ஜாதகத்தில் உங்களைக் குறிப்பது லக்னாதிபதி. ஆன்மீகத்தில் ஈடுபாட்டை உண்டாக்கும் சக்தியும் ஞானத்தை அளிக்கவல்ல சக்தியும் கேது பகவானுக்கு உண்டு.
கேதுவுக்கும் லக்னாதிபதிக்கும் உங்கள் ஜாதகத்தில் தொடர்பு இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்ப்படும்.
லக்னத்தில் அல்லது லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு ஒன்று, ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் கேது பகவான் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
லக்னாதிபதி அல்லது பத்துக்குடையவன் அமர்ந்த வீட்டிற்கு இரண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.
வக்கிரம் பெற்ற லக்னாதிபதி அல்லது வக்கிரம் பெற்ற பத்தாம் வீட்டுக்காரர் இவர்களுக்கு பன்னிரெண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
இவற்றை நான் சொல்லவில்லை சப்த ரிஷி நாடி எனும் புத்தகத்தில் பார்த்தேன் அதை சற்று உல்டா செய்து இங்கே கொடுத்துள்ளேன். இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
வணக்கம் புரட்சிமணி,
பதிலளிநீக்குயாம் கன்னி இலக்கினம் - இலக்கினத்தில் இலக்கினாதிபதி புதன் ஆட்சி + உச்சம்..
எனது ஒன்பதாம் வீட்டில் கேது ..
இந்த கட்டுரை எனது ஜாதகத்தோடு பொருந்துகிறது.
நன்றி..
நாங்க கேட்டதை காணோமே ?
//சிவ.சி.மா. ஜானகிராமன் said...
பதிலளிநீக்குவணக்கம் புரட்சிமணி,
யாம் கன்னி இலக்கினம் - இலக்கினத்தில் இலக்கினாதிபதி புதன் ஆட்சி + உச்சம்..
எனது ஒன்பதாம் வீட்டில் கேது ..
இந்த கட்டுரை எனது ஜாதகத்தோடு பொருந்துகிறது.
நன்றி..
நாங்க கேட்டதை காணோமே ?
//
தோழரே , பொருந்தினால் அது ஜோதிடத்திற்கு கிடைத்த வெற்றி.....கேட்டது கிடைக்கும் கொஞ்சம் பொறுங்கள்...நன்றி