வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 5 மே, 2011

ஆன்மீகத்திற்கு குரு அவசியமா?


குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் அது உண்மையா? 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள். தாய்  ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, செத்துப் பிழைத்து குழந்தையை பெற்று,  பாலூட்டி, சீராட்டி, ஈ, எறும்பு கடிக்காமல், நல்ல உணவு ஊட்டி அன்போடு வளர்க்கிறாள். 

தந்தை அக்குழந்தைக்கு பாதுகாப்பாய் இருந்து,  அறிவு புகட்டி வளர்க்கின்றார்.

அடுத்தது குருவானவர் அக்குழந்தைக்கு ஏற்ற சகல கல்வியையும், கலைகளையும் கற்று தருகிறார். குழந்தையின் ஆன்ம வளர்ச்சியை பொறுத்து அவனுக்கு தெய்வத்தை அடையும் வழியையும் காட்டுகின்றார்.(இது அந்த காலத்துல).
இந்த காலத்தில் ஒவ்வொரு கல்விக்கும் அல்லது  பாடத்திற்கும் ஒரு குரு. 
அந்த காலத்தில் அ ஆ கற்று கொடுத்த குருவே ஆன்மீக குருவாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த காலத்தில் இதற்க்கு என்று தனியாக ஒரு குரு தேவைப்படுகிறார்.

அன்று பெரும்பாலானோர் ஒன்றிரண்டு குருக்களுக்கு மேல் தாண்டாமல் ஆண்டவனை அடையும் பாதையில் சென்றார்கள்.

 இன்றோ தொழில் நுட்ப  வளர்ச்சியாலும், ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் சுலபமாக கிடைப்பதாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் நுழைந்து விடுகிறான்.

பல புத்தகங்கள் படித்து தானாகவே யோகம் செய்தாலும் அனைவராலும் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்று சொல்ல முடியாது.
இதுவே ஒரு நல்ல ஆன்மீக குரு மூலம் காற்றுக்கொண்டால் அவருடன் சேர்ந்தே பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடந்து விடலாம்.

ஆனால் எல்லோருக்குமே நல்ல குரு அமையும் பாக்கியம்  கிடைப்பதில்லை. ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஒன்பதாம் வீடு குருவைக் காட்டுகின்றது. யாருக்கு ஒன்பதாம் வீடும், சொந்தக்காரனும் நன்றாக உள்ளனரோ அவர்களுக்கு நல்ல குரு கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம் .  
இந்த குரு ஆன்மீக குருவாக இருப்பார் என்று அறுதியிட்டு கூற  முடியாது.

இந்த ஒன்பதாம் வீடு மற்றும் அதிபதிக்கும் யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும்? பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  , குரு, கேது, ஐந்தாம் வீடு மற்றும் புட்டபர்த்தி  சாய் பாபா ஏன்  சந்நியாசி ஆனார் ? என்ற பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லக்னம்,லக்னாதிபதி இவர்களுக்குள் நல்ல தொடர்பு இருந்தால்  "அந்த ஒன்பதாம் வீட்டு  குரு"  ஒரு  நல்ல ஆன்மீக குருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னைப்பொருத்த வரை(இன்றைய நிலையில்) ஐந்தாம் வீடு அதன் அதிபதி,கேது, குரு இவர்களே  ஒருவனுக்கு தியானம் அல்லது குண்டலினி மூலம் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவள்ளவர்கள்.  ஒன்பதாம் வீட்டு குரு இவர்களுடன் சம்பந்தம் கொள்ளவில்லை எனில் அவர் வெறும்  சமயம்  அல்லது - மற்றும் ஆன்ம கோட்பாட்டினை எடுத்துரைக்கும் குருவாக மட்டுமே அமைந்துவிட வாய்புகள் உண்டு. 

மகர கடகத்தில் கேது ராகு இருந்தாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் பயணம் செய்வான் என்றும் படித்ததுண்டு. இதுவும் உண்மையாகவே தெரிகிறது. 

ஆன்மீக குரு கிடைக்காததும் ஒரு விதத்தில் நல்லதே. (ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்). யாருக்கு ஆன்மீக குரு கிடப்பதில்லையோ அவர்களே புவியில் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள். 

உதாரனத்திற்க்கு வள்ளலார் மற்றும் புத்தர். இவர்களுக்கு நல்ல குரு கிடைத்திருந்தால் அவர்கள் மட்டுமே ஆன்ம எழுச்சி அடைந்திருப்பார். கிடைக்காத காரணத்தினாலே  தான் அவர்கள் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.  

 ஆதலால்  ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக  இருப்பின்).

ஆன்மீக குரு கிடைக்கவில்லையா....நல்லது...நாளை நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கலாம்...சுயமாக முயன்று பாருங்கள். இது மிகவும் கடினமான பதை.

குருவின் மூலமோ அல்லது இல்லாமலோ முயன்று பாருங்கள், முக்தி அடையுங்கள்.

(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).


7 கருத்துகள்:

  1. //(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).//

    முன் எச்சரிக்கை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுப்பா ..

    பதிலளிநீக்கு
  2. //ஆதலால் ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
    உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக இருப்பின்).//

    சரியாகச் சொன்னீர்கள் தோழரே ..

    இக்கருத்தை நமது திருமூலர் ஆதி காலத்திலேயே சொல்லிட்டு போயிட்டார் ,

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழிவிழு மாறே.

    - திருமந்திரம் (10.6.105)

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  3. //தனி காட்டு ராஜா said...

    Good one :)//

    thanks for your appreciation raja

    பதிலளிநீக்கு
  4. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    //(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).//

    முன் எச்சரிக்கை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுப்பா .//

    இதுல பொதுநலமும் இருக்கு சுய நலமும் இருக்கு

    பதிலளிநீக்கு
  5. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    //ஆதலால் ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
    உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக இருப்பின்).//

    சரியாகச் சொன்னீர்கள் தோழரே ..

    இக்கருத்தை நமது திருமூலர் ஆதி காலத்திலேயே சொல்லிட்டு போயிட்டார் ,

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழிவிழு மாறே.

    - திருமந்திரம் (10.6.105)

    சிவயசிவ
    //

    சரியாக சொன்னீர்கள் சிவன்டியார்னு நிரூபிச்சிடிங்க

    பதிலளிநீக்கு
  6. hi..
    I am Subramanian, Mesha Lagnam, Simha Rasi.
    (Rahu,Maandhi) are in the 2nd Place,
    (Sukran, Sevvai, Chandran) are in the 5th Place,
    (Sun, Saturn, Budhan) are in the 7th Place,
    (Guru, Kethu) are in the 8th Place.
    How is my life? Will I become a Spritual leader?
    Pls reply.
    Regards,
    Subramanian G

    பதிலளிநீக்கு
  7. Hi,
    Sorry for the delay in replying to your question.
    The information you have given suggest that you will have natural interest towards thavam/mediation and spirituality. Most of the planets are in good position as far as spirituality is concerned.

    There is a great possibility that this may be your last birth.

    Don't focus or aspire to become spiritual leader.If you do that you may become a spiritual leader but not a true spiritual person.
    Focus on Spirituality without any expectation
    Your actual life starts after 30+.

    Have a great Time :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...