வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?


மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பர் சிலர்.
பிறப்பையும் இறப்பையும் மாத்த முடியாது ஆனால் நாம் வாழும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்பர் சிலர்.

இதில் யார் சொல்வது உண்மை? நான் சொல்கிறேன் (ஏற்கனவே சில சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்...இங்கே நான் என்பது ஒரு விவாதத்திற்காக மட்டுமே) இரண்டு பேர் சொல்வதும் பொய்.

விவாதத்திற்கு குழந்தை பிறப்பை எடுத்துக்கொள்வோம்.
குழந்தை என்பது ஆண்டவனின் அருளால் தான் பிறக்கின்றது என்பர் பலர். இது உண்மையா?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்தால் கரு உருவாகலாம் அல்லது உருவாகாமல் போகலாம். கரு உருவானால் எந்த பிரச்சனையும் இல்லை. கரு உருவாக வில்லையெனில், அந்த தம்பதியர் போன ஜென்மத்தில் பாவம் செய்துள்ளனர் ஆதலால் தான் குழந்தை பிறக்கவில்லை என்பர் பலர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்கும் என்று இருந்தாலும் அவர்கள் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை அல்லது கருத்தடை உபயோகிக்கின்றனர் எனில் அவர்களுக்கு கடவுள் எப்படி குழந்தையை தருவார்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு முதல் பத்து குழந்தை வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திக்கொண்டான். இங்கே கடவுளின் பங்கு என்ன?

இதிலிருந்து என்ன தெரிகின்றது மனிதன் நினைத்தால் தான் சில நடக்க வேண்டியவைகள் நடக்கும் இல்லையேல் நடக்காது.
(தொடரும்....)

5 கருத்துகள்:

 1. சார் நிங்க் சொல்ரது சரிதான் என்ன நடக்க்னும்னு கடவுல் தீர்மானிக்கிரார் எப்படி நடதிக்கலாம்ன்ரத நம்ம விருப்பத்துக்கே விட்டுட்டார்னு நெனைக்கிரென்

  பதிலளிநீக்கு
 2. //syed said...
  சார் நிங்க் சொல்ரது சரிதான் என்ன நடக்க்னும்னு கடவுல் தீர்மானிக்கிரார் எப்படி நடதிக்கலாம்ன்ரத நம்ம விருப்பத்துக்கே விட்டுட்டார்னு நெனைக்கிரென் //

  வாங்க சையத் இது சரியாகவும் இருக்கலாம் இதில் சற்று திருத்தமும் வரலாம். ஆய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்.

  பதிலளிநீக்கு
 3. தோழர் புரட்சிமணி அவர்களே தங்களுடைய இந்த பதிவிற்கு எளிமையாகவும் பதில் தரலாம் .. விரிவாகவும் பதில் தரலாம் ..

  எளிமையாக என்றால் தாங்கள் தங்கள் ஊரில் உள்ள சைவ சித்தாந்த வகுப்புகளில் சேர்ந்து பயிலுங்கள் - கடவுள் பற்றிய பல உண்மைகளை அறியலாம்...

  திருவருளால்,தங்களது கேள்விகளுக்கு விரைவில் எமது சிவயசிவ -வில் பதில் தருகிறோம்..
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  தோழர் புரட்சிமணி அவர்களே தங்களுடைய இந்த பதிவிற்கு எளிமையாகவும் பதில் தரலாம் .. விரிவாகவும் பதில் தரலாம் ..

  எளிமையாக என்றால் தாங்கள் தங்கள் ஊரில் உள்ள சைவ சித்தாந்த வகுப்புகளில் சேர்ந்து பயிலுங்கள் - கடவுள் பற்றிய பல உண்மைகளை அறியலாம்...

  திருவருளால்,தங்களது கேள்விகளுக்கு விரைவில் எமது சிவயசிவ -வில் பதில் தருகிறோம்..
  நன்றி
  //

  வகுப்புகள் பற்றி விசாரிக்கிறேன்... திருவருள் நிச்சயம் கிட்டும் ...பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி தோழரே இதை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டதற்கு

  பதிலளிநீக்கு
 5. It is not easy to understand the nature or God. We cannot pin point reasons for our fortunes or misfortunes. One can have the answers for the questions (i.e. About the exsistence of God, the role of fate, What is after Death, etc.) only after self realisation.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...