வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 27 ஜூலை, 2011

சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?

கிருத்துவர்களை ஏன் நீங்கள் சிலுவையை வழிபடுகிறீர்கள் என்று கேட்டால். ஏசு  மக்களின் பாவத்தை கழுவுவதற்காக சிலுவையை ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் ரத்தம் படிந்ததால் அது புனிதமாயிற்று என்று கூறுவார்கள். (ஒரு சிலர்.) இந்த காரணம் ஒரு விதத்தில் சரியென்றாலும் எனக்கு இதையும் தாண்டி இதில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவே உணர்கிறேன்.

கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் எடுக்கும் பொழுதும், பிரத்யேக வழிபாட்டிற்கு  பிறகும் நெற்றியில்  இந்த சிலுவை குறியை பாதிரியார்கள்  மக்களுக்கு இடுவார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார் சரி அதற்க்கு ஏன் நெற்றியில் அந்த சிலுவை குறியை இட வேண்டும்?

 இங்கு தான் சூட்சுமமே உள்ளது. இதை இப்பொழுது அவர்கள் ஒரு சம்பிரதாயமாக உபயோகித்தாலும் இதன் உண்மையான காரணம் சிவனுக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணை திறப்பதற்காகவே   இதை செய்கிறார்கள். நெற்றிக்கண்ணின் மூலம் தான் ஒருவன் உண்மயான ஞானத்தை, இறை தரிசனத்தை பெற முடியும்.


ஞான ஸ்நானம் என்பதே ஒருவன்  ஞான பாதைக்கு தயாராகி விட்டான் என்பதை உலகிற்கு உணர்த்த தான். இதில் வேதனை என்னவென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறதே தவிர அவர்களை பாதிரியார்கள் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்வதில்லை.அதற்க்கு காரணம் அவர்களின் அறியாமை தான்.  அடுத்த கட்டம் எனபது தியானம் செய்வதாகும். இந்த தியானம் யோகம் இவற்றை இந்துக்களுடையது என்று சொல்லி பாதிரியார்கள்  செய்ய அனுமதிப்பதில்லை.

நெற்றிக்கண் திறக்கும்  பொழுதோ அல்லது எப்பொழது மூச்சானது  மூக்கு வழியாக வராமல் நின்று போகிறதோ  அப்பொழுது அந்த உச்ச கட்டடத்தில்  இந்த சிலுவையை நெற்றியில்   காண முடியும்.

 எவன் ஒருவனுக்கு மூக்குக்கு கீழே மூசச்சு வருவதில்லையோ அவனே உண்மையான தீர்க்க தரிசி என்று ஏசு கூறியிருக்கிறார். எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று  மூக்கு வழியாக  வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது.

ஏசு ஒரு யோகி என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமே போதுமானது.

சிவனுக்குள்ளது  போல் நெற்றிக்கண் திறப்பதற்காகவே நெற்றியில் சிலுவை இடப்படுகிறது எனபதே என் கருத்து.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம்  சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை  அழகாக காட்ட. உண்மையில்  நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும்  துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு  இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்
பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக  தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும்  அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை  அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய  வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய  வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க
பொன் நகை ஏன்?
பொன் நகை போனால்
புன்னகையும் சேர்ந்தல்லவோ  போய்விடுகிறது?


சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்


வியாழன், 21 ஜூலை, 2011

ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்?

முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால்  என்ன தவறு என்றனர்.

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால்  என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  உரசிக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு  ஆணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்கின்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்(என்கின்றனர்)

பிறகு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதால் என்ன  தவறு  என்பர் (என்கின்றனர்)

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன்  உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும்  யார் யாருடன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

இப்படித்தான் போகப்போகிறது ஆண் பெண் நாகரீக கலாச்சாரம்.

திங்கள், 18 ஜூலை, 2011

ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?

எனக்கு தெரிந்து சிறந்த ஆன்மீகவாதிகளாக கருதப்படும் யாரும் திருமண பந்தத்தில்  இருந்துகொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.

இங்கே நான் ஆன்மீகம் என்பது அகத்தவம் அல்லது அகத்தாய்வு செய்து தான் யார் என்ற இரகசியத்தை உணர்ந்து யோகத்தின் மூலம்   இறையடி சேர்தலாகும்.

