வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 27 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும்.  (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)

ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும்  நினைக்கின்றனர்.

இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான். 

ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம். 

ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில்  இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம். 

இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு  சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை. 

ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
  இவங்க...இவங்களுக்கு  ஏன் நல்லது செய்ய  கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம். 
 
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)

8 கருத்துகள்:

 1. romba manasa thoduvidiga neega vagupariku vainthu
  veliya ninna aala illa natha ungalai oula kutikiti ponain romba nala nega writing pannariga

  பதிலளிநீக்கு
 2. //sundari said...

  romba manasa thoduvidiga neega vagupariku vainthu
  veliya ninna aala illa natha ungalai oula kutikiti ponain romba nala nega writing pannariga
  //

  வாங்க சுந்தரி , எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது நீங்கள் தான் வாத்தியார் வகுப்பறையில் எனக்கு முதன் முதலில் வரவேற்ப்பு தந்தீர்கள். ஏதோ தோன்றுவதை எழுதிகிறேன். அது தங்களுக்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 3. ஏழாம் அதிபதிய மட்டும் பார்தா எப்டி?

  ஏழாம் இடத்துல நின்ன கிரகம், ஏழாம் இடத்தை எந்த்த கிரகம் பாக்குது இதெல்லம் கவனிக்க வேன்டாமா? அல்லது இதெல்லம் பாதிப்பை ஏர்ப்படுத்தாத?

  விளக்கம் தேவை

  பதிலளிநீக்கு
 4. //super syed said...
  ஏழாம் அதிபதிய மட்டும் பார்தா எப்டி?

  ஏழாம் இடத்துல நின்ன கிரகம், ஏழாம் இடத்தை எந்த்த கிரகம் பாக்குது இதெல்லம் கவனிக்க வேன்டாமா? அல்லது இதெல்லம் பாதிப்பை ஏர்ப்படுத்தாத?

  விளக்கம் தேவை//  சரியாக கேட்டீர்கள் ..எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தும்... ஏன் உங்க லக்னம் கூட பாதிப்ப ஏற்ப்படுத்தும் . அடுத்த பதிவுல கொஞ்சம் ஏழுதலாம்னு விட்டுவிட்டேன்.தொடரும்....போட மறந்துவிட்டேன்....

  பதிலளிநீக்கு
 5. புரட்சி மணி,
  நீங்க ரொம்ப எழுதுங்க நான் படிக்கிறேன் ரொம்ப முக்கியத்துவம் ஜாதகத்திற்கு தாங்க பாபாக்கு என் சந்நியாசி யோகம் கிட்டுச்சி அதைப்பற்றி சொல்லுங்க‌

  பதிலளிநீக்கு
 6. //
  my blog said...
  புரட்சி மணி,
  நீங்க ரொம்ப எழுதுங்க நான் படிக்கிறேன் ரொம்ப முக்கியத்துவம் ஜாதகத்திற்கு தாங்க பாபாக்கு என் சந்நியாசி யோகம் கிட்டுச்சி அதைப்பற்றி சொல்லுங்க‌//  நீங்க படிக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி...என்னால முடிஞ்ச அளவுக்கு தெரிஞ்ச அளவுக்கு ஜாதகத்துக்கு முக்கியத்துவம் தருகிறேன். நீங்க எந்த பாபா பத்தி சொல்றிங்க? சாய் பாபா ? அல்லது பாபாஜி?

  பதிலளிநீக்கு
 7. //sundari said...

  sai baba sir//
  ஒ அந்த மை ப்ளாக் நீங்க தானா?
  பாபா தானே முயற்சி செய்துடுவோம்..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...