வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா?

நம் மக்கள் கெட்டு விட்டனர் . அவர்களை கெடுத்ததில் திரைத்துரையினருக்கும் ஊடகங்களுகுக்கும் முக்கிய பங்கு உண்டு.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில நடிகர்களுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். ஆய்ந்து அறிய முற்படும் எழுத்தாளர்களும், ஊடகங்களும் கூட நடிகனின் கருத்தை அறிய ஆவல் படுகின்றனர் என்பதை விட ஆணை என்ன என்பது போல் எதிர்ப்பர்க்கின்றனர். திரைத்துறையை பற்றிய அவர்களின் கருத்தை கேட்பதில் தவறில்லை. ஆனால் அரசியலில், சமூகம் சம்பந்தம்மாக அவர்களின் கருத்து தேவையா? (அவர்களுக்கு தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டாமா?)

எதோ எம்.ஜி.ஆர்-ம், என்.டி. ஆர்- ம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மக்களும் ஊடங்களும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைப்பது தவறு. மேலும் அவர்களின் அரசியல் சம்பந்தமான, முக்கிய பிரச்சனைகளின் சம்பந்தமான கருத்து என்ன என்று அறிய முற்படுவது முட்டாள் தனமாக தெரிகிறது.

ஒரு நடிகன் தானே முன்வந்து அவனின் கருத்தை தெரிவிப்பதில் தவறில்லை, அது சரியாக இருப்பின் அது சுலபமாக மக்களை சென்றடையலாம் - அவனை அந்த கருத்திற்காக கொண்டாடுவதிலும் தவறில்லை, ஆனால் ஊடகங்கள் தானாக சென்று நடிகர்களின் கருத்தை எதிர்ப்பார்ப்பது தவறு. மேலும் நடிகர்களில் முட்டாள்களும் உச்ச நிலையில் உள்ளனர் , அறிவாளிகளும் உச்ச நிலையில் உள்ளனர். யார் அறிவாளி யார் முட்டாள் என்று இந்த ஊடகங்களுக்கு தெரியாதா?. இவர்கள் விற்பனைக்காக, கவர்ச்சிக்காகவே நடிகர்களின் கருத்தை அறிய முற்ப்படுகின்றனர்.

இயக்குனர் அமீர் அவர்கள் ஒரு தடவை சொன்னார் நீங்கள் தலைவர்களை திரைத்துறையில் தேடாதீர்கள் ஏன் எனில் யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று.
அஜித் அவர்கள் சொல்லவில்லை? ஏன் நடிகர்களின் நிலையை அறிய முயல்கிறீர்கள், அவர்களை அரசியலில் ஈடுபடுத்தாதீர்கள் என்று.

(இன்று தினமலரில் ஒரு செய்தி அமீர்கான் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பவருக்கு ஆதரவு. நமது நடிகர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் அதற்கானா என்னுடைய பதில் தான் இது. நான் சொல்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...