வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கூடங்குளம் போராட்டம் தேவையா?



அணுமின் நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் இது நியாயமானதா என்ற சந்தேகம் என் மனதில் பல நாட்களாகவே உண்டு. அந்த கேள்விகளை இப்பொழுது இறக்கி வைக்கிறேன்.

கூடங்குளம் மக்களுக்கு இருக்கும் பயம் மரணபயம், தன் சந்ததிகளின் ஆரோக்யமான வாழ்க்கையை பற்றிய  பயம். இது நியாயமான பயம். உலகில் உள்ள அனைத்து மக்களும் உயிருக்கும்,சந்ததிகளுக்கும் வரும் ஆபத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

இவர்களின் இந்த பயத்திற்கு காரணம் ஜப்பானில் ஏற்பட்ட ஒரு விபத்து மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அந்த மக்களுக்கு விளக்கியது அவர்களுக்கு பீதியை,பயத்தை உருவாக்கிவிட்டது. 

எந்த ஒரு விபத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவிற்கு தடுக்க  முடியும். சில நேரங்களில் முன்னெச்சரிக்கையையும் மீறி விபத்துகள் நடந்து விடுகிறது.

சாலை விபத்துகள்  நடக்கின்றது என்பதற்காக நாம் சாலையை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா? 
மின்சார விபத்துக்கள்  நடக்கின்றது என்பதற்காக நாம் மின்சாரத்தை   பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?
சமையல் எரிவாயுவினால் விபத்துகள்  நடக்கின்றது என்பதற்காக நாம் சமையல் ரிவாயுவை   பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?

இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இப்போராட்டத்தை கை விட வேண்டும்.

ஒருவேளை நிச்சயமாக அணுமின் நிலையத்தால் விபத்துக்கள் ஏற்படும் என்று உணர்ந்தால் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் அணுமின் நிலையங்களை  மூட அங்கிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சேர்ந்து போராட வேண்டும். அது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். அல்லது அவர்கள் அளிக்கும் தைரியம்  இவர்களை சாந்தப்படுத்தலாம்.  அதே நேரத்தில் மத்திய அரசிடம் பேசி நிறைய சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம்  சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை  அழகாக காட்ட. உண்மையில்  நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும்  துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு  இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்
பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக  தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும்  அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை  அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய  வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய  வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க
பொன் நகை ஏன்?
பொன் நகை போனால்
புன்னகையும் சேர்ந்தல்லவோ  போய்விடுகிறது?


சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்






சனி, 7 மே, 2011

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன?


காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன?
நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...

எனக்கு  தெரிந்த  ஒரு ஜோதிடர்  என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிற மனுஷன் மனுஷனா “ஆவதும் பெண்ணாலே”
மனுஷனுக்குள்ள இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”

அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா  சிந்தனை செய்திருக்கின்றார்.

நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே!
ஒரு குடும்பம்  உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!!
ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு   உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!

இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான்.
ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும்   சொல்லலாம் .
இருந்த   போதிலும்  ஒரு  சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக  நான் உணர்கிறேன.


எந்த  ஒரு   கலாசாரத்தையும்  பண்பாட்டையும்  கட்டிக்  காக்க   கூடிய  சக்தி  பெண்ணுக்கு சற்று  அதிகமாகவே  உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)

ஆங்கிலத்தில்  பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக  பார்த்தல்  ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.  

ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும்  ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார். 

இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.
அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும்  உண்டு).
நல்லது ஆவதும் பெண்ணாலே
கெட்டது அழிவதும் பெண்ணாலே !
 என்பதற்கு  இலக்கணமாக  எந்த  பெண்  இருக்கின்றாளோ  அப்படிப்பட்ட    பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும்  வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.

புதன், 27 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?



இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும்.  (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)

ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும்  நினைக்கின்றனர்.

இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான். 

ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம். 

ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில்  இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம். 

இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு  சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை. 

ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
  இவங்க...இவங்களுக்கு  ஏன் நல்லது செய்ய  கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம். 
 
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)

வியாழன், 14 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன?

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவீனத்தை எடுத்துரைக்க மறந்ததேனோ?

இந்திய அளவிலான ஊடகங்கள் தமிழகத்தை கேவலமாக பார்க்கின்றன , இங்கே அறிவிக்கப்பட்டுள்ள
இலவசத்திட்டங்களால்.

