வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்?

இந்தியா கிரிக்கெட் எனும் மட்டைப்பந்தாட்டத்தில் உலகக் கோப்பை வென்றும் பெரும்பாலானோருக்கு முழு மகிழ்ச்சி இல்லை. நூறாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த சச்சின் அதை அடிக்கவில்லை. இது ஒரு சிறு குறை என்றாலும் அவரை குறை சொல்ல முடியாது.
ஏன் எனில் மட்டைப்பந்து என்பது ஒரு குழுவின் ஆட்டம். அதில் ஒரு தனி நபரே அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தல் தவறு. மற்ற ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடினார் மேலும் அவரால் தான் காலிறுதி அரையிறுதி போட்டிகளில் வெல்ல முடிந்தது. மேலும் இந்த உலககோப்பையில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் அவருக்கு இரண்டாம் இடத்தை பெற்று தந்தது.
ஆதலால் அவரின்றி இந்த உலககோப்பையை வென்று இருப்பதும் கடினமே. இருப்பினும் அவர் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது இரட்டிப்பு மழிச்சியாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்தியா வென்றது.. அதுவே அவருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி. சச்சினின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...