வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கேது எங்கே எப்படி மோட்சம் வழங்குவான்?

பொதுவாக சொல்லப்படுவது கேது 12ல் இருந்தால் மறுபிறவி இல்லை. 12 என்பது மோட்சத்தை குறிக்கும் வீடு அதனால் அது சரி .

அதே நேரத்தில் கேது 5-ல் இருந்தாலும் மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகின்றதே அது ஏன்?

ஐந்தாம் வீடு பூர்வ புண்யத்தை குறிப்பது. அதில் கேது இருப்பதால், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் அவன் மோட்சத்தை அளிக்கலாம்.(இந்த ஜென்மத்தில் பாவங்கள் செய்ய வில்லை எனில். அதே நேரத்தில் பன்னிரெண்டாம் வீடும் அதன் தலைவனும் நன்றாக இருத்தல் இன்னும் அந்த வாய்ப்பை அதிகரிக்கலாம்).

ஐந்தாம் வீடு அறிவைக்குறிப்பது. கேது இவனை கடவுள் யார் என்பதை ஆய்ந்தறிய செய்து அதன் மூலமும் மோட்சம் வழங்கலாம்.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு தியானத்தைக்குறிக்கும். இந்த வீட்டில் கேது அமர்வதினால் அவன் தியானத்தின் மூலம் மோட்சம் அடைய வைக்கலாம்.(குரு பார்வை இன்னும் இந்த பலனை அதிகரிக்கலாம்).

உச்சம் பெற்ற கேது ஒருவனின் ஜாதகத்தில் இருந்தாலும் அவன் மோட்சத்தை அளிக்கவல்லவன் என்பது சிலரின் கருத்து.

6 கருத்துகள்:

 1. ஜொதிடத்தில் உங்கல் பார்வை மிக வித்தியாசமாக உல்லது கிரகங்கலை புதிய கோனத்தில் ஆராய்சி செய்கிரீர் உங்கல் கருத்துக்கல் சின்திக்க வைக்கின்ரன
  தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 2. //syed said...

  ஜொதிடத்தில் உங்கல் பார்வை மிக வித்தியாசமாக உல்லது கிரகங்கலை புதிய கோனத்தில் ஆராய்சி செய்கிரீர் உங்கல் கருத்துக்கல் சின்திக்க வைக்கின்ரன
  தொடரட்டும்//


  தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி சையத். எல்லாப் புகழும் இறைவனுக்கே. காலம் கடந்த மறு மொழிக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. அண்ணெ, பதிவு நல்லா இருக்கு.

  "அதே நேரத்தில் கேது 5-ல் இருந்தாலும் மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகின்றதே அது ஏன்?" : இது எந்த புஸ்தகத்தல இருக்குன்னு கொஞ்ஜம் சொன்ன சவுகரியம இருக்கும்.


  ஒருதன் பூர்வ ஜன்மத்தல் புண்ணியம் செஞ்ஜிருந்தா, இந்த ஜன்மத்தல் அதுக்கு தகுந்த மாதிரி வாழ்கை ஏற்படுமெ தவிர மோட்சம் ........ மோட்சம் வாய்க்ரதுக்கு இந்த புண்ணியமும் கரையனும். அக்கவுன்டல பாலன்ஸ் இருக்கிற வரைக்கும் மறுஜென்மம்.

  பண்னிரென்டு மோட்சம் மட்டும் இல்ல இன்னும் பல விஷயங்கள குறிக்குது. உம்: கட்டில் சுகம், ஆஸ்பத்திர்ல கட்டில கெடக்குறது.

  ராகு, கேது எதுல உச்சம் அடையராங்க அப்டிங்ர விஷயம் நிரைய சர்சைல இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. //kandhan said...
  அண்ணெ, பதிவு நல்லா இருக்கு.

  "அதே நேரத்தில் கேது 5-ல் இருந்தாலும் மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகின்றதே அது ஏன்?" : இது எந்த புஸ்தகத்தல இருக்குன்னு கொஞ்ஜம் சொன்ன சவுகரியம இருக்கும்.//

  வாங்க அண்ணே, வணக்கம். சில பல தெருவோரம் விற்கும் புத்தகங்களில் படித்ததுண்டு. இப்ப கைல இருக்கிறது 1008 ஜோதிட குறிப்புகள் - சந்திரசேகர் எழுதியது. பல பெரிய புத்தகங்களில் சொல்லும் பலனை விட இந்த மாதிரி குட்டி புத்தகங்களில் சொல்லும் பலன் சரியாக இருக்கிறது என்பதே என் அனுபவம்.  //ஒருதன் பூர்வ ஜன்மத்தல் புண்ணியம் செஞ்ஜிருந்தா, இந்த ஜன்மத்தல் அதுக்கு தகுந்த மாதிரி வாழ்கை ஏற்படுமெ தவிர மோட்சம் ........ மோட்சம் வாய்க்ரதுக்கு இந்த புண்ணியமும் கரையனும். அக்கவுன்டல பாலன்ஸ் இருக்கிற வரைக்கும் மறுஜென்மம். //

  நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். நமக்கு இத பத்தி அந்த அளவுக்கு தெரியாது.


  //பண்னிரென்டு மோட்சம் மட்டும் இல்ல இன்னும் பல விஷயங்கள குறிக்குது. உம்: கட்டில் சுகம், ஆஸ்பத்திர்ல கட்டில கெடக்குறது. //
  சரிதான்...இது இன்னும் சில சுகங்களையும் காட்டுது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.

  //ராகு, கேது எதுல உச்சம் அடையராங்க அப்டிங்ர விஷயம் நிரைய சர்சைல இருக்கு.//
  ஜோதிடமே சர்சையில தானே இருக்கு...ராகு கேது விருசிகத்தில உச்சம் என்று தமிழ் நூல்கள் கூர்கின்றன. அதுவும் சரியாக இருப்பதாகவே நினைக்கிறேன்.. உங்கள் அனுபவம் எப்படி.எப்படி அண்ணே ?

  பதிலளிநீக்கு
 5. கேது 12 இல் இருந்தால் அவன் கண்டிப்பாக சித்தர்கள் வழிக்கு கண்டிப்பாக வருவார்கள் .

  பதிலளிநீக்கு
 6. k sir my doubt is kethu is in 12th house in my jathagam so no rebirth for me is it right

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...