வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கடவுள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி என்ற பதிவை காண நேர்ந்தது.
அதற்க்கான வழிகாட்டி. அந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை கீழே கொடுத்துள்ளேன்.
தங்களுடைய இந்த பதிவு அருமை. சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. சில உண்மைகள் பொதிந்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில தவறுகள் உள்ளது. இதை சுட்டி காட்டுவது என் கடமை என் நினைக்கின்றேன்.

//மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை//
இது தவறு. கிருஷ்ணனின் இறப்பு பற்றிய் குறிப்பு உள்ளது. இராமனின் இறப்பு பற்றிய குறிப்பு இருக்கா என தெரியவில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். நமக்கு ஒன்று தெரியாது என்பதால் அது யாருக்குமே தெரியாது எனபது சரியல்ல.

//ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவர் ஒருவராக இருக்க வேண்டும்.கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும். 3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது. 4. அவரைப்போன்று எவறுமே இல்லை!//

கடவுள் அப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள்(நாம்) யார்?
அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது உங்களது ஆசையாக இருக்கலாம் ஆனால் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்ப்புடையது அல்ல. அவன் எப்படியும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ரஜ்னிஷ் ஓஷோ இறக்கவில்லை என்பதற்கான குறிப்புகள் உள்ளது. (இதை ஆய்ந்து பார்க்க வேண்டும்)
மேலும் மனிதன் இறக்கமால் இருக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு குறிப்புகள் உள்ளன. (இதைப்பற்றி தனிப்பதிவே போட வேண்டும்).
நான் கடவுள் என்று சொல்லும் திருட்டு சாமியார்கள் இருக்கின்றனர் என்பது உண்மை. போலிச்சாமியியாரின் முகத்திரையை கிழியுங்கள். அதே நேரத்தில். "நான் கடவுள்" என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(ஜாஹிரின் பேச்சுக்களை நீங்கள் நிச்சயம் கேட்டுரிப்பீர்கள் என நம்புகிறேன். )
கடவுள் இப்படித்தான் இருப்பார் என்பது பிறர் சொல்லி படித்து தெரிந்து கொண்டவன் வாதம்.
கடவுள் எப்படியும் இருப்பார் என்பது அனுபவித்தவன் வாதம் அல்லது கூறும் உண்மை.
அனுபவிப்பவுருக்கும் படிப்பவருக்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.
அதே வித்தியாசம் தான் கடவுளைப்பற்றி படிப்பவருக்கும் அனுபவிப்பவருக்கும் உள்ளது.


கடவுள் பற்றி நான் சில பதிவுகளை எழுதியுள்ளேன் அதற்க்கான வழிகாட்டி கீழே.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/2.html
நீங்கள் என்னுடைய பின்னூடத்தை சரியான முறையில் எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கு விருப்பம் நேரம் இருந்தால் தங்களுடைய கருத்தையும் தெரிவிக்கலாம்.
தங்களுடைய எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
இராசா. புரட்சிமணி

2 கருத்துகள்:

  1. இராமன் சரயு நதியில் மூழ்கி வைகுண்டம் ஏகினாராம். அவரது அவதார காலம் முடிந்ததாக யமதர்மராஜா விநயமாக முதல் நாள் அறிவித்தாராம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க இராஜராஜேஸ்வரி,
    தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...