வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஆன்மீக ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூன், 2011

ரஜினிக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?



 இன்று காலை பாபா திரைப்படத்தின் சில காட்சிகளை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் பெயர் போடும் போதே கேமரா ஒரு ஜாதகத்தை சில நிமிடம் காட்டுகின்றது. அது யாருடைய ஜாதகம் என்று பார்த்தால்...அது ரஜினியுடையது மாதிரியே இருந்தது. அவருடைய உண்மையான ஜாதகத்திலும் படத்திலும்...சிம்ம லக்னம்...கன்னியில் கேது மற்றும் சனி பகவான். மற்றவற்றை சரியாக கவனிக்க முடியவில்லை.

அவருக்கு ஆன்மீக  ஈடுபாடு ஏற்பட  காரணமாய் நான் நினைக்கும் சில காரணங்களை தந்துள்ளேன்.



௧. தியான வீடான  ஐந்தாம் வீட்டு அதிபதியான குருபகவான்  ஏழில்  இருந்து லக்னத்தை பார்க்கிறார்.இதனால் அவருக்கு தியானத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

௨. தியானத்திற்கு அதிபதியான குருபகவான் ராகுபகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார், ராகுவோ குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஆதலால் இங்கே ராகுவானவர் குருவின் பலனை கொடுப்பார். அந்த விதத்தில் பார்த்தல் தியான அதிபதி சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்ததாக கொள்ள வேண்டும். இப்படி பார்க்கும் பொழுது அவருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படிருக்க வாய்ப்புகள் உண்டு. ராகுவின் உப நட்சதிராதிபதி குரு என்பது இன்னும் ஒரு முக்கிய காரணம்.

 ௩. குண்டலினி காரகனான கேதுபகவானின் உப நட்சத்திராதிபதியும்  குரு பகவானே.

௪. அதுமட்டுமல்ல ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்  ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகளின் உப நட்சதிராதிபதியும்  தியான வீட்டு அதிபதி குருபகவானே.


மேற்கூறிய காரணங்களால் அவருக்கு  ஆன்மீக ஈடுபாடு மட்டும் அல்ல அவருக்கு ஆன்மீக அனுபவமும்  ஏற்ப்பட்டிருக்க  வாய்ப்புகள் உண்டு.
 ஆன்மீக ஜோதிடம் சம்பந்தமான முந்தைய பதிவுகளுக்கான சுட்டி என்கிற வழிகாட்டி கீழே:

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்...



புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

செவ்வாய், 24 மே, 2011

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?


ஜாதகத்தில் உங்களைக் குறிப்பது லக்னாதிபதி. ஆன்மீகத்தில் ஈடுபாட்டை  உண்டாக்கும் சக்தியும் ஞானத்தை அளிக்கவல்ல சக்தியும் கேது பகவானுக்கு உண்டு. 

கேதுவுக்கும் லக்னாதிபதிக்கும் உங்கள் ஜாதகத்தில் தொடர்பு இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்ப்படும். 

லக்னத்தில் அல்லது லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு  ஒன்று, ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் கேது பகவான் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு  உண்டாகும். 


லக்னாதிபதி அல்லது பத்துக்குடையவன் அமர்ந்த வீட்டிற்கு இரண்டில் கேது பகவான் இருந்தாலும்  ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். 

 வக்கிரம் பெற்ற லக்னாதிபதி அல்லது வக்கிரம் பெற்ற பத்தாம் வீட்டுக்காரர் இவர்களுக்கு பன்னிரெண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
இவற்றை நான் சொல்லவில்லை சப்த ரிஷி நாடி எனும்  புத்தகத்தில் பார்த்தேன் அதை சற்று உல்டா செய்து இங்கே கொடுத்துள்ளேன். இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
நன்றி: சப்தரிஷி  நாடி  

இது சம்பந்தமான  மற்றும் ஒரு பதிவிற்கான சுட்டி


Related Posts Plugin for WordPress, Blogger...