இன்று காலை உறங்கிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு சிந்தனை, ஒரு விழிப்பு.
குர்ஆனில் முனீர் என்ற சொல்லை பார்த்ததாக ஞாபகம். அந்த சொல்லை படிக்கும் பொழுதே பல சிந்தனைகள் எழுந்தது. இந்த முனீர் என்ற சொல் நமது முனிவர் என்ற சொல்லோடு ஒத்துப்போவதாகவே நான் உணந்தேன்.
இன்று காலை இந்த முனீர் என்ற சொல்லை நாம் தமிழ் வளர்த்ததாக கூறும் அகத்தியரோடு நான் தூங்கும் பொழுது ஒப்புமை படுத்தி பார்க்கிறேன் என்னையறியாமல். (இத்துடன் விழிக்கிறேன் பிறகு சிந்தனைகள்)
அகத்தியரை தமிழர்கள் குள்ள முனி என்றும் குறு முனி என்றும் தான் கூறுவர்.
மேலும் தவம் செய்வோரை, தியானம் செய்வோரை முனி,முனிவர், சித்தன், யோகி என்று கூறுவதும் வழக்கம்..
அப்பொழுது முனீர் என்ற அரபு சொல்லும் முனிவர்களைத்தான் குறிக்கின்றதா என்றால். இல்லை.
அரபில் இந்த முனீருக்கு ஒளி என்று என்று விளக்கம் தருகிறார்கள்.
முனீருக்கும் ஒளிக்கும் என்ன சம்பந்தம்?
ஹா ஹா ஹா
"முனிவன் வேறு ஒளி வேறு அல்ல
ஒளியை கண்டவனே முனியாவன்
பின்பு முனியே ஒளியாவான்"
முகமது நபி சிறு வயதிலே பெற்றோரை இழக்கின்றார். அனாதையாகின்றார்(அனாதியை அறிய? :) )
இருப்பத்தைந்து வயதில் திருமணம் நடக்கின்றது.
ஒரு கட்டத்தில் வாழ்கையில் வெறுப்பு ஏற்ப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் தியானம், தவத்தில் ஈடுபடுகின்றார். தன்னுடைய நாற்பதாவது வயதில் இறைவன் வெளிப்படுகிறார் அல்லது முதல் இறை தரிசனம் கிடைக்கின்றது.
தியானத்தின் அல்லது தவத்தின் மூலம் கிடைத்த இறை தரிசனத்தாலும் பிறகு கேப்ரியல் என்ற ஏஞ்சலின் உதவியாலும்(கடவுளின் வார்த்தைகளை இந்த ஏஞ்சல் தான் நபிக்கு கூறுகின்றது பிறகு அதுவே குரானகிறது என்பது வரலாறு. இது நடப்பதில் ரமலான் மதத்தில் அதனால் தான் ரம்ஜான்), தன்னுடைய சிந்தனைகளாலும் வளர்ந்த/வந்த அறிவைத்தான் அவர் இறைவன் தந்த வேதமாக சொல்கிறார்.
ஏன் அவர் தன்னை யோகி, முனி என்று கூறாமல் இறைத்தூதர் என்று கூறுகிறார் என்று நீங்கள் கேட்கலாம்.
கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இது சற்று கொச்சையான பழ மொழி இருப்பினும் அது உண்மையை தெளிவு படுத்தும் என்பதால் கூறுகிறேன்.யாரையும் இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.
"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்று சொல்வார்கள் இதன் உண்மையான பொருள் எனக்கு தெரியாவிடினும் இதை நான் பின்வருவனவற்றிற்கு பயன்படுத்துகிறேன்.
இந்தியாவில் தன்னை உணர்ந்த சிலர் தன்னை இறைவன் என்று கூறிக்கொண்டனர்.
சிவனாவதே சித்தர்களின் நோக்கம். அதாவது இறைவனாவது.
இது தமிழ் சித்தர்களின் இந்திய யோகிகளின் நம்பிக்கை. இதுவே உண்மையும் என்று நினைக்கின்றேன்.
பின்பு இந்தியாவில் யோகம் கற்றுக்கொண்ட இயேசு தன்னை இறைவனின் பிள்ளை என்று கூறினார்.
இதுவும் உண்மையே .
இதற்குப்பின் வருகிற முகமது நபி தன்னை இறைத்தூதன் என்று கூறுகின்றார். இதுவும் உண்மையே.
தன்னை இறைவனாக உணர்ந்தவன், பிறகு இறைவனின் பிள்ளையாக உணர்கிறான், பிறகு இறைத் தூதனாக உணர்கிறான் ஏன்?
இன்றும் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் தன்னை இறைவன் என்றே உணர்கிறார்கள் அல்லது அப்படி கூறுகிறார்கள்.
ஏசுவும், நபியும் தங்களை இறைவன் என்று கூறாமைக்கு காரணம் மற்ற பகுதிகளில் இவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று உணர்ந்திருக்கலாம். இந்தியாவில் சித்த யோக கலாச்சாரம் அனைவருக்கும் தெரியும் என்பதால் இங்கே ஒருவனை இறைவன் எனும் பொழுது நம்புவார்கள்.
ஆனால் இதைப்பற்றி அவ்வளாக தெரியாதவர்கள் மத்தியில் தன்னை இறைவன் என்று சொல்வதை ஏற்க்க மாட்டார்கள் என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.
தான் இறைத்தூதன் என்று முகமது நபி சொன்னதையும் மக்கள் நிராகரிக்கவே செய்தார்கள். இருப்பினும் சற்றேனும் ஆன்ம விழிப்படைந்தவன் கூறுவதை யார் தான் ஏற்காமல் போவர்?.
அப்படித்தான் முதலில் அவரது மனைவியும், பிறகு மகனும்,பிறகு சுற்றத்தாரும் அவரை இறைத்தூதராக நம்ப ஆரம்பிகின்றார்கள்.
அடுத்த பதிவும் முகமது நபியை பற்றித்தான். பின்வரும் இரண்டு பொருளை பற்றி எழுதலாம் என்று எண்ணம். இறைவன் விரும்பினால் பாப்போம்
நபியின் குரு யார்?
நபி வன்முறையாளரா?
(குறிப்பு:நபியின் வரலாற்றை விக்கிபீடியாவில் இருந்து படித்தேன். இந்த பதிவின் நோக்கம் நபியையும் அல்லது இசுலாமையும் குறை சொல்வதோ பெருமை படுத்துவதோ அல்ல. (அவன் இவன் என்று கூறுவதையும் குறைக்க வேண்டும்.முன்பு கோள்களை அப்படித்தான் கூறினேன் பிறகு திருத்திக்கொண்டேன்). எனக்குள்ள சிந்தனைகளை பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே.
எழுதவேண்டும் என்ற அதீத உந்துதல் உள்ளிருந்து வந்து கொண்டே இருக்கின்றது. யாவும் நன்மைக்கே? :) ....எல்லாம் இறைவன் செயல் )