அதேபோல் திருமணம் புரியாமல் அகத்தவம் செய்தவர்கள் அனைவரும் இறையடி சேர்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

புத்தர் திருமண வாழ்வை உதறி தள்ளியவர்.
ஏசுநாதர் திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்ததாக  தெரியவில்லை.
வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் திருமண பந்தத்தில் நீடிக்கவில்லை.

இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.
நான் இவர்கள் மட்டும் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்  என்று சொல்லவில்லை. இதை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இவர்கள் நமக்கு ஆன்மீக வாதிகளாக அறிமுகப்படுத்தப்படுள்ளனர் அல்லது சந்தைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம். சந்தைப்படுத்தபடாத எண்ணற்ற ஆன்மீகவாதிகள் இவர்களை விட சிறந்த சிந்தனைகளை வாழ்வியலை கொண்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

சில சித்தர்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் நிலையான திருமண வாழ்வை கொண்டிருக்கவில்லை.

சில ரிஷிகள் திருமண பந்தத்தில் இருந்துள்ளனர் என்று சில செய்திகள் கிடைத்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறை எப்படி  இருந்தது, அவர்கள் யோகத்தின் மூலம் இறையடி சேர்ந்தார்களா என்று (எனக்கு) தெரியவில்லை.

திருமணம் ஏன்  அகத்தவம் புரிய  தடையாக உள்ளது?

அகத்தவம் எனக்கு தெரிந்து கடுமையான (ஒரு விதத்தில் இனிமையான) பாதை. எப்படி ஒருவன் காதலிக்கும் பொழுது அந்த பெண்ணின் நினைப்பாகவே பித்துப் பிடித்தவன் போல் இருக்கின்றானோ அதைப்போலவே அகத்தவம் புரிபவனும் இறை சிந்தனை  மட்டுமே கொண்டவனாக இருப்பான். 

ஒரு பெண், குடும்பம்  தரும் இன்பத்தை விட இறைசிந்தனை அல்லது அந்த பயணம் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதால் அவன் மற்றவற்றை துச்சமாக மதிக்க ஆரம்பித்து விடுவான்.

திருமணத்தின்  மூலம் பற்று ஏற்ப்படுகிறது. மனைவி மீது பற்று, குழந்தைகள் மீது பற்று பிறகு பேரகுழந்தைகள் மீது பற்று.

மனைவி  என்று வந்தவுடனே சில கடமைகளும் கூடவே வந்துவிடுகிறது. அவளுக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பிறகு அவளுக்கென்று  சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகள் செய்வதற்கே ஒருவனின் நேரம் போதுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு எங்கே  அகத்தவம் புரிவது?

அந்த பெண்ணை விட்டு விட்டு இவன் மட்டும் அகத்தவம் புரிகிறேன் என்று எந்நேரமும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அந்த பெண்ணின் நிலை?

சரி மனைவியையும் அகத்தாய்வு  புரிய வைத்தால் என்ன என்று தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பதற்கு  வரம் வாங்கி வந்திருந்தாள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியும் ஒருவனுக்கு அகத்தவம் செய்வதற்கு ஏற்றார் போல மனைவி அமைந்து விட்டால் அவன் கொடுத்து வைத்தவன் தான். இருப்பினும் அவர்கள் பிள்ளை பெற்றுக்கொண்டு அகத்தாய்வை  தொடர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

 சரி பிள்ளையே பெறாமல் இருந்தால் என்ன என்று தோன்றினாலும் அவர்கள் சமுதாயத்தின் ஏளனமான பேச்சுக்கும், பார்வைக்கும் ஆளாக நேரிடும். இதனாலோ என்னவோ அன்று திருமணம் செய்து கொண்ட ரிஷிகள் கூட காட்டிலே தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சமூகத்தோடு வாழ்ந்ததாக தெரியவில்லை.

இதை அனைத்தும் சமாளிக்கும் திறன் கொண்ட தம்பதிகளால் மட்டுமே அகத்தவத்தின்  மூலம் இறையடி சேர முடியும்.

