இன்று காலை பாபா திரைப்படத்தின் சில காட்சிகளை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் பெயர் போடும் போதே கேமரா ஒரு ஜாதகத்தை சில நிமிடம் காட்டுகின்றது. அது யாருடைய ஜாதகம் என்று பார்த்தால்...அது ரஜினியுடையது மாதிரியே இருந்தது. அவருடைய உண்மையான ஜாதகத்திலும் படத்திலும்...சிம்ம லக்னம்...கன்னியில் கேது மற்றும் சனி பகவான். மற்றவற்றை சரியாக கவனிக்க முடியவில்லை.
அவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட காரணமாய் நான் நினைக்கும் சில காரணங்களை தந்துள்ளேன்.
௧. தியான வீடான ஐந்தாம் வீட்டு அதிபதியான குருபகவான் ஏழில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.இதனால் அவருக்கு தியானத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.
௨. தியானத்திற்கு அதிபதியான குருபகவான் ராகுபகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார், ராகுவோ குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஆதலால் இங்கே ராகுவானவர் குருவின் பலனை கொடுப்பார். அந்த விதத்தில் பார்த்தல் தியான அதிபதி சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்ததாக கொள்ள வேண்டும். இப்படி பார்க்கும் பொழுது அவருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படிருக்க வாய்ப்புகள் உண்டு. ராகுவின் உப நட்சதிராதிபதி குரு என்பது இன்னும் ஒரு முக்கிய காரணம்.
௩. குண்டலினி காரகனான கேதுபகவானின் உப நட்சத்திராதிபதியும் குரு பகவானே.
௪. அதுமட்டுமல்ல ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகளின் உப நட்சதிராதிபதியும் தியான வீட்டு அதிபதி குருபகவானே.
மேற்கூறிய காரணங்களால் அவருக்கு ஆன்மீக ஈடுபாடு மட்டும் அல்ல அவருக்கு ஆன்மீக அனுபவமும் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.
ஆன்மீக ஜோதிடம் சம்பந்தமான முந்தைய பதிவுகளுக்கான சுட்டி என்கிற வழிகாட்டி கீழே:
உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக