ மதத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுகிறவராகவும், கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.
  அவரிடம் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''என் தந்தையின் சகோதரர் மகனே! உம் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்!'' என்றார்கள். அப்போது வரகா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?'' எனக் கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.
  அதைக் கேட்டதும் வரகா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ''வந்த இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தினர்கள் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!'' என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
  அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவரா போகிறார்கள்? என்று கேட்டார்கள் அதற்கவர் ஆம் நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும், (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப் படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்கு பலமான உதவி செய்வேன். என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் மரணித்து விட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (சிறிது காலம்) நின்று விட்டது. (நூல்: புகாரி, முஸ்லிம்)

  வஹி இறைத்தூது என்பது நாமாக பெற முடியாது.

  இஸ்லாத்தின் அடிப்படையில் அல்லாஹ் (இறைவன்) இணை,துணையில்லாதவன்.. எந்த தேவையும் இல்லாதவன். அவனை யாரும் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை அவனுக்கு நிகராக யாரும் இல்லை.

  அந்த இறைவன் தான் அனணத்தையும் பரிபாலிக்க முடியும். மனிதர்கள் அவனால் படைக்கபட்டவர்கள். அவனது அடிமைகள்.. அவனது கட்டளையை ஏற்று நடக்க கடமைப் பட்டவர்கள்.

  அந்த அடிமைகளில் (மனிதர்களில்) அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் இறைத்தூதர்களே தவிர.. நாமாக எதைச் செய்தும் அந்த தகுதியைப் பெற முடியாது. ஆக இறைவன் மனிதர்களில் சிறந்தவர்களையே தூதர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான்.

  ஆதம் முதல் இப்ராஹிம் (அபரஹம்) - மூசா (மோசஸ்) - ஈசா (ஏசு) மற்றும் எத்தனையோ தூதர்கள் வந்துள்ளனர். அவாகள் அனைவரும் ஒரே இறைவனை வணக்கச் சொன்னார்கள்.

  மேலும் விளக்கம் உங்களது கருத்துக்கேற்ப!

  பதிலளிநீக்கு
 8. வாருங்கள் சகோ,
  //சகோதரரே! உங்கள் சிந்தனையைப் பாராட்டுகிறேன்.
  ஆனால் இஸ்லாம் மார்க்கம் பூர்த்தியானது. யாராலும் மாற்றப்படாதது. அதற்கு ஆதாரம் குர்ஆன். ஆயிரத்து நானூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் எந்த மாற்றமுமின்றி உள்ளது.//
  நன்றி சகோ,
  1400 வருடங்கள் ஒரு பெரிய விடயமே இல்லை. திருக்குறள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது. இசுலாமில் உள்ளதை விட சிறந்த கருத்துக்கள் இதில் உள்ளது உண்மையா இல்லையா? அதே நேரத்தில் குரானிலும் நல்ல கருத்துக்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை.
  பிறர் மனைவியை பார்த்தலே தவறு என்கிறது வள்ளுவம். இசுலாம் என்ன கூறுகிறது, நபி என்ன செய்தார் என்று தங்களுக்கே நன்றாக தெரியும்.
  நான் அதை குறை சொல்லவில்லை. அவர் வாழ்ந்த சூழலில் அவர் அதை செய்தார். அந்த சூழலில் கொடுக்கப்பட்டதே குரான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. அதே நேரத்தில் அதில் மட்டுமே நல்ல கருத்துக்கள் உண்டு. அந்த மார்க்கம் மட்டுமே சிறந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்களும் இதை சிந்திக்க வேண்டும்.


  //ஆதே போல நபிகளின் சொல் செயல்களைப் பதிந்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. அவற்றையும் தாங்கள் படிக்கலாம். அதன் பின் நீங்கள் உங்கள் எண்ணங்களை எழுதினால் நலம்.//
  படித்து கொண்டுதான் இருக்கிறேன்..முழுவதையும் படித்து எழுத நேரம் இல்லை :). ஆதலால் தான் அவப்போழுது எழுதும் சிந்தனைகளை அவப்போழுது எழுதிவிடுகிறேன்.