இன்று ஓட்டுக்கு காசு கொடுப்பதை தடுக்கும் தேர்தல் ஆணையம் ஏன் ஓட்டுக்கு வண்ணத்தொலைக்காட்சி, நிலம், இலவசமாக கொடுக்கப்படும் என்று கடந்த தேர்தலில் அறிவித்ததை தடுக்க வில்லை.
ஏழை எளிய மக்களுக்கு சிலவற்றை இலவசமாக தருவதில் தவறில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
இவற்றை தருவோம் ஆதலால் எங்களை தேர்ந்தெடுங்கள் என்பது எவ்வளவு பெரிய குற்றம். இது
ஜனநாயகத்தை கேளிக்குத்தாக்கும் செயல் அல்லவா? ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கும் இந்த மாதிரி அறிவிப்புக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதை செய்யாத வரையில் தேர்தல் ஆணையம் அறிவீனமாகவே செயல்படுகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முதலில் சிறப்பான நடவடிக்கை எடுத்தது என்றாலும் அது கடைசி இரண்டு , மூன்று நாட்களில் கோட்டை விட்டு விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இருப்பினும் வரலாறுகாணாத வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல் பட்டது என்பதை மறுக்க இயலாது (வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி......இது சில சந்தேகங்களை தருகிறது)

உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.


வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா?

நம் மக்கள் கெட்டு விட்டனர் . அவர்களை கெடுத்ததில் திரைத்துரையினருக்கும் ஊடகங்களுகுக்கும் முக்கிய பங்கு உண்டு.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில நடிகர்களுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். ஆய்ந்து அறிய முற்படும் எழுத்தாளர்களும், ஊடகங்களும் கூட நடிகனின் கருத்தை அறிய ஆவல் படுகின்றனர் என்பதை விட ஆணை என்ன என்பது போல் எதிர்ப்பர்க்கின்றனர். திரைத்துறையை பற்றிய அவர்களின் கருத்தை கேட்பதில் தவறில்லை. ஆனால் அரசியலில், சமூகம் சம்பந்தம்மாக அவர்களின் கருத்து தேவையா? (அவர்களுக்கு தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டாமா?)

எதோ எம்.ஜி.ஆர்-ம், என்.டி. ஆர்- ம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மக்களும் ஊடங்களும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைப்பது தவறு. மேலும் அவர்களின் அரசியல் சம்பந்தமான, முக்கிய பிரச்சனைகளின் சம்பந்தமான கருத்து என்ன என்று அறிய முற்படுவது முட்டாள் தனமாக தெரிகிறது.

ஒரு நடிகன் தானே முன்வந்து அவனின் கருத்தை தெரிவிப்பதில் தவறில்லை, அது சரியாக இருப்பின் அது சுலபமாக மக்களை சென்றடையலாம் - அவனை அந்த கருத்திற்காக கொண்டாடுவதிலும் தவறில்லை, ஆனால் ஊடகங்கள் தானாக சென்று நடிகர்களின் கருத்தை எதிர்ப்பார்ப்பது தவறு. மேலும் நடிகர்களில் முட்டாள்களும் உச்ச நிலையில் உள்ளனர் , அறிவாளிகளும் உச்ச நிலையில் உள்ளனர். யார் அறிவாளி யார் முட்டாள் என்று இந்த ஊடகங்களுக்கு தெரியாதா?. இவர்கள் விற்பனைக்காக, கவர்ச்சிக்காகவே நடிகர்களின் கருத்தை அறிய முற்ப்படுகின்றனர்.

இயக்குனர் அமீர் அவர்கள் ஒரு தடவை சொன்னார் நீங்கள் தலைவர்களை திரைத்துறையில் தேடாதீர்கள் ஏன் எனில் யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று.
அஜித் அவர்கள் சொல்லவில்லை? ஏன் நடிகர்களின் நிலையை அறிய முயல்கிறீர்கள், அவர்களை அரசியலில் ஈடுபடுத்தாதீர்கள் என்று.

(இன்று தினமலரில் ஒரு செய்தி அமீர்கான் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பவருக்கு ஆதரவு. நமது நடிகர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் அதற்கானா என்னுடைய பதில் தான் இது. நான் சொல்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?)

Related Posts Plugin for WordPress, Blogger...