அணுமின் நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் இது நியாயமானதா என்ற சந்தேகம் என் மனதில் பல நாட்களாகவே உண்டு. அந்த கேள்விகளை இப்பொழுது இறக்கி வைக்கிறேன்.
கூடங்குளம் மக்களுக்கு இருக்கும் பயம் மரணபயம், தன் சந்ததிகளின் ஆரோக்யமான வாழ்க்கையை பற்றிய பயம். இது நியாயமான பயம். உலகில் உள்ள அனைத்து மக்களும் உயிருக்கும்,சந்ததிகளுக்கும் வரும் ஆபத்தை எதிர்க்கவே செய்வார்கள்.
இவர்களின் இந்த பயத்திற்கு காரணம் ஜப்பானில் ஏற்பட்ட ஒரு விபத்து மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அந்த மக்களுக்கு விளக்கியது அவர்களுக்கு பீதியை,பயத்தை உருவாக்கிவிட்டது.
எந்த ஒரு விபத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவிற்கு தடுக்க முடியும். சில நேரங்களில் முன்னெச்சரிக்கையையும் மீறி விபத்துகள் நடந்து விடுகிறது.
சாலை விபத்துகள் நடக்கின்றது என்பதற்காக நாம் சாலையை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா?
மின்சார விபத்துக்கள் நடக்கின்றது என்பதற்காக நாம் மின்சாரத்தை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?
சமையல் எரிவாயுவினால் விபத்துகள் நடக்கின்றது என்பதற்காக நாம் சமையல் எரிவாயுவை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?
இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இப்போராட்டத்தை கை விட வேண்டும்.
ஒருவேளை நிச்சயமாக அணுமின் நிலையத்தால் விபத்துக்கள் ஏற்படும் என்று உணர்ந்தால் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் அணுமின் நிலையங்களை மூட அங்கிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சேர்ந்து போராட வேண்டும். அது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். அல்லது அவர்கள் அளிக்கும் தைரியம் இவர்களை சாந்தப்படுத்தலாம். அதே நேரத்தில் மத்திய அரசிடம் பேசி நிறைய சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
You said very correct
பதிலளிநீக்குThanks for agreeing :)
நீக்கு//இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இப்போராட்டத்தை கை விட வேண்டும்.//
நீக்குசரியாக சொன்னீர்கள் ....
தங்கள் வருகைக்கு நன்றி :)
நீக்குலேட்டஸ்ட் ஹாட் நியூஸ்..கூடங்களும் எதிர்ப்பாளர்களுக்கு பண உதவி தந்தது ஒரு ஜெர்மனி நாட்டிலிருப்பர்.
பதிலளிநீக்குகாசு கொடுத்தா இங்க எதையும் செய்வாங்க..வாழ்க இந்தியன்...
உண்மைதான்......நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை சுழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது
நீக்கு