வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 7 ஜனவரி, 2012

சனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?


சூரியக்கதிர்  எப்படி நம்மீது, புவி மீது படுகிறதோ அவ்வாறே சனியின் கதிர் வீச்சும்  நம்மீது படுகிறது.

சனி பகவான் இல்லையேல் நாம் இல்லை. நாம் உலகில் நிம்மதியாக அமைதியாக  வாழ முடியாது. அப்படி இருக்க ஏன் அவரை கண்டு பயப்பட வேண்டும்.
 ஆயுளை நீட்டிக்கும் சக்தி சனிபகவானுக்கு அதிகம் உண்டு அப்படிப்பட்ட சனிபகவானை பார்த்து மக்கள் பயப்பட தேவையில்லை. 

சனி பகவானின் அருளைப்பெற சில வழிகள்:
௧. உண்மை நேர்மை இவற்றை பின்பற்ற வேண்டும்
௨. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதம் பார்க்க கூடாது
௩. நிற பேதம் பார்க்க கூடாது.(கருப்பா அசிங்கமா என்ற வார்த்தைகளை மறந்து விடுதல் நன்று. சனியனே, சனியன் பிடித்தவேனே என்ற வார்த்தைகளையும் தவிர்ப்பது மிக நன்று )
௪ . ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும்,விதவைகளுக்கும்   உங்களால் முடிந்த  உதவிகளை செய்யுங்கள். கண்டிப்பாக இவர்களை பார்த்து முகம் சுழித்தல் கூடாது. 
௫. சனிக்கிழமை தோறும் அல்லது மாதத்திற்கு ஒரு சனிக்கிழமையாவது  நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக நன்று. 
௬. உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வதும் நன்று 
௭ . இனிப்பால் ஆன எள்ளுரண்டை சாப்பிடலாம் - குழந்தைகளுக்கு கொடுங்கள் 
௮ . பாதங்களை  தூய்மையாக வைத்து கொள்ளுதல் அவசியம் 
௯. சனிக்கிழமைகளில் நீல நிற ஆடை அணியலாம் 
௧௦.வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபடுதல் நன்று.  இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனுமன் மற்றும் விநாயகரை வணங்கலாம் என்று சொல்கிறார்கள். 
௧௧. வயதில் மூத்தவர்களுக்கும் , வயதானவர்களுக்கும்   மரியாதை  தருதல்  நன்று (பெற்றோரை தவிக்க விட்டால் ஆப்புதான் )
௧௨. துப்புறவு தொழிலாளர்களையும் , சாக்கடை சுத்தம் செய்பவர்களையும் (அட எந்த தொழில் செய்பவர்களையும்) தாழ்வாக என்ன கூடாது. 
௧௩.நேரம் கிடைக்கும் பொழுது நெற்றி வேர்வை நிலத்தில் படும்படி உடல்  அழுக்காகும் படி   வேலை செய்வது (உபயம்:முருகேசன் சார்)அல்லது விளையாடுவது நல்லது. 

இவற்றை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும் . சனி திசை நடக்கும் பொழுதும் ஏழரை சனி நடக்கும் பொழுதும் இதை கடை பிடிப்பதும் நன்மையை தரும். 

உண்மையாக,  நேர்மையாக, தவறு செய்யாமல்  நடந்து கொள்பவர்களுக்கு சனி பகவான் நன்மையே செய்வார். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக சனிபகவானால் தண்டனை  கிடைக்கும். ஆக முடிந்த வரை நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி. 

4 கருத்துகள்:

 1. நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி.
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 2. //இராஜராஜேஸ்வரி said...
  நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி.
  பகிர்வுக்கு நன்றி..//
  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. இந்த விஷயம் எல்லாம் சனி பகவானுக்கு தெரியுமா ?? அல்லது அவர் சொன்னதா :))

  பதிலளிநீக்கு
 4. //கிருஷ்ணா said...
  இந்த விஷயம் எல்லாம் சனி பகவானுக்கு தெரியுமா ?? அல்லது அவர் சொன்னதா :)//

  வாங்க கிருஷ்ணா, படிச்சதையும் சனியின் காரகத்துவத்தையும் வைத்து எழுதியது இது. அவருக்கு இது தெரியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா உங்களுக்கு இதபத்தி என்னைவிட அதிகமாக தெரியும் என்பதை மட்டும் அறிவேன். :))

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...