காலம் காலமாக ஒரு பூனை கதை சொல்லி நியூட்டன் முட்டாள் தனமாக செயல் பட்டார் என்று கூறுவார்கள். அந்த கதைப்படி அவர் முட்டாளா?
பெரும்பலோனருக்கு இந்த கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
கதையின் சுருக்கம் என்னவெனில் "பெரிய பூனை வந்து போக ஒரு ஓட்டை கதவில் இருக்கும், அதற்கு ஒரு குட்டி பிறந்தவுடன் அதுவும் வந்து போக அதற்கு அருகே ஒரு சிறிய ஓட்டையை நியூட்டன் போட்டார். பெரிய பூனை வந்து போகும் பெரிய ஓட்டை வழியே சின்ன பூனையும் வராதா அவர் இந்த இடத்தில் முட்டாள் தனமாக செயல் பட்டார்" என கதை முடியும்.
உணமையிலேயே அவர் அறிவாளி தான் என்பதை அந்த கதை சொல்பவரும் ஏற்றுக்கொள்வார், இருப்பினும் எவ்வளவு பெரிய அறிவாளியும் முட்டாள் தனமாக நடந்து கொள்வான் என்பதற்காக சொல்லப்படும் கதை.
அந்த கதை உண்மையோ பொய்யோ தெரியாது. அந்த கதைப்படி அவர் முட்டாளாகவும் செயல் பட்டிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த பதிவு ஏன்று நீங்கள் கேட்கலாம். எனகென்னவோ அவர் செய்தது புத்திசாலித்தனமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
எப்படி?
என்னைப்பொருத்த வரை நியூட்டன் ஓட்டையை எங்கே போட்டார், ஏற்க்கனவே ஓட்டை எங்கே இருந்தது என்பதை பொறுத்துதான் அவர் எப்படி செயல் பட்டார் என்பதை முடிவு செய்ய முடியும்.
ஒருவேளை பெரிய பூனை வருவதற்கான ஓட்டை சற்று உயரத்தில் இருந்தது என்று வைத்து கொள்வோம். சிறிய கால்களை உடைய பூனை உயரத்தில் இருக்கும் ஓட்டையில் நுழைய சிரமப்படும் இல்லையா?
சிறிய பூனை சுலபமாக சென்று வர அவர் கீழே சின்ன ஓட்டை போட்டிருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இந்த கோணத்தில் பார்த்தால் அவர் புத்திசாலி தானே?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஒரு நீதிக் கதை: ஒரு நாய் ஒருத்தனைத் துரத்தியது. அவன் பயந்து ஓடிக் கொண்டே இருந்தான், நாயும் விடாமல் துரத்தியது. திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென நின்றான். திரும்பினான், நாயும் நின்றுவிட்டது ஆனால் நெருங்கவில்லை. இவை நாயை நோக்கி தைரியமாக நடந்தான். நாய் பயந்து ஓட ஆரம்பித்தது.
பதிலளிநீக்குநீதி: பிரச்சினைகளைக் கண்டு பயப் படாமல் தைரியாமாக அணுகினால் சமாளித்துவிடலாம், பயந்தால் அதை நம்மை காலி செய்துவிடும்!!
இந்தக் கதையின் நாயகன் யாரோ ஒருவன் அனானியாக [Anonymous] ஆக இருக்கிறான், அது அவ்வளவு சுவராஸ்யமாக இல்லை. நாம்மாளு யோசிச்சான், போடுடா விவேகானந்தர் பேரை என்று போட்டான். கதை இப்போது இப்படியாக்கியயது. ஒரு நாள் விவேகானந்தரை நாய் துரத்தியது, அவர் ஓடினார்.... etc., இப்போது இந்தக் கதையை எல்லோரும் ஆர்மாகப் படிப்பார்கள்.
நீங்கள் சொன்ன பூனை கூண்டு கதையும் அதே தான். சொல்லப் போனால், ஆப்பிள் மரத்துக் கடியில் படுத்துக் கொண்டிருந்தபோது ஆப்பிள் ஒன்று விழுவதை நியூட்டன் கண்டதாகவும், அதிலிருந்தே புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததாகவும் எல்லா படப் புத்தகங்களிலும் படிக்கிறோமோ, அதுவே இந்த மாதிரி புனையப் பட்ட கட்டுக் கதைதான். யாரும் இந்தக் கதையை உறுதி செய்யவில்லை. ஏனெனில் இது ஒன்றும் ஒரு நாளில் நடந்த கண்டுபிடிப்பு அல்ல. மேலும், இது நியூட்டனின் தனிப் பட்ட கண்டுபிடிப்பும் அல்ல, அதற்க்கு முன் கெப்ளர் போன்றவர்கள், கோள்களின் இயக்கத்தைப் பற்றி வருடக் கணக்கில் பதிவு செய்த தகவல்களையும், அந்தத் தகவல்களில் இருந்து அவர்கள் விட்டுச் சென்ற அனுமானத்தையும் வைத்தே நியூட்டன் தனது விதிகளை தருவித்தார். புரளி கிளப்புவதில் நம்மாட்கள் மட்டுமல்ல, வெள்ளைக் கார்களும் கெட்டிதான்!!
மேலும் யாரும் 100% புத்திசாலியும் இல்லை, 100%முட்டாளும் இல்லை. ஆளுக்கு ஆள் சதவிகிதம் மாறுகிறது அவ்வளவுதான். யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள் அதுபோலத்தான். சச்சின் டெண்டுல்கரே ஆனாலும் டக் அவுட் ஆகவே மாட்டார் என்று சொல்ல முடியாது. உலகில் தோன்றியவர்களிலே இவரைப் போல யாரும் இருந்ததில்லை என்று சொல்லப் படும் ஐன்ஸ்டீன் எந்த சோதனையுமே செய்தவர் கிடையாது. அணுவின் மொத்த எடையும் அணுவின் உட்கருவில்தான் பொதிந்து வைக்கப் பட்டுள்ளது, பெரும்பாலான இடம் காலி என்று கண்டுபிடித்த ரூதர்போர்டுக்கு சின்ன கணக்கு கூட போடத் தெரியாதாம், உதவிக்கு அதற்க்கென்று தனியாக ஆட்கள் இருப்பார்களாம். ஒரு துறையில் பெரிய ஆளாக இருப்பவர் மற்றொரு துறையில் அப்பிராணியாக இருக்கலாமே, அதனாலென்ன?
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான் ஜெயதாஸ் தேவ். கொஞ்சம் maaththi யோசிக்கலாம்னு நினைச்சேன். உங்களுடைய கருத்து ஏற்ப்புடையுதே. தங்களுடைய varugaikkum, karuththukkum மிக்க நன்றி.
பதிலளிநீக்கு