வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Monday, June 27, 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?

பிரபஞ்சம்  எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளது. இன்னும் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே நான் என்ன புதிதாக சொல்ல போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் எனில் இங்கே அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல இந்த பாலத்தின் மூலம் எனக்கு தெரிந்த, நான் உணர்ந்த, பிரபஞ்ச ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

முதலில் ஆன்மிகம்  மற்றும் அறிவியல்  என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்மிகம் என்பது நேற்றைய அறிவியல் அவ்வளவுதான்.

ஆன்மிகம் என்பது அகத்தாய்வு செய்தல்.  அறிவியல் என்பது புறத்தாய்வு செய்தல்.

இங்கே ஆன்மிகம் என்ற வார்த்தை கூட சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அகத்தாய்வு செய்தல் என்ற வார்த்தையை  இங்கே வைத்து கொள்வோம்.

அறிவியல் எனபது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். புறபொருள்களில் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது தான் அறிவியல். அதாவது  வெளியில் இருக்கும்  சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளி இங்கே  விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து  ஆராய்ச்சி செய்வார்கள்.(நிலம், கடல் இவையும் இந்த ஆராய்ச்சிக்கு உதவுகிறது)  இது அறிவியல் மூலமாக புறத்தாய்வு செய்து உலகம் எப்படி தோன்றியது என்ற முடிவுக்கு வருதல்.


அது என்ன அகத்தாய்வு? ஏன் அதை செய்ய வேண்டும்?
தவம் தியானம் இதைத்தான் அகத்தாய்வு  என்கிறோம்.  இங்கே நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். அறிவியலில் பார்வையை வெளியில் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.

அதாவது  உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம்  ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை  பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை  மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம்.

அட பிரபஞ்சம் என்பது வெளியில் தானே உள்ளது அதை அறிவியல் முறையில் வெளியில் ஆய்வு செய்வதுதானே சிறந்தது என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கேள்வி நியாமானது தான். ஆனால் அவர்களுக்கு உடலை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.

இந்த பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ  அது மனிதனின் உடலிலும்  உள்ளது.  இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும்.
வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் கூட நமது உடம்பில் உள்ளதாக மெய்ஞானிகள்   கூறுவர். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பது அவர்கள் கூற்று.

அகத்தாய்வு பற்றி படித்தவர்களுக்கு நன்று தெரியும் மனிதன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும் என்று.
ஒரு கடவுளால் எதுவெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களோ அதுவெல்லாம் மனிதனாலும் முடியும். (போலி சாமியார்களை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளதீர்கள்).
நீங்கள் என்ன நினைத்தாலும் அதை கூறும் சக்தியை ஒரு மனிதானால் பெற முடியும். நினைத்த நேரத்தில் ஓரிடத்தில் மழை பொழிய வைக்க முடியும். பறக்க முடியும், எங்கிருந்தும் எதையும் யாரையும் பார்க்க முடியும், உடலை  மலை போல் ஆக்க முடியும், உடலை அணு போலவும் மாற்ற முடியும், உயிரற்ற  உடலை தன்னுடலாக மாற்றிக்கொள்ள முடியும். (இவற்றை உண்மையான மெய் ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, இவையாவும் ஒரு கழிவுப்பொருள் போலத்தான்) 

பிரபஞ்சம் முழவதும் சுற்றி வரவும் முடியும்.   பிரபஞ்சத்தை சுற்றி வர தெரிந்தவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்று தெரியாதா என்ன.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்களும் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம். விஞ்ஞானியாக அல்ல மெய்ஞானியாக

தொடரும்.........................

13 comments:

 1. Dear Mani,

  i donot know but i am also thinking and thinking
  i get confused good post nice post. Give so many post like this

  ReplyDelete
 2. //

  sundari said...

  Dear Mani,

  i donot know but i am also thinking and thinking

  i get confused good post nice post. Give so many post like this//
  Sure sundari, will try my best. Thanks

  ReplyDelete
 3. நண்பரே நல்ல பதிவு,
  இறை நம்பிக்கையாளரோ,மறுப்பாளரோ இருவரும் தேடலில் மட்டுமே உள்ளவர்கள் என்பது உண்மை.அவர்களின் கருதுகோள் மட்டுமே வேறு.தேடல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்,அதில் பெற்ற அனுபவத்தை வைத்தே முடிவு எடுத்தல் நல்லது.
  இந்த தலைப்பில் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
  நன்றி

  ReplyDelete
 4. //

  சார்வாகன் said...

  நண்பரே நல்ல பதிவு,
  இறை நம்பிக்கையாளரோ,மறுப்பாளரோ இருவரும் தேடலில் மட்டுமே உள்ளவர்கள் என்பது உண்மை.அவர்களின் கருதுகோள் மட்டுமே வேறு.தேடல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்,அதில் பெற்ற அனுபவத்தை வைத்தே முடிவு எடுத்தல் நல்லது.
  இந்த தலைப்பில் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
  நன்றி//

  உண்மைதான் தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும். முடிந்த வரை எழுதுகிறேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 5. //i donot know but i am also thinking and thinking
  i get confused good post nice post. Give so many post like this//

  ஓ அவங்களா நீங்க..
  ( சகோதரி சுந்தரி பரமசிம் தானே ? )

  இங்கேயுமா ?

  ReplyDelete
 6. வணக்கம் தோழரே..

  இந்த கட்டுரையை நீங்கள் முடிவு செய்தவுடன்

  ( முழுமையான தங்களது கருத்துகளை புரிந்து கொண்டபின்னர் )

  எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..

  நன்றி.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  //i donot know but i am also thinking and thinking
  i get confused good post nice post. Give so many post like this//

  ஓ அவங்களா நீங்க..
  ( சகோதரி சுந்தரி பரமசிம் தானே ? )

  இங்கேயுமா ?//

  என்ன இங்கேயுமா ? புரியும்படி பேசுங்க அப்பு

  ReplyDelete
 8. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  வணக்கம் தோழரே..

  இந்த கட்டுரையை நீங்கள் முடிவு செய்தவுடன்

  ( முழுமையான தங்களது கருத்துகளை புரிந்து கொண்டபின்னர் )

  எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..

  நன்றி.. வாழ்த்துக்கள்//

  வாங்க சிவனடியாரே,
  நல்ல முடிவுதான் தோழரே, ஆனா இந்த கட்டுரையை எப்ப முடிப்பேன்னு எனக்கு தெரியலையே :)
  நன்றி

  ReplyDelete
 9. இங்கேயுமா ?//

  /என்ன இங்கேயுமா ? புரியும்படி பேசுங்க அப்பு /

  அது சகோதரி சுந்தரிக்கான மறுமொழி புரட்சியாளரே
  சுந்தரிக்கு புரியும் என நம்புகிறேன்

  நன்றி

  ReplyDelete
 10. /ஆனா இந்த கட்டுரையை எப்ப முடிப்பேன்னு எனக்கு தெரியலையே /

  அதுவரை காத்திருக்கிறோம் ( காத்திருங்கள் )

  ReplyDelete
 11. Replies
  1. Thanks for your appreciation Mr.Prabha :)

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...