வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 3

குழந்தை பிறப்பது மனிதன் நினைத்தால் தான் நடக்கும், உயிரையும் மனிதனால் உருவாக்க முடியும் என்று சென்றைய பதிவுகளில் பார்த்தோம். (முந்தைய பதிவிற்கான வழிகாட்டி).இந்த பதிவில்

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது யார் என்பது பற்றி பார்ப்போம்.

குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்டவான் தான் தீர்மானிக்கிறான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இறைவனை நம்புபவ்ரின் கருத்து.

எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து. மற்றும் பகுத்தறிவாளர்கள் , நாத்திகர்கள் என்று சொல்பவரின் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இருவர் சொல்வதுமே சரிதான். ஆனால் சற்று ஆழ்ந்து சென்றால் இங்கே இருவர் சொல்வதுமே தவறுதான் என்று தெரியவரும்.

ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா இல்லை பெண்ணாக பிறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. (உண்மையில் மனிதனே தீர்மானிகின்றான்). ஆனால் அவன் அதை அறிவதில்லை, உண்மையில் அவன் அறிந்திருந்தாலும் நாட்டில் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
அவன் "அந்த" நேரத்தில் "எங்கே" "எந்த நிலையில்" இயங்குகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது முடிவாகிறது. ( இதை நான் சொல்லவில்லை ஒரு சித்தர் சொன்னது. அனுபவ பூர்வமாக சிலரும் சொல்வது).
ஆக இங்கே இந்த வாதத்தில் பங்கு பெற்ற இருவருமே தோற்க்கின்றனர்
தொடர்ந்தது யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.......


ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கடவுள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி என்ற பதிவை காண நேர்ந்தது.
அதற்க்கான வழிகாட்டி. அந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை கீழே கொடுத்துள்ளேன்.
தங்களுடைய இந்த பதிவு அருமை. சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. சில உண்மைகள் பொதிந்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில தவறுகள் உள்ளது. இதை சுட்டி காட்டுவது என் கடமை என் நினைக்கின்றேன்.

//மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை//
இது தவறு. கிருஷ்ணனின் இறப்பு பற்றிய் குறிப்பு உள்ளது. இராமனின் இறப்பு பற்றிய குறிப்பு இருக்கா என தெரியவில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். நமக்கு ஒன்று தெரியாது என்பதால் அது யாருக்குமே தெரியாது எனபது சரியல்ல.

//ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவர் ஒருவராக இருக்க வேண்டும்.கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும். 3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது. 4. அவரைப்போன்று எவறுமே இல்லை!//

கடவுள் அப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள்(நாம்) யார்?
அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது உங்களது ஆசையாக இருக்கலாம் ஆனால் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்ப்புடையது அல்ல. அவன் எப்படியும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ரஜ்னிஷ் ஓஷோ இறக்கவில்லை என்பதற்கான குறிப்புகள் உள்ளது. (இதை ஆய்ந்து பார்க்க வேண்டும்)
மேலும் மனிதன் இறக்கமால் இருக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு குறிப்புகள் உள்ளன. (இதைப்பற்றி தனிப்பதிவே போட வேண்டும்).
நான் கடவுள் என்று சொல்லும் திருட்டு சாமியார்கள் இருக்கின்றனர் என்பது உண்மை. போலிச்சாமியியாரின் முகத்திரையை கிழியுங்கள். அதே நேரத்தில். "நான் கடவுள்" என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(ஜாஹிரின் பேச்சுக்களை நீங்கள் நிச்சயம் கேட்டுரிப்பீர்கள் என நம்புகிறேன். )
கடவுள் இப்படித்தான் இருப்பார் என்பது பிறர் சொல்லி படித்து தெரிந்து கொண்டவன் வாதம்.
கடவுள் எப்படியும் இருப்பார் என்பது அனுபவித்தவன் வாதம் அல்லது கூறும் உண்மை.
அனுபவிப்பவுருக்கும் படிப்பவருக்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.
அதே வித்தியாசம் தான் கடவுளைப்பற்றி படிப்பவருக்கும் அனுபவிப்பவருக்கும் உள்ளது.