  //தற்கொலை பற்றிக் குறிப்பிடுவது.. ஆதாரமற்றது. கீழே உள்ள சரித்தித்தைப் பார்க்கலாம்.//

  Upon receiving his first revelations, he was deeply distressed and resolved to commit suicide
  http://en.wikipedia.org/wiki/Muhammad#cite_note-Esposito4-45

  மற்றதை எங்கே படித்தேன் என்று நினைவில்லை.

  //வஹி இறைத்தூது என்பது நாமாக பெற முடியாது.//

  நம்ம நபிக்கு எப்படி கிடைத்தது?
  முயன்றதால் தானே?
  தானாக கிடைக்கவில்லையே?
  இந்த இடத்தில் நன்றாக சிந்தியுங்கள்.
  முயலுங்கள் உங்கள் முன்னும் ஒளி தோன்றும் (ஜிப்ரேல் வருவார்) :)
  நீங்களும் இறைத்தூதராகலாம் :)

  //மனிதர்கள் அவனால் படைக்கபட்டவர்கள். அவனது அடிமைகள்.. அவனது கட்டளையை ஏற்று நடக்க கடமைப் பட்டவர்கள்.//
  இதில் பெரிய சூழ்ச்சி உள்ளதாகவே நான் உணர்கிறேன். இது எங்கே இசுலாமியர்களின் மனதை புன்படுத்திவிடுமோ என்பதற்காக அதை சொல்ல நான் தயங்குகிறேன். கடவுள் விரும்பினால் பார்ப்போம்.

  தங்கள் வருகைக்கும் பல விடயங்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ. :)

  பதிலளிநீக்கு
 9. வாக்குவாதம் செய்ய விரும்பினால்

  கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் மட்டும்

  வாக்குவாதம் செய்யுங்கள்.  கண்ணியக் குறைவானவர்களிடம் வாதம் செய்து

  உங்களது கண்ணியத்தை குறைத்து கொள்ளாதீர்கள்..

  பதிலளிநீக்கு
 10. // ஒருமுறை நபி நிலவை இரண்டாக பிரித்து காட்டியதாகவும், தொடர்ந்து ஐந்து நாட்கள் மழை பொழிய வைத்ததாகவும், கம்பை பாம்பாகவும் வெள்ளை கயிறாகவும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.//

  மதினாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட போது
  எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் கூறினார், அதனால் நபியவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்த உடன் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தது என புஹாரி ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மக்களுக்காக பிரார்த்தணை செய்தார்கள் அதன் காரணமாக, இறைவன் மழையைப் பொழிவித்தான்.

  கம்பை பாம்பாக மாற்றியது நபிகள் நாயகம் அல்ல, மோசஸ் என்கின்ற மூஸா நபி அவர்கள் தான் என்பதை, கீழே உள்ள குர் ஆன் வசனங்கள் குறிப்பிடுகின்றது.

  "மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

  (அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.

  அதற்கு (இறைவன்) "மூஸாவே! அதை நீர் கீழே எறியும்" என்றான்.

  அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

  (இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்." (திருக் குர்ஆன் 20: 17 - 21)

  அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது. (திருக் குர்ஆன் 7 : 107)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ ஒரு தளத்தில் அவர் பாம்பாகவும், குச்சியாகவும் மாற்றியதாக படித்தேன். சரிபார்க்க தற்பொழுது அது எந்த வலைத்தளம் என்றும் ஞாபகம் இல்லை.
   தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரரே

   நீக்கு
 11. prophet moses turned the stick into a snake and not prophet mohammed. please do some more research before writing something controversial.

  பதிலளிநீக்கு
 12. மாமனிதர் நபிகள் நாயகம் வரலாறு(புத்தகம்)>>>

  பதிவிறக்கம் http://onlinepj.com/books/mamanithar/

  பதிலளிநீக்கு
 13. நீங்க சொல்றதெல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது.....

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...