ஆக ஆன்மீக பயணத்திற்கு திருமண வாழ்வு தடையா என்றால் பொதுவாக பார்க்கும் பொழுது தடை என்று தான் தோன்றுகிறது. அரிதினும் அரிதாக சில தம்பதிகளுக்கு மட்டும் திருமணம் தடையாகாமல் வரமாகலாம்.
தடையை வரமாக்கி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்.

புதன், 6 ஜூலை, 2011

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மது அருந்தியவர்கள் எங்கோ பறப்பதுபோல் உள்ளது என்று கூறுவதை  கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோல் தியானம் செய்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். மதுவினால் அடையும் இந்த அளவான உற்சாகத்தை தான் ராஜ போதை என்பர்.

உண்மையில் தியானம் மூலம் அடையும் உற்சாக அமைதி  நிலையை ஓரளவிற்கு மதுவினாலும் அடையலாம்.  மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அளவோடு இருக்கும் வரை தான் மது ஓரளவிற்கு உற்சாக அமைதி நிலையை தரும் அளவுக்கு மிஞ்சினால் அது தன்னிலை மறக்க செய்து கெடுத்து விடும்.

மேலும் மதுவானது உடலில் தீங்கையே வரவழைக்கும் ஆனால் தியானமோ நன்மையை வாரி வழங்கும்.

மது நரம்பு தளர்ச்சியை  வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை  மழுங்கச்செய்யும் ஆனால் தியானமோ உடலையும் உள்ளத்தையும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க உதவும். அறிவை விசாலமாக்கும்.  ஆண்மையை அதிகப்படுத்தும் தியானங்களும் உண்டு.

ஆதலால் உடலை சீரழிக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவை இல்லை, சைடிஷ் தேவை இல்லை. நினைத்த நேரத்திற்க்கெல்லாம் இன்பம் அனுபவிக்கலாம்.
 ஆதலால் தியானம் செய்வீர் திறம்பட வாழ்வீர். வாழ்க வளமுடன் நலமுடன்.

திங்கள், 4 ஜூலை, 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2

'எங்கு  தொடங்கி  எங்கு முடிக்க' என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு  எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல்  புறத்தை  பார்க்கின்றது , ஆன்மிகம்  என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது  என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான  வழிகாட்டி.

அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு   சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில்  சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி    எழுப்புகின்றனர்.

உண்மையில்  இந்த அறிவியலாளர்கள்  அபிரகாமிய மதங்களுடன்  (அதாவது  இஸ்லாம்  மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே    அறிவியல்  ஆய்வுகளை  ஒப்பிட்டு பார்த்து  இந்த முடிவுக்கு  வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை  மறுக்க இயலாது.)

ஆனால்  அவர்களுக்கு  இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை  பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய  நூல்களை பற்றி "கொஞ்சம்" ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில்  கால அளவுகள் உள்ளது.

பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட    பிரம்மனின்   வெறும்  ஒன்றரை   நாட்கள்  தான். 

பிரம்மனின் ஒரு பகல்  பொழுது  4.32  பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம் (இதை  ஒரு கல்பம்  என்று சொல்வார்கள் ). இரவு  பொழுது மற்றும்  ஒரு 4.32  பில்லியன் ஆண்டுகள். ஆக   பிரம்மனின் ஒரு நாள்  என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம். (இங்கே பிரம்மன்  உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

இதேபோல்  இந்தியர்கள்  311,040 பில்லியன் ஆண்டுகள்  அதாவது 311 ட்ரில்லியன்   ஆண்டுள்  பற்றி பேசியுள்ளதாக  அறிவியல் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ளனர். அது  மட்டுமல்ல    1/1,000,0000 நொடிகள்     பற்றியும்  பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இவை  அனைத்தையும்  அவர்கள் அந்த  காலத்தில்  அகத்தாய்வு செய்தே  கணக்கிட்டுள்ளதாக   தெரிகிறது.

 புறத்தாய்வு செய்திருக்க  வாய்ப்புகள்  உள்ளது என்று சொல்லும்  அளவுக்கு  எந்த  ஒரு குறிப்புகளும்  இதுவரை  கிடைக்க  வில்லை.

தொடரும்................


Related Posts Plugin for WordPress, Blogger...