கடவுள் பற்றி நான் சில பதிவுகளை எழுதியுள்ளேன் அதற்க்கான வழிகாட்டி கீழே.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/2.html
நீங்கள் என்னுடைய பின்னூடத்தை சரியான முறையில் எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கு விருப்பம் நேரம் இருந்தால் தங்களுடைய கருத்தையும் தெரிவிக்கலாம்.
தங்களுடைய எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
இராசா. புரட்சிமணி

சனி, 9 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 2

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடவுளைப்பற்றி யாரும் கவலைப்படாத காலம் முன்பு இருந்தது என்று சொன்னால் இன்றுள்ள மக்கள் அதை நம்ப மறுப்பார்கள். ஆனால் சில குறிப்புகள் கூறுகின்றன.

என்று கடவுள் இருக்கிறார் என்ற வாதம் எழுந்ததோ அன்றே அவர் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்க வேண்டும்.

அந்த வாதத்திற்கான முடிவு இதுவரை எட்டப்படவில்லை . அதை எட்டுவதற்கானஒரு முயற்சியே இது.

அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து இந்த வாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.(இதை முடிவுக்கு கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மை என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்)
இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் உங்களின் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகாது. ஆதலால் உங்களின் கேள்விகளையும் பதில்களையும் தாருங்கள். (உலகத்தில் உள்ள அனைவரது வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் நமது வாதத்தையாவது முடிவுக்கு கொண்டு வருவோம்- கவுண்டமணி சொல்றமாதிரி பின்னாடி வர சந்ததிகள் இத பாத்து தெரிஞ்சிக்கட்டும்.)

உயிரை உருவாக்குவது யார்?
காலம் காலமாக மதவாதிகளின் முக்கிய வாதமாக இருப்பது உயிரை உருவாக்குவது கடவுளே,குழந்தையை உருவாக்குவது கடவுளே,மனிதனை உருவாக்குவது கடவுளே, மிருகத்தை உருவாக்குவது கடவுளே என்பதுதான். இதற்கு இணையான வாதத்தை அறிவியலாளர்களால் பல காலமாக வைக்க முடியவில்லை. ஆனால் இன்றோ அதற்க்கு இணையான வாதத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
(உங்களுக்கு தெரியாதது இல்ல)
ஆம் இன்று அறிவியலாளர்கள் நிரூபித்து விட்டனர். உயிரை மனிதனால் உருவாக்க முடியும் என்று.

மனிதன் "க்ளோனிங்" முறையில் "டோலி" என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கி சாதனைப் படைத்தான். இணையான வாதத்தை வைத்துள்ளான் என்று ஒரு தரப்பு கூறினாலும். இது இணையான வாதமா?
"டோலி" என்பது "போலி " அல்லவா? என்பது மற்றும் ஒரு தரப்பினரின் கேள்வி.
முதல் பாகத்திற்கான வழிகாட்டி.
வாதம் தொடரும்......

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?


மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பர் சிலர்.
பிறப்பையும் இறப்பையும் மாத்த முடியாது ஆனால் நாம் வாழும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்பர் சிலர்.

இதில் யார் சொல்வது உண்மை? நான் சொல்கிறேன் (ஏற்கனவே சில சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்...இங்கே நான் என்பது ஒரு விவாதத்திற்காக மட்டுமே) இரண்டு பேர் சொல்வதும் பொய்.

விவாதத்திற்கு குழந்தை பிறப்பை எடுத்துக்கொள்வோம்.
குழந்தை என்பது ஆண்டவனின் அருளால் தான் பிறக்கின்றது என்பர் பலர். இது உண்மையா?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்தால் கரு உருவாகலாம் அல்லது உருவாகாமல் போகலாம். கரு உருவானால் எந்த பிரச்சனையும் இல்லை. கரு உருவாக வில்லையெனில், அந்த தம்பதியர் போன ஜென்மத்தில் பாவம் செய்துள்ளனர் ஆதலால் தான் குழந்தை பிறக்கவில்லை என்பர் பலர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்கும் என்று இருந்தாலும் அவர்கள் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை அல்லது கருத்தடை உபயோகிக்கின்றனர் எனில் அவர்களுக்கு கடவுள் எப்படி குழந்தையை தருவார்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு முதல் பத்து குழந்தை வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திக்கொண்டான். இங்கே கடவுளின் பங்கு என்ன?

இதிலிருந்து என்ன தெரிகின்றது மனிதன் நினைத்தால் தான் சில நடக்க வேண்டியவைகள் நடக்கும் இல்லையேல் நடக்காது.
(தொடரும்....)

Related Posts Plugin for WordPress, Blogger...