வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 9 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 2

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடவுளைப்பற்றி யாரும் கவலைப்படாத காலம் முன்பு இருந்தது என்று சொன்னால் இன்றுள்ள மக்கள் அதை நம்ப மறுப்பார்கள். ஆனால் சில குறிப்புகள் கூறுகின்றன.

என்று கடவுள் இருக்கிறார் என்ற வாதம் எழுந்ததோ அன்றே அவர் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்க வேண்டும்.

அந்த வாதத்திற்கான முடிவு இதுவரை எட்டப்படவில்லை . அதை எட்டுவதற்கானஒரு முயற்சியே இது.

அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து இந்த வாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.(இதை முடிவுக்கு கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மை என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்)
இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் உங்களின் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகாது. ஆதலால் உங்களின் கேள்விகளையும் பதில்களையும் தாருங்கள். (உலகத்தில் உள்ள அனைவரது வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் நமது வாதத்தையாவது முடிவுக்கு கொண்டு வருவோம்- கவுண்டமணி சொல்றமாதிரி பின்னாடி வர சந்ததிகள் இத பாத்து தெரிஞ்சிக்கட்டும்.)

உயிரை உருவாக்குவது யார்?
காலம் காலமாக மதவாதிகளின் முக்கிய வாதமாக இருப்பது உயிரை உருவாக்குவது கடவுளே,குழந்தையை உருவாக்குவது கடவுளே,மனிதனை உருவாக்குவது கடவுளே, மிருகத்தை உருவாக்குவது கடவுளே என்பதுதான். இதற்கு இணையான வாதத்தை அறிவியலாளர்களால் பல காலமாக வைக்க முடியவில்லை. ஆனால் இன்றோ அதற்க்கு இணையான வாதத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
(உங்களுக்கு தெரியாதது இல்ல)
ஆம் இன்று அறிவியலாளர்கள் நிரூபித்து விட்டனர். உயிரை மனிதனால் உருவாக்க முடியும் என்று.

மனிதன் "க்ளோனிங்" முறையில் "டோலி" என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கி சாதனைப் படைத்தான். இணையான வாதத்தை வைத்துள்ளான் என்று ஒரு தரப்பு கூறினாலும். இது இணையான வாதமா?
"டோலி" என்பது "போலி " அல்லவா? என்பது மற்றும் ஒரு தரப்பினரின் கேள்வி.
முதல் பாகத்திற்கான வழிகாட்டி.
வாதம் தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...