வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 2 மே, 2011

ஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை?


மாமிசத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மாமிசம் உடலில் "அந்த" சக்தியை மிக அதிகமாக்குகின்றது. 
(மாபிள்ளைக்கு நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வைங்க அப்படின்னு சொல்றாங்க இல்ல அது இதுக்குத்தான். )

  அதை வெளியேற்றியே ஆகவேண்டிய நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகிறான். இந்த நிலையை தவிர்ப்பதற்க்காகவே சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை.  இந்த நிலைக்கு ஒருவன் தள்ளப்பட்டால் அவன் எப்படி சந்நியாசத்தை கடைபிடிக்க முடியும். நித்தியானந்தா மாதிரி  அல்லவா ஆக நேரிடும். 

(திபெத்திய துறவிகள் மாமிசம் மறுப்பதில்லை, அவர்கள் குளிரான பகுதியில் வசிப்பதால் உடலில் வெப்ப நிலையை சீர் செய்ய இது உதவுகின்றது. ஆதலால் அவர்கள் மாமிசம் மறுப்பதில்லை. )

உயிர்களை கொள்ளுதல் கூடாது என்பதும் ஒரு காரணம்.

மாமிசம் சாப்பிடுதல் உடலில் துர்நாற்றமுள்ள வியர்வையை உருவாக்குகின்றது.  இதை அவர்கள் விரும்புவதில்லை.
"நீ எதை புசிக்கிறாயோ அதுவாவாய்" என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.( மாமிசம் உண்டால் அந்த மிருகத்திற்க்குண்டான மிருகத்தனமும், காமும் ஏற்ப்படும் .)

மாமிசம் மறுப்பதால் மனிதன்  நீண்ட காலம் இளமையுடன் வாழ முடியும்.  இன்னும் பல காரணங்கள் இருந்தும் இந்த சில காரணங்களினாலும் சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை. 
(உங்களில்  பல  பேருக்கு  இதை  பற்றி  தெரிந்திருக்கும்  என  நினைக்கின்றேன்)


7 கருத்துகள்:

 1. நல்ல செய்தி .. தோழரே ..

  நாம் உயிர் வாழ ஆசைப்படுவது போல எல்லா உயிர்களுக்கும் அந்த உரிமை உண்டு..

  கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும்"

  என்பது வள்ளுவம் ..

  ஆமா நீங்க மாமிசம் சாப்பிட மாட்டீங்க தானே ?
  ( சாரி இது தமாசுக்காக )

  பதிலளிநீக்கு
 2. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  நல்ல செய்தி .. தோழரே ..

  நாம் உயிர் வாழ ஆசைப்படுவது போல எல்லா உயிர்களுக்கும் அந்த உரிமை உண்டு..

  கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும்"

  என்பது வள்ளுவம் ..

  ஆமா நீங்க மாமிசம் சாப்பிட மாட்டீங்க தானே ?
  ( சாரி இது தமாசுக்காக )
  //

  வாங்க தோழரே,
  நல்ல குறளை சொன்னீங்க, மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று தான் நினைக்கின்றேன் :)

  பதிலளிநீக்கு
 3. கொன்றால் பாவம் தின்றால் போகும் அப்டீன்னு எங்கயோ படிச்சாப்ல ஞாபகம்
  பன்டைய (வேத) காலததுல ப்ராமின் கூட புலால் உன்டதாக சில வரலர்ரு குரிப்புகள்ள கானமுடிகிரது

  புரட்ச்சிமனி சொல்ரது ஆன்மிகவாதிகலுக்கு சரியா வரலாம்
  குடும்ப பேர்வழிங்க புலால் சாப்பிடாட்டி அப்புரம் மேட்டர் பன்னாம எப்டி குடும்பத்த ஓட்டுரது

  கொஞம் தெளிவா விளக்கவும்

  பதிலளிநீக்கு
 4. ஓ உஙக தலைப்பெ சன்னியாசிகலைப்பதி தானோ நாந்தான் எடக்கு மடக்கா கேல்விய கேட்டுட்டென் புரட்ச்சிமனி சார் மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 5. //yoghi said...

  கொன்றால் பாவம் தின்றால் போகும் அப்டீன்னு எங்கயோ படிச்சாப்ல ஞாபகம்
  பன்டைய (வேத) காலததுல ப்ராமின் கூட புலால் உன்டதாக சில வரலர்ரு குரிப்புகள்ள கானமுடிகிரது

  புரட்ச்சிமனி சொல்ரது ஆன்மிகவாதிகலுக்கு சரியா வரலாம்
  குடும்ப பேர்வழிங்க புலால் சாப்பிடாட்டி அப்புரம் மேட்டர் பன்னாம எப்டி குடும்பத்த ஓட்டுரது

  கொஞம் தெளிவா விளக்கவும்
  //

  சைவ உணவுகளிலும் அதை தூண்ட கூடிய சக்தி உள்ளது. மாமிசம் உண்டால் மட்டும் தான் "அதில்" சிறப்பாக செயல் பட முடியும் என்று கிடையாது.

  பதிலளிநீக்கு
 6. //yoghi said...

  ஓ உஙக தலைப்பெ சன்னியாசிகலைப்பதி தானோ நாந்தான் எடக்கு மடக்கா கேல்விய கேட்டுட்டென் புரட்ச்சிமனி சார் மன்னிக்கவும்//
  பரவாயில்லை விடுங்க

  பதிலளிநீக்கு
 7. (மாமிசம் உண்டால் அந்த மிருகத்திற்க்குண்டான மிருகத்தனமும், காமும் ஏற்ப்படும் ) மனிதன் மிருகம் தானே